அறிவு தரும் ஆனந்தம்: குழந்தைப் பாடல் !
உலகே உலகே காது கொடு
ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு
மனமே மனமே பாடுபடு – படிப்பால்
வாழ்வை வென்று எடு;
படிக்கப் படிக்க வளர்ந்துவிடு
எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு
ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்
கண்ணைத் திறந்தே யொழித்துவிடு;
படிப்பு கொடுக்கும் தைரியத்தில்
பட்டம் சுமந்துக் காட்டிவிடு
படிப்பால் நாளை உலகத்தின்
பசுமைப் போற்ற முயற்சி யெடு;
சேர்த்து சேர்த்து வைத்தப் பணம்
வீடு போனால் போனதுதான்
படித்து உழைத்துப் பெற்றக் கல்வி
ஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே;
மிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை
கல்லார் மிரட்டி வாழ்கின்றார் –
என்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்
எம் கல்வியாலன்றுப் பிறந்திடுமே;
பாடம் சுமக்கும் மாணவரே
காலம் சுமக்க வாழ்பவரே
உடம்பை சுமக்கும் நத்தைப்போல்
எம் தேசம் சுமந்து நடப்பவரே;
உறங்கா கடலின் அலைபோலே
உழைத்து உயரும் மழலைகளே
விரிந்த வானக் குடைபோலே
மண்ணைக் காக்கப் போகும் மறவர்களே;
மாறும் மாறும் உலகமெலாம்
மாற்றிப் போடப் படித்திடுவோம்
மாறுதல் காணும் ஒருதினத்தில்
நல்லோர் வாழக் கற்றிடுவோம்!
- வித்யாசாகர்
Tuesday, October 25, 2011
Monday, October 24, 2011
deepavali-celebration-history
வரலாற்று சிறப்புமிக்க தீபாவளி கொண்டாட்டம்
தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர்.
தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.
தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார்.
அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது.
தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது.
தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. செழிப்பான இந்தியாவில் இருந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள், தந்ததங்கள், ஏன் குரங்குகள் கூட கொண்டு சென்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர். இதனால் அங்கும் இந்திய கலச்சாரம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.
சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர், பிரஞ்சு, டச்சு அதிகாரிகள் மக்களின் கொண்டாட்டங்களில் அதிகம் விருப்பம் காட்டியதாக தகவல்கள் இல்லை.
முகாலய மன்னர்களில் சிலர் கூட தமிழர் பண்டிகைகளை ஆதரித்தாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை. வெடி வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
பண்டைய நாட்களில் இலை மற்றும் வெடிமருந்து கொண்டு தயாரித்து வந்துள்ளனர். அதன்பின் வெடியிலேயே பல வகைகளில் வந்து, இப்போது வெடிச்சது போதுமப்பா, புகை நெடி தாங்க முடியவில்லை, வெடிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெடிகள் ரொம்பவே அட்வான்ஸ் ஆகி விட்டது.
தமிழர் பரம்பரையும், பண்டைய வழக்கங்களும் தொண்டு தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டத்திலும் தமிழ் பாரம்பரியம் விளங்கும் வகையில் தமிழர் ஆடை உடுத்தி கொண்டாடலாம் என்பது மறைமுக கோரிக்கை.

chennai-bangalore-expressway-gets-clearance-centre
சென்னை- பெங்களூர் இடையே புதிய 6 வழிச் சாலை: தூரம் 258 கி.மீ. ஆகக் குறையும்!
சென்னை: சென்னை-பெங்களூர் இடையே புதிதாக 6 வழி அதிவேக 'எக்ஸ்பிரஸ் வே' சாலை அமைக்கப்படவுள்ளது.
இப்போது சென்னை-பெங்களூர் இடையே ஒசூர், கிருஷ்ணகிரி வழியாக 4 வழிச் சாலை உள்ளது. இந் நிலையில் புதிதாக இன்னொரு 6 வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்தச் சாலை பெங்களூரின் ஹோஸ்கோட் பகுதியில் ஆரம்பிக்கும் (மாரதஹள்ளியை ஒட்டிச் செல்லும் அவுட்டர் ரிங் ரோடு வழியாக சென்று ஹோஸ்கோட் பகுதியை அடையலாம்)
இந்த 6 வழிச் சாலை சென்னை-பெங்களூர் இடையிலான தூரத்தை 344 கி.மீயிலிருந்து 258 கி.மீ ஆகக் குறைக்கும். தூரம் 86 கி.மீ. குறைவதால், பயண நேரமும் வெகுவாகக் குறையவுள்ளது.
