Saturday, March 26, 2011

popular company names

popular company names


YAHOO :
ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய குலிவர்ஸ் டிராவல்ஸ் என்ற புத்தகத்தில் வரும் கதாபாத்திரம் இது . துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை தன் இணையத்திற்கு வைத்து விட்டார்கள், YAHOO - வை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.



SONY :
இலத்தீன் மொழியில் 'சோனஸ்' என்றால் ஒலி என்று பொருள். தீட்சண்யமான இளைஞனைக் குறிக்க அமெரிக்கர்கள் பயன்படுத்தும் சொல் "SONNY".





ADOBE :
அடோப் நிறுவனர் ஜான் வார்னாக் - கின் வீட்டுக்குப் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் அடோப்.






APPLE :

இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பி சாப்பிடும் பழம் ஆப்பிள் ! நிறுவனம் தொடங்கி 3 மாதம் ஆகியும் பெயர் வைக்காமல் இருந்தார். தன் சகாக்கள், கடைசி நாள் மாலைக்குள் வேறு பெயர்களை பரிந்துரைக்காவிட்டால் ஆப்பிள் என்று பெயர் சூட்டப் போவதாக சொன்னார். ஆப்பிள் கனிந்தது


MOTOROLA :
கார்களில் பொருத்தும் ரேடியோ உற்பத்தியில் தன் முதல் முயற்சியைத் தொடங்கிய பால் கெல்வின் தொடங்கிய நிறுவனம் மோட்டோரோலா. அதன் சாயலில் தன் நிறுவனத்தின் பெயரை அமைத்தார் பால்.


XEROX :
'ஜெர்' என்பது உலர்தலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை வேராகக் கொண்டது. நகலெடுக்கும் போது மை காய்ந்திருக்கும் என்பதை குறிக்க சென்டர் காரிஸன் இப்பெயரை வைத்தார். அதற்கு முன் நகலெடுத்தால் மை காய்வதற்குள் மண்டை காய்ந்துவிடும்.

No comments:

Post a Comment