Monday, November 26, 2012

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரை பற்றிய ஒரு வரலாற்று பார்வை

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரை பற்றிய ஒரு வரலாற்று பார்வை !!!

தகவலுக்கு நன்றி
வினோத்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயர் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலுள்ள ஊர்களில் கூட பிரபலமான பெயர். மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில் முதன்மையானவர் பசும்பொன் தேவர் அவர்கள். ராஜாஜி அவர்கள் தேவர் மீது அன்பும் பற்றும் கொண்டவர். நான் அர்ஜுனன் என்றால் தேவர்தான் சாரதி என்றார் அவர். மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட போது பலத்த எதிர்ப்பு இருந்தது. அப்போது ராஜாஜி தேவர் அவர்களைத்தான் சத்தியாக்கிரகிகளுக்குத் துணையாக இருக்கப் பணித்தார். கதிரவனைக் கண்ட பனி போல எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. ஆலயப் பிரவேசம் மிக விமரிசையாக நடந்தது. தேசியமும் தெய்வீகமும் தேவர் கடைப்பிடித்த இரு கொள்கைப் பிடிப்புகள்.

அந்த நாளில் இராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஜஸ்டிஸ் கட்சியினரின் அத்துமீறல்களைத் எதிர்த்து அங்கெல்லாம் தேசிய முழக்கங்களை எதிரொலிக்கச் செய்து "காங்கிரசைக் காத்தவர்" எனும் பாராட்டை தீரர் சத்தியமூர்த்தியிடம் பெற்றவர் தேவர்.

முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் பிறந்தார். தந்தை உக்கிரபாண்டித் தேவர், தாயார் இந்திராணி அம்மையார். இளம் வயதில் இவர் தாயை இழந்தார். தாயை இழந்த இந்தத் தனயனுக்கு ஒரு இஸ்லாமியப் பெண் தாய்ப்பால் ஊட்டி வளர்த்தார்.

1927ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் சென்னை சென்று வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்காரைச் சந்தித்த பின் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் டாக்டர் அன்சாரியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு ஊர் திரும்பிய தேவர் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர் புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார். ராஜாஜி 1937இல் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு ஏற்றபின் ஆலயப் பிரவேசச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்துள் அழைத்துச் செல்லும் பொறுப்பை மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மேற்கொண்டார். அவருக்கு அங்கு பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை முறியடித்து அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தேவர்.

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் இவர் முதுகுளத்தூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜில்லா போர்டு தலைவராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரை சிபாரிசு செய்ததும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்டார் தேவர். 1937இல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பலம்பொருந்திய கட்சியாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி. ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம் ராஜா ஜஸ்டிஸ் கட்சி சார்பில் நின்றார். அவர் சமஸ்தானத்தில் மன்னருக்கு எதிராக யார் காங்கிரசில் போட்டியிட முடியும். அப்படி போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியுமா? அந்த நிலையில் தேவரை காங்கிரஸ் கட்சி அங்கு நிறுத்துகிறது. தேவரே வெற்றி பெற்றார்.

அப்போது சாத்தூர் தொகுதியில் காமராஜ் நின்றார். அந்தத் தேர்தலில் கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தவர் தேவர் அவர்கள்தான். காங்கிரசில் அப்போது மகாத்மா காந்தியின் தலைமைக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் போட்டி நிலவியது. திரிபுரா காங்கிரசில் மகாத்மா காந்தி பட்டாபி சீத்தாராமையாவை தலைமைப் பதவிக்கு நிறுத்துகிறார். நேதாஜியை தீவிர தேசபக்தர்கள் ஆதரித்தனர். இந்தப் போட்டியில் தேவர் நேதாஜியை ஆதரிக்கிறார். நேதாஜி வெற்றி பெற்றதும் காந்திஜி பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று அறிவித்தார். காங்கிரசில் அப்போது இரு கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமையில்லாமல் பிறகு நேதாஜி ராஜிநாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரசிலிருந்து வெளியேறிய நேதாஜி பார்வர்டு பிளாக் எனும் கட்சியைத் தோற்றுவிக்கிறார். அதில் தேவர் அங்கம் வகித்தார்.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு அடிபணியக்கூடியவரா தேவர். தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் செல்கிறார். வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை பெறுகிறார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் 1939 செப்டம்பர் மாதத்தில்

18 மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் மறுபடியும் கைது செய்கிறார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் படி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு தேவர் ஆறாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார்.

சுதந்திரம் பெறும் காலம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. 1946இல் சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.பிரகாசம் முதல்வராகப் பதவியேற்றார். தேவரை தன்னுடைய அமைச்சரவியில் சேரும்படி பிரகாசம் அழைத்ததை தேவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரசின் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்த நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சி 1948ல் தனிக் கட்சியாக வெளியே வந்தது. அப்போதிலிருந்து தேவர் காங்கிரசில் இல்லை, பார்வர்டு பிளாக்கின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்து குடியரசாக 26-1-1950இல் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. தேவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்றுப் பின் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.

மதுரையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது அதில் பங்குகொண்ட ஒருவர் கொலையுண்ட வழக்கில் தேவர் கைதுசெய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அங்கு இவரது உடல்நலம் கெட்டது. அப்போது தென் மாவட்டங்களில் இருவேறு பிரிவினர்களுக்கிடையே கலவரம் மூண்டது. அப்போது காமராஜ் முதலமைச்சராக இருந்தார். மதுரையில் இவர் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியே ஒரு நாடக பாணியில் அமைந்தது. விடியற்காலை எழுந்து மதுரையிலிருந்து புறப்பட்டு முதுகுளத்தூர் புறப்பட்டு வைகை நதிப் பாலத்தில் அவரது கார் வரும்போது பாலத்தின் நடுவில் போலீஸார் இவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள். காரிலிருந்து கீழே இறங்கிய தேவர் முழங்காலுக்கும் கீழ் வரை தொங்கும் தனது பழுப்பு நிற கதர் ஜிப்பாவில் கைவிட்டதுதான் தாமதம் போலீஸ் அதிகாரிகள் அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர் ஏதோ ஆயுதத்தை எடுக்கிறார் என்று. இவர் அவர்களை ஒதுக்கிவிட்டுத் தன் பையிலிருந்து பட்டினால் ஆன திருநீற்றுப் பையை எடுத்து அதிலிருந்து கைநிறைய திருநீற்றை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டு, ஊம் இப்போது போகலாம் என்றார்.

இவர் இப்போதைய மியன்மார் எனும் பர்மாவுக்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்களையெல்லாம் சந்தித்திருக்கிறார். அவர்கள் இவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அங்கு சென்ற பல இந்தியத் தலைவர்களில் இவருக்கு அளித்தது போன்ற வரவேற்பு வேறு யாருக்கும் அளிக்கப்பட்டதில்லையாம். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, உலகின் அத்தனை பகுதிகளிலும் தேவரின் புகழ் பரவிக் கிடந்தது.