பெங்களூரில் ஹோஸ்கோட் அருகே துவங்கும் இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலை 4க்கு இணையாகச் செல்லும். கோலார், பாலமநேரு, சித்தூர், ராணிப்பேட்டை வழியாக சென்னையை சென்றடையும். (ஏற்கனவே சித்தூர் வழியாக சென்னைக்கு சிங்கிள் லேன் பாதை உள்ளதும் குறிப்பிடத்தக்கது)
மொத்தமுள்ள 258 கி.மீ. தூரத்தில் 74 கி.மீ. கர்நாடகத்துக்குள்ளும், 90 கி.மீ. ஆந்திராவிலும், 94 கி.மீ. தூரம் தமிழகத்துக்குள்ளும் இந்த சாலை அமையும்.
இந்த சாலையை அமைக்க ஒரு கி.மீக்கு ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வரை செலவிடப்படவுள்ளது. இதனால் இந்தச் சாலையை அமைக்க ரூ. 5,000 கோடி வரை செலவாகும் என்று தெரிகிறது.
இந்த சாலை அமைக்கத் தேவையான நிலங்களை தமிழகம், கர்நாடகம், ஆந்திர பிரதேச மாநில அரசுகளின் உதவியுடன் மத்திய அரசு கையகப்படுத்தும்.
இந்த சாலையை தனியார் நிறுவனங்கள் அமைக்கவுள்ளன. சாலையை உருவாக்கி, நிர்வகித்து (கட்டணம் வசூலித்து) பின்னர் அரசிடம் ஒப்படைக்கும் build-operate- transfer (BOT) திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்படும்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு இத் திட்டத்துக்கு சமீபத்தில் தனது அனுமதியை அளித்தது.
இந்த சாலை அமைக்கும் பணியை துரிதமாக்க expressway authority என்ற அமைப்பை உருவாக்கவும் மத்திய வர்த்தகத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை-பெங்களூர் சாலை தவிர, வதோதரா-மும்பை இடையே 400 கி.மீ. தூரத்துக்கும், டெல்லி-மீரட் இடையே 66 கி.மீ தூரத்துக்கும், கொல்கத்தா-தன்பாத் இடையே 277 கி.மீ. தூரத்துக்கும் புதிய 6 வழிச் சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த அனைத்துத் திட்டங்களுக்கும் மத்திய அரசு ரூ. 16,680 கோடியை ஒதுக்கவுள்ளது.
இப்போது சென்னை-பெங்களூர் இடையிலான பயண தூரம் கார்களில் 3.30 மணி நேரமாகவும், ஆம்னி பஸ்களில் 5.30 மணி நேரமாகவும் உள்ளது. அதிவேகமாக இயக்கப்படும் கார்கள் 3 மணி நேரத்திலும், ஆம்னி பஸ்கள் 4 மணி நேரத்திலும் சென்னையை அடைவதுண்டு.
இந்த புதிய, தூரம் குறைக்கப்பட்ட சாலை மூலம் பயண நேரம் இரண்டரை மணி நேரமாகக் குறைய வாய்ப்புள்ளது.
இதன்மூலம் ஐடிபிஎல் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பயன் ஏற்படும். இவர்கள் எலெக்ட்ரானிக் சிட்டி வரை வந்து சென்னை சாலையை பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

25-days-holidays-tamil-nadu-on-2012
2012ம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள் தமிழக அரசு அறிவிப்பு :
சென்னை: வரும் 2012ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டு செய்திக்
குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, வரும் 2012ம் தமிழகத்தில் 25 நாட்கள் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பு அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும்
கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
ஜனவரி 1 (ஞாயிறு) - புத்தாண்டு
ஜனவரி 15 (ஞாயிறு) - பொங்கல்
ஜனவரி 16 (திங்கள்) - திருவள்ளூவர் தினம்
ஜனவரி 17 (செவ்வாய்) - உழவர் திருநாள்
ஜனவரி 26 (வியாழன்) - குடியரசு தினம்
பிப்ரவரி 5 (ஞாயிறு) - மிலாடி நபி
மார்ச் 23 (வெள்ளி) - தெலுங்கு வருட பிறப்பு
ஏப்ரல் 2 (திங்கள்) - வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிப்பு
ஏப்ரல் 5 (வியாழன்) - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 6 (வெள்ளி) - புனித வெள்ளி
ஏப்ரல் 13 (வெள்ளி) - தமிழ் புத்தாண்டு தினம்
ஏப்ரல் 4 (சனி) - அம்பேத்கர் பிறந்தநாள்
மே 1 (சனி) - மே தினம்
ஆகஸ்ட் 15 (புதன்) - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20 (திங்கள்) - ரம்ஜான்
செப்டம்பர் 8 (சனி) - கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 19 (புதன்) - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 29 (சனி) - வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு
அக்டோபர் 2 (செவ்வாய்) - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 23 (செவ்வாய்) - ஆயுத பூஜை
அக்டோபர் 24 (புதன்) - விஜய தசமி
அக்டோபர் 27 (சனி) - பக்ரீத்
நவம்பர் 13 (செவ்வாய்) - தீபாவளி
நவம்பர் 25 (ஞாயிறு) - முகரம்
டிசம்பர் 25 (செவ்வாய்) - கிறிஸ்துமஸ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 15, 2011
microsoft buys skype rs.40000 crore
ஸ்கைப் நிறுவனத்தை ரூ. 40,000 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட்!
