Saturday, October 21, 2017

கந்த சஷ்டி விரதம் - 2ம் நாள்

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருள் வேண்டி துதிப்போமே...
ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்;
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானைச் சகோதரனே
வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோதயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனை ஆண்ட இடம் தானோ
பொருளாவது ஷண்முகனே.
கெடுவாய் மனனே! கதிகேள் கரவாது
இடுவாய்; வடிவேல் இறைதாள் நினைவாய்;
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே;
விடுவாய் விடுவாய் வினையாவையுமே.
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே! ஒழிவாய்; ஒழிவாய்;
மெய் வாய் விழி நாசியோடும் செவியாம்
ஐவாய் வழிசெல்லும் அவாவினையே.
எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ;
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்;
கந்தா! கதிர்வேலவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறை நாயகனே.
ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ?
சீறா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
ஏறுமயி லேறி விளையாடு முகம் ஒன்று
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்று
கூறுமடி யார்கள் வினைதீர்க்கு முகம்ஒன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்று
மாறுபட சூரரை வதைத்தமுகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்தமுகம் ஒன்று
ஆறுமுக மான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே!
ஷண்முகக் கடவுள் போற்றி
சரவணத் துதித்தோய் போற்றி
கண்மணி முருகா போற்றி
கார்த்திகை பாலா போற்றி
தண்மலர்க் கடப்ப மாலை
தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதன வள்ளி
வேலவா போற்றி போற்றி!
ஆறிரு தடந்தோள் வாழ்க!
ஆறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க!
குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க!
யானைதன் அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க!
வாழ்கசீர் அடியார் எல்லாம்.

No comments:

Post a Comment