Monday, November 28, 2011

மியான்மரின் பெண் சிங்கம் ஆங்சாங்சூகி

மியான்மரின் பெண் சிங்கம் ஆங்சாங்சூகி

மரணப்படுக்கையில் இருந்த கணவரைப் பார்க்க்ப்போனால், தாய்நாட்டை மறந்துவிட வேண்டியதுதான் என்ற நிலையில் ,தேசமே பெரிது என எண்ணி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருபவரும்,உலக முன்வரிசை போராளியுமான ஆங் சாங் சூகியை, இந்த வாரம் அமெரிக்க வெளி விவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சந்திக்க வருகிறார்.இதை அடுத்து, உலக அரசியல் வரலாற்றில் ஒரு பரபரப்பு பற்றிக்கொண்டுள்ள நிலையில் ஆங்சாங்சூகியின் கதையை கொஞ்சம் தெரிந்துகொள்வோமா...

இன்றைக்கு மியான்மராக உள்ள அன்றைய பர்மாவில் மக்களாட்சி மலர போராடியவர்தான் ஆங்சான்.இவரது மகள்தான் ஆங் சான் சூகி.இவர் 1945ம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்து அன்புடன் அப்பா என்றழைக்கப்பட வேண்டிய நேரத்தில் ,அதவாது அவரது இரண்டாவது வயதில் இவரது தந்தை ஆங்சான் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் காரணமாக சிதறி சின்னபின்னமான ஆங் சானின் குடும்பம் பல இடங்களில் இடம் பெயர்ந்தது.ஆங் சாங் சூகி இந்தியாவிலும்,இங்கிலாந்திலும் படிப்பையும் வாழ்க்கையும் தொடர்ந்தார்.பல்வேறு பட்டங்கள் பெற்ற நிலையில் ஆராய்ச்சி மாணவரான மைக்கேல் ஆரிசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.கணவர் இரண்டு குழந்தைகள் என்று வாழ்க்கை லண்டனில் நீரோடை போல போய்க்கொண்டு இருந்தது.

அப்போது உடல் நலிவுற்ற தன் தாய் "கின் கி'யை பார்ப்பதற்காக மியான்மருக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆங்சான் சூகி பயணம் மேற்கொண்டார்.வந்தவருக்கு தன் தாயின் உடல் நிலையைவிட, அதிர்ச்சி தந்த விஷயம் நாட்டில் தாண்டவமாடிய வறுமையும்,ஏழ்மையும்தான். மேலும் மியான்மர் உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டு ஏழ்மை நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்து.மக்கள் சிரமத்தில் இருந்தனர்.அந்த நேரம் நாட்டுவிடுதலைக்காக போராடியவர்கள் ஐயாயிரம் பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இது போன்ற சம்பவங்களலால் உலுக்கி எடுக்கப்பட்ட ஆங் சான் சூகி உறுதியான மற்றும் இறுதியான ஒரு முடிவெடுத்தார்.

தனது தாய்நாட்டின் விடுதலைக்காக போராட முடிவு செய்த,ஆங் சான் சூகி ஜனநாயக லீக் கட்சியை துவங்கி தலைவியானார்.மக்கள் இருகரம் நீட்டி அள்ளி அணைத்து தங்கள் இதயத்தில் ஏந்திக்கொண்டனர்.ஆனால் ராணுவ ஆட்சியாளர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆங் சான் சூகியை வீட்டுக்காவலில் தனிமைச் சிறையில் வைத்தனர்.

யாரையும் பார்க்ககூடாது,தொலைபேசி வசதி கூட கிடையாது,சேதமடைந்த,பழமையான வீட்டில் பல நேரம் மின்சாரம் இருக்காது,பெரும்பாலும் மெழுகுவர்த்தி வெளிச்சம்தான், இரண்டு வயதான பெண்கள்தான் உதவிக்கு என்ற நிலையில் ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு அல்ல இருபது ஆண்டுகள் அந்த தனிமைச் சிறையில் வாடினார்.

ஆனாலும் நம்பிக்கையை விடமால் ஜனநாயக முறையில் போராட்டத்தை தொடர்ந்தார். கடிதங்களால் மக்களிடம் நம்பிக்கை வளர்த்தார்.இந்த நிலையில் 1990 ல் நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் 485 இடத்தில் போட்டியிட்டு 392 இடங்களில் ஜெயித்து காட்டினார். ஆனால் இந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்த ராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகியின் கட்சிக்கு தடைவிதித்தும் பார்த்தது. போட்டிக்கு 32 கட்சிகளை வளர்த்துவிட்டது. ஆனாலும் மக்கள் ஆங் சான் சூகியின் பக்கமே நின்றனர்.

இடையில் புற்றுநோய் ஏற்பட்டு மரணப்படுக்கையில் இருந்த தனது கணவரை காண விரும்பிய ஆங் சான் சூகிக்கு மியான்மர் அரசு அனுமதி மறுத்துவிட்டது.,பின் ஒரு கடுமையான நிபந்தனை போட்டது லண்டனில் இருக்கும் தனது கணவரைப் பார்க்கலாம் ஆனால் பிறகு திரும்ப தனது தாய்நாட்டிற்கு வரக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.

கணவரா? தேசமா? என்ற கேள்விக்கு முன் தேசமே பெரிதென முடிவெடுத்து கடைசிவரை கணவரை பார்க்காமலேயே இருந்துவிட்டார்.இதே போல பிள்ளைகளையும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பார்க்க முடியாத நிலை நீடித்திருந்தது.

இவை அனைத்தையும் நாட்டிற்காகவும்,மக்களுக்காகவும் தாங்கிக்கொண்ட ஆங் சான் சூகிக்கு கடந்த 90 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதை அடுத்து உலக நாடுகளின் பார்வையில் விழுந்த ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டிய நெருக்கடிக்கும்,கட்டாயத்திற்கும் உள்ளான ராணுவ அரசு கடந்த 2010ம் ஆண்டு அவரை விடுதலை செய்தது.

ஆங் சான் சூகி விடுதலையான போது அவருக்கு வயது 65.நாடி,நரம்புகள் தளர்ந்து வாடி வதங்கிப்போனவர் வாழ்க்கை அத்துடன் முற்றுப்புள்ளியானது என்று நினைத்தவர்கள் மனதில் மன்விழும் வகையில் மீண்டும் பினிக்ஸ் பறவையாக எழுந்துவிட்டார்.

தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இன்றைக்கு இல்லாவிட்டால் நாளை,நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள்,நான் இல்லாவிட்டால் இன்னொருவர் என்று இந்த மியான்மரில் ஜனநாயக கொடியை பறக்கவிட்டே தீர்வோம் என்று சூளுரைத்துள்ள ஆங் சான் சூகியை இந்த வாரம் அமெரிக்க வெளி விவாகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சந்திக்க வருவதாக சொல்லியுள்ளார்.அமெரிக்கா வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் இப்போதுதான் மியான்மர் வருகிறார் அதுவும் ஆங் சான் சூகியை சந்திக்க.

இந்த சந்திப்பு மியான்மர் மக்களின் நிம்மதி கனவை நனவாக்கும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பலருக்கு வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்,வெகு சிலருக்குதான் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும்

அந்த வெகு சிலரில் ஒருவர் ஆங் சான் சூகி.

walking is best exercise

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.

தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள்.

கைகளை வீசி நடங்கள்

காலை 6 மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம். நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம்.

உடல் எடை குறையும்

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது. சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது. இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எனெனில் உடல் எடைதான் எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.

புத்துணர்ச்சி அடையும்

எடை அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான தசைகள் வலுவடையும்.காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.

நீரிழிவு கட்டுப்படும்

தினசரி காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

கொழுப்பு குறையும்

நடைபயிற்சியின் மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.

முதுகு வலி எட்டிப்பார்க்காது

ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர விரட்டும்.

குழந்தை பேறு கிடைக்கும்

நடை பயிற்சியினால் தீராத சிக்கல்களுக்கும் கூட தீர்வு கிடைத்திருக்கிறது. குழந்தையில்லாத தம்பதியர் கூட சீரான நடைபயிற்சி மேற்கொண்டதன் மூலம் குழந்தை பேறு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

deepam festival tiruvannamalai

திருவண்ணாமலை: பஞ்ச பூதத்தலங்களில் சிறப்பு மிக்க அக்னித் தலம்!


திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கார்த்திகை தீப விழாவை ஒட்டி நகர காவல் தேவதையான துர்க்கையம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மலையே இறைவனாக வணங்கப்படும் தலம் திருவண்ணாமலையாகும். நினைத்தாலே முக்தி தரும் இந்த தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீப பெருவிழா பிரசித்தி பெற்றது. சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னித்தலமாக போற்றப்படும் இந்த தலத்தில் அக்னியை வணங்கும் விதமாக கார்த்திகை தீபப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து செல்கின்றனர்.

நெருப்பாய் தோன்றிய இறைவன்

சிவபெருமான் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயின் வடியில் இங்குள்ளார் என்பது ஐதீகம். பிரம்மன் -விஷ்ணு இருவரும் தாமே பரம்பொருள் என செருக்கு கொண்டபோது சிவபெருமான் நெருப்புத்தூண் வடிவில் தோன்றியதாகவும் அந்த தூனே 'திருவண்ணாமலை' என்றும் கூறப்படுகிறது.

பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி உருவானது. அப்போது இருவருக்கும் இடையில், திடீரென்று பெரிய நெருப்புப் பிழம்பு உருவானது. உடனே அந்த நெருப்பு பிழம்பு எங்கே தொடங்குகிறது... எங்கே முடிகிறது என்று யார் கண்டுபிடிக்கிறாரோ அவரே பெரியவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருவரும் தேடத் தொடங்கினர். பிரம்மா அன்னம் வடிவெடுத்து ஜோதி வடிவின் தலை எங்கே என்று தேடிப் போனார். திருமாலோ வராகமாக வடிவெடுத்து, நெருப்பின் அடி தேடிச் சென்றார். காலங்கள் ஓடின; யுகங்கள் நீண்டன; கண்டுபிடிக்கவே முடியவில்லை. திருவடியைத் தேடியவர் திரும்பினார்; முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்;

பொய் சொன்ன பிரம்மா

ஆனால் திருமுடி தேடிய பிரம்மாவோ தாழம்பூவுடன் ஒப்பந்தம் போட்டு திருமுடியை பார்த்ததாக பொய்சாட்சி சொல்ல அழைத்து வந்தார். அதை பொய் என்பதை உணர்த்திய இறைவன் தாழம்பூவை பூஜையில் இருந்து ஒதுக்கினார்.

பொய் சொன்ன பிரம்மாவின் ஒரு தலை கிள்ளப்பட்டது; கோயிலும் இல்லாமல் போனது; நெருப்புப் பிழம்பு மெள்ளக் குளிர்ந்து மலையாக உருவெடுத்தது. அதுவே திருவண்ணா மலை ஆனது என்கின்றது புராண கதை.

அண்ணுதல் என்றால் அணுகுதல் என்று பொருள்; தேடியவர் அணுக முடியாத மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர். ஆணவத்தால் தேடியபோது அடியோ முடியோ கிட்டவில்லை; ஆயின், அன்புடன் பக்தர்கள் தேடினால், அடியையும் முடியையும் காணலாம் என்று அத்தாட்சியாக நிற்கிறது மலை.

அருணம், சோணம் என்ற சொற்கள் செம்மை நிறத்தைக் குறிப்பவை; சிவந்த மலை என்பதால் சோணாசலம், அருணாசலம்! மலையே சுயம்பு. இறைவனாரே மலையாக உருவெடுத்ததால், இந்தத் தலத்தில் மலை வழிபாடு பிரதானம். மலை சுற்றுவதும் மலையை வழிபடுவதும் தவறாமல் செய்யப்படுகின்றன. இந்த மாமலையின் உயரம் 2665 அடிகளாகும். தற்போது தமிழக அரசு இதன் உயரம் 2748 அடிகள் என அறிவித்துள்ளது.

அண்ணாமலை கிரிவலம்

மலையைச் சுற்றி வலம் வரும் போது கிழக்குப் பகுதியிலிருந்து பார்த்தால், மலை ஒற்றையாகத் தெரியும். ஏக லிங்கமாக, ஒன்றே கடவுள் என்பதை உணர்த்தும். சற்று தூரம் சென்ற பின்பு பார்த்தால், இரண்டாகத் தெரியும். ஆணாகவும் பெண்ணாகவும் உலகை இயங்க வைக்கும் அர்த்தநாரீஸ்வரர். மேற்கு திசையிலிருந்து நோக்கினால், மூன்று சிகரங்களைக் காணலாம். அது மும்மூர்த்திகளை உணர்த்தும். மெதுவாய் நடந்து மலையைத் திரும்பிப் பார்த்தால், இப்போது ஐந்து கூம்புகள். இறைவனாரின் பஞ்சமுக தத்துவத்தையும், பஞ்ச பூதப் பெருமையை உணர்த்தும் மலை திருவண்ணாமலை என்பதை உணரலாம்.

சித்தர்கள் வாழும் மலை திருவண்ணாமலை

மலைப்பாதையில் அஷ்டலிங்கங்கள் எனப்படும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் அமைந்துள்ளன.

இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வருகின்றனர்.

அக்னி மலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால், உடல் நோய் நீங்கி, இறைவனது திருவடி கிட்டும்; திங்கள் வலம் வந்தால், எல்லையற்ற ஆற்றலும் சக்தியும் கிடைக்கும்; செவ்வாய் எனில் வறுமை அகலும்; புதனன்று வலம் வந்தால் கல்வியில் பெரியர் ஆகலாம்; வியாழன் வலம், ஞானம் தரும்; வெள்ளி வலமோ, விஷ்ணு பதம் கொடுக்கும்; சனிக்கிழமை சுற்றி வந்தால், நவக்கிரகக் கேடுகள் நீங்கும் என்று கூறியுள்ளனர் நம் முன்னோர்கள்.

மகாதீபத் திருவிழா


அக்னி ரூபமாய் ஒளிரும் மலை மீது கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் மகா தீபம் ஏற்றுவது சிறப்பு. இந்த ஆண்டிற்கான தீப விழா வரும் 29 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 4 ம் தேதி வெள்ளி ரத வீதி உலாவும், வரும் 5 ஆம் தேதி மகாரத தேரோட்டமும் நடைபெறுகிறது. 8ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவை ஒட்டி நகர காவல்தெய்வமான துர்க்கையம்மனுக்கு சனிக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Friday, November 25, 2011

tamil

கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000
கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.

மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.



கி.மு - 3100 - 3000
ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915
திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316
மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250
மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.

குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)


கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700
சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600
லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527
மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478
கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348
சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400
கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270
மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4
ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

நெய் கொண்டு செல்வது ஏன்?

நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)

ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)


நான், எனது என்று இல்லாத இடத்தில் ஆனந்த சித்தன் இறைவன் ஐயப்பன் பிரகாசிக்கிறார் சுவாமியே சரணமய்யப்பா.

விநாயகர் வணக்கம்

கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்
வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்
சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்

வரலாறு, மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்,

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஐயப்பன் 108 சரணக் கோவை

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்பன் கவசம்

கணபதி துதி

அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே
இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே
உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே
எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே
ஐங்கரனே அருள் புரிவாய்.

காப்பு

ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்
ஐயப்ப தேவன் கவசமிதனை
அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே

நூல்

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலிவாஹனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணியமூர்த்தியே வருக வருக
பூத நாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக

பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவிளை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்

ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்
சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.

வேண்டுதல்

சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணிணைக் காக்க
நாராணன் பாலன் நாசியைக் காக்க
இருமூர்த்தி மைந்தன் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
பம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜீயன் நாவினைக் காக்க
கலியுக வரதன் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பி என் குரல்வளை காக்க

புஷ்களை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க
வீரமணி கண்டன் விரல்களைக் காக்க
கயிலை மைந்தன் மார்பினைக் காக்க
மணிகண்ட தேவன் மார்பினைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க
முழுமுதற் கடவுள் முதுகினைக்காக்க
இருமுடிப்பிரியன் இடுப்பினைக் காக்க
பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க
தர்மசதஸ்தா என் துடைதனைக் காக்க

முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜயகுமரன் விரல்களைக் காக்க
அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டாளரூபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க
ஹரிஹர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க
ஹரியின் மகனார் அநுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இடப்புறம் காக்க
காக்கக் காக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க பாபம் பொடிபட

இம்மையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க
கொடிய விஷயங்களும் கொள்ள நோய்களும்
குருதியைக் குடிக்கும் துஷ்டப் பேய்களும்
காந்தமலைதனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்
பில்லி, சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்

வாதம், பித்தம் சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும் வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணுகாமல்
என்றுமே காப்பாய் எருமேலி தேவா
கல்வியும், செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா
காமம், குரோதம், லோபம் மோஹம்
மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பேய்கள்