நியூயார்க்: இன்டர்நெட் தொலைத் தொடர்பு நிறுவனமான ஸ்கைப் நிறுவனத்தை முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது.
இன்டர்நெட் மூலமான தொலைபேசி சேவையில் முன்னணியில் இருப்பது ஸ்கைப். வீடியோ சேட், இன்டர்நெட்டிலிருந்து தொலைபேசியில் பேசுவது, இன்டர்நெட் மூலமான வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. உலகில் பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த சேவைகள்.
இந் நிலையில் இந்த நிறுவனத்தை ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது மைக்ரோசாப்ட். இதையடுத்து ஸ்கைப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டோனி பேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, ஸ்கைப் செயல்பாட்டை நிர்வகிப்பார்.
2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்கைப் நிறுவனத்தின் சேவைகளை உலகம் முழுவதும் 633 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Friday, October 7, 2011
vijyadasami poojas
வெற்றி திருநாளான விஜயதசமி கொண்டாடுவது ஏன்?
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக்கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
வெற்றிநாளான விஜயதசமி நாளில் பராசக்தியின் அருள் பெறும் விதத்தில் இப்பகுதி இடம் பெற்றுள்ளது. மாலை வேளையில் இதைப் பாராயணம் செய்து அம்பிகையின் அருள் பெறுங்கள்.
●மலையரசனின் மகளே! உயிர்கள் வாழ அருள்புரிபவளே! விஷ்ணுவின் அம்சமாகத் திகழ்பவளே! அர்ஜுனனால் துதிக்கப்பட்டவளே! நீலகண்டப் பெருமானின் மனைவியே! உலகமாகிய பெரிய குடும்பத்தைக் காப்பவளே! மன நிறைவைத் தருபவளே! மகிஷாசுர மர்த்தினியே! அழகான ஜடை கொண்டவளே! பர்வத குமாரியே! உன் திருவடியை வணங்குகிறேன்.
● பக்தர்கள் வேண்டும் வரம் அருள்பவளே! அசுரர்களை அழிப்பவளே! மூவுலகங்களையும் காப்பவளே! சிவபெருமானிடம் விருப்பம் கொண்டவளே! தைரியமும், கோபமும் குணமாகக் கொண்டவளே! என்றும் இளமை கொண்ட கன்னியே! உன் திருப்பாதத்தை என் தலைமேல் தாங்குகிறேன்.
● உலகின் நாயகியே! தாயாக காப்பவளே! சிரிப்பில் விருப்பம் கொண்டவளே! கதம்பவனத்தில் இருப்பவளே! மலைகளின் அரசனான இமாலாயத்தின் உச்சியில் ஸ்ரீசக்ர பீடத்தில் இருப்பவளே! கைடபரை முறியடித்தவளே! உன் திருவடியைப் போற்றுகிறேன்.
● சதகண்டம் என்னும் ஆயுதத்தால் ருண்டாசுரனைத் அழித்தவளே! கஜாசுரனின் துதிக்கையை துண்டித்தவளே! சாமர்த்தியம் மிக்க சிங்க வாகனம் உடையவளே!
முண்டாசுரனை வென்றவளே! உன் கமலச் செவ்வடிகளில் விழுந்து பணிகிறேன்.
● பாவம், தீய எண்ணம் கொண்ட எதிரிகளை அழித்தவளே! சரணாகதி அடைந்தவருக்கு அபயம் அளிப்பவளே! சூலாயுதம் தாங்கியவளே! ரக்தபீஜன், சும்பன்,
நிசும்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளே! உன் திருவடி நிழல் உலகெங்கும் வியாபிக்கட்டும்.
● தும்தும் என்ற நாதத்துடன் வருபவளே! பகைவர்களின் தலையை சதுரங்க காய் போல பந்தாடுபவளே! ஜயஜய என்ற கோஷத்துடன் துதிக்கப்படுபவளே!
தேவலோக பாரிஜாத மலரைப் போல ஒளி கொண்டவளே! பாற்கடலில் பிறந்த சந்திரன் போல குளிர்ச்சி மிக்கவளே! உன் பொற்பாதங்களில் தண்டனிடுகிறேன்.
●பெண்கள் விரும்பும் பேரழகு கொண்டவளே! ராஜகுமாரியே! சுமங்கலிப் பெண்களால் சூழப்படுபவளே! தாமரை மலர் போன்ற நெற்றி கொண்டவளே! கலைக்கு
இருப்பிடமாகத் திகழ்பவளே! வண்டுகள் பாடும் நறுமலர்கள் சூடியவளே! பட்டு பீதாம்பரம் அணிந்தவளே! உன் மலர் பாதங்களில் முகம் புதைக்கிறேன்.
● போர்வீரனாக விளங்கும் கார்த்திகேயனை புத்திரனாகப் பெற்றவளே! ஞானியர் நாடும் சமாதி நிலையில் விருப்பம் கொண்டவளே! கருணைக்கு இருப்பிடமான தேவியே! கோடி சூரியர்களால் வணங்கப்படுபவளே! கிடைத்தற்கரிய உன் திருவடியைக் கண் கொட்டாமல் காண்கிறேன்.
●அம்மா! உனது திருவடியை வணங்கும் பேறு பெற்ற நாங்கள் கல்வி கலைகளிலும், செல்வத்திலும் சிறந்து விளங்க அருள் செய். பரமகருணையால் உலகிற்கெல்லாம் தாயாக விளங்குபவளே! உனக்கு எது விருப்பமோ அதை எனக்குச் செய்தருள்வாயாக. பர்வத ராஜ குமாரியே! எங்கள் வாழ்வில் வெற்றி குவிய உன்னைப் போற்றி வணங்குகிறேன்.
சக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருப்பதால் அவளை ஆதிபராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும் போது காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது துர்கா என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.
ஒழுக்கத் திருநாள்: சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.
முக்குண தேவியர்: ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான் மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.
அம்பாள் வழிபாடு அங்கும் இங்கும்...
முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் தேவி சூக்தம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வட மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திர தீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகு ம். இது தென்னிந் தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.
விஜயதசமி மரம்: சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.
வெற்றிக்குரிய தசமி திதி: எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

navarathiri nineth day (06-10-2011) valipadu
விஜயதசமியோடு நவராத்திரி நிறைவு பெறுகிறது. இந்நாளில் பராசக்தியின் மூன்று வடிவங்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியை வழிபடவேண்டும். வெற்றிக்குரிய நாளான விஜயதசமி கல்வி, கலைகளைப் பயிலத் தொடங்குவதற்குரிய நாளாகும். நாளை மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணைக் கச்சேரி நடைபெறுகிறது. அருளாளர்கள் இறைவனை நாத வடிவமாகப் போற்றுவர். தேவாரம் இறைவன்,ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பதாகப் போற்றுகிறது. வடமொழியில் கலா என்றும், தமிழில் கல்வி என்றும், ஆங்கிலத்தில் கல்ச்சர் என்றும் சொல்லும் எல்லாவற்றுக்கும் மூலம் ஒன்றே. கலை அகில உலகத்திற்கும் பொதுவானது. பிறை நிலவு வளர்வது போல கலையும் முடிவில்லாமல் நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது. கலைமகள் சரஸ்வதியும் இடைவிடாமல் கற்றுக் கொண்டே இருக்கிறாள் என்பதன் குறியீடே வீணையாகும். இசை மட்டுமல்லாமல், ஓவியம், நாட்டியம், சிற்பம், காவியம், தியாகம்,சேவை, தானம் என்று அனைத்தும் கலைக்குள்ளே சங்கமிக்கின்றன.
இந்த உயர்வான பண்புகளின் முடிவான நோக்கம் அன்பில் தோய்வது தான். அந்த அன்பே கடவுளாக வீற்றிருக்கிறார். அன்பே சிவம் என்று இதைத் தான் சொல்கிறார்கள். இறைவனின் திருவடிகளைப் போற்றும் திருநாவுக்கரசர், மாசில் வீணையும், மாலை மதியமும்... என்று வீணையின் இனிமையை நமக்கு காட்டுகிறார். சரஸ்வதியும் தன் வீணா கானத்தால் பரமேஸ்வரரின் லீலைகளைப் போற்றிப் பாடுவதாக சவுந்தர்யலஹரி குறிப்பிடுகிறது. அதனால், இறையருளைப் பெறும் சாதனமாக இசை இருக்கவேண்டும். பொழுதுபோக்கு என்பது கலையின் இரண்டாவது அம்சம் தான். பாடுபவரோடு கேட்பவரும் இறையருளுக்குப் பாத்திரமாக்கும் தன்மை இசைக்கு மட்டுமே உண்டு. அப்படி பெருமை மிக்க இசையால் நாளை ஆராதிக்கின்றனர். மீனாட்சியம்மன் கோயிலில் நாளை 108 வீணை வழிபாட்டில் கலந்து மகிழுங்கள்.
நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
பாட வேண்டிய பாடல்:
சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம் குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.

Subscribe to:
Posts (Atom)