டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,
இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.
2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.
2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது.
இப்போதைய இந்திய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைகளைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் மிக அதிகமான அளவில் மக்கள் வசிக்கின்றனர். அடுத்த நிலையில் மகாராஷ்டிரம் (11.23 கோடி), பிகார் (10.38 கோடி), மேற்கு வங்கம் (9.13 கோடி), ஆந்திரப் பிரதேசம் (8.46 கோடி) ஆகியவை உள்ளன.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மக்கள் தொகையைக் கூட்டினால் அது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.
நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த விகிதாச்சாரம் இவ்வளவு மிக மிகக் குறைவான அளவைத் தொட்டது இதுவே முதல் முறை. இது பெரும் கவலை தரும் விஷயமாகும்.
கேரளத்தில் மட்டுமே 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1084 பெண் குழந்தைகள் என்ற நிலைமை உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் 1038 பெண் குழந்தைகள் என்ற நல்ல சூழல் நிலவுகிறது.
ஆனால் டைமன் டையு யூனியன் பிரதேசத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 618 பெண் குழந்தைகளே உள்ளனர். அதே நேரத்தல் தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், மிசோரம், அந்தமான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்-பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் நல்ல நிலையை எட்டி வருகிறது. மற்ற 27 மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகை நெருக்கம் டெல்லியின் வட கிழக்குக் பகுதியில் தான் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 37,346 பேர் வசிக்கின்றனர்.
அருணாசலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். நாட்டிலேயே மிக மிகக் குறைவான மக்கள் நெருக்கம் உள்ள பகுதி இது தான். டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டீகரில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.
தாதர், நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தான் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக அளவாக 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நாகாலாந்தில் மிக மிகக் குறைவான அளவிலேயே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.
கல்வியறியைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74.04 சதவீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் இது 64.83 சதவீதமாகவே இருந்தது. பத்தாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் ஆண்களிடையே கல்வியறிவு 82.14 சதவீதமாகவும், பெண்களிடையே கல்வியறிவு 65.46 சதவீதமாகவும் உள்ளது.
இன்றைய நிலையில் உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதம் பேர் சீனாவிலும் 17.5 சதவீதம் பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர்.
1872ம் ஆண்டில் தான் நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பான சென்ஸஸ் நடத்தப்பட்டது. இப்போது நடத்தப்பட்டுள்ளது 15வது கணக்கெடுப்பாகும்.
Friday, April 1, 2011
9 facts still hidden from us-
1) 90% of people in Australia
don't drink milk.
...2) Snake's vision
is up to 5 km....
3) A man can touch
sun if his body is completely surrounded by mercury.
4) No twins have been born up till now
in Greenland.
5) Zebra doesn’t
have a liver.
6) All the above
details are false.
7) Thanks for
believing for a while.
8) Today is April 1st.
9)But a fool is a fool on any day.

Monday, March 28, 2011
Eiffel கோபுரம்
பிரான்ஸ் என்றதும் உங்கள் நினைவுக்கு முதலில் வருவது
Eiffel கோபுரம் தான் இது பிரஞ்சு புரட்சி நூற்றாண்டு நிறைவை
கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.,தொடங்கப்பட்டபோது
இது 20 வருடங்களின் பின்னர் இடித்துவிடுவது என
திர்மானிக்கப்பட்டே 1887 ம் ஆண்டு இதன் பணிகள்
gustave eiffel என்ற பிரஞ்சு பொறியியலாளர் தலைமையில்
தொடங்கப்பட்டது . பின்னர் அது கைவிடப்பட்டது.
இக் கோபுரம் 2 ஆண்டு காலத்தில் பணிகள்
பூர்த்தி செய்யப்பட்டு 1889 . மார்ச் 31 திறக்கப்பட்டது . அதே
ஆண்டு மே 06 அன்று பொது மக்களின் பார்வைக்காக திறந்து
விடப்பட்டது.கோபுரத்தின் மொத்த உயரம் 324m கோபுரம்
முழுவதும் உருக்கு இரும்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது .
இதன் எடை 7000 தொன்.இந்த இரும்பு சட்டங்களை
பொருத்துவதற்கு 2.5 மில்லியன்அணிகள் தறையப்பட்டுள்ளன.
இந்த கோபுரம் ஆனது 3 தளங்களை கொண்டதாக
அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உச்சி வரை செல்ல
அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுக்களின் எண்ணிக்கை 1652 .
இந்த கோபுரத்தை அமைப்பதற்கு அன்றைய நாளில் 1.5 மில்லியன்
அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
இப்படியான வியக்கத்தக்க பொறியியல் நுட்பம் கொண்ட
கோபுரத்தினை 300 தொழிலாளர்களை பயன்படுத்தி 2 ஆண்டுகள் 2
மாதகாலப்பகுதியில் பூர்த்தி செய்தனர்.
கட்டுமான பனியின் போது
Gustave eiffel

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 1706 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நல்ல உயர்வைக் கண்டுள்ளது. 2006ல் 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் 1706 ஆக அதிகரித்துள்ளது.
புலிகள் குறித்த சென்சஸ் எடுக்கப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் எண்ணிக்கையை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமான முறையிலும், விரிவான முறையிலும் இந்தமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் கம்ப்யூட்டர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு மிகவும் துல்லியமான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
2006ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்போது புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது தெரிய வந்தது. அதன் பின்னர் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் விளைவாக தற்போது புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
Saturday, March 26, 2011
popular company names
popular company names
YAHOO :
ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய குலிவர்ஸ் டிராவல்ஸ் என்ற புத்தகத்தில் வரும் கதாபாத்திரம் இது . துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை தன் இணையத்திற்கு வைத்து விட்டார்கள், YAHOO - வை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.
SONY :
இலத்தீன் மொழியில் 'சோனஸ்' என்றால் ஒலி என்று பொருள். தீட்சண்யமான இளைஞனைக் குறிக்க அமெரிக்கர்கள் பயன்படுத்தும் சொல் "SONNY".
ADOBE :
அடோப் நிறுவனர் ஜான் வார்னாக் - கின் வீட்டுக்குப் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் அடோப்.
APPLE :
இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பி சாப்பிடும் பழம் ஆப்பிள் ! நிறுவனம் தொடங்கி 3 மாதம் ஆகியும் பெயர் வைக்காமல் இருந்தார். தன் சகாக்கள், கடைசி நாள் மாலைக்குள் வேறு பெயர்களை பரிந்துரைக்காவிட்டால் ஆப்பிள் என்று பெயர் சூட்டப் போவதாக சொன்னார். ஆப்பிள் கனிந்தது
MOTOROLA :
கார்களில் பொருத்தும் ரேடியோ உற்பத்தியில் தன் முதல் முயற்சியைத் தொடங்கிய பால் கெல்வின் தொடங்கிய நிறுவனம் மோட்டோரோலா. அதன் சாயலில் தன் நிறுவனத்தின் பெயரை அமைத்தார் பால்.
XEROX :
'ஜெர்' என்பது உலர்தலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை வேராகக் கொண்டது. நகலெடுக்கும் போது மை காய்ந்திருக்கும் என்பதை குறிக்க சென்டர் காரிஸன் இப்பெயரை வைத்தார். அதற்கு முன் நகலெடுத்தால் மை காய்வதற்குள் மண்டை காய்ந்துவிடும்.

Friday, March 25, 2011
Skype உபயோகிப்பவரா நீங்கள்? - இதையும் கொஞ்சம் பாருங்களேன்! (படங்கள்)
Skype நிறுவனம் தனது புதிய Office ஒன்றை, முற்றிலும் நவீனமயமான வடிவமைப்புடன் 54,000
சதுரஅடி பரப்பளவில் கலிபோர்னியாவின் Palo Alto வில் திறந்திருக்கிறது. உலகின் முதற்தர Office ஆக இது திகழ வேண்டுமென திட்டமிட்டு இராப்பகலாய் உழைத்து வடிவமைத்திருக்கிறார்களாம்.
இதன் வடிவமைப்பில் அசந்து போய், அங்கு பணி புரியும் சுமார் 250 பணியாளர்களும் இப்போது புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்களாம்.
இது தான் அந்த Office

இந்தியாவில் இரண்டாவது ஷோரூமை திறக்கிறது லம்போர்கினி
அதிக விலை கொண்ட சூப்பர் கார் களை தயாரிப்பதில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி இந்தியாவில் இரண்டாவது ஷோரூமை திறக்க உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சந்தையில் இடம்பிடித்துள்ள லம்போர்கினி டெல்லியில் ஷோரூம் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 10 கார்களை விற்பனையும் செய்துள்ள லம்போர்கினி தனது தாய் நிறுவனமான ஆடியின் விற்பனை இந்தியாவில் சரசரவென உயர்வதை பார்த்து மலைத்துபோயுள்ளது.
இந்தியாவில் சொகுசு கார்களுக்கான சந்தை வலுவாக இருப்பதை உணர்ந்துகொண்டு, விரிவாக்க பணிகளை மேற்கொள்ள லம்போர்கினி முடிவு செய்துள்ளது. இதையடுத்து, டெல்லியையடுத்து மும்பையில் தனது இரண்டாவது ஷோரூமை அமைக்கிறது லம்போர்கினி.
லம்போர்கினியின் அதிகாரப்பூர்வ மும்பை டீலராக பாஃப்னா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இதுதவிர, நாட்டின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து ஷோரூம்களை திறக்க லம்போர்கினி கைவசம் திட்டம் இருப்பதாகவும் தெரிகிறது.
ஜெனிவா மோட்டார்ஷோவில் அசத்திய அவென்டடார் சூப்பர் கார் உள்பட பல்வேறு மாடல்களை இந்தியாவில் பிரபலபடுத்தி விற்பனை செய்ய லம்போர்கினி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் ஷோரூம் திறப்பதற்கு முன்னரே இரண்டு அவென்டடார் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டெல்லியில் 9 கார்கள் முன்பதிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to:
Posts (Atom)