1957இல் நடந்த பொதுத் தேர்தலிலும் இவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி இரண்டிலும் போட்டியிடுகிறார். இரண்டிலும் மறுபடி வெற்றி. இந்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விடுகிறார். உடல்நலம் கெட்டுவிட்ட நிலையில் 1962ல் நாடாளுமன்றத்துக்கு மட்டும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். ஆனாலும் இவர் டெல்லி சென்று பதவி ஏற்றுக் கொள்ளமுடியாதபடி உடல்நிலை கெட்டு விடுகிறது.

தன்னுடைய நண்பர் திருச்சி டாக்டர் காளமேகம் அவர்களிடம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு வைத்தியம் செய்தும் முடியாமல் மதுரை சென்று விடுகிறார். அங்கு அவர் 30-10-1963இல் தனது 55ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்து உயிர் துறந்தார்.
Photo: பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரை பற்றிய ஒரு  வரலாற்று பார்வை !!!

Friday, November 23, 2012

சென்னை விவேகானந்தர் இல்லம் ஒரு வரலாற்று பதிவு !!!

சென்னையில் ஐஸ் ஹவுஸ் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லையா அப்போ விவேகானந்தர் இல்லம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்… மெரினா கடற்கரையில், திருவல்லிகேணியில் உள்ளதே இந்த கட்டிடம். ஐஸ் ஹவுஸ் என்பத
ு இப்போதிருக்கும் விவேகானந்தர் இல்லம் தான், உண்மையில் அங்கு ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை எதுவும் இல்லை ஆனால் ஐஸ் சேமித்து வைக்கும் இடமாக இருந்தது. இந்த கட்டிடம்
1842 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இப்போது இது தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு சுற்றுலாத்தளமாக விளங்குகின்றது.

அன்றைய கால கட்டத்தில் ஐஸ் தயாரிக்க தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத சமயத்தில் கப்பல் மூலம் ஐஸ் வரவழைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. பிரெடெரிக் டுடோர் என்ற ஆங்கிலேயரால் இது நிர்மானிக்கபட்டது தொழில் நலிவடைந்ததால் 1880 ஆம் ஆண்டு பிலிகிரி அய்யங்காரிடம் இந்த கட்டிடம் கை மாறியது. அவர் இதை புனரமைப்பு செய்து கேமன் கோட்டை (keman castle) என்று பெயர் வைத்தார். இந்த சமயத்தில் தான் விவேகானந்தர் சென்னைக்கு வருகை புரிந்தார் அய்யங்கார் விவேகானந்தரின் பால் உள்ள பற்றின் காரணமாக அவரை தனது இல்லத்தில் தங்குமாறு கோற, விவேகானந்தர் 9 நாட்கள்(6 பிப்ரவரி 1897 லிருந்து 14 பிப்ரவரி) அங்கு தங்கி சென்றதாக தகவல். இங்கு அவர் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது, விவேகானந்தர் சென்ற பிறகு அவரின் நினைவாக ஒரு நிரந்தர மையத்தை விவேகானந்தரை பின்பற்றுபவர்களுக்காக உருவாக்கினார் அய்யங்கார்.

1906 வரை இந்த மையம் செயல்பட்டு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது பின்னர் இந்த இடம் ஒரு ஜமிந்தாரின் வசம் சென்றது. பின்னர் இந்த இடம் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு மகளீர்க்கான விடுதியுடன் கூடிய பயிற்சி பள்ளி ஒன்றை நிறுவியது. 1963 இல் இந்த இடத்தின் பெயர் விவேகானந்தர் இல்லம் என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டது. விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி 1997 இல் இந்த இடம் ராமகிருஷ்ண மடத்திற்கு குத்தகையாக விடப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த இடத்தை நிர்வகிக்கும் ராமகிருஷ்ண மடத்தவர் அங்கு நிரந்தர புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுடன் கூடிய கண்காட்சியை வைத்திருக்கின்றனர். மேலும் இதனுள்ளே ஒரு தியான மண்டபம் ஒன்று உள்ளது இங்கு தான் விவேகானந்தர் தியானம் செய்ததாக அறிகிறோம். சிலர் இந்த இடம் ராமகிருஷ்ண மடத்தவர் என்ற பெயரில் RSS வசமாகி விட்டதாக சொல்கின்றனர். அது என்னமோ உண்மை தானே தியானதில் ஆரம்பித்தால் ஆன்மீகத்தில் நுழைந்து இந்துயசத்தில் தானே அது போய் முடியும். எது எப்படியோ கடற்கரையின் ஓரத்தில் அழகான அந்த கட்டிடம் உண்மையில் மெரினாவின் மகுடத்தில் பொதித்த ஒரு விலை மதிப்பற்ற தாகவே விளங்குகிறது

நன்றி
நண்பன் போதி
Photo: சென்னை விவேகானந்தர் இல்லம் ஒரு வரலாற்று பதிவு !!! 

சென்னையில் ஐஸ் ஹவுஸ் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லையா அப்போ விவேகானந்தர் இல்லம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்… மெரினா கடற்கரையில், திருவல்லிகேணியில் உள்ளதே இந்த கட்டிடம். ஐஸ் ஹவுஸ் என்பது இப்போதிருக்கும் விவேகானந்தர் இல்லம் தான், உண்மையில் அங்கு ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை எதுவும் இல்லை ஆனால் ஐஸ் சேமித்து வைக்கும் இடமாக இருந்தது. இந்த கட்டிடம்
1842 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இப்போது இது தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு சுற்றுலாத்தளமாக விளங்குகின்றது.

அன்றைய கால கட்டத்தில் ஐஸ் தயாரிக்க தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத சமயத்தில் கப்பல் மூலம் ஐஸ் வரவழைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. பிரெடெரிக் டுடோர் என்ற ஆங்கிலேயரால் இது நிர்மானிக்கபட்டது தொழில் நலிவடைந்ததால் 1880 ஆம் ஆண்டு பிலிகிரி அய்யங்காரிடம் இந்த கட்டிடம் கை மாறியது. அவர் இதை புனரமைப்பு செய்து கேமன் கோட்டை (keman castle) என்று பெயர் வைத்தார். இந்த சமயத்தில் தான் விவேகானந்தர் சென்னைக்கு வருகை புரிந்தார் அய்யங்கார் விவேகானந்தரின் பால் உள்ள பற்றின் காரணமாக அவரை தனது இல்லத்தில் தங்குமாறு கோற, விவேகானந்தர் 9 நாட்கள்(6 பிப்ரவரி 1897 லிருந்து 14 பிப்ரவரி) அங்கு தங்கி சென்றதாக தகவல். இங்கு அவர் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது, விவேகானந்தர் சென்ற பிறகு அவரின் நினைவாக ஒரு நிரந்தர மையத்தை விவேகானந்தரை பின்பற்றுபவர்களுக்காக உருவாக்கினார் அய்யங்கார்.