என்றுமே என்னை அணுகிவிடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்
சூது, பொறாமை, பொய் கோபமில்லாமல்
சோரம், லோபம் துன்மார்க்கம் கல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய்
மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன் புடனே உன்திருநாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயே

நமஸ்காரம்

ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

அகஸ்தியர் அருளிய ஐயப்ப மாலை

1. விருப்பமும் வெறுப்புமின்றி வினைப் பயன் எல்லா முந்தன்
திருப்ப தம் தன்னில் வைத்து திருப்தியும் திறனு முற்று
ஒருப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடாது அன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே

2. வையமும் வானும் வாழ மறை முதல் தருமம் வாழ
செய்யும் நற் செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம் நலிவகன்றினிது வாழ
ஐயனாய் அப்பனானான அவர் பதம் வணக்கம் செய்வோம்

3. மெய்யெல்லாம் திரு நீறாக வழியெலாம் அருள் நீராக
பொய்யில்லா மனத்தராகி புலனெல்லாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுள்ள விளக்க முற்றான் பால் விம்மி
ஐயனே ஐயப்பா என்பார் அவர் பாதம் வணக்கம் செய்வோம்

சபரிமலை மகாத்மியம்

4. சக்தியெல்லாம் சபரிமலை தத்வமெலாம் சபரிமலை
சித்திமெலாம் சபரிமலை மோனமெலாம் சபரிமலை
முக்தியெலாம் சபரிமலை சிற்பரமாம் சபரிமலை
புத்தியெலாம் சபரிமலை போற்றிடுவாய் நீ மனமே

5. ஓங்காரமான மலை ஓதுமறை ஓங்குமலை
ஹ்ரீங்கார மந்த்ரமலை ரிஷிகணங்களேத்து மலை
ஆங்காரம் அழிக்கும் மலை ஆனந்தம் கொழிக்கும் மலை
பாங்கான சபரிமலை பல்வளஞ்சேர் மலை வளமே

6. கோடி மலைகளிலே கொழிக்கும் மலை எந்த மலை
வஞ்சி மலை நாட்டினிலே உயர்ந்த மலை எந்த மலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
ஜனகாதி முனிவ ரெல்லாம் தேடி வரும் சபரிமலை

7. ஹரிஹர புத்ரா போற்றி
அன்பான குருவே போற்றி
புஷ்களை ரமணா போற்றி
எனையாள் குருவே போற்றி
கண்கண்ட நாதா போற்றி
சபரிமலை வாசா போற்றி
கஞ்சமலர்ப் பாதா போற்றி
ஐயனே போற்றி போற்றி
முந்திய சிவனார் போற்றி
மூர்க்கனும் அசுரன் போற்றி
இந்திர வரவும் போற்றி
ஈசனார் வேசம் போற்றி
பந்தடி கமலம் வெற்றி
வந்ததோர் விரதம் போற்றி
சந்ததியான மூர்த்தி தர்ம சாஸ்தாவே போற்றி போற்றி

ஓம் தேவ தேவோத்தம தேவதா ஸார்வ பௌம
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயக
ஸ்ரீ பூர்ணா புஷ்களா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர
சுவாமின்.........ஜெய விஜயீ பவ

விருத்தம்

1. ஆனைமுகத்தோன் தம்பி அருள் குமரனுக் கிளையோன்
வானவர் போற்றும் வாணி வந் தெனக்கு அருள வேனும்
சேனையில் தலைவர் போற்றும் தென் குளத்தூரிலையன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே

2. அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையைப் போற்றி
மந்திரம் கையிலேந்தும் வாழ்குளத்தூரான் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம் செப்புமென் கவி விளங்க
கந்தனும் குருவும் வாணி கஜமுகன் காப்பதாமே

3. சாஸ்தா நமக்குண்டு தாய் போல் வருவார் இந்தத் தனி வழிக்கே
பார்த்தால் நமக்கு பயமேது மில்லை பயந்து பயந்து
ஆற்றாமல் சொல்லி அபய மிட்டோடி வரும் சுரர்தமை
கார்த்தே வரும் கடிய குன்றேறிய காவலனே

4. வாழையும் தெங்கும் வரிகை பலாவுடனே மாங்கனியும்
சோலையும் அருள் வண்டுலாவும் குளத்தூர் பதியில் சென்றால்
கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில்
உன் காலில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவர்க்கு
சிங்கார வஞ்சிமலையேறி சனிவாரம் தொழுதவர்க்கு
மங்காத சர்வ பீஷ்டமும் கொடுப்பதாமே

பிரார்த்தனை

1. குளத்தூரிலேயிருந்து குடியிருந்து அவதரித்து
வளர்த்ததொரு தாய் பெற்றெடுத்த மாதா உமக்கினையோ
களத்தூரில் பதின்குலக் கன்னியர்கள் தந்தசெல்வம்
குளத்தூரிலே அய்யனென்றால் குற்றமொன்றும் வாராதே

2. மாணிக்க மாலை மகிழ்மாலை பூமாலை
காணிக்கைக் கொண்டு வந்து காண்பார் தினந்தோறும்
ஆனிப் பொன் மார்பன் அழகன் குளத்தூரானை
பேனித் தொழாய் நெஞ்சே பிழைகளொன்றும் வராதே.

3. கற்சரடு பொற்பதக்கம் கனத்த முத்துச் சுவடியுமாய்
மெய் கனியாய் அணிந்திருக்கும் விரகா உன் திருமேனி
தக்க மிட்டு வரும் பேயைத் தடியெடுத்து தான் விரட்டும்
மிக்க நல்ல குளத்தூரான் வெள்ளைக் கல்லாதிபனே

4. தூங்கும் செவி யொதிக்கி துதிக்கை யொரு கொம்பில்
நீங்காத மலைபோல் நிற்கு மந்தக் குஞ்சரங்காள்
பூங்காவிலே இருந்து புண்ணியரைத்தான் நினைத்தால்
பாங்கான மத கரிகள் பனிமலை போல் அகன்றிடுமே

5. பாரச் சுமடெடுத்துப் பதினெட்டாம் குன்றேறி
ஏத்தமெல்லாம் ஏறி இளைத்து வரும் அந்நேரம்
வேர்த்த தெல்லாம் பன்னீராய் வென்சாமரை வீச
கதித்த வல்லி குளத்தூரான் காந்தமலை காவலனே

6. செண்டார்ந்த கையன் எங்கள் ஸ்ரீமான் எங்கள் பிரான்
வீரமணிகண்டா அநுதினமும் காத்தருள வேணுமையா
தந்தாமரை வளரும் தவமுனிவர் வான வரும்
கொண்டாடும் தென்னிசை கூடபர சாஸ்தாவே

7. சீருடன் புவியில் செழுத்தவே மன்னரைக் காக்க
வீருடன் புலியைத் தாங்கி விண்ணவர் மேய்க்க வந்தாய்
ஆவினில் பெரியோனாகி ஆரியங்காவையா னென்றும்
பூர்ணமாக ஐயன் பொற்பாதம் போற்றுவோம்.

விடுதிகள்

1. நாள் கேட்டு முகூர்த்தமிட்டு நல்ல நாள் என்று சொல்லி
வீட்டைவிட்டு சுமடெடுத்துச் சிவசைலம் வீதியிலே
கூட்டமெல்லாம் கூடி குளத்தூரிலே நினைவாய்
தாஷ்டிகமாய் வழிநடத்தும் தர்மகுளத்தூரில் ஐயா

2. உற்றார் இருக்க உடன்பிறப்புத் தானிருக்கப்
பெற்றோரிருக்கப் புறப்பட்டேன் உன் காவல்
என் தந்தை மனமுருக சோதரன் கண்ணீர் பெருக
பந்து ஜன முருக பெற்ற மக்கள் தானுருக.

