Tuesday, October 9, 2012

உலகில் அசிங்கமான தற்போதைய கட்டடம்

உலகில் அசிங்கமான தற்போதைய கட்டடம் !! அடுத்த இடத்தை எந்த கட்டடம் பிடிக்கும் ?

உலகில் அழகான கட்டடங்கள் ஆயிரம் இருக்க, அசிங்கமான கட்டடம் எது என்று கேட்டால் வடகொரியாவில் உள்ள ரியூக்யாங்க் ஓட்டலை காட்டுகின்றன அந்த ஊர் ப
த்திரிகைகள்.

வடகொரியா, பியாங்யாங் நகரில் இருக்கிறது 105 மாடிகளை கொண்ட ரியூக்யாங்க் ஓட்டல். கிட்டத்தட்ட 20 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் நிற்கும் இந்தக் கட்டடம்தான் உலகின் அசிங்கமான கட்டடம் எனக் கருதப்படுகிறது.

1987ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஓட்டலின் கட்டுமானப் பணிகள் கடந்த 1992 ஆம் ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டன. இதில் கட்டப்பட்டுள்ள 3 ஆயிரம் அறைகள் ஏதோ தேவதை கதைகளில் வரும் ஆச்சரிய குகைகள் போல காட்சியளிக்கின்றன. பல வருடங்களாக பூசப்படாமல் சுவர்கள் இற்றுப்போய் பார்க்கவே பயமுறுத்தும் வகையில் இது இன்று நின்று கொண்டிருக்கிறது. இந்த ராட்சத கட்டடத்தை இரவில் பார்க்கத்தான் துணிச்சல் அதிகம் வேண்டும்.

இந்த கட்டடம் என்றைக்காவது பூர்த்தியாகுமா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். வட கொரியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையும், சுற்றுலாப் பயணிகள் மருந்துக்குகூட எட்டிபப் பார்க்க வாய்ப்பில்லாத பகுதி பியாங்யாங் என்பதாலும் மாற்றம் வர வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.முதலீடாக போடப்பட்ட கோடிக்கணக்கான பணம் வெறும் வெத்து கட்டடமாக நிற்பது கொடுமைங்க.

உலகில் அசிங்கமான கட்டிடம் என்ற இரண்டாவது இடத்தை எந்த கட்டிடம் பிடிக்கும் ? அது கண்டிப்பாக நம்ம சென்னையில் உள்ள புதிய தலைமை செயலகம் தான் பிடிக்கும் என்பதில் எவ்வளவும் சந்தேகம் இல்லை இப்பவே அந்த கட்டிடத்தில் பாம்புகள் நிறைய குடியேறிவிட்டது .இருள் அடைந்து காணபடுகிறது என்று எல்லாம் சில பத்திரிக்கையில் செய்திகள் வந்தது தற்போது கட்டிடத்தின் மேல் கண்ணாடிகள் எல்லாம் விழுந்த வண்ணம் இருக்கிறது . 1200 கோடி செலவு செய்து இப்படி பரிதாபத்துடன் நிற்கும் கட்டிடத்தை பார்க்கும் போது வருத்தமடையாத மக்கள் யாரும் இருக்க முடியாது .குழந்தைகள் மருத்துவமனை வரபோகிறது என்று அறிவித்தார்கள் அதுவும் வந்த பாடு இல்லை . அதற்கும் வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது மொத்தத்தில் கட்டிடமும் வீனாகிகொண்டு இருக்கிறது . மக்கள் பணமும் வீணாய் போய்விட்டது

உலகில் அசிங்கமான கட்டிடம் என்று கண்டிப்பாக இரண்டாவது இடத்தை இந்த கட்டிடம் தான் பிடிக்கும் ....கருத்து தெரிவிற்கும் நண்பர்கள் உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் ..
Photo: உலகில் அசிங்கமான தற்போதைய கட்டடம் !! அடுத்த இடத்தை  எந்த கட்டடம் பிடிக்கும் ? Must Read And share !!!

உலகில் அழகான கட்டடங்கள் ஆயிரம் இருக்க, அசிங்கமான கட்டடம் எது என்று கேட்டால் வடகொரியாவில் உள்ள ரியூக்யாங்க் ஓட்டலை காட்டுகின்றன அந்த ஊர் பத்திரிகைகள்.

வடகொரியா, பியாங்யாங் நகரில் இருக்கிறது 105 மாடிகளை கொண்ட ரியூக்யாங்க் ஓட்டல். கிட்டத்தட்ட 20 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் நிற்கும் இந்தக் கட்டடம்தான் உலகின் அசிங்கமான கட்டடம் எனக் கருதப்படுகிறது.

1987ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஓட்டலின் கட்டுமானப் பணிகள் கடந்த 1992 ஆம் ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டன.  இதில் கட்டப்பட்டுள்ள 3 ஆயிரம் அறைகள் ஏதோ தேவதை கதைகளில் வரும் ஆச்சரிய குகைகள் போல காட்சியளிக்கின்றன. பல வருடங்களாக பூசப்படாமல் சுவர்கள் இற்றுப்போய் பார்க்கவே பயமுறுத்தும் வகையில் இது இன்று நின்று கொண்டிருக்கிறது. இந்த ராட்சத கட்டடத்தை இரவில் பார்க்கத்தான் துணிச்சல் அதிகம் வேண்டும்.

இந்த கட்டடம் என்றைக்காவது பூர்த்தியாகுமா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். வட கொரியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையும், சுற்றுலாப் பயணிகள் மருந்துக்குகூட எட்டிபப் பார்க்க வாய்ப்பில்லாத பகுதி பியாங்யாங் என்பதாலும் மாற்றம் வர வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.முதலீடாக போடப்பட்ட கோடிக்கணக்கான பணம் வெறும் வெத்து கட்டடமாக நிற்பது கொடுமைங்க.

உலகில் அசிங்கமான கட்டிடம் என்ற  இரண்டாவது இடத்தை எந்த கட்டிடம் பிடிக்கும் ? அது கண்டிப்பாக நம்ம சென்னையில் உள்ள புதிய தலைமை செயலகம் தான் பிடிக்கும் என்பதில் எவ்வளவும் சந்தேகம் இல்லை  இப்பவே அந்த கட்டிடத்தில் பாம்புகள் நிறைய குடியேறிவிட்டது .இருள் அடைந்து காணபடுகிறது என்று எல்லாம் சில பத்திரிக்கையில் செய்திகள் வந்தது தற்போது கட்டிடத்தின் மேல் கண்ணாடிகள் எல்லாம் விழுந்த வண்ணம் இருக்கிறது . 1200 கோடி செலவு செய்து இப்படி பரிதாபத்துடன் நிற்கும் கட்டிடத்தை பார்க்கும் போது வருத்தமடையாத மக்கள் யாரும் இருக்க முடியாது .குழந்தைகள் மருத்துவமனை வரபோகிறது என்று அறிவித்தார்கள் அதுவும் வந்த பாடு இல்லை . அதற்கும் வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது மொத்தத்தில் கட்டிடமும் வீனாகிகொண்டு இருக்கிறது . மக்கள் பணமும் வீணாய் போய்விட்டது

உலகில் அசிங்கமான கட்டிடம் என்று கண்டிப்பாக இரண்டாவது இடத்தை இந்த கட்டிடம் தான் பிடிக்கும்  ....கருத்து தெரிவிற்கும் நண்பர்கள் உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் ..

No comments:

Post a Comment