கனடாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, 4500 ஆண்டுகள் பழைமையான "மார்கம்' பனிப்பறையில் 19 சதுர மைல் பரப்பளவுள்ள பகுதி உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
2100க்குள் கடல் நீர் மட்டம் 7 அடி உயரும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை
சுற்றுச் சூழல் பாதிப்பு, உலகம் வெப்ப மயமாதல் போன்றவற்றை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றன. ஆனாலும் வெப்ப மயமாதலை தடுக்க முடியவில்லை. சுற்றுச் சூழல் பாதிப்பால் காற்று மண்டலம் வெப்பமாகி பணி மலைகள் உருகத் தொடங்கிவிட்டன.கிரீன்லாந்து, அன்டார்டிக் கடல் பகுதியில் பனி மலைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் 7 அடி வரை உயரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடல் நீர் மட்டம் உயருவதால் கடலோர பகுதிகளில் பல்வேறு நாடுகள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேற்படி பனிப்பாறைப் பகுதியானது கடந்த ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் திடீரென மாயமாகியுள்ளமை தம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக கனடாவின் ஒன்டாறியோவிலுள்ள ரென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேசமயம் "வார்ட் ஹன்ட்' பனிப்பாறை தொடர்ந்து உருகி சிதைவடைந்து வருவதாக இவ்விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கனடாவின் இந்த நிலைமை கவலை அளிப்பதாக டென்மார்க் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த மாறுபாடுகளினால் ஆர்டிக் கடல் ஒட்டிய பிரதேசங்களில் பெரிதும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதனை தடுக்கும் நடவடிக்கையில் டென்மார்க் மற்றும் அதன் அண்டை நாடுகளும் உதவ முன்வந்துள்ளது. மேலும் 170 சதுர மைல் பரப்பளவு கொண்ட "வார்ட் ஹன்ட்' பனிப்பாறையில், 7 சதுர மைல் பரப்பளவான பகுதி கடந்த மாதம் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது
Monday, January 10, 2011
கொழுப்பா? மியூசிக் கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க.
உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்பிற்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இசையை ரசிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைவதுடன் சுத்தப்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இசை கேட்பதால், இதய பாதிப்பின்றி இருக்கவும், கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இசை கேட்கும் சிகிச்சை முறையை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்ததாகவும், இதனை பிரிட்டன் நிபுணர்கள் வரவேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இசையைக் கேட்டு ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுவதாகவும், இது இரத்தம் உறைவதைத் தடுப்பதுடன் கொழுப்பு சேர்வதையும் கரைப்பதாகத் தெரிய வந்துள்ளது.
மனித உடலில் இசையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிம்பொனி இசை மனநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகத்தின் அதிவேக ரயில் சீனாவில் இயக்கம்

சீனாவில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன ரயில்கள் கடந்த வாரம் இயக்கி வைக்கப்பட்டது. ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிவேக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஜப்பான் ரயில் 243 கிலோ மீட்டர் வேகத்திலும், பிரான்ஸ் ரயில் 277 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டியையொட்டி சீனாவில் அதிவேக ரயில்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த ரயில்கள் 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உஹான் நகரிலிருந்து தெற்கு பகுதியில் உள்ள குவாங்சு நகர் வரை இந்த அதிவேக ரயில் சென்று வருகிறது. ஆயிரத்து 68 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த பகுதியை அதிநவீன ரயில் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன.
வர்த்தகம் அதிக அளவில் நடக்கும் தெற்கு பகுதியில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதால், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 42 தடங்களில் இந்த அதிநவீன ரயில் இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, இந்த அதிவேக ரயில், 400 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Saturday, January 8, 2011
ஆன்லைன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு...
இந்தியாவிலும் இணைய நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவருவதால் நம் மக்கள் இணைய நுட்பத்தினை பெரிய அளவில் பயன்படுத்திவர முனைகிறார்கள். ஆனால் எந்தஅளவிற்கு நுட்பம் வருகின்றதோ அந்த அளவிற்கு அதனால் ஏமாற்றுபவர்களும் பெருகிவருகிறார்கள். தொழில்நுட்பம் ஒரு புறம் சாதகம்தான் என்றாலும் மற்றொரு புறம் மிக மோசமான விளைவுகளை தரக்கூடியது.
தற்போது இணையவழியில் ஏமாற்றுவது மிக பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. அதில் முதன் முதலில் மாட்டுகிறவர்கள் வங்கிகளில் ஆன்லைன் பேங்கிங் சேவைகளை பயன்படுத்துகிறவர்கள்தான்.
சிறிய உதாரணம்
வங்கியில் இருந்து குறிப்பிட்ட நபருக்கு ஒரு மடல் செல்கிறது. அதில் உடனடியாக அவரின் ஆன்லைன் இன்டர்நெட் பேங்கிக் கணக்கின் பாஸ்வேர்டை கீழே உள்ள இணைப்பில் வழியாக மாற்றச்சொல்லி இருக்கிறது. அந்த மடல்.
உதாரணம்
நுட்பம் தெரியாதவர்கள் உடனடியாக கீழே கொடுத்திருக்கும் sbi secuirty.html என்ற இணைப்பை சொடுக்கி அதன் வழியாக உள்ளே நுழையும்போது அந்த வங்கிக்கான யூசர்நேம் ,பாஸ்வேர்டை கொடுப்பார்கள். இதுபோதுமே
இணையத்தின் ஆன்லைன் பேங்கிக் கணக்கினை பயன்படுத்த தேவை யூசர் நேம் , பாஸ்வேர்டு, இது மாதிரி இணையத்தளங்களின் மூலம் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோரின் கணக்குகள் திருடப்பட்டு அவர்களின் பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதுபோன்ற மடல்கள் உங்களுக்கு வந்தாலும் அல்லது நீங்களே வெளிஇடங்களில் ஆன்லைன் வங்கிக் கணக்கினை பயன்படுத்தினாலும் நீங்கள் கவனத்தில் கீழே கண்ட வழிமுறைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள.
நீங்கள் செல்லும் எந்த வங்கியின் இணையத்தளமாக இருந்தாலும் முதலில் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்
அந்த தளத்தினை நீங்கள் உங்க ப்ரவுசரில் துவக்கப்பட்டவுடன் முகவரிப்பட்டையில் (address bar) ல் உள்ள முகவரியின் முதலில்
https://onlinesbi.com,
https://infinity.icicibank.co.in,
https://www.onlinecub.net/jsp/start.html
இதுபோன்று நீங்கள் எந்தெந்த தளங்களுக்குள் நுழைக்கின்றீற்களோ அதற்கு முன் https:// இப்படி இருப்பது நலம். அது ஜிமெயில், ஹாட்மெயில், யாஹி என்று எதுவாகஇருந்தாலு ம் சரி.
என்று எல்லா தளங்களுமே https:// என்று ஆரம்பிக்கப்படவேண்டும்.
சாதாரணமாக எல்லா தளங்களும் http:// என்றே துவக்கப்படும். ஆனால் https:// என்பது http with security அதாவது பாதுகாப்பாக உள்ளே நுழையும்.
இதோ உங்களுக்காக சில வங்களின் இணையத்தளங்கள்.
.எனவே எந்த வங்கி உங்களுக்கு படம் 1ம் காட்டப்பட்டுள்ளபோல் மின்னஞ்சல் அனுப்பினாலும் இதுபோன்ற வழிமுறைகளை கவனமாக கையாண்டு உங்கள் பணத்தினை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.
பணம் எவ்வளவு இருந்தாலும் தேவையான நேரத்தில் தேவைப்பட்டால் மட்டுமே அதற்கு மதிப்பு.
Written by
செல்வ.முரளி

Thursday, January 6, 2011
உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள் - Free Memory Improve Master

நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.
இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும். இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
DOWNLOAD
டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து வகையான பிரிவுகள் நமக்கு தெரியும்.
* Information Overview
* Memory Optimization
* System Tuneup
* Process Management
* Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.
Information Overview :
இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம்.
Memory Optimization
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
* இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும்.
* இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும்.
* அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.
* இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும்.
* இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள்.
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.
Thanks To

Tuesday, January 4, 2011
Subscribe to:
Posts (Atom)