3. சொந்த மனையாள் தூண்டில் மச்சம் போல் துடிதுடிக்க
இந்த பிறவிகள் தீர்க்க இறக்க மில்லையோ சுவாமி
வியர்த்த தெல்லாம் பனிநீராம் வெண் சாமரம் வீச
காத்தவனே குளத்தூரான் சிவ காந்தமலை காவலனே

4. கல்லான மலையேறித் தடலேறிக் குன்றேறி
இல்லாமையால் அல்லவோ இந்த மலை ஏறுவதும்
வல்லான பக்ஷிகளும் பாண்டி பரதேசிக்களைக்
கொல்லாமல் காத்தருள் வாய் குளத்தூரில் ஐயனே

5. மேகம் இருண்டு வர விடுதிகளும் காணாமல்
காகம் போல் உமதடியேன் கலங்குவது கானீரோ
ஆக்கம் மிகத் தளர்ந்தேன் ஐயனே தென் குளத்தூர்
நாகம் அணிந்தவனே நல்லமலை சாஸ்தாவே

6. எதிர்காற்றும் மழையும் எடுத்தடி வைக்கவொட்டாமல்
பெரியாற்றின் கரையினிலே பரதவிக்கும் அந்நேரம்
அலையரமல் தோணிக் கட்டி அக்கரைக்கே கடத்திவிடும்
பலம் உமக்கு சாஸ்தாவே பரதேசிக் காவலனே

7. நம்பி வந்தேன் சன்னதியில் நன்மை தர வேண்டுமென்று
பாடி வந்தேன் உன் பெயரைப் பாக்கிய மிக தந்தருள்வாய்
பெற்றோரை போல் என் பிழை பொருத்து ஆதரிப்பாய்
விஸ்தார மணிமார்பா வெள்ளைக்கல் ஆதிபனே

8. உன்னை நம்பும் எங்களுக்கு ஒரு வினையும் வாராதுதென்று
நினைத்திருந்து காலமெல்லாம் ஏங்குதையா என் மனம்
ஓங்கி எனது மனம் ஒன்று பத்து நூராகும்
சங்கைக் கொண்டு திரு வாரியங் காவுவை யாவே

9. கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து
பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை
பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி
ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்

10. பொல்லாத மழைப் பெய்ய புனலாறு பெருகிவர
கல்லானை மிதந்துவர காட்டெருமை மிரண்டோட
மெய்யாகும் கன்னீயர்கள் மேதினியிற் குரவையிட
ஐயன் திருவுள்ளம் திரு ஆரியங்காவு ஐயாவே

11. ஐயா உன் சன்னதியில் நம்பிவந்தேன் ஆண்டவனே
அக்ஷணமே வந்துதவும் சபரிமலை சாஸ்தாவே
ஆதியந்தம் இல்லாத அற்புதனே குரு நமக்கு
வேத ஒளியாம் சபரி மெய்யனும் ஆண்டவனே

ஐயப்பன் பிரார்த்தனை விருத்தம்

1. கலியுகம் தன்னிலே கண்கண்ட கடவுளென்று
காத்திருக்கிறோம் ஐயா
ஏழையான அடியேனுக்கு நின் திருப்பாத தரிசனம்
தந்தருள தாமதம் ஏனோ
அனாத ரக்ஷகன் என்று அனவரதமும் போற்றிடும்
அடியார்க்கு நீர் அருள் ஞான
மெய்த் தருவாய் வந்து நல்லாதரவு அளித்து ஆட்கொண்டருள்வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரமஸ்தான மெய் ஞான குருவே

2. பரதேசியான அடியேன் அனுதினமும் வேண்டுவது
பாடினால் நின் சரண கீதங்கள் பாட வேண்டும்
உடுத்தால் உன் நீல ஆடை உடுக்க வேண்டும்
அணிந்தால் நின் துளஸி மாலை அணியவேண்டும்
சுமந்தால் நான் இரு முடி சுமக்க வேண்டும்
ஏறினால் நின் சபரிகிரி ஏற வேண்டும்
இரு முடிச் சுமையதும் சுமக்க முடியாமல் நான்
சரிமலை ஏறி வருந்துகின்ற சமயம்
தயவுடன் வந்தெனக்கு பாத பலமும் தந்து
திருவடி தந்தருள் வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச் ரமஸ்தான
மெய் ஞான குருவே

தாயாகி தந்தையுமாய்

தாயாகி தந்தையுமாய் நீயும் வளர்த்தாய்
தரணியிலே உன்னைப் போல தெய்வம் இல்லை ஐயப்பா
மானிடரை வாழவைக்கும் தெய்வமன்றோ நீயே
மனதை யெல்லாம் அடங்க வைக்கும் சக்தியன்றோ நீயே
இச்சையெல்லாம வென்றுவிட்ட வீரனன்றோ
இம்மையிலும் மறுமையிலும் குருவுமய்யா
ஹரிஹரனின் மைந்தனாக கலியுகத்தில் பிறந்தாய்
பந்தளத்து பாலகனாய் பாரினில் நீ வளர்ந்தாய்
அரக்கிதனை வதம் செய்து சபரிமலை மீது
அமர்ந்து என்னை ரக்ஷிக்கும் ஐயப்பா தெய்வமே

சபரி பஞ்சங்கம்

கருணாகரக் கடவுள் ஹரனாரிடம் சூர்ப்பகா ஸுரன்
தவமிருந்து கை வைத்த பேர் சிரஸுதுய்ய
நீறாகவே கருதினான் ஒரு வரத்தை
பரம குருவாம் ஹரன் அருளினோ மென் ரவுடன் அவன்
சிரஸினில் கரம் வைத்திடச் சென்றடுத்தான்
வள்ளல் ஐவரளியில் ஒளிந்தா ரென்று மாலறிந்து ஓடிவந்து
தருண மோஹினியாய் அஸுரனை வெண்ணீறாக்கிச்
சம்புவை அணைந்து பெற்ற ஸந்ததிப் பொருளாக வந்த
என் கண்மணியே! ஸங்கடம் தீரும் ஐயா!
சரணம் அய்யப்பா என்று உருகும் அன்பர்க்கு நீர்
ஸகல ஸெள பாக்கியமும் தந்து உதவும்
தவயோக சித்தாந்த சபரி பீடாச் ரம ஸ்தான
மெய் ஞான குருவே!

பால் குருநாதர்

1. பால் குருநாதா சரணமய்யப்பா
எங்கள் குருநாதனே சரணமய்யப்பா
நல்ல வழி தந்திடுவார் சரணமய்யப்பா - எங்கள்
நடமாடும் தெய்வமே சரணமய்யப்பா (பால்)

2. திருமந்திர நகர மதில் மகிழும் பாலன் - ஈசன்
திருவருளை பெற்றவராம் சரணமய்யப்பா
அன்புள்ளம் கொண்டவராம் சரணமய்யப்பா - எங்களை
ஆதரிக்கும் தெய்வமாம் சரணமய்யப்பா (பால்)

3. இல்லை இல்லை இல்லை என்றும் ஏங்கும் மாந்தரின்
உள்ளம் தனைக் குளிர வைப்பார் சரணமய்யப்பா
பிணியகல வழி வகுக்கும் என் குருநாதன் - ஞான
பணிபுரிய அருள் புரிவார் சரணமய்யப்பா (பால்)

4. வினை யறுத்து பவமழிக்கும் என் குருநாதன்
நம்மைத் துணை இருந்து காத்திடுவார் சரணமய்யப்பா
பக்தி முக்தி தாயகனே சரணமய்யா - நம்
பக்தர்களை காத்திடுவார் சரணமய்யப்பா (பால்)

ஓம் நமோ ஐயப்ப தேவா

1. ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ ஐயப்ப தேவ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ நமோ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ ஐயப்ப தேவ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ (ஓம்)

2. எனது நான் எனச் செருக்கி மமதை உற்றலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப மூர்த்தியே
ஒருகனத்துள் என துளத்தை உருக வைத்த எனது நாமம்
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ (ஓம்)

3. அரியுமான சிவனுமான ஆண்டவனின் மைந்தனாகி
அல்ல லெல்லாம் தீர்க்க வந்த அன்பு தெய்வமே
அன்பினாலே ஆளவந்த அன்பர்களைக் காத்திடவே
அவதரித்து பூவுலகம் வந்த சாமியே (ஓம்)

4. ஆதியோடு அந்தமாகி ஆரியங்காவு பாலனாகி
ஆதிசக்தி மகனுமாக வந்த மூர்த்தியே
ஆண்டவனின் பிள்ளையான எங்களையே காத்திடவே
ஆவலோடு வந்த எங்கள் காந்த ஜோதியே (ஓம்)

5. எரிமேலி சாஸ்தாவாகி எல்லோர்க்கும் தேவனாகி
எங்கள் குல தெய்வமாக வந்த ஜோதியே
எந்தன் துயர் போக்கி நீயும் எங்களைக் காத்திடவே
ஏகாந்த மூர்த்தியாக வந்த தெய்வமே

6. பதினெட்டாம் படியனாகி பம்பைநதி வாசனாகி
பக்தர்களைக் காக்க வந்த எங்கள் ஜோதியே
பக்தியுடன் பூஜை செய்து சுத்தமான மனதுடனே
நித்தமும் காத்தருள்வாய் நீதிதேவனே