1906 வரை இந்த மையம் செயல்பட்டு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது பின்னர் இந்த இடம் ஒரு ஜமிந்தாரின் வசம் சென்றது. பின்னர் இந்த இடம் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு மகளீர்க்கான விடுதியுடன் கூடிய பயிற்சி பள்ளி ஒன்றை நிறுவியது. 1963 இல் இந்த இடத்தின் பெயர் விவேகானந்தர் இல்லம் என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டது. விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி 1997 இல் இந்த இடம் ராமகிருஷ்ண மடத்திற்கு குத்தகையாக விடப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த இடத்தை நிர்வகிக்கும் ராமகிருஷ்ண மடத்தவர் அங்கு நிரந்தர புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுடன் கூடிய கண்காட்சியை வைத்திருக்கின்றனர். மேலும் இதனுள்ளே ஒரு தியான மண்டபம் ஒன்று உள்ளது இங்கு தான் விவேகானந்தர் தியானம் செய்ததாக அறிகிறோம். சிலர் இந்த இடம் ராமகிருஷ்ண மடத்தவர் என்ற பெயரில் RSS வசமாகி விட்டதாக சொல்கின்றனர். அது என்னமோ உண்மை தானே தியானதில் ஆரம்பித்தால் ஆன்மீகத்தில் நுழைந்து இந்துயசத்தில் தானே அது போய் முடியும். எது எப்படியோ கடற்கரையின் ஓரத்தில் அழகான அந்த கட்டிடம் உண்மையில் மெரினாவின் மகுடத்தில் பொதித்த ஒரு விலை மதிப்பற்ற தாகவே விளங்குகிறது 

நன்றி 
நண்பன் போதி

நேர்மை தேசப்பற்று மதச் சார்பின்மை கொண்ட மகத்தான மனிதர் வி.பி.சிங் !!!

மகத்தான மனிதர் யார்? உங்களை நீங்களே கேட்டுக் கொண்டால் சிந்தனை ஒரு நொடி ஓய்வு எடுக்கும். பின்னர் இயங்கத் தொடங்கும் போது யாரை மகத்தான மனிதர், அதிலும் சமகாலத்தில் வாழ்ந்
தவர் என ஓர் கேள்விக்கு நிச்சயம் ஒரு கணம் மனம் குழம்பும். அடுத்தடுத்து பலர் உங்கள் மனக்கண் முன்பு தோன்றுவார்கள். இறுதியில் ஒருவர் உங்களுக்குள் தேர்வானாலும் ஒரு சந்தேகம் எழும். இவர் மகத்தானவர்தானா?

ஆனால், பெயரைச் சொன்னவுடன் அவரின் எதிரிகள்கூட அட இவரா? மகத்தான மனிதர் என ஏற்கும் ஒருவர் வி.பி.சிங்.“”ஒரு வீட்டில் பாகப்பிரிவினை நடந்தது. எல்லாப் பொருளும் சரிசமமாக பங்கு பிரித்தனர். கடைசியில் அந்த வீட்டிற்கு தினசரி பாலைத் தந்த பசுமாடு மிஞ்சியது. மாடும் பங்கு பிரிக்கப்பட்டது. எப்படி? மாட்டின் முன்பகுதி தம்பிக்கும், பின்பகுதி அண்ணனுக்கும் என்றாகியது. தினசரி தம்பி முன் பக்கத்தில் அதற்கு தீனி வைப்பான். அண்ணன் தினசரி தன் பங்கான பின்பக்கத்தில் பாலைக் கறந்து கொள்வான்.

இது எப்படி சமமான, நியாயமான பாகப் பிரிவினை? ஆனால், இப்படித்தான் உயர்சாதி என்பவர்கள் சமூகப் பலன் எனும் பின்பக்கத்துப் பாலைக் கறந்து விடுகின்றனர். உழைப்பாளி கீழ்த்தட்டு பின் தங்கிய மக்கள் சமூகத்திற்கு உழைக்கின்றனர். ஆனால் பயனில்லை. எனவேதான், சமமான பலன் தர சமூகநீதி காக்க இட ஒதுக்கீட்டை வழங்கினேன்.’’

இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து வி.பி.சிங் எனும் மனிதர் இந்தக் கதையைப் பல இடங்களிலும் கூறுவார்.இயல்பாகவே அரசர் குடும்பத்தவர் அரசர் என்றாலும் எளிமையின் சின்னமாக விளங்கியவர் வி.பி.சிங். லக்னோ பல்கலையில் ஆசிரியராக இருந்த இவரை நேருதான் வசீகரித்தார். அவரின் ஆட்சிக் காலத்திலேயே இவர் கட்சியில் இணைந்தாலும், தனக்கென ஓர் தனிநபர் ஒழுக்கம், எளிமை, தூய்மை, ஏழைகள் பால் அன்பு என்பதில் மாற்றமில்லாமல் விளங்கினார்.

வி.பி.சிங்கின் அணுகுமுறைகள், அவரின் ஆளுமை பிரதமர் இந்திராவிடம் அவருக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்தன. 1974ஆம் ஆண்டு வர்த்தகத் துறை துணை அமைச்சரானார். தான் வசிக்கும் பொறுப்பில் நேர்மை, தூய்மை, சேவை என்பதே அவரின் இலக்காக இருந்ததால் அவரின் கீழுள்ள அதிகாரிகள் தொடங்கி கீழ்மட்ட ஊழியர்கள் வரை இவரைப் பின்பற்றினர்.

அதே வேளை வி.பி.சிங் 1980ல் உ.பி. முதல்வரானார். பிற்படுத்தப்பட்டோர் பற்றிய ஓர் ஆய்வுப் பணி பிர்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் மத்திய அரசு அமைத்தது. இக்குழுவும் தன் பணியை நிறைவு செய்து பரிந்துரைகள் பலவற்றை அரசிடம் கூறியது. ஆனால், இவை கிடப்பில் இருந்தன.

உ.பி. முதல்வரான வி.பி.சிங் அடக்குமுறை வழிகளைக் கைவிட்டு சமாதான வழியில் உ.பி.யில் பெருகி இருந்த கொள்ளையர் குழுக்களை ஆயுதங்கள் ஒப்படைக்க வைத்தார். எனினும், ஒரு சில குழுக்கள் அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தி வந்தது. ஒரு நாள் அவரின் சகோதரர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி அவர் வீட்டின் முன்பு ஒரு கோணிப் பையில் போட்டு விட்டுச் சென்றனர். அதைக் கண்ட வி.பி.சிங் அப்போதும் தனக்கு அதிகாரம் இருந்தும் அடக்குமுறையைக் கையாளவில்லை. மாறாக “உ.பி.யில் கொள்ளையரிடமிருந்து என் சகோதரனையே காப்பாற்ற இயலாத நான் இந்த மாநில மக்களைக் காப்பதாகக் கூறி முதல்வராக எப்படி நீடிக்க முடியும். எனவே நான் பதவி விலகுகிறேன்’’ என்று கூறி முதல்வர் பொறுப்பை உதறினார்.

பலரும் மதிப்புமிக்க முதல்வர் பொறுப்பிற்கு ஆலா பறவை போல் கண்மண் தெரியாமல் சிறகடிக்கும் நிலையில் பதவியை துச்சமாக நினைத்த வி.பி.சிங்கின் செய்கை, அதிலிருந்த நேர்மை, பிரதமர் இந்திராவைக் கவர்ந்தது. ஏற்கனவே அவர் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்த போது அவரின் துணிவை மதித்த பிரதமர் இவரை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்கி அதே வர்த்தகத் துறையை வழங்கினார். இதனால் பதுக்கல்காரர்கள் மிரண்டனர்.

1984இல் இந்திரா படுகொலைக்குப் பின்னர், ராஜீவ் பொறுப்பேற்றதும், வி.பி.சிங் நிதியமைச்சரானார். பிரதமரான ராஜீவ் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் நாட்டைக் கொண்டு சொல்ல கொள்கை சார்ந்து திட்டமிட்ட போது, அதற்கான நிதியை ஒதுக்க வேண்டிய நிலை நிதியமைச்சரான வி.பி.சிங்குக்கு ஏற்பட்டது. நாட்டில் நிதியோ இல்லை. ஏன் என்ன காரணம் என்பதை பொருளியல் நிபுணரான வி.பி.சிங் சிந்தித்தார். நிதிச் செயலக அதிகாரிகள் கூட்டம் பலமணி நேரம் நடந்தது.

சாமான்ய ஏழைகள் காணி நிலம் கொண்டிருந்தாலும் அதற்குரிய வரிகளை வசூலிக்கும் அரசு, நடுத்தர மக்களும் தாம் அன்றாடம் பயன்படுத்தும் அவசிய, அத்யாவசிய பொருட்களுக்கும் அதன் விலையுடனே வரியும் செலுத்துகின்றனர். ஆனால், பெரும் பண முதலைகள், நிறுவன அதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் முறையாக கணக்கும் காட்டுவதில்லை, வரியும் ஏய்க்கின்றனர். ஆனால்,அவர்கள் தொழில் மட்டும் லாபமாக நடக்கிறது.இதற்கு வடிகாலாக கார்ப்பரேட் வரியை முறையாக வசூலித்தாலே போதும் என்ற முடிவுக்கு வந்திராமல் நாடெங்கும் பணத் திமிங்கல வேட்டையைத் தொடங்க, முதலில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் பட்டியலைத் தயாரிக்க உத்தரவிட்டார்.

இந்தப் பட்டியல் மத்திய அமலாக்கத் துறைத் தலைவரான நேர்மையான அலுவலரான பூரலால் வசம் தந்து அவருக்கு சிறப்பு அதிகாரமும் தரப்பட்டது. வேட்டைத் தொடங்கியது. ரிலையன்ஸ் அம்பானி தொடங்கி அமிதாப்பச்சன் வரை சகலரும் பிடிபட்டனர். கிர்லோஸ்கர் என்ற தொழிலதிபர் முரண்டு பிடித்ததால் கைவிலங்கு போடும் நிலை ஏற்பட்டது.அரசின் கஜானா வரி ஏய்ப்புச் செய்தவர்களிடம் வசூலித்த தொகையால் நிரம்பியது. பல தவறான நடவடிக்கைகளை மறைமுகமாகமேற்கொள்ளும் பெரிய மனிதர்கள் என்பவர்கள், அவர்களின் ஆலோசர்கள் வி.பி.சிங் இந்தப் பதவியில் தொடர்வது தங்களுக்கு ஆபத்து எனப் புலம்பினர்.

இதனால், வி.பி.சிங் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டார். 1987 ஜனவரி 23ஆம் நாள் அத்துறை அமைச்சரான சிங் பாதுகாப்புத் துறைக்குள்ளே நடக்கும் கணக்கு வழக்கை சரிபார்க்க ராஜிவ் நியமித்த ஃபேர் பாக்ஸ் என்ற வெளிநாட்டுக் கணக்கு நிறுவனத்தால் பாதுகாப்புத் துறை விவரங்கள் வெளிப்படும் ஆபத்து உள்ளதாகக் கூறி அதைத் தடுக்க முயற்சித்தார்.
அடுத்து நீர் மூழ்கிக் கப்பல் ஊழலைக் கண்டறிந்து விசாரிக்க ஆணையிட்டார். அதே நேரம் போபார்ஸ் பீரங்கி வாங்கியதிலும் கமிஷ­ன் கைமாறியதைக் கண்டுபிடித்தார். இதை விசாரிக்கவும் உத்தரவிட்ட நிலையில் 1987 ஏப்ரல் 4ஆம் நாள் அமைச்சரவை, கட்சி என அனைத்திலிருந்தும் விலகினார். தவறுகளைக் கண்டறிவதில் அவருக்கு நெருக்கடி ஏற்படுவதை ஒரு நேர்மையாளரான அவரால் ஏற்க முடியவில்லை.

நேர்மை, தேசப்பற்று, மதச் சார்பின்மை என்பதில் உறுதியான வி.பி.சிங் அலகாபாத் இடைத் தேர்தலில் பலம் மிக்க கட்சி அதன் வேட்பாளர்களை சுவரொட்டி விளம்பரம் கூட செய்யாமல் புடைசூழ தொண்டர்கள் இல்லாமல், மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி தொகுதி முழுவதும் மக்களை சந்தித்துப் பேசி வாக்கு சேகரித்தார். அவரின் நேர்மையை, எளிமையை மக்கள் நேசித்தனர். பலமிக்க அவருக்கு எதிராக இருந்த காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தனர்.

1989 டிசம்பர் 2 நாட்டின் பத்தாவது பிரதமராக வி.பி.சிங் பதவியேற்றார். கூட்டாட்சித் தத்துவத்தில் உறுதிமிக்க வி.பி.சிங் மாநில உரிமைகளைக் காப்பதில் நிகரற்றவராக இருந்தார். தமிழகத்தின் நீண்ட கால இழுபறி பிரச்சனையான காவிரி நீர் தொடர்பாக இவர்தான் நடுவர் மன்றம் அமைத்தார். ஈழத்தில் தங்கி இருந்த இந்திய இராணுவத்தை அந்நாட்டு மக்கள் கடுமையான எதிர்த்ததால் இந்தியா திரும்பும் ஆணை பிறப்பித்தார்.

எல்லாவற்றையும் விட பத்தாண்டுகளாக மத்திய அரசின் பிரதமர் அலுவலகத்தில் தூசி படிந்து கிடந்த மண்டல் குழு அறிக்கையை தூசி தட்டி 1990 ஆகஸ்ட் ஏழாம் நாள் இந்திய பிற்பட்ட மக்களின் மறு சுதந்திர அறிவிப்பான இட ஒதுக்கீட்டை அறிவித்தார்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக செலுத்தி வந்த சாதிய ஆதிக்கத்தை பெரியார் கண்ணாடி அணிந்த வி.பி.சிங்குக்கு மண்டல் தான் சரியான தீர்வு என உணர முடிந்தது. அதனால், சமூகநீதி காக்க ஆணையிட்டார். ஆதிக்க வர்க்கம் அலறியது, அழுது புலம்பியது. கலவரம் நடத்தினர். தகுதி – திறமை எனப் புலம்பினர். அதே ஆண்டு அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார். அத்துடன் சமூகநீதித் துறை என்பதை உருவாக்கி அதற்கு ராம் விலாஸ் பாஸ்வான் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரை அமைச்சராக்கினார். இவர்தான் மண்டல் குழுப் பரிந்துரைகளை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி – வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டு ஆணையை கையயழுத்திட்டவர்.

இதனால், மேலும் கொதித்தனர். உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர். சமூக நீதியை நிலைநாட்டியதற்காக வி.பி.சிங் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தத்தை பா.ஜ.க. உருவாக்கியது. இவரை எதிர்க்க பா.ஜ.க.விற்கு பல காரணங்கள் அதில் இடஒதுக்கீடும் ஒன்று.

மண்டல் விவகாரத்தால் இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள் விவாதப் பொருளானால் தங்கள் வியாபாரம் களைகட்டாது என்ற நிலையில், இந்த மக்களை திசை திருப்ப உணர்வு ரீதியாக அயோத்தி விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்தது. அதே ஆண்டு இவர்களால் வி.பி.சிங் ஆட்சியை வெளிப்படையாக எதிர்க்க இயலவில்லை. அதற்கான தருணமான அயோத்தி யாத்திரை தொடங்கியது. பா.ஜ.க எம்.பி.க்கள் ஆதரவு வி.பி.சிங்கிற்கு இருந்தது. எனினும் அவர் மதச் சார்பின்மையின் பக்கமே நேர்மையாக நின்றார். அவரின் தளபதிகளாக மதிக்கப்பட்ட லாலு பிரசாத் பீகாரின் முதல்வர், முலாயம் சிங் உத்தரபிரதேச முதல்வர். இவர்கள் சமயசார்பின்மையின் பக்கம் இருக்கும் சாதனையாளர்கள். எனவேதான் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக சமயசார்பின்மையை முட்டி மோதித் தள்ள பாபர் மசூதி பக்கம் செல்லவே இவர்கள் அனுமதிக்கவில்லை.

தீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக இராம ஜென்மபூமி இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது.1990 அக்டோபர் அத்வானியின் ரதம் பீகாரில் 23ஆம் தேதி சமண்டிபூரில் தடுக்கப்பட்டது.

சமய நல்லிணக்கம் கேள்விக்குறியாகி திட்டமிட்டு கலவரம் நடந்தது. பீகாரில் லாலுவும், உ.பி.யில் முலாயமும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை அடக்கினர். இதைத்தான் பாஜக எதிர்பார்த்தது. 1990 நவம்பர் 7ஆம் நாள் சமூகநீதிக்காகவும், சமயசார்பின்மை கொள்கைக்காகவும், நேர்மைக்காகவும் வி.பி.சிங் பாராளுமன்றத்தில் நம்பிக்கைக் கோரினார். அவருக்கு நன்கு தெரியும் ஆதிக்க சக்திகள் தன்னை தோற்கடிக்க வியூகம் அமைத்து விட்டன. எனினும் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. இன்று போல் ஓட்டுக்கும் பணம் தரவில்லை! குதிரை பேரமும் நடத்தவில்லை! மாறாக,

”எனது கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அடைய வேண்டிய லட்சியத்தை அடைந்து விட்டேன்’’ என்று கூறி வெளியேறினார்.பாபர் மசூதியை வி.பி.சிங் காப்பாற்றினார். ஆனால், அடுத்து வந்த நரசிம்மராவ், அது இடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அரசியல் உரிமை, அரசில் உரிமை, வேலைவாய்ப்பு, கல்வியல் உரிமை எனப் பலவும் அடைய இயலாத பின்தங்கியோர், சிறுபான்மை மக்கள் ஏராளம் ஏராளம்! அவர்கள் தங்கள் இலக்கை நோக்கி நகர்ந்து செல்ல வி.பி.சிங் எனும் மாமனிதர் போட்டதுதான். இடஒதுக்கீடு எனும் சிறிய அளவிலான வழிநடைப்பாதை. இதுவே இறுதியல்ல. இன்னமும் உண்டு. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற ராஜபாட்டையில் பயணிக்க வேண்டுமெனில், வி.பி.சிங் வழிகாட்டிய இடஒதுக்கீடு எனும் முழக்கத்தை இன்னும் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதுதான் சமூக நீதியை அனைவருக்கும் வழங்க வல்லது.

தற்போதுள்ள வாய்ப்புகளே அதற்கான விதைகள். அதை முழுமையாகப் பயன்படுத்தக் கல்வி ஒன்றே முதல் வேலைத் திட்டம். இதைத்தான் மகத்தான மனிதர் வி.பி.சிங்கின் நினைவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தகவலுக்கு நன்றி
குணசேகரன்
Photo: நேர்மை தேசப்பற்று மதச் சார்பின்மை கொண்ட மகத்தான மனிதர்  வி.பி.சிங் !!!

மகத்தான மனிதர் யார்?  உங்களை நீங்களே கேட்டுக் கொண்டால் சிந்தனை ஒரு நொடி ஓய்வு எடுக்கும்.  பின்னர் இயங்கத் தொடங்கும் போது யாரை மகத்தான மனிதர், அதிலும் சமகாலத்தில் வாழ்ந்தவர் என ஓர் கேள்விக்கு நிச்சயம் ஒரு கணம் மனம் குழம்பும்.  அடுத்தடுத்து பலர் உங்கள் மனக்கண் முன்பு தோன்றுவார்கள்.  இறுதியில் ஒருவர் உங்களுக்குள் தேர்வானாலும் ஒரு சந்தேகம் எழும்.  இவர் மகத்தானவர்தானா?

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியி
ல் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
 
Photo: பிரமிப்பூட்டும்  தமிழர்களின் விஞ்ஞானம்  !!!
 
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
 
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!. 

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு  வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?  தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!! 
 
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!!  பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. 

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

Wednesday, November 21, 2012

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -2

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -2

கந்தபுராணத்தை அடி எடுத்துக் கொடுத்து பாடவைத்தவரையும், கந்தன் புகழைக் கந்தபுராணமாகப் பாடியவரையும் உலகுக்கு அறிமுகம் செய்தவன் ஆறுமுகன். புராணம்பாடியதால் அறிமுகமானவர் கச்சியப்பசிவாச்சாரியார்.
காஞ்சிமாநகரின் குமரகோட்டத்தில் அர்ச்சகராக பணிபுரியும் காளத்தியப்பருக்கு மகனாக தோன்றினார். இளவயது முதற்கொண்டே இறைவன் மீது இடையறா அன்பு பூண்டவர், அவருக்கு ஏழாம் வயதில் உபநயனம் செய்யப் பெற்று வேதங்களையும் இலக்கண இலக்கியங்களையும் கற்று தேர்ந்தார். பின்னர் சமயதீட்சை, விசேசதீட்சை, நிர்வாணதீட்சை, ஆசார்யாபிசேகம் என்பன வற்றை முறைப்படி பெற்று தேவாரதிருவாசகங்கள், சைவாகமங்களின் கிரியாகாண்டங்களையும், ஞானகாண்டங்களையும் ஓதி உணர்ந்தார்.

கல்வி கற்றதன் பயன் இறைவனத்தொழுதலே, எனத்தெளிந்தார். குமரகோட்டத்து கந்தக் கடவுளை எந்நாளும் அஞ்சுவித சுத்திகள் செய்து, ஆறுகாலங்களிலும் எழுவகைப் பிறவி நீங்கும் பொருட்டு எண்வகை மலர்கள் சார்த்தி வழிபட்டு வந்தார். ஒருநாள் முழுமுதற்கடவுளான முருகப்பெருமான் கச்சியப்பர் கனவில் காட்சியளிக்கிறார். "அன்பனே' கந்தபுராணத்து ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டமாகிய சிவரகசிய காண்டத்தில், நமது சரித்திரம் அடங்கியுள்ளது. அதைக் கந்தபுராணம் எனும் பெயரில் தமிழிலே பெரும் காப்பியமாகப் பாடக்கடவாய்" என்று கட்டளையிட்டு, "திகடசக்கர" என்று அடியெடுத்துக் கொடுத்து அருள் செய்து கந்தபுராணத்தை எழுதி பாடவைத்து அரங்கேற்றம் செய்விக்கிறார்.
இதில் அதிசயம் என்னவென்றால் தினமும் நூறு செய்யுள்கள் பாடி எழுதிய ஏட்டையும் எழுத்தாணியையும் கந்தவேளின் இணையடியில் அர்த்தஜாமபூஜையின் பின்பு குமரகோட்டத்து கோயிலில் கச்சியப்பர் வைத்துவிட்டு திருக்கதவை திருக்காப்பிட்டு வீடுசெல்வார். மறுநாள் வழிபடும் பொருட்டு ஏட்டை எடுத்துப் பார்த்தால் அதில் சில சொற்கள் திருத்தப்பட்டு இருக்கும், கந்தப்பெருமானே தன்கர மலர்களால் திருத்தியமைத்தருளிய அதிசயம் கண்டு ஆனந்தம் மேலிட இறைவன் கருணையை நினைந்து கண்ணீர் சொரிவார். இப்படி செந்தமிழ்க்காவியமாக உருப்பெற்றது.
பின் அரங்கேற்றும் நாளும் வந்தது. அங்கு விழாதொடங்கியதும், கச்சியப்பரும் சுப வேளையில் "திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்" எனத்தொடங்கி பாடுகிறார். பின்பு பொருள் கூறும் வேளை திகழ் தசக்கரம் செம்முகம் ஐந்து உளான் எனப் பதப்பிரிவினை செய்து விளங்கா நின்ற பத்து திருக்கைகளும், செவ்விய ஐந்து திருமுகங்களும் உள்ள சிவபெருமானுடைய என்று பொருள் செய்தார்.
அரங்கேற்ற அவையின்கண் இருந்த தமிழ்ப்புலவர்களுள் ஒருவர் சுவாமிகாள், திகழ் தசம் என்பது திகடசம் எனப் புணர்வதற்கு தொல்காப்பியம் முதலிய நூல்களுள் ஒன்றிலும் இல்லையே என்றார். ஐயா தாங்கள் கூறுவது சரிதான் ஆனால் இம்முதல் அடி என் வாக்கில்லை. இறைவன் திருவாக்கு, முருகன் தந்த முதலடி என்று கச்சியப்பர் கூறவும், அதை  ஏற்க மறுத்த புலவர் புன்முறுவல் செய்து முருகனின் முதலடியாயின் அவரே இதற்கு விளக்கமளிக்க வரவேண்டும். இல்லையேல் அரங்கேற்ற முடியாது; இப்படித்தடுக்கவே நாளை அரங்கேற்றுவோம், எனக்கூறியதும் சபையும் கலைந்து சென்றது.
கச்சியப்பர் உண்ணாது உள்ளம் உலைந்து முருகனை நினைந்து உருகினார். தன்னை மறந்த நிலையில் கிடந்த கச்சியப்பரின் கனவில் மீண்டும் தோன்றி அன்பனே நீ வருந்தற்க, சோழதேசத்தில் வீர சோழியம் என்ற இலக்கணநூல் இருக்கிறது.  அதில் பதினெட்டாம் செய்யுளில் திகடசம் என்று வரிகளுக்கு திகழ் தசம் என்ற பொருள் வருகின்றவாறு விதிக்கப்பட்டுள்ளது. சோழதேசத்துப் புலவன் நாளைக்கு இங்கு கொணர்ந்து கொடுத்து விளக்குவான். இப்படிக் கூறி திருவாய் மலர்ந்து மறைந்து விட்டார்.

மறுநாள்  ஆலயத்தில் சபை கூடியது. மக்கள் கூட்டடமும் புலவர்பெருமக்களும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தனர். கச்சியப்பரும் கந்தபுராண ஏடுகள் யாவற்றையும் அரங்கேற்றத் தயாராக எடுத்துக் கொண்டு வந்து இறைவனை மனதில் நினைத்த வண்ணம் அமர்ந்திருந்தார். அங்கு சோழநாட்டு புலவர் ஒருவர் வந்து வீரசோழிய இலக்கணநூலில் சந்திப்படலத்தில் பதினெட்டாம் செய்யுளை படித்துக்காட்டி சந்தேகத்தை ஓட்டினார். வாதிட்ட புலவர்கள் தமிழின் இலக்கணத்தையும் அதில் அடங்கியுள்ள அழகு தத்துவங்களை எண்ணி வியந்தனர், அச்சத்திலும் அதிசயத்திலும் தம்மை மறந்து நின்றிருந்தனர். வீரசோழியத்தை கச்சியப்பர் கையில் கொடுத்து விட்டு, புலவர் மறைந்த பின் இது வரை புலவர் வடிவில் வந்தது, முருகன்தான்  தமிழ் வளர தமிழுக்கு இலக்கணமாய் நின்ற இறைவன் புரிந்த திருவிளையாடல் இது என எண்ணி கச்சியப்பரின் திருவடியில் வீழ்ந்து வணங்கி துதிசெய்தனர். தடைசெய்த புலவரும் மன்னித்தருளுமாறு வேண்ட கச்சியப்பரும் தாங்கள் தடைப்படுத்தியதால் அன்றோ முருகவேளின் திருவருளை எல்லோரும் அறிய முடிந்தது. எல்லாம் ஈசன் செயல். இறைவனையே இங்கு அழைத்து யாவரும் கண்டுகளிக்கச் செய்த அற்புதச்செயலோடு கந்தபுராணம் அறங்கேறியமையால் கந்தபுராணத்திற்கு இணையாக எந்தப் புராணமும் இல்லை.
இது ஒருலட்சம் கிரந்தங்களைக்கொண்டதாம். பதினெண்புராணங்கள் பாடியவர் வேதவியாசர். அவர் பாடிய புராணங்கள்  மிகுதி பதினேழும் மூன்று லட்சங் கொண்ட கிரந்தங்களாகும். மகிமையால் மட்டுமல்லாமல் அளவிலும் சிறந்தது கந்தபுராணமாகும். இதிலே ஆறு பிரிவுகள் சனற்குமார சங்கிதை, சூரசங்கிதை, பிரமசங்கிதை, விட்டுணுசங்கிதை, சங்கர சங்கிதை, சூரசங்கிதை என்பனவாகும்.
இவற்றிலே சங்கரசங்கிதை பன்னிரு கண்டங்களை உடையது. இவற்றுள் முற்பட்டது சிவரகசிய கண்டம் இது 23ஆயிரம் கிரந்தங்களையுடையது. அதில் ஏழுகாண்டங்கள் அடங்கியுள்ளது. அதில் ஆறுகாண்டங்களையும் கச்சியப்பர் 10,345 செய்யுள்களாக தமிழில் இயற்றியுள்ளார். ஏழு காண்டங்களில் கடைசியில் உள்ளதை மட்டும் குகனேரியப்ப முதலியாரும், ஞானவரோதயரும் இதனை தமிழில் இயற்றி அருளிச் செய்தனர், ஆக உலகில் உள்ள சமய உண்மைகள் மதக்கொள்கைகள் யாவும் அடங்கியுள்ளது.கடிய கொடிய இருளை ஞாயிறு எளிதில் அகற்றுவது போல் கந்தப்பெருமானின் கீர்த்தி ஒன்றே கலியில் வரும் பாவங்களைப் போக்கவல்லது. இக்கதையைப் படிப்போர் கேட்போர் அனைவருக்கும் கந்தனருள் என்றும் கிடைத்து இன்பமுடன் வாழ்வார்கள். 

