Saturday, September 15, 2012

பேசுவதை நிறுத்துங்கள். செயலில் இறங்குங்கள்! : Ugly Indians


AddThis Social Bookmark Button

இந்தியாவை மாற்றவேண்டுமாயின் முதலில் உங்கள் தெருக்களில் இருந்து தொடங்குங்கள் என்கிறார்கள் இவர்கள்.
Ugly Indians என தங்களை சொல்லிக்கொள்ளும் இக்குழுவினர் செய்வது இது தான். எங்கெல்லாம் தெருக்களில் குப்பை கொட்டிக்கிடக்கிறதோ, அங்கெல்லாம் சென்று தன் நலம் பாராது சுத்தம் செய்கிறார்கள். வீதிகளை சீரமைக்கிறார்கள். குப்பைத்தொட்டிகளை புதிதாக அங்குவைத்துவிடுகிறார்கள். பின் கலைந்து சென்றுவிடுகிறார்கள்.  அவ்வப்போது அத்தெருக்களை சுத்தமாக இருக்கிறதா என பார்த்துக்கொள்கிறார்கள்.

'பேசுவதை நிறுத்துங்கள். செய்ய தொடங்குங்கள்' என்பது இவர்களது கோட்பாடு. மத்திய, மாநில அரசுக்களையோ, நாட்டு சுகாதார சீர்கேடுகளையோ நிந்தித்து கொண்டிருக்கிறாதீர்கள். தவறு ஒவ்வொரு இந்தியனிடமும் இருக்கிறது. எமது கலாச்சார வாழ்க்கை முறை (Cultural Behavier) மாறவேண்டும். தன் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைக்க நினைக்கிறார்களோ அதே அளவு தனது தெருக்களை சுத்தமாக வைத்திருக்க நினைப்பதில்லை. இந்நிலையை மாற்றுங்கள். தெருவில் குப்பை போட மனம் வரக்கூடாத அளவு அத்தெரு சுத்தமாக வேண்டும். இந்தியர்கள் வெளிநாடுகளில்  மட்டும் இந்த மனநிலையில் வாழ்கிறார்கள். ஏன் சொந்த நாட்டில் முடிவதில்லை. குப்பை, அழுக்கு, சுகாதாரமின்மை என்பவற்றில் போட்டிவைத்தால் இந்தியாவுக்கு நோபல் பரிசு கூட கொடுக்கலாம் என்கிறார் இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.  பேசிக்கொண்டிருக்காதீர்கள், களத்தில் இறங்குங்கள்' என இவர்கள் இதுவரை செய்துள்ள பணிகள் கணக்கில் அடங்காது நீள்கிறது. இக்குழுவினர் தனித்து தெரிவதற்கு முன்வைக்கப்படும் சில பிளஸ்பாயிண்ட்.

விளம்பரம் இல்லை. தனிநபருக்கு முன்னுரிமை இல்லை. பெயரிலிகளாக, தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளாது, களத்தில் இறங்குகிறார்கள். வேலை முடிந்ததும் எந்தவித கொடுக்கல் வாங்கலும் இன்றி பிரிந்து சென்றுவிடுகிறார்கள். தேவைப்படும் போது மட்டும் தெருச்சுத்தீகரிப்பாளர்கள் சிலரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். மற்றும்படி சுய சிந்தனையில், அவர்களே வேலையை தொடக்கிறார்கள். இவர்கள் சுத்தமாக மாற்றிவிட்டு சென்ற இடங்களை மக்கள் முறையாக பாவிக்கவும் தொடங்கிவிட்டார்கள். பல பேர் இவர்கள் வைத்து சென்ற குப்பைத்தொட்டிகளில் குப்பை போடுகிறார்கள்.

மீண்டும் இவர்கள் சொல்வது இது தான். கூட்டம் கூட்டாதீர்கள். விவாதிக்காதீர்கள். ஆலோசனை சொல்லாதீர்கள். விளம்பரம் செய்யாதீர்கள். துண்டுப்பிரசுரங்கள் விநியோக்க்காதீர்கள். எவருக்கும் தொல்லை கொடுக்காதீர்கள். பொது இடங்களுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள். ஆனால் நேரடியாக களத்தில் இறங்குங்கள்.

இவர்களது அண்மைய முயற்சி ஒன்று

Photos Courtesy : Facebook/The-Ugly-Indian
இம்முயற்சியில் நீங்களும் இணைந்து கொள்ள :
http://www.facebook.com/pages/The-Ugly-Indian/123459791046618

No comments:

Post a Comment