Friday, June 15, 2012

நல்லா தூங்குங்க வெயிட் குறையும் !

நல்லா தூங்குங்க வெயிட் குறையும் !

நல்ல உறக்கத்திற்கும் உடல் பருமன் குறைவதற்கும் தொடர்பிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் நன்றாக உறங்கி காலையில் கண் விழிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். என்ன செய்தால் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் பலர் உள்ளனர் அவர்களால் பகல்பொழுதுகளில் உற்சாகத்துடன் செயல்பட முடியாது. எனவே இரவில் மிதமான உணவு உண்டுவிட்டு நன்றாக உறங்குங்கள். உடலில் சக்தி அதிகரிக்கும்.

உடல்பருமன் குறித்த மருத்துவ ஆய்வறிக்கை ஒன்றில் உடல் பருமனுக்கும், உறக்கத்திற்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். இரவில் குறைந்த அளவில் உணவு உட்கொண்டுவிட்டு உறங்கச்செல்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை. மாறாக லேட்டாக உறங்கச்செல்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சரியாக உறங்கி ஓய்வெடுக்காமல் விட்டால் உடல் சோர்வடைந்து விடும். இதனால் ஹார்மோன் சுரப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது. பசியை தூண்டும் ஹார்மோன் அதிக அளவு சுரக்கிறது. இதனால் அதிக அளவு உணவை உடல் எடுத்துக்கொள்ளும். இதனால் உடலில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது அதோடு உடல் பருமனும் அதிகரிக்கிறது.

காலையில் கண்விழிக்கும் போதே காபி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் பலர். ஆனால் இரவில் காபி குடிப்பது தவறான பழக்கமாம். இது ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. சக்தியை அதிகரிப்பதோடு, இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் போன்றவைகளை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இரவில் எளிதில் உறக்கம் வராமல் டிவி பார்ப்பது, கணினியில் வேலை செய்வது என பிற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

மது அருந்துவதன் மூலம் உறக்கம் நன்றாக வரும் என்று தவறான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அது உண்மையில்லை மாறாக எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. இது மூளையை அமைதியடைச் செய்யாமல் சக்தியை வீணாக்குகிறது. இதயத்துடிப்பு அதிகரிக்கும், சீரற்ற சுவாசம் இருக்கும் இறவில் கண்களை மூடிக்கொண்டிருந்தாலும் ஆழ்ந்த உறக்கம் வராமல் தவிக்க நேரிடும். காலையில் கண்விழிக்கும் போது ஒருவித எரிச்சலும், சோர்வும் எற்படும்.

மின்னணு பொருட்கள் எப்பொழுதும் நம் மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்கும். எனவே உறங்கும் அறையில் டிவி, கம்யூட்டர், ஐபேட் போன்றவைகளை வைத்திருக்க வேண்டாம். ஏனெனில் அவை நம் மூளையை அமைதியாக ஓய்வெடுக்க விடுவதில்லை. இந்த சாதனங்கள் நம் படுக்கை அறையில் இருந்தாலே உறங்கும் வரைக்கும் அவைகளை உபயோகப்படுத்திக்கொண்டிருப்போம் எனவே உடனே அப்புறப்படுத்துங்கள். பிறகு பாருங்கள் உங்கள் உடலும், மூளையும் அமைதியாக ஓய்வெடுக்கும்.

இரவில் உறங்கப்போகும் நேரத்தை ரெகுலராக வைத்துக்கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு உறங்கச் சென்றால் காலையில் 6 மணிக்கு கண் விழிக்கலாம். வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு பத்துமணிக்கு முன்னதாக சென்றுவிடுங்கள். தியானம் மேற்கொள்ளலாம். மனதிற்குப்பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம். இதனால் அமைதியான உறக்கம் ஏற்படும்.

படுக்கை அறையை குளுமையாக வைத்திருத்திருங்கள். அதிக வெப்பம் தாக்கினாலும் இரவில் உறக்கம் பாதிக்கும். நிபுணர்களின் ஆலோசனைகளைப் படி படுக்கை அறையை மாற்றி அமைத்தாலும் உறக்கம் வராமல் தவிக்கிறீர்களா? உடல்ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலும் உறங்குவதில் பிரச்சினைகள் ஏற்படும். தயங்காமல் உங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். ஏனெனில் உறக்கம் என்பது மிகவும் அவசியமானது.

No comments:

Post a Comment