Thursday, November 8, 2012

குதுப் மினார் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது!

டெல்லியிலுள்ள மூன்று வரலாற்றுச் சின்னங்களில் சுற்றுலா பயணிகளை மிக அதிகமாக ஈர்ப்பது குதுப் மினார் என்பது தெரியவந்துள்ளது.

குதுப் மினார், செங்கோட்டை, ஹூமாயூன் கல்லறை ஆகிய மூன்றும் உலக பாரம்
பரிய சின்னங்களாக அறிவிக்கபட்டவையாகும். டெல்லிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மூன்று இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றாலும், இம்மூன்றில், குதுப் மினார்தான் சுற்றுலா பயணிகளை மிக அதிகமாக ஈர்க்கின்றது.

12வது நூற்றாண்டில் குத்புதீன் அய்பெக் என்ற அரசரால் கட்டப்பட்ட 234 அடி உயர, இந்தியாவின் மிக உயரமான வரலாற்றுத் தூண் குதுப் மினார். இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாஜ் மஹாலிற்கு அடுத்த இடத்தில் குதுப் மினார் இருக்கிறது!

2009ஆம் ஆண்டு இதைக் காண வந்த சுற்றுலாவினரிடமிருந்து வசூலிக்கப்பட்ட நுழைவுத் தொகை ரூ.10.41 கோடியாகும்.

தாஜ் மஹாலி்ல் வசூலான தொகை ரூ.14.87 கோடி. ஆக்ராவின் மிகப் புகழ்பெற்ற செங்கோட்டை வசூல் ரூ.9.25 கோடியாகும்.

கட்டமைப்பு

குதுப் மினார் மேல் உச்சி வரை சென்றடைய 378 படிகள் ஏற வேண்டும். அடித்தளத்தின் குறுக்கு விட்டம் 14.3 மீட்டர்களாகும், அதே நேரத்தில் மினாரின் மேல் தளம் 2.75 மீட்டர்கள் குறுக்கு விட்டம் கொண்டதாகும். அதனைச் சுற்றிலும் இந்தியக் கலைநுட்பம் கொண்ட சீரிய எடுத்துக் காட்டாக பல கட்டடங்கள் 1193 ஆம் ஆண்டு முதலாக தொடங்கிய காலத்தில் இருந்து சூழப்பட்டுள்ளன. இரண்டாவது அதுபோல கோபுரம் ஒன்று குதுப் மினாரைவிட உயரம் கொண்டதாக திட்டமிட்டு கட்டுமானத்தில் இருந்தது.

அது பன்னிரண்டு மீட்டர்கள் உயர்ந்த பொழுது திடுமென கட்டுமானப்பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டது. இந்த கோபுரம் அலை மினார் என அறியப்படும் மேலும் அருகாமையில் நடந்த ஆய்வுகளின் படி இதன் கட்டமைப்பு ஒரு திசையில் சற்றே சரிந்து இருப்பதாக காணப்படுகிறது. மேலுச்சியில் இரண்டு அடுக்குகள் நீங்கலாக இதன் பிற இடங்களில், குறிப்பாக மக்கள் போகும் வழியாவும் சிவப்பு வண்ணம் கொண்ட மணல்கற்களால் கட்டியதாகும். இந்த பகுதி வரையில் மட்டும் வெள்ளை சலவை கற்களால் ஃபிருஸ் ஷா துக்ளக் வம்ச அரசரால் கட்டப்பெற்றது. கம்பீரமான மினாருக்கு இறுதியாக ஒரு சிறப்பான முக்கியத்துவம் தர வேண்டும் என அவர் தீர்மானித்ததே இதற்கான காரணமாகும்.

72.5 மீ (234 அடி) உயரமுடைய குதுப் மினார் தான் உலகின் உயரமான தங்கு தடையில்லாமல் நிற்கின்ற தூபி ஆப்கானிஸ்தான் நாட்டில் காணப்படும் ஜாம் மினார் எனும் கட்டிடத்தை விட உயரமாகவும் பெயர் பெற்றிடும் நோக்கத்துடன் தில்லியின் முதல் இஸ்லாமிய அரசரான குத்துபுத்தின் ஐபக், 1193 ஆம் ஆண்டு குதுப் மினார் என்ற இந்த கோபுரத்தின் கட்டிட வேலைகளை ஆரம்பித்தார், ஆனால் அவரால் அதன் அடித்தளத்தை மட்டுமே கட்ட முடிந்தது. அவரை பின்தொடர்ந்த, இல்த்துத்மிசு என்ற அரசர், மேலும் மூன்று தளங்களை கட்டி முடித்தார், மேலும் 1286 ஆம் ஆண்டில், அல்லாவுத்தின் என்ற அரசரின் கீழ் ஐந்தாவது மற்றும் கடைசி தளம் கட்டி முடிந்தது. ஐபக் முதல் துக்ளக் வரையான காலகட்டத்தில் கட்டிடக்கலையில் ஏற்பட்ட நடைமுறை மாற்றங்களை அந்த தூபியில் தெளிவாகக் காணலாம். ஆப்கானிஸ்தான் நாட்டில் இதற்கு முன் கஜனி மற்றும் கோரி வம்சத்தினர் கட்டிய கோபுரங்களைப் போல, இந்த குதுப் மினாரும் பல ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிய பட்டையான விளிம்புடன் கூடிய உருளை வடிவான அம்புகள் கொண்டு வடிவமைக்கப் பெற்றது, மேலும் தனிப்பட்ட முகாமா வகை தண்டயம் களைக் கொண்டு உப்பரிகைகள் உருவாக்கப் பெற்றன.

இந்த குதுப் வளாகத்தின் அருகாமையில் நிற்கும் இரும்புத் தூண் உலக அதிசயங்களில் ஒன்றாகும், உலோக ஆக்கத் தொழில் வல்லுனர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்த விஷயமாகும். பரம்பரை பரம்பரையாக மக்கள் நம்புவது என்ன என்றால், ஒருவர் முதுகை இந்த தூணுடன் இணைத்து, தமது கரங்களால் இந்த தூணை அரவணைக்க முடிந்தால், அவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகமாகும். மனிதனின் வியர்வை இந்த தூணை அரித்தழிக்கும் என்பதால், இப்படி செய்யாமல் இருக்க, இந்திய அரசு, இந்தத் தூணை சுற்றி ஒரு பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளது.

இருமுறைக்கும் மேலாக நிகழ்ந்த நிலநடுக்கங்களால் மினார் கொஞ்சம் சீரழிந்தது, ஆனாலும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதை புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவந்தனர். பிரோஜ் ஷா அரசனாக இருந்த பொழுது, இதன் இரு மேல் மாடிகள் பூமி குலுக்கம் காரணம் பழுதடைந்தன, ஆனால் அரசர் பிரோஜ் ஷா அதை அப்போதே சரிகட்டிவிட்டார். 1505 ஆம் ஆண்டில், நிலநடுக்கம் மீண்டும் தாக்கியது மற்றும் சிகந்தர் லோடி அதை மீண்டும் பழுது பார்த்து சரிகட்டினார். பிறகு 1794 ஆம் ஆண்டில் ஒரு முறை பூமி குலுக்கத்திற்கு இந்த கோபுரம் ஆளான பொழுது, மேஜர் ஸ்மித் என்ற பொறியியலாளர் அதன் பழுதடைந்த பாகங்களை சரி செய்தார். அவர் கோபுரத்தின் சிகரத்தில் பிரோஜ் ஷா அமைத்த காட்சிக்கூடத்தை மாற்றி அமைத்தார். இந்த காட்சிக் கூடத்தை 1848 ஆம் ஆண்டில் லோர்ட் ஹார்டிஞ் என்பவர் பிரித்தெடுத்து, தபால் கட்டிடம் மற்றும் கோபுரத்திற்கு இடையில் அமைந்த தோட்டத்தில் மாற்றியமைத்தார். பிரோஜ் ஷா அமைத்த தளங்களை எளிதாக கண்டு கொள்ளலாம், ஏன் என்றால் அவர் தரைகளை வெள்ளை நிறப் பளிங்குக் கற்களால் உருவாக்கினார், அவை மினுமினுப்பாகவும், வழவழப்பாகவும் இருப்பது பார்த்தாலே தெரிந்து விடும்.
பைசா கோபுரம் போல சாயுமா டில்லி குதுப் மினார்மழைநீர் கசிவால் பாதிப்பு

இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் சாய்ந்து கொண்டிருப்பதைப் போல, குதுப் மினார் கோபுரமும் சாயுமா என்ற கேள்விக்குறி இப்போது எழுந்துள்ளது. அஸ்திவாரத்தை மழைநீர்க்கசிவு அரித்துக் கொண் டிருப்பதால், இந்த ஆபத் தான நிலை ஏற்பட்டுள்ளது.டில்லியில், துக்ளக் ஆண்டகாலத்தில் மூன்று முக்கிய நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்று செங் கோட்டை;

ஆனால், சமீப காலமாக, தொடர்ந்து மழைநீர் கசிவு ஏற்பட்டுவருகிறது. இதனால், கோபுரம், முன்பை விட, சாய்ந்த நிலையில் உள்ளது. தென்மேற்கு பக்கமாக 25 அங்குலம் வரை சாய்ந்துள்ளது.கட்டடம் கட்டும் போது, நேராக நிற்கும் வகையில் தான் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடித்ததும் சில ஆண்டுகளில் லேசாக சாய ஆரம்பித்தது. மண் திடம் இல்லாத காரணத்தால், சாய்வது தொடர்ந்தது. அதன் பின், சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்பாலும், கோபுரம் சாய்வது நீடித்தது.

இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில்,”முதன் முதலில் கோபுரத்தில் சாய்வது தொடர்பாக, 1950 களில் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின், பத்தாண்டுகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த குழுவும் கூட சோதனை செய்தது. அதனால், பயப்படும் படி எந்த ஆபத்தும் நேராது’ என்று தெரிவித்தன
Photo: குதுப் மினார் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது!  
 
டெல்லியிலுள்ள மூன்று வரலாற்றுச் சின்னங்களில் சுற்றுலா பயணிகளை மிக அதிகமாக ஈர்ப்பது குதுப் மினார் என்பது தெரியவந்துள்ளது.

குதுப் மினார், செங்கோட்டை, ஹூமாயூன் கல்லறை ஆகிய மூன்றும் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கபட்டவையாகும். டெல்லிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மூன்று இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றாலும், இம்மூன்றில், குதுப் மினார்தான் சுற்றுலா பயணிகளை மிக அதிகமாக ஈர்க்கின்றது. 

No comments:

Post a Comment