கற்பூர ஹாரத்தி ஹீதம்

பாஹி பாஹி மணிகண்டா
மாமலைவாசா மணிகண்டா
வன்புலி வாகனா மணிகண்டா
வானவர் பூஜித மணிகண்டா
மகிஷி மர்த்தனா மணிகண்டா
மோகன நாசனா மணிகண்டா
மோகினி சுதனே மணிகண்டா
மத கஜ வாகனா மணிகண்டா
மார்க்க பந்தோ மணிகண்டா
சபரிகிரீஸ்வரா மணிகண்டா
சாஸ்தவ ரூபா மணிகண்டா

சுவாமியே சரணம் ஐயப்பா

மங்கள ஆரத்தி

மங்களனே மாதவனே
சங்கரனே சதாசிவனே
பாண்டியனார் பாலகனே
காந்தமலை வாசனே

ஸ்ரீ சக்ரபீடமதில் கொலுவிற்கும் எங்கள் ஐயப்பனே

ஐயப்பனை வேண்டுதல்

1. ஓங்காரத்தின் தத்துவ ரூபனே
2. தாரகப் பிரம்மமே
3. சத்திய ரூபனே
4. பூத கண நாதனே
5. புண்ணிய மூர்த்தியே
6. அரனுர் மைந்தனே
7. பந்தளத்தரசன் மகிழ் பாலகனே
8. தேவ தேவனே
9. மணிகண்ட பொருளே
10. அசுரர் காலனே
11. அன்பின் வடிவமே
12. கருணை கண்ணனே
13. கிருபைக் கடலே
14. துன்பம் துடைப்பவனே
15. கலியுக வரதனே
16. ஐயனே மெய்யனே
17. ஸச்சி தானந்தனே
18. மோகினி சுதனே
19. சுந்தர வடிவமே
20. மெய் ஞான பொருளே

உனது திவ்ய பாதார விந்தங்களுக்கு எங்களது ஆனந்த கோடி நமஸ்காரம்.

சகல செல்வங்களும் தரும் இமையகிரி ராஜ தன்ய மாதேவனே நின்னைச் சத்தியமாய் நித்தமும் உள்ளத்தில் துதிக்கும் எழியோர்களுக்கு இரங்கி அருளி அகிலமதில் நோய்ன்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிவு, துணிவு, வாழ்நாள் வெற்றி ஆகும். நன்னூல் நுகர்ச்சி தொகை தரும் பதினாறும் பேரும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலனே அநுகூலனே மங்கள வாசனே மகவு நாங்கள் தந்தை நீர் அத்தனையும் எங்களுக்கு அளிக்க வொண்ணாதோ மகிமை வளர் திரு சபரிகிரியில் வாழும் எங்கள் ஐயப்ப தெய்வமே, சரணம் சரணம் ஐயப்பா

தீப மங்கள ஜோதி நமோ நம
தூய சபரி கிரிஷா நதோ நம
பூர்ணை புஷ்கலை நாதா நமோ நம
அருள் தாராய் சுவாமி

சாந்தி சாந்தி சாந்தி

ஓம் த்ரியம்பகம் பஜா மஹே ஸுகந்தீம்
புஷ்டி வர்த்தனம்
உர் வாருக மிவ பந்தனாத் மிருத்யோர்
மூக்ஷிய மாம் ரு தாத்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
சாந்தி சாந்தி சாந்தி ஓம்

என் நினைவிலும் ஐயப்பா

1. என் நினைவிலும் ஐயப்பா என் கனவிலும் ஐயப்பா-எங்கள்
நீலகண்டன் கண்ணில் வந்தாய் நிர்மலனே ஐயப்பா

2. மாயன் அன்று மோகினியாய் மகிழ்ந்தனைத்த ஐயப்பா-எனத்
தூயவனே துணைவனே என் தோழனே ஐயப்பா

3. மலைமகளும் கலைமகளும் அனைத்தெடுத்த ஐயப்பா....பல
கலைகளிலே விளையாடும் கண்மணியே ஐயப்பா

4. சபரிமலை தெய்வமே என் சாஸ்தாவே ஐயப்பா-நீ
அபயமளித்துக் காத்திடுவாய் ஐயாவே ஐயப்பா

5. நித்திய வஸ்துவாகி எங்கும் நிறைந்தவனே ஐயப்பா-உன்
தத்துவ காட்சி காணத் தனித்து வந்தேன் ஐயப்பா

6. கலியுகத்தின் கடவுள் என்றே காண வந்தேன் ஐயப்பா-உன்
கலிகள் நீங்கக் கண்திறந்தே காத்தருள்வாய் ஐயப்பா

7. பாண்டிபதி நாயகனே பாலகனே ஐயப்பா-உன்னை
வேண்டி நின்றே வரம் கேட்பேன் வேதியனே ஐயப்பா

8. மன்னவர்க்கு மன்னவனே மக பதியே ஐயப்பா-இந்த
மானிலத்தை ஆள்பவனே மறையோனே ஐயப்பா

9. பொன்னுரங்க பூபதியே பூசுரனே ஐயப்பா-என்றும்
எண்ணுள்ளே விளையாடி இன்ப மருள் ஐயப்பா

10. வண்ண வண்ணக்களஞ்சியமே வடிவழகா ஐயப்பா-என்
எண்ணமதில் கலந்திருப்பாய் என் துரையே ஐயப்பா

11. காவியத்தில் கலந்து நின்றாய் காரணனே ஐயப்பா-உன்னை
ஓவியத்தில் அமர்த்தி என்றும் ஓதுகிறேன் ஐயப்பா

12. நீரணிந்த மேனியனே நிறைமதியே ஐயப்பா-நல்ல
நீல வண்ணக் கட்டழகா நீ வருவாய் ஐயப்பா

13. ஆடுகின்ற அன்பருள்ளே ஆடுகிறாய் ஐயப்பா-உன்னைப்
பாடுகின்ற பண்களிலே பரவி நிற்பாய் ஐயப்பா

14. ஜாதிபேதம் அறியாத சாஸ்தாவே ஐயப்பா- எங்கும்
நீதியிலே நிறைவு காண நீ வருவாய் ஐயப்பா

15. கற்பூர ஜோதி கரைந்து நின்றாய் ஐயப்பா-உன்
பொற்பாதம் காண வந்தேன் பூரணனே ஐயப்பா

16. காடுமலைகள் ஆறுதாண்டி காணவந்தேன் ஐயப்பா-என்
ஒடுமனதை உள்ளடக்கி உணர வைப்பாய் ஐயப்பா

17. மலைகளிலே பல மலைகள் தாண்டி மகிழ்ந்து வந்தேன் ஐயப்பா
மகரஜோதி காணவந்தேன் மணிகண்டனே ஐயப்பா (நான்)

18. பம்பா நதியில் நீராடிப்பணிந்து வந்தேன் ஐயப்பா-ஸ்ரீ
ஜெகதாம்பாள் மகிழும் தேவனே என் ஐயப்பா

19. நீரணிந்துன் நினைவில் வந்தேன் நிதிபதியே ஐயப்பா-இப்
பாரினிலே பாடியாடிப் பார்க்க வந்தேன் ஐயப்பா

20. பனிமலைமேல் பவனிவரும் பரம்பொருளே ஐயப்பா-இப்
பதினெட்டாம் படியேறிப் பணிந்து வந்தேன் ஐயப்பா

21. கோழை எந்தன் குணமறிந்து குறைத் தீர்ப்பாய் ஐயப்பா-நான்
ஏழை என்று அறியாயோ ஏகனே என் ஐயப்பா

22. யானை புலிக் கூட்டம் கண்டால் சரணம் என்பேன் ஐயப்பா-நீ
எதிரில் வந்து காத்தருள்வாய் என் ஐயனே ஐயப்பா

23. தாய் தந்தையும் நீயல்லவோ தாரகனே-ஐயப்பா இதை
ஆய்ந்தறிந்தே அண்டி வந்தேன் ஆதரிப்பாய் ஐயப்பா

24. குருவெனக் கொண்டாடி வந்தேன் குணமணியே ஐயப்பா-என்
குலதெய்வம் நீயல்லவோ குணநிதியே ஐயப்பா

25. கருணையுள்ள கற்பகமே கலிவரதா ஐயப்பா-நல்ல
களைத்து வரும் நடுவழியில் கை கொடுப்பாய் ஐயப்பா

26. வருந்துகின்றேன் வாடுகின்றேன் வாழ்வளிப்பாய் ஐயப்பா-நல்ல
மருந்தாகி நீ வருவாய் மலையரசே ஐயப்பா

27. வருமை நீக்கி வரந்தருவாய் வரதனே என் ஐயப்பா-என்
சிறுமை கண்டு இறங்காயோ சீலனே என் ஐயப்பா

28. அடியார்க்கு எளியவனே ஆனந்தனே ஐயப்பா-உன்
அடிபணிந்தேன் ஆதரிப்பாய் ஐயாவே ஐயப்பா

29. அன்னதானம் செய்திடவே அருள் புரிவாய் ஐயப்பா-என்
கருமவினை தீர்த்தருள்வாய் கலிவரதா ஐயப்பா

30. வாழி சொல்லி வாழ்த்தி வந்தேன் வரம் அளிப்பாய் ஐயப்பா-என்
ஊழ்வினையைத் தீர்த்தருள்வாய் உத்தமனே ஐயப்பா.

