Tuesday, July 3, 2012

வாகமன்

ஆள் ஆரவாரமற்ற அமைதி, கண்களை குளிர்விக்கும் பசுமை வாகமன் சுற்றுல்லா போவதற்கு ஒரு நல்ல இடம் !!!

எப்படி இந்த இடம் இவ்வளவு நாட்களாய் நம் கண்களுக்கு படவில்லை என உங்களை புலம்ப வைக்கும் அருமையான சுற்றுலா தலம் வாகமன். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பூலோக சொர்க்கம். கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை கார்ப்பெட் புல்வெளிகள் என இயற்கையின் பிரம்மாண்டம் நம் விழிகள் விரிய செய்கிறது. எப்போதுமே தூவிகொண்டிருக்கும் மெலிதான சாரல், ஆள் ஆரவாரமற்ற அமைதி, கண்களை குளிர்விக்கும் பசுமை என இங்கு வரும் ஒவ்வொரு மனிதனும் இயற்கையில் கரைந்து போவான்.10 முதல் 25 டிகிரி வெப்பநிலை மட்டுமே நிலவுவதால் பிரிட்ஜில் வைத்தது போல இருக்கிறது ஊர். நம் கால்களுக்கு கீழ் மிதந்து செல்லும் மேகங்களும், முதுகு தண்டை சில்லிட வைக்கும் குளிரும் ஒரு ரம்மியமான அனுபவத்தை தருகிறது. குரிசு மலா, முருகன் மலை, தங்கல் மலை என முக்கியமான மூன்று இடங்கள்.

கோட்டயம் தாண்டி பாலா என்ற ஊர் அருகே உள்ளது வாகமன் புல்வெளி. மலைப்பகுதியில் பஸ் ஏறும் போது மனது கொண்டாடத் துவங்கி விட்டது. பரந்து விரிந்த மலைக்குன்றுகள், பச்சைப்பசேல் பாறைகள் மனசுக்கு இதம் தருகின்றன.

இடுக்கி மாவட்டம் என்பதால் முக்கால்வாசிப்பேர் தமிழர்கள்தான். பல்லாண்டுகளுக்கு முன்பு தேயிலைத்தோட்ட வேலைக்காக இங்கே வந்தவர்கள் இங்கேயே செட்டிலாகிவிட்டார்கள். அதனால் தமிழர்களுக்கு மொழிப் பிரச்னையில்லை. ஊட்டி, கொடைக்கானல் போல "சைட் சீயிங்' விஷயங்கள் ஏராளம் உள்ளன.

வாகமன் மிடோஸ், குட்டியாறு அணைக்கட்டு, சூசைட் பாயிண்ட், குருசுமலை, பைன் பாரஸ்ட், தங்கல் பாறை, முருகன் ஹில்ஸ், வனவிலங்கு சரணாலயம் என பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. பைன் ஃபாரஸ்ட்டில் நேர்த்தியாக வளர்க்கப்பட்டிருக்கும் பைன் மரங்கள் ஒரு ஆச்சர்யம்தான். "பேராண்மை' படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்கே தான் படமாக்கப்பட்டது என்கிறார்கள்.

சூசைட் பாயின்ட்டில் நின்று கீழே பார்த்த போது நமக்கு தலை சுற்றியது. எந்த வித பாதுகாப்பு வேலியும் இன்றி இயற்கையாகவே இப்பகுதி உள்ளது. சுய கவனமுடன், கட்டுப்பாட்டுடன் இப்பகுதியை ரசிப்பது நல்லது.

இங்குள்ள குருசு மலை புனித செபாஸ்டின் சர்ச் நிர்வாகத்தின் கீழ் ஆஸ்திரேலிய பசுக்கள் வளர்க்கப்பட்டு இப்பகுதி முழுமைக்கும் பால் சப்ளை செய்யப்படுகிறது. மலையுச்சியில் சிலுவை அமைக்கப்பட்டுள்ளது. புனித தோமையார் வருகைதந்த இடம் இது என்பதால் இந்த இடத்தை மிகவும் புனித இடமாக கிறிஸ்தவர்கள் வணங்குகிறார்கள்.

இப்போதுதான் பிரபலமாகி வருவதால் சுமார் 30 ரிசார்ட்டுகள்தான் இங்கு உள்ளன. லாட்ஜுகளில் 300 ரூபாய்க்கு ரூம் கிடைக்கும். ரிசார்ட்டுகள் 700 முதல் 15000 ரூபாய் வாடகைக்கு கிடைக்கிறது.

இன்னொரு விஷேசம் என்ன தெரியுமா?

இங்கே ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் பாராகிளைடிங். தெற்காசியாவிலேயே ஒரே நேரத்தில் 75 கிளைடர்கள் பறப்பது இங்குதானாம். பாராகிளைடில் கிளப் ஆண்டுதோறும் இந்த சாகச நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அப்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

தென்றல் காற்று, கண்ணுக்கு தென்படும் இடமெல்லாம் பச்சைப்பசேல் புல்வெளிகள் என பூலோக சொர்க்கத்தில் சுற்றி வந்த உணர்வே நமக்கு ஏற்பட்டது. இந்த கோடை விடுமுறைக்கு வாகமனுக்குச் செல்ல தயாராகிவிட்டீர்கள்தானே...!

வாகமன் முழுதும் தேவதாரு மரக்காடுகளும், பச்சை புல்வெளி பிரதேசங்களும், சிறிதும் பெரிதுமான அருவிகளும், ஓடைகளுமாய் நிறைந்து கிடக்கிறது. இன்னும் அதிகளவு மக்கள் வெளிச்சம் படாததால் பிளாஸ்டிக் குப்பைகள், வாகன இரைச்சல், டீசல் புகை இன்றி புதிதாய் பூத்த மலர் போல பரிசுத்தமாய் இருக்கிறது.

அமைதி விரும்பிகள் தவற விட கூடாத அற்புதமான இடம் ..

CINI REFERENCE ..
"கிரீடம்' படத்தில் "அக்கம் பக்கம்...' பாடல்கள் படமாக்கப்பட்டது
கணபதி சில்க்ஸ் விளம்பரத்திற்காக மாதவன் எகிறி எகிறி குதிப்பாரே.. அது இந்த இடத்தில்தான்.
பையா படதில் .. 'அடடா மழைடா' பாடல் படமாக்கப்பட்ட இடமும் இதுவே.

வழிகாட்டி
கோட்டயத்தில் இருந்து 65 KM
கொச்சினில் இருந்து 100 KM
கோவையில் இருந்து 250 KM

பஸ் வசதி உண்டெனினும், தனி வாகனங்களில் செல்வது உசித்தம். ஒவ்வொரு
ஸ்பாட்டிற்க்கும் 5 - 20 KM தூர இடைவெளி இருப்பதால். இந்த இடத்தில் இருக்கும் ஒரே பிரச்சனை. அட்டை பூச்சிகள். சற்றே கவனமுடன் இருப்பது நல்லது. தேக்கடி இங்கிருந்து 60 KM தொலைவிலும், மூணார் 160 KM தொலைவிலும் அமைந்துள்ளது. நேரம் இருப்பின் அங்கும் ஒரு ரவுண்டு அடிக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து குமுளி வழியாகவும் வாகமனுக்கு வரலாம்.

நன்றி
குமுதம்
Photo: ஆள் ஆரவாரமற்ற அமைதி, கண்களை குளிர்விக்கும் பசுமை  வாகமன் சுற்றுல்லா போவதற்கு ஒரு நல்ல இடம் !!!

No comments:

Post a Comment