Friday, January 11, 2013

திருப்பள்ளியெழுச்சி 2,3,4,5,

திருப்பள்ளியெழுச்சி 2.
 
 அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம் திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி எழுந்தருளாயே. 
 
 
பொருள்: இந்திரனுக்கு உகந்த கிழக்குத் திசையில் சூரியன் உதித்தபோது அங்கு இருள் போனது. வெளிச்சத்தைப் பார்த்து தாமரை மலர்கள் பூத்தன. பூக்கள் மலர்ந்ததைப் பார்த்து வண்டுக் கூட்டங்கள் ரீங்காரமிட்டு இசை பாடத் தொடங்கின. திருப்பெருந்துறையில் உறைந்துள்ள அழகிய பெருமானே, அருள் செல்வத்தை வாரி வழங்கும் ஆனந்த மலையே, அலைகள் அடிக்கும் கடலே, பள்ளி எழுந்தருளாய்.

திருப்பள்ளியெழுச்சி 3. கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை யொளிஒளி உதயத்து ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிரியாய் எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே. 
 
பொருள்: வெளியில் திரியும் பறவையான கரிய நிற குயில் இனிய குரலில் கூவியது. வீட்டுக்குள் இருக்கும் பறவையான கோழியோ கொக்கரக்கோ என குரல் எழுத்துக் கூவுகிறது. அதேபோல குருகுகள் எனக் கூறப்படும் பறவைகளும் ஒலித்தன. தேவனே, திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, யாராலும் அறிய முடியாத அரும்பொருளே, எளியவனே, இறையடியார்கள் சங்குகளை முழங்குகின்றனர். நட்சத்திரத்தின் ஒளி மறைந்து போய் விட்டது. சூரியனின் ஒளி எழுந்து விட்டது. எங்களுக்கு கருணை காட்டி, வீரக்கழல் செறிந்த உனது திருவடிகளை எங்களுக்குக் காட்டி அருள் புரிவாயாக.

திருப்பள்ளியெழுச்சி 4. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 
 
பொருள்: திருப்பெருந்துறையில் இறையடியார்கள் கூடடி சிவபெருமானை போற்றிப் பாடுகிறார்கள். ஒருபக்கம் வீணை இசை, ஒரு பக்கம் யாழ் இசை, இன்னொரு பக்கம் வேத கீதம் இசைக்கிறார்கள். நறுமலர்ப் பூக்களை கைகளில் ஏந்தி நிற்கிறார்கள். இன்னொரு பக்கமோ மனம் உருக இறைவனின் புகழ் பாடி நிற்கிறார்கள். பெருமானின் புகழ் பாடுவதால் கிடைக்கும் பேரின்பத்தால் உடல் துவண்டு காணப்படுகிறார்கள். தலைக்கு மேல் கை தூக்கி கூப்பி, சிவ சிவா என்று கூறி தொழுகிறார்கள். அப்படிப்பட்ட பெருமானே, என்னையும் நீ ஆட் கொண்டு அருள் புரிவாயாக, பள்ளி எழுவாயாக.

திருப்பள்ளியெழுச்சி 5. பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரை சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. 
 
பொருள்: திருப்பெருந்துறையில் உறைந்திருக்கும் மன்னனே, ஐம்பூதங்களிலும் நீ நீக்கமற நிறைந்திருக்கிறாய். முதலும் நீயே, முடிவும் நீயே என்று கூறி உருகிப் பாடும் புலவர்கள் உன்னைப் புகழ்ந்து ஆடிப் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் உன்னை மெய்யாக நாங்கள் இதுவரை கண்டிரோம். உண்ணைக் கண்ணால் காண முடியாவிட்டாலும், கருத்தால், உணர்வால் உணர முடியும். எட்டாத உயரத்திற்கு அப்பால் நீ நிற்கிறாய். சிந்தனைக்கும் எட்டாத செல்வனே, காண்பதற்கு அரிதானவன் தான் நீ என்றாலும் கூட எங்கள் பால் அன்பு கொண்டு எளியவனாம் எங்கள் முன்பு வந்து நின்று எங்கள் மனதில் மண்டிக் கிடக்கும் மும்மலங்களை அகற்றி அருள் புரிவாயாக.


திருப்பள்ளியெழுச்சி 6. பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின் றார்அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே. 
 
 
பொருள்: உமையின் மணாளனே, குளிர்பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறைந்திருக்கும் சிவனே, பரபரப்பான இந்த உலகின் சிந்தனையின்றி, பற்று, பாசங்களை விட்டு விட்டு உன்னை மட்டுமே சிந்திக்கின்ற ஞானியர் பலரும், உன்னிடம் அன்பு காட்டுவதே கடமை என கருதும் மைக்கண்ணியர் பலரும் உன்னை வணங்கி நிற்கிறார்கள். ஆனால், நாங்கள் சாதாரணமானவர்கள். உன்னை வணங்கியே ஆக வேண்டும் என்பதற்காக வணங்க வரவில்லை. எங்களை ஆட்கொண்டு, பிறவி வேரை அறுத்து பூமியில் மீண்டும் பிறக்காமல் காத்தருள்வாய்

No comments:

Post a Comment