காக்க ... காக்க ...

சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

எப்போதும் என் தலை நின் தாழ் பணிந்திட தப்பாது காக்க வேண்டும்
கொட்டிக் கொடுக்கின்ற திருநீறு அணிந்திட நெற்றியை காக்க வேண்டும்
தத்துவம் காட்டிடும் முத்திரை திருக்கரம் நிற்புருவம் காக்க வேண்டும்
சத்திய தயாநிதி அன்னதானப் பிரபு சபரிமாமலை சுவாமியே

விழிகளால் நின் பேரழகினைப் பருகிட விழிகளை காக்க வேண்டும்
இமை சற்றும் அசையாமல் இருக்கின்ற பாலனே இமைகளை காக்க வேண்டும்
மொழிகளால் நின் திருப்புகழினைப் பாடிட இதழ்களைக் காக்க வேண்டும்
அழியாத செல்வமே அகலாத தெய்வமே அழுதமலையின் அதிபனே

நந்தா விளக்காக நெஞ்சிலே நின்றவா நாசியைக் காக்க வேண்டும்
நாவுள்ள வரையிலும் நடுநிலை தவறாமல் வார்த்தையை காக்க வேண்டும்
செந்தாமரைக்கரம் செந்தேந்தி அமர்ந்தவா செவிகளை காக்க வேண்டும்
சித்துக்கள் விளையாடும் அற்புதக் கற்பகம் அச்சங்கோவில் அரசே

முத்துச் சிரிப்பினால் பித்தாக்கும் மூர்த்தியை பற்களை காக்க வேண்டும்
தப்பித் தவறி நான் சொல் பிதறி பேசாமல் சொற்களை காக்க வேண்டும்
கட்டுக் கடங்காத கட்டழகு காளையே கன்னங்கள் காக்க வேண்டும்
எட்டுத் திசைகளிலும் கொடி கட்டி ஆள்கின்ற ஏகாந்த தீப ஒளியே

பின்னாலி ருந்து தெவரும் பிடித்தெனை தள்ளாமல் பிடரியை காக்க வேண்டும்
என்பாட்டு தேனாக எங்கும் முழங்கிட கழுத்தினை காக்க வேண்டும்
பொன்னாரம் மணியாரம் நின்னுருவம் அசைந்திட நெஞ்சினை காக்க வேண்டும்
பொன்னம்பலம் தன்னில் என்னாளும் அணைக்கின்ற பூங்காவனத் தேவனே

அன்னபூரணி எந்தன் இல்லத்திலே தங்கி அருசுவைகள் பெருக வேண்டும்
அரை வயிறு கால் வயிறு எனும் குறைகள் இல்லாது நிறைவயிறு காக்க வேண்டும்
வன்புலி வாகனன் என் தோளில் வழுவேற்றி தோள்களை காக்க வேண்டும்
வாழ்வெல்லாம் சுவாமிய சரணமென ஓதுவேன் வாபரின் தோழனே

வணங்கத் தவறாத வள்ளலே ஐயனே முழங்கைகள் காக்க வேண்டும்
வருக என வரவேற்க அருளாசி தந்து நீ முன்கையை காக்க வேண்டும்
முழு முதற்கடவுளே இருமுடிப்பிரியனே முதுகினை காக்க வேண்டும்
முருகனின் தம்பியே அரிகரன் புதல்வனே கலியுக கடவுள் நீயே

உள்ளம் கலங்காது ஊருக்கு உதவிட உள்ளங்கை காக்க வேண்டும்
வில்லாளி வீரனே நெய்விளக்கு ஏற்றிடும் விரல்களை காக்க வேண்டும்
நல்லதோர் இதயத்தை தந்து நான் நலமுற நகங்களை காக்க வேண்டும்
நாதமே, வேதமே, ஞானமே, மோனமே காந்தமலை ஜோதி நீயே

இடையிலே என் பெயரில் பழிஏதும் வாராமல் இடையினை காக்க வேண்டும்
துவண்டு நான் வீழாமல் துணிவுடன் வாழ்ந்திட துடைகளை காக்க வேண்டும்
அறியாது நான்செய்த பிழைகளை மன்னித்து குறிகளை காக்க வேண்டும்
கருணையின் வடிவமே கற்பூர ஜோதியே கரிமலை ஆளும் சீலா

கீழோர்கள் தயவுக்கு மண்டி போடாமல் என் முழங்கால்கள் காக்க வேண்டும்
காட்டுவழி சென்றாலும் நின் சங்கு சக்கரம் கணுக்கால்கள் காக்க வேண்டும்
நீ வாழும் மலையேற இறுதிவரை தளராது பாதங்கள் காக்க வேண்டும்
நிழலாக குளிர்தந்து நினைத்ததை கொடுத்திடும் சமரச குருநாதனே

காலையிலும் மாலையிலும் அந்தி சந்தி வேளையிலும் கால்விரல்கள் காக்க வேண்டும்
காலன் எனைப்பாராமல் போவதற்கு வழி சொல்லி கவலைகள் தீர்க்க வேண்டும்
யாருக்கும் குனியாமல் ஐயப்பா எனும் நாமம் அச்சத்தை போக்க வேண்டும்
சீர்மேவு சபரிமலை வீரமணிகண்டனே நீதான் என் கவசமய்யா...எனைக் காக்கும் கவசமய்யா..

சுவாமியே சரணம் ஐயப்பா
சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா
சரணம் ... சரணம்.... ஐயப்பா

பஜனை பாடல்கள்

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷ்மாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷ்மாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷ்மாம்

ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ரக்ஷ்மாம்

மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ரக்ஷ்மாம்

ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ரக்ஷ்மாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷ்மாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷ்மாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீச சபரிகிரீச சபரிகிரீச ரக்ஷ்மாம்

வெங்கடேச வெங்கடேச வெங்கடேச பாஹிமாம்
ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ரக்ஷ்மாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷ்மாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷ்மாம்

கணேசா சரணம்

1. கணேசா சரணம் சரணம் கணேசா
கணேசா சரணம் சரணம் கணேசா (கணேசா)

2. கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா
கருணையின் வடிவே சரணம் கணேசா (கணேசா)

3. சங்கடம் தீர்ப்பாய் சரணம் கணேசா
சண்முக சோதரா சரணம் கணேசா (கணேசா)

4. சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சாஸ்தா சோதரா சரணம் கணேசா (கணேசா)

5. முதல்வனும் நீயே சரணம் கணேசா
முனிதொழும் தேவா சரணம் கணேசா (கணேசா)

6. அகந்தை அழிந்திடும் சரணம் கணேசா
அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா (கணேசா)

7. கரிமுகன் நீயே சரணம் கணேசா
கதியெனத் தொழுவோம் சரணம் கணேசா (கணேசா)

8. மூஷிக வாகனா சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா (கணேசா)

9. பார்வதி பாலா சரணம் கணேசா
பாகவதப் பிரியா சரணம் கணேசா (கணேசா)

பிள்ளையார் துதி

1. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

2. ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

3. ஆனைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வயிறு படைத்தவர் பக்தர் குறைத்தீர்த்தவர்

4. மஞ்சனிலே செய்யினும் மண்ணனாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்

5. ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

6. அவல் பொரிக்கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும்
கவலை யின்றித் திண்ணுவார் கஷ்டங்களை போக்குவார்

7. கலியுகத்து விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம்போல் சுற்றுவார்.

அரிஹரோ ஹரா சுவாமி

அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா
அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா

1. திருப்பரங் கிரி தீரனுக்கு அரஹரோஹரா
தெய்வயானை மணாளனுக்கு அரஹரோஹரா
செந்தில் வளர் கந்தனுக்கு அரஹரோஹரா
செஞ்சுடர் வேல் வேந்தனுக்கு அரஹரோஹரா

2. பழனிமலை வேலனுக்கு அரஹரோஹரா
பாலா பிஷேகனுக்கு அரஹரோஹரா
சுவாமிமலை நாதனுக்கு அரஹரோஹரா
சுப்ரமண்ய மாணவர்க்கு அரஹரோஹரா

3. தணிகைமலை செல்வனுக்கு அரஹரோஹரா
தனித்து நின்ற குமரனுக்கு அரஹரோஹரா
சோலைமலை முருகனுக்கு அரஹரோஹரா
சொகுசுக்கார வேலனுக்கு அரஹரோஹரா

4. கந்தன் கடம்பனுக்கு அரஹரோஹரா
கதிர்காம வேலனுக்கு அரஹரோஹரா
சிக்கல் சிங்காரனுக்கு அரஹரோஹரா
சிங்கார வேலனுக்கு அரஹரோஹரா

5. எட்டுக்குடி வேலனுக்கு அரஹரோஹரா
எங்குள் குல தேவனுக்கு அரஹரோஹரா
மருதமலை மன்னனுக்கு அரஹரோஹரா
மாந்தர் தொழும் மாறனுக்கு அரஹரோஹரா

6. வெள்ளிமலை வேலனுக்கு அரஹரோஹரா
வள்ளி மணாளனுக்கு அரஹரோஹரா
அபிஷேகப் பிரியனுக்கு அரஹரோஹரா
ஆனந்த வடிவனுக்கு அரஹரோஹரா

ஐயப்பசாமி - ஆறுமுகசாமி

1. சரணம் சாமி சரணம்சாமி ஐயப்பசாமி
அரோகரா அரோகரா ஆறுமுகசாமி

2. பம்பையிலே உதித்தவராம் ஐயப்பசாமி
பொய்கையிலே உதித்தவராம் ஆறுமுகசாமி
திருமாலின் திருமகனாம் ஐயப்பசாமி
திருமாலின் மருமகனாம் ஆறுமுகசாமி

3. சபரிமலை மீதிருப்பார் ஐயப்பசாமி
பழனிமலை மீதிருப்பார் ஆறுமுகசாமி
புலிக் கொடியைக் கொண்டவராம் ஐயப்பசாமி
சேவற்கொடி அழகனையப்பா ஆறுமுகசாமி

4. ஐந்து மலைக் கதிபதியாம் ஐயப்பசாமி
ஆறு மலைக் கதிபதியாம் ஆறுமுகசாமி
வில்எடுத்து வருபவராம் ஐயப்பசாமி
வேல் எடுத்து வருபவராம் ஆறுமுகசாமி

5. காடுமலை நாடியவர் ஐயப்பசாமி
குன்றேறி நின்றவர்தான் ஆறுமுகசாமி
வாபரைத் துணைக்கொண்டார் ஐயப்பசாமி
பாகுவைத் துணைக்கொண்டார் ஆறுமுகசாமி

6. சரண கோஷ பித்தராம் ஐயப்பசாமி
அரோகர பித்தராம் ஆறுமுகசாமி
மகிஷியைக் கொன்றவராம் ஐயப்பசாமி
சூரனை வென்றவராம் ஆறுமுகசாமி

7. இன்று வரை பிரம்மச்சாமி ஐயப்பசாமி
இருதாரம் கொண்டவராம் ஆறுமுகசாமி
இருமுடி பிரியனையா ஐயப்பசாமி
காவடி பிரியனையா ஆறுமுகசாமி

8. நெய்யா அபிஷேகராம் ஐயப்பசாமி
பாலா அபிஷேகராம் ஆறுமுகசாமி
ஊமைக் கருள் புரிந்தவராம் ஐயப்பசாமி
ஒளவைக்கு உபதேசித்தவர் ஆறுமுகசாமி

9. புலியேறி வருபவராம் ஐயப்பசாமி
மயிலேறி வருபவராம் ஆறுமுகசாமி
பாணக்க பிரியராம் ஐயப்பசாமி
பஞ்சாமிர்தப் பிரியராம் ஆறுமுகசாமி

10. தை மகர கீர்த்தியவர் ஐயப்பசாமி
தை பூச மூர்த்தியவர் ஆறுமுகசாமி
அருள் வழங்கும் வள்ளலவர் ஐயப்பசாமி
அழகு தமிழ் ஆனழகர் ஆறுமுகசாமி

சமயபுரம் மாரியம்மா

1. சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

2. மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்

3. துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா - அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா

4. பட்டு பீதாம்பரத்தில தாவணியும் - உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்

5. எட்டு திசைகளையும் ஆண்டவனே - அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா

6. கத்தி கதறுகிறோம் கேட்கலையோ - தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ

7. உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பில் - எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா

8. காலிற் சதங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா

9. பூவாடை வீசுதம்மா அம்மா
பூமகளே என் தாயே மாரியம்மா

தாயே சமயபுரத்தாளே!
எல்லாம் உன் அடிமையே!
எல்லாம் உன் உடமையே!
எல்லாம் உன் செயலே!

செல்லாத்தா செல்ல மாரியாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
பொன்னாத்தா உன்னைக் காணாட்டா - இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்)

தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தென்னை மரத் தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழிதனையே காட்டி விடு மாரியாத்தா (செல்)

பசும்பாலை கறந்துகிட்டு கறந்த பாலை எடுத்து கிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி நீ பாம்பாக மாறி அதை
பாங்காக குடித்து விட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா - இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்)
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா - எங்கள்
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா

சன்னதியில் கட்டுங்கட்டி

1. சன்னதியில் கட்டுங்கட்டி தன்னே னானான - நாங்க
சபரிமலை பயணமுங்க தில்லேலே லேலோ

2. கார்த்திகையில் மாலைப்போட்டு தன்னே னானான - நாங்க
கடும் பயணம் போறோமுங்க தில்லேலே லேலோ

3. மார்கழியில் கட்டுந்தாங்கி தன்னே னானான - நாங்க
மணிகண்டனைப் பார்க்க போறோம் தில்லேலே லேலோ

4. எரிமேலியில் பெட்டை துள்ளி தன்னே னானான - நாங்க
ஏறிடுவோம் சபரிமலை தில்லேலே லேலோ

5. அழுதையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
அன்னதானம் மிட்டிடுவோம் தில்லேலே லேலோ

6. பம்பையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
சக்தி பூஜை கொண்டாடுவோம் தில்லேலே லேலோ

7. ஐந்து மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
ஐயப்பனை காணப் போறோம் தில்லேலே லேலோ

8. மலையாம் மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
மகர ஜோதி காணப் போறோம் தில்லேலே லேலோ

9. பதினெட்டாம் படியேறி தன்னே னானான - நாங்க
பாவங்களைத் தீர்க்க போறோம் தில்லேலே லேலோ

தள்ளாடித் தள்ளாடி

தள்ளாடித் தள்ளாடி நடை நடந்து - நாங்க
சபரிமலை நோக்கி வந்தோமய்யா (தள்ளாடி)

1. கார்த்திகை நல்ல நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையும் மாலையும் சரணங்கள் சொல்லிகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)

2. இருமுடியைக் கட்டிகிட்டு இன்பமாக பாடிகிட்டு
ஈசன் மகனெ உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு (தள்ளாடி)

3. வேட்டைகளும் துள்ளி கிட்டு வேஷங்களும் போட்டுகிட்டு
வேடிக்கையாக நாங்கள் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் (தள்ளாடி)

4. காணாத காட்சியெல்லாம் கண்ணாரக் கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையாத் தாண்டிகிட்டு
பம்பையில் குளித்து விட்டு பாபமெல்லாம் போக்கி விட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று பஜனைகள் பாடிக்கிட்டு (தள்ளாடி)

5. நீலிமலை ஏற்றத்திலே நின்று நின்று ஏறிக்கிட்டு
நெஞ்சம் உருகி உன்னை நினைச்சுமே பார்த்துகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே (தள்ளாடி)

6. படியேறி போகும் போது பாங்காகக்காய் உடைத்து
பாலனான உந்தனையே பார்த்து சொக்கிகிட்டு
நெய்யிலே குளிக்கும் போது நேரிலேயே பார்த்து கிட்டு
ஐயா சரணம் என்று அலறியடிச்சுக் கிட்டு (தள்ளாடி)

அல்லி மலர் வாசமது

1. அல்லி மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஹரி ஹர புத்திரனின் மேலே மணக்குது

2. அத்தர் புனுகு வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமியின் மேலே மணக்குது

3. மல்லிகை பூ மரிக்கொழுந்து எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மணிகண்ட சுவாமியின் மேலே மணக்குது

4. முல்லை மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மோகன பாலனின் மேலே மணக்குது

5. ரோஜா மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ராஜாதி ராஜனவன் மேலே மணக்குது

6. காட்டுமல்லி நாட்டுமல்லி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
கருணாகர மூர்த்தியின் மேலே மணக்குது

7. பரிமள சாம் பிராணி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
எரிமேலி சாஸ்தாவின் மேலே மணக்குது

8. கற்பூர வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
காந்தமலை வாசனவன் மேலே மணக்குது

9. சந்தன வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
சபரி கிரி மலையின் மேலே மணக்குது

10. குங்குமப் பூ ஜவ்வாது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
குளத்துப் புழை பாலகனின் மேலே மணக்குது

11. பன்னீரும் குல் கந்தும் எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
பந்தள செல்வனவன் மேலே மணக்குது

12. மகர மாதம் ஜோதியது எங்கே தெரியுது
அது எங்கே எங்கே தெரியுது
கரந்தமலை உச்சியின் மேலே தெரியுது

13. மஞ்ச பொடி மகிமையது எங்கே தெரியுது
அங்கே எங்கே எங்கே தெரியுது
மஞ்ச மாதா தேவியவள் மேலே தெரியுது

14. விபூதி அபி÷க்ஷகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
வீரமணிகண்டன் மேலே நடக்குது

15. நெய்யா அபிஷேகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
சாஸ்தாவாம் ஐயப்பனின் மேலே நடக்குது

16. சரண கோஷ சப்தமது எங்கே ஒலிக்குது
அது எங்கே எங்கே ஒலிக்குது
சுவாமியாம் ஐயப்பன் மலையில் ஒலிக்குது.

சாமி சாமி ஐயப்பா

1. சாமி சாமி ஐயப்பா சபரிமலை ஐயப்பா
சபரிமலை ஐயப்பா சாஸ்தாவே ஐயப்பா

2. அச்சங்கோயில் அரசனே சாமி சாமி ஐயப்பா
ஆதரிக்க வேண்டுமையா சபரிமலை ஐயப்பா

3. குளத்துப்புழை பாலகரே சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

4. கணபதியின் தம்பியே சாமி சாமி ஐயப்பா
கவலைகளைப் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

5. வாபரின் கோட்டை ஐயாசாமி சாமி ஐயப்பா
வரங்களையே கொடுக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

6. காளைகட்டி ஆஸ்ரமம் சாமி சாமி ஐயப்பா
களைப்பார வந்து நின்றோம் சபரிமலை ஐயப்பா

7. அமுதா நதியிலே சாமி சாமி ஐயப்பா
ஆனந்தமாய் குளித்து வந்தோம் சபரிமலை ஐயப்பா

8. கரிமலை உச்சியிலே சாமி சாமி ஐயப்பா
கடினமாக ஏறிவந்தோம் சபரிமலை ஐயப்பா

9. பம்பா நதியிலே சாமி சாமி ஐயப்பா
பாவமெல்லாம் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

10. நீலிமலை ஏற்றத்திலே சாமி சாமி ஐயப்பா
நிற்க வைத்து பார்க்கிறியே சபரிமலை ஐயப்பா

11. சரங்குத்தி வந்தடைந்தோம் சாமி சாமி ஐயப்பா
சன்னிதானம் கண்டோமே சபரிமலை ஐயப்பா

12. நெய்யப்பிஷேகத்தோடு சாமி சாமி ஐயப்பா
நேரில் காண வந்தோம் சபரிமலை ஐயப்பா

13. குற்றம் குறை எதுவானாலும் சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா.

ஓம் குருநாதா ஐயப்பன்

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குரு நாதா ஐயப்பா (ஓம்)

அரனார் பாலா ஐயப்பா
அம்பிகை பாலா ஐயப்பா (ஓம்)

ஆபத் பாந்தவா ஐயப்பா
ஆதி பரா பரா ஐயப்பா (ஓம்)

இருமுடிப் பிரியா ஐயப்பா
இரக்க மிகுந்தவா ஐயப்பா (ஓம்)

ஈசன் மகனே ஐயப்பா
ஈஸ்வரி மைந்தா ஐயப்பா (ஓம்)

உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா (ஓம்)

ஊக்கம் தருபவர் ஐயப்பா
ஊழ்வினை அறுப்பவர் ஐயப்பா (ஓம்)

எங்கும் நிறைந்தவர் ஐயப்பா
எங்கள் நாயகா ஐயப்பா (ஓம்)

பம்பையின் பாலா ஐயப்பா
பந்தள வேந்தா ஐயப்பா (ஓம்)

வன்புலி வாகனா ஐயப்பா
வனத்திலிருப்பவர் ஐயப்பா (ஓம்)

சபரிகிரீசா ஐயப்பா
சாஸ்வதரூபா ஐயப்பா (ஓம்)

பதினெட்டாம் படிகளே சரணம்

1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

4. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

5. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

6. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

7. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

8. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

9. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

10. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

11. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

12. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

13. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

14. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

15. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

16. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

17. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

18. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

19. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

20. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

வழிநடைப் பாடல்

சாமியே - ஐயப்போ
ஐயப்போ - சாமியே
பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் - சுவாமிக்கே
சுவாமிக்கே - நெய் அபிஷேகம்
பால அபிஷேகம் - சுவாமிக்கே
தேன் அபிஷேகம் - சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே
பகவானே - பகவதியே
பகவதியே - பகவானே
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் - குண்டும் குழியும்
ஏந்திவிடையா - தூக்கிவிடைய்யா
தூக்கிவிடைய்யா - ஏந்திவிடைய்யா
வில்லாளி வீரனே - வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே - வில்லாளி வீரனே
பாதபலம் தா - தேக பலம் தா
தேகபலம் தா - பாத பலம் தா
கற்பூர தீபம் - சுவாமிக்கே
அவிலும் மலரும் - சுவாமிக்கே
காணிப்பொன்னும் - சுவாமிக்கே
இருமுடி கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - இருமுடி கட்டு
கற்பூரஜோதி - சுவாமிக்கே
சுவாமிமாரே - ஐயப்பமாரே
ஐயப்பமாரே - சுவாமிமாரே
ஈஸ்வரனே - ஈஸ்வரியே
ஈஸ்வரியே - ஈஸ்வரனே
ஐயப்பபாதம் - சுவாமிபாதம்
சுவாமிபாதம் - ஐயப்பபாதம்
தாங்கிவிடப்பா - ஏந்திவிடப்பா
ஏந்திவிடப்பா - தாங்கிவிடப்பா
கடினம் கடினம் - கரிமலை ஏற்றம்
கரிமலை ஏற்றம் - கடினம் கடினம்
தூக்கிவிடப்பா - ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம் - தூக்கிவிடப்பா
கதலி பழமும் - சுவாமிக்கே
சுவாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
கட்டுங்கட்டி - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - கட்டுங்கட்டி
யாரைக்காண - சாமியைக்காண
சாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
பேட்டை துள்ளல் - சுவாமிக்கே
பெருவழி பாதை - சுவாமிக்கே
கருடன் வருவது - சுவாமிக்கே
ஆபரண பெட்டி - சுவாமிக்கே
தேவன் மாரே - தேவி மாரே
தேவி மாரே - தேவன் மாரே
தேவனே - தேவியே
தேவியே - தேவனே
கடவுள் வணக்கம் - காலை மாலை
காலை மாலை - கடவுள் வணக்கம்
சுவாமியே - ஐயப்போ-ஐயப்போ சுவாமியே

மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக் கொள்ளும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.

வெங்கடேச பெருமாளுக்கு 162 வைரங்கள் காணிக்கை!

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியலில், 162 வைரங்களை அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். இவற்றின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு விஜயம் செய்யும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். உண்டியல் காணிக்கை மூலம், ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இந்த ஆண்டு இதுவரை தங்கம், வெள்ளி மற்றும் பணமாக 600 கோடி ரூபாய் வரை கிடைத்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ.1,600 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில், அடையாளம் தெரியாத ஒரு பக்தர், விலை உயர்ந்த 162 வைரங்களை, ஒரு வெல்வெட் பையில் வைத்து, கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார். இந்த வைரங்களின் மதிப்பு, 1.5 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், "திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஸ்ரீவாரி உண்டியல், திறக்கப்பட்டது. அதிலிருந்த பணம், நகைகள் எண்ணப்பட்ட போது, வெல்வெட் பையில், 162 வைரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.