சூரபன்மன்  பல அரிய வரங்களை சிவபெருமானிடமிருந்து பெற்றிருந்தா, ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களால் கட்டுண்டு இருந்த சூரனை ஞான வேல் கொண்டு அவனை அடக்கினார். உலகெங்கும் வாழும் மனிதர் அன்பும் பக்தியும் பெருக பலபதிகளிலும் வீற்றிருந்து ஆறுபடை வீடுகளிலும் குடி அமர்ந்து கருணை பொழியும் கோலத்தில் வள்ளி தெய்வயாணை சமேத சிவ சுப்ரமண்யராக காட்சி தந்துகொண்டிருக்கிறார். நாமும் துதி பாடி துதித்து துணிவு பெறுவோம்.
"புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச்செய்து நவையறு காட்சி நல்கி
என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங்கயங்கள் போற்றி"
முற்றும்
நன்றி - தகவலுதவி - "வாரியார் சிறப்புரை" (நூல்)
- அருந்தா

                                                                                                             4TamilMedia

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -1

ஸ்கந்தன் வந்தான் : பகுதி -1

ஓம் எனும் பொருளாய் ஓங்கார நாதத்தின் விந்துவாக சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் சரவணப்பொய்கையில் வீழ்ந்த போது அதில் முருகன் சண்முகனாக அவதரித்தார்.
 முருகப்பெருமான் கலியுகத்தெய்வம். குமரன் சக்தி வேல் துணைகொண்டு ஆறுநாட்கள் சூரனுடன் போரிட்டார். ஆறாம் நாள் சூரனை வதம் செய்த போது ஆறுமுகன் தாள்மலரில் சூரன் சரணாகதி அடைந்தபோது அவனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றினார். அனைத்து உயிர்கள் மீதும் தெய்வங்கள் அன்பும் கருணையும் கொண்டுள்ளனர். அதிலும் கருணைக்கடலான கந்தன் அணைத்து உயிருக்கும் அருளைப்பொலிபவனல்லவா. அன்பர் உள்ளத்தில் நீங்காது இருப்பவன். தந்தைக்கு குருவாய் இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசித்து குருபரன் என்றும் ஞானபண்டிதன் என்றும் ஸ்வாமி நாதன் என்றும் போற்றப்படுபவன். தேவரும், மூவரும், முனிவரும், அடியவரும் வாழ்த்தி வணங்க என்றென்றும் அருள் தந்து காப்பான்.

அப்படி கலியுகவரதனாம் கந்தவேளை ஸ்கந்தசஸ்டி விரதநாளாம் ஐப்பசி மாதத்தின் அமாவாசை திதிக்கு அடுத்தநாளில் இருந்து பிரதமைமுதல் சஸ்டி வரையான ஆறுநாட்களில் உபவாசமிருந்து ஏழாம் நாளில் பாறணைபண்ணி (விரதத்தை பூர்த்தி செய்தல்) இந்துப் பெருமக்களின் மரபு, உபவாசம் இருக்க முடியாதவர்கள், பகல் அல்லது இரவு ஒருவேளை உணவருந்தி விரதம் அனுட்டிப்பர். கந்தனை வழிபாடாற்றி கந்தசஸ்டி கவசம், கந்தபுராணம், கந்தகுருகவசம், கந்தரங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், சண்முககவசம், பகைகடிதல், முருகவேளின் ஆறுபடை வீடுகளின் தலபுராணம் இப்படி இயற்றிய நூல்களைப் பாடி பரவி வருதல் வேண்டும். அதிலும் குறிப்பாக கந்தபுராணப் படிப்பதையோ, கேட்பதையோ அல்லது கந்தபுராணத்தின் பொருள் படிப்பதையோ, பொருள் சொல்வதைக் கேட்பதையோ இவ்விரத நாளில் விரதம் அனுஸ்டிக்கும் அன்பர்கள் வழக்கமாகக்கொண்டு பெரும்பயன் அடைவார்.

"சத்ரூன் சோஸயதீதி ஸ்கந்த" அமரகோசம் எனும் நிகண்டுவில் இப்படி கூறப்பட்டுள்ளது. பகைவரின் ஆற்றலை வற்றச் செய்பவன் கந்தன், சூரனை வதைக்கவில்லை. மயில்வாகனமாகவும் சேவல்கொடியாகவும் ஆக்கி வேலவன் வாழ்வளித்தான். நன்றிகொன்றவன் விரைந்து அழிவான், என்ற கோட்பாட்டை நமக்கு உணர்த்துவதாக கந்தபுராணம் அமைந்துள்ளது. நன்றி மறத்தல், நன்றிகோறல் என்ற இந்த இருபாவங்களும் மிகத் துன்பத்தை நல்கும். நன்றிகொன்றவனுக்கு உய்வில்லை, என்பதை விரித்துக் கூறுகிறது கச்சியப்பர் எழுதிய கந்தபுராணம். இக்கந்தபுராணத்தில் உள்ள பொருள் எந்தப் புராணத்திலும் இல்லை. ஆக ஞானத்தை விரும்புவோர், ஒளியைவிரும்புவோர், ஆனந்தத்தை விரும்புவோர் எவரும் இக் கந்தபுராணத்தை அவசியம் படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

கந்தன் சிவனின் அம்சம்,பரமேஸ்வரனின் ஐந்து முகங்களான, ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருசம், ஈசானம், அகோரம் ஆகிய ஐம்முகமும், பரமஞானியருக்கு மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருவதனம் அதோமுகமும் சேர்ந்து அம்முகங்களின் நெற்றிக்கண்ணில் நின்று தோன்றிய ஜோதி ஆறு தீப்பொறிகளாகின. அப்பொறிகள் சிவன் முன் வர அவற்றை வாயு தேவனையும் அக்கினி தேவனையும் அக்கினிப்பொறிகளை தாங்கி கங்கையில் கொண்டு சேர்க்குமாறும் பின்னர் கங்காநதி சரவணப் பொய்கையில் கொண்டுபோய் சேர்ப்பாள் என எம்பிரான் உத்தரவிடுகிறார். இந்த அக்கினியின் வெம்மையை எங்களால் தாங்க முடியுமா தேவ தேவா; நாம் எப்படிச் சுமப்பது; எனக்கேட்ட போது இத்தீப்பொறிகளைத் தாங்கிச்செல்ல உமக்கு ஆற்றலை அளித்தோம், என்று அருள் புரிய இறைவனால் அன்றோ நாம் அக்கினியாய் வாயுவாய் இருக்கிறோம், எனக்கூறி தம் சென்னிமேல் ஆறிபொறிகளையும் மாற்றி மாற்றி கொண்டுசென்று கங்கையில் விட்டனர்.
கங்கை அவ்வெம்மை தாங்காது வற்றத்தொடங்கியது. ஆயினும் இறைவனின் அருளை உணர்ந்த கங்கை ஏந்திச் சென்று ஒரு நாழிகைக்குள் இமய மலைச்சாரலில் உள்ள சரவணப்பொய்கையில் சேர்த்துவிட ஆறு தாமரைமலர்களில் ஆறுமுகமாக முருகன் அவதரித்தார். சிவன் அருளால் சரவணப்பொய்கை வற்றாதிருந்தது. அங்கே அருவமாயும் உருவமாயும் அநாதியாயும் ஒன்றாயும் பலவாயும் பரப்பிரம்மமாயும் நின்ற பரசிவ சோதிப்பிழம்பே ஒரு திருமேனியாக வடிவுகொண்டது. பரம்பொருள் கருணை வெள்ளம் பொழியும் ஆறுதிருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு உலகமெல்லாம் உய்யும் வண்ணம் முருகக்கடவுள் திரு அவதாரம் செய்தார்.

இதில் உலகசேமத்திற்காய் முருகு வடிவின் தத்துவத்தை ஆராய்ந்தோமானால் பேருண்மை என்னவென்று புரியும். பஞ்சபூதங்களில் படிப்படியாக வெளி காற்று, கனல், புனல், மண் இவற்றின் வழியில் தோற்றம் பெறுகிறார். இறைசுடராக வானத்தில் நின்று பின்காற்றின்கை புகுந்து பின்தீயைச் சென்றடைந்து கங்கையாகிய நீரில் தவழ்ந்து, பின் நிலத்தில் எய்தியது. ஞானக்கினியில் அருவமாகத் தோன்றிக் கருணைப்பொய்கையில் உருவமாகப் பொலிந்தது.

"ஸட்வக்த்ரம் த்வாதச புஜம் அஸ்டாதச விலோசனம் ரூபம் அங்கீக்ருதம் சுபம் லோகாநாம்" என்று வடமொழி ஸ்காந்தம் சொல்கிறது. உருவம் இல்லாத அருட்பெருஞ் ஜோதி ஆண்டவன் ஆறுமுகங்கள் பன்னிரண்டு தோள்கள் பதினெட்டுக் கண்கள் கொண்ட அருள் உருவத்தை உலகம் நலம் அடையும் பொருட்டு எடுத்துக்கொண்டான்.

"கண்ணிகர் மெய்யும் சென்னிக் கணநிக ரினத்தின் கூறும்
 திண்ணமை தோள்க ளேபோல் திகழ்தரு முயிரும் வேறொன்
 றெண்ணுதற்கரிய தான எஃகமும் இயலிற் காட்டும்
 புண்ணிய முனிக்கோன் செவ்வேள் பொற்பதத் தடிமையாகும்." என்ற கந்தபுராணக்கூற்றுப்படி முருகனுக்கு கண்கள் பதினெட்டுப்போல் தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டாக நின்றன.
முருகனுக்கு முகங்கள் ஆறு, தமிழின் இனஎழுத்துக்கள் ஆறு ஆகும். அதாவது வல்லினம் ஆறு , இடையினம்  ஆறு , மெல்லினம் ஆறு, இப்படியாக மு -ரு -க என்ற சொல்லில் அதன் எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்துக்களும் மெய்யினத்தின் ஒவ்வோர் இனத்தைச் சார்ந்து நிற்பது குறிப்பிடத்தக்கது. முருகன் தோள்கள் பன்னிரண்டு, உயிரெழுத்துக்களும் பன்னிரெண்டு கந்தன் கையில் உள்ள சக்திவேல் எந்தத்தெய்வங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பெற்றது. ஆயுதங்களின் பெயர்களை மக்களுக்கு சூட்டுவதில்லை. ஆனால் சக்திவேல், வேலன், வேல், வேலாயுதம், வேலும்மயிலும் குகவேல், சண்முகவேல் ,கதிர்வேல், வேல்முருகன், வேல்மயூரன் ,சுந்தரவேல் ,வேல்சாமி ,வெற்றிவேல்,வீரவேல் இப்படி பெயர் சூட்டி அழைப்பர்.

மிக முக்கியமாக வேறு எந்தமொழியிலும்  இல்லாத தனிநிலை ஆயுத எழுத்து தமிழில்தான் உண்டு.ஃ ஆயுதஎழுத்து இது வேலின் உருவத்தை ஒத்ததாக அமைந்ததாகும். இச்சை கிரியை ஞானம் என்ற மூன்று சக்திகள் சேர்ந்ததுவே வேலாகும். தமிழின் தலைவன் குமரன், தமிழ்வேறு அழகன் வேறு அல்ல;. எங்கள் தமிழன், இளமையானவன் முருகன்; தமிழும் என்றும் இளமையானது ,அழியாதது ,அழகானது; தமிழ் வேறு;முருகன் வேறு அல்ல.
இனிக் கந்தபுராணத்தை முருகன் அடி எடுத்துக் கொடுக்க கந்தன் புகழைக் கந்தபுராணமாகப் பாடி உலகுக்கு அறிமுகம் செய்த கச்சியப்பசிவாச்சாரியார் அவர்களைப்பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

- அருந்தா
4தமிழ்மீடியா

Thursday, November 8, 2012

எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை !!

நம் நாட்டில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கீரைகளில் முருங்கைக்கீரையும் ஒன்றாகும். முருங்கையை நம் வீட்டு மருத்துவர் என்றே சொல்லலாம். முருங்கைக் கீரையை ஏழைகளின் டானிக் என்கின்றனர்.எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போ
ம்.

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும். இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன்படுத்தலாம். முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப் பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள் :
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம் - 75.9%
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
இழைப்பண்டம் - 0.9%

கார்போஹைட்ரேட்கள் - 12.5%
தாதுக்கள், வைட்டமின்கள்,
கால்சியம் - 440 மி.கி
பாஸ்பரஸ் - 70 மி.கி
அயம் - 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
Photo: எண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை !!

 நம் நாட்டில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கீரைகளில் முருங்கைக்கீரையும் ஒன்றாகும்.  முருங்கையை நம் வீட்டு மருத்துவர் என்றே சொல்லலாம்.  முருங்கைக் கீரையை ஏழைகளின் டானிக் என்கின்றனர்.எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். 