Thursday, November 9, 2017

வட கொரியா வீராங்கனையை குத்தி தள்ளி ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மேரிகோம் தங்கப்பதக்கம்!

வியட்நாம்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்று இருக்கிறார். இறுதி போட்டியில் வடகொரிய வீராங்கனையை வீழ்த்தி இவர் சாம்பியன் பட்டம் பெற்றார். இதன் மூலம் இவர் 5 வது முறையாக ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இருக்கிறார்.

வியாட்நாமில் கடந்த சில வாரங்களாக ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த சம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி இன்று காலையில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டிக்கு இந்தியாவில் இருந்து மேரி கோம் தேர்வாகி இருந்தார்.

கடந்த ஐந்து வருடங்களாக 51 கிலோ ஆடை பிரிவில் விளையாடிய இவர் தற்போது மீண்டும் 48 கிலோ எடை பிரிவில் விளையாடினார். அரை இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தியதன் மூலம் இவர் தன்னம்பிக்கையுடன் இறுதி போட்டிக்கு நுழைந்தார்.

இந்த போட்டியில் மேரிகோம் வடகொரியா, கிம் யாங் மி என்ற வீராங்கனையை எதிர் கொண்டார். தொடக்கத்தில் இருந்து மிகவும் சிறப்பாக விளையாடிய மேரிகோம் 5-0 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.

இதன்முலம் இவர் ஐந்தாவது முறையாக ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வெல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment