Wednesday, February 16, 2011

அட்டகாசமான ஸ்டைலுடன் எஸ்யூவீ கார்:மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம்



மும்பை: ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்,ரூ.1.10கோடி விலை கொண்ட ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மெர்சிடிஸ் பென்சின் சொகுசு கார்கள் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மெர்சிடிஸ் கார்களுக்கு இந்திய சந்தையில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஐரோப்பிய சந்தையில் கலக்கிய பல மாடல்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.

மெர்சிடிஸ் நிறுவனம் ஏற்கனவே சி-கிளால்,இ-கிளாஸ்,எஸ்-கிளாஸ்,எம்-கிளாஸ் சொகுசு கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வரிசையில் தனது ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஜி-55ஏஎம்ஜி அறிமுக விழாவில் பேசிய நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் தேபஷிஷ் மித்ரா கூறியதாவது:

"ஜி-கிளாஸ் எஸ்யூவீ ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளோம்.காரை இந்தியாவில் முறைப்படி அறிமுகம் செய்வதற்கு முன்பே,15 வாடிக்கையாளர்கள் முழுப்பணமும் செலுத்தி முன்பதிவு செய்துள்ளனர்.அவர்களுக்கு இந்த மாத இறுதியிலிருந்து ஜி-கிளாஸ் டெலிவிரி கொடுக்கப்படும்.

ஜி-கிளாஸ் மாடலை ஐரோப்பிய பத்திரிக்கையாளர்கள் பெஸ்ட் எஸ்யூவீயாக தேர்வு செய்துள்ளனர்.
மற்ற முன்னணி எஸ்யூவீ கார்களைவிட ஜி-55ஏஎம்ஜி மாடல் பாதுகாப்பு அம்சங்களுக்காக பல விருதுகளை வென்றுள்ளது.

ஜி-55ஏஎம்ஜியில் பொருத்தப்பட்டுள்ள 5.5லிட்டர் வி-8எஞ்சின் 373 kW/507 hp திறனை வெளிப்படுத்தும்.இது 5.5வினாடிகளில் 100 kmphஐ எட்டிவிடும்.இதில்,அதிகபட்சம் 210 kmph வேகத்தில் செல்ல முடியும்,"என்று கூறினார்.


English summary
Mercedes-Benz India on Monday launched its top-end G-Class SUV, the G 55 AMG, with a price tag of Rs 1.1 crore (ex-showroom price). “Even before the official launch, we already had 15 confirmed bookings of the G 55 AMG,” said director, sales & marketing, of Mercedes-Benz India. He said all the confirmed customers had already made full payment and the imported vehicles from the company’s Stuttgart plant in Germany will be delivered to them by the end of February. The imported vehicles attract 102 per cent duty, he said.

No comments:

Post a Comment