Tuesday, November 29, 2011

இந்தியாவில் ஊழல்

இந்தியாவில் ஊழல் - கோ . லெனின்


910603234300000 - இது ஏதோ கால் சென்டர் (உதவிக்கான அழைப்பு நிறுவனம்) எண் என்று நினைக்கலாம். இல்லை. இது இந்தியாவில் இதுவரை நடைபெற்று, அம்பலமான மிகப் பெரிய ஊழல்களின் மொத்த மதிப்பு. அதாவது, மக்களுக்குத் தெரியவந்த ஊழலிலின் மதிப்பு மட்டும்தான் இது. தோராயமாக 9 கோடியே 10 லட்சத்து 60 ஆயிரத்து 323 கோடி ரூபாய். அதாவது, கோடிகளில் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கணக்குத் தணிக்கை அதிகாரி வெளியிட்ட அறிக்கை இந்திய அரசியலிலில் பெரும்புயலைக் கிளப்பியதுடன், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலிலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர், அதிகாரிகள், தொழில் நிறுவனத்தினர் எனப் பலரும் சிறைப் பட்டுள்ளனர். அதேநேரத்தில், இந்தியாவில் சிக்காமல் தப்பிய பல ஊழல்வாதிகள் உண்டு. தப்பியவர்கள் புண்ணியவான்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஜனநாயகத்தின் பெருமை, மக்களுக்கான அதிகாரம் என்றால் ஜனநாயகத்தின் சாபக்கேடாக இருப்பது ஊழல். முடியாட்சியிலும் ஊழல்கள் இல்லாமல் இல்லை. அதன்பின், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா இருந்தபோதும் ஊழல்கள் அரங்கேறியுள்ளன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை நிறுவுவதில் முக்கிய பங்காற்றிய ராபர்ட் க்ளைவ் என்பவர், கடைசியாக ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி, சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

மன்னர்களும் வெளிநாட்டவரும் இந்தியாவை சுரண்டினார்கள் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் பிரதிநிதிகளும் அதே வழியில் தான் ஆரம்பத்திலிலிருந்தே செயல்பட்டு வந்திருக்கிறார்கள்-வருகிறார்கள். 1947-இல் இந்தியா விடுதலை பெற்றது. பண்டித ஜவகர்லால் நேருதான் இந்தியாவின் முதல் பிரதமர். 1948-ஆம் ஆண்டு, அரசுத்துறைகளுக்கான ஜீப்கள் வாங்கியதில் 80 லட்ச ரூபாய் ஊழல் நடந்தது வெளிப்பட்டது. சுதந்திரம் பெற்று ஓராண்டு முடிவதற்குள் லட்சக்கணக்கிலான ஊழல் தொடங்கி, இன்று சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கோடிக்கணக்கான கோடிகளில் ஊழல்கள் தொடர்கின்றன.



இந்திய அளவில் முதன் முதலில் அம்பலத்திற்கு வந்த பெரிய ஊழல் என்பது முந்த்ரா ஊழல்தான். 1957-ஆம் ஆண்டில் நடந்த இந்த ஊழலிலின் அப்போதைய மதிப்பு ஒன்றேகால் கோடி ரூபாயாகும். முந்த்ரா என்ற தொழிலதிபரின் சரிவடைந்த நிறுவனங்களின் பங்குகளை நல்ல விலைக்கு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. வாங்கியது என்பதே முந்த்ரா ஊழலாகும். மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகள் லட்சங்களில் தயாரிக்கப்பட்டு வந்த நேரத்தில், மத்தியில் நடந்த ஊழலிலின் மதிப்பு 1 கோடியே 25 லட்ச ரூபாய் என்றால், அதன் இன்றைய மதிப்பு பல்லாயிரம் கோடிகளாகும். இந்த ஊழலிலில் முக்கிய பங்காற்றியவர், நேரு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்தவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அப்போது அமைச்சரவையிலும் அதிகாரத்தில் உள்ள உயர்பொறுப்புகளிலும் குறிப்பிட்ட சமூகத்தினரே அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். ஊழல்களிலும் அவர்களுக்கே பெரும்பங்கு இருந்தது.

இத்தகைய ஊழல்கள் தொடர்ந்தபடியே