Wednesday, June 6, 2012

சூரியனை கடந்த வெள்ளி கிரகம்: அபூர்வ காட்சியை ரசித்த மக்கள்!

சென்னை : sவெள்ளி கிரகம் சூரியனுக்கும், பூமிக்கும் இடையே கடந்து சென்ற அபூர்வ நிகழ்வினை சென்னையில் ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் அதன் நீள்வட்டத்தில் சுற்றும் போது குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும். அவ்வாறு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வெள்ளி கிரகம் இன்று காலை கடந்து சென்றது. இது வெள்ளியின் சூரிய கடப்பு நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.
இந்த அபூர்வ நிகழ்வு 105 வருடங்களுக்கு பிறகு தான் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 4.1 கோடி கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளி கிரகம் உள்ளது. வெள்ளி கிரகத்திற்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 10 கோடியே 82 லட்சம் கிலோ மீட்டர்.
வெள்ளி கிரகம் சூரியவட்டத்தின் ஊடாக நகர்ந்து செல்லும் இந்த அபூர்வ நிகழ்வு இன்று காலை 5:55 மணிக்கு தொடங்கியது. இந்த அபூர்வ நிகழ்வை பொதுமக்கள் பார்க்க சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. மெரினா கடற்கரையிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சூரியனை வெள்ளி கிரகம் கடந்த போது ஒரு கருப்பு புள்ளி மெதுவாக கடந்தது சென்றதை காண முடிந்தது. எனவே, தொலைநோக்கி வழியாக சூரியனின் பிம்பம் இதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு திரையில் விழுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கண்டு ரசித்தனர்.
வெள்ளி கிரகத்தின் இந்த அரிய நகர்வை அமெரிக்கா முதல் தென் கொரியாவரை உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் கண்டு ரசித்தனர். அமெரிக்காவில் வசிப்பவர்கள் செவ்வாய்கிழமை காலையிலும், ஆசியா பகுதியில் வசிப்பவர்களுக்கு புதன்கிழமையும் சூரியனை வெள்ளி கடந்து சென்ற நிகழ்வு தெரிந்தது. இது போன்ற நிகழ்வு 130 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1882 ம் ஆண்டு நடைபெற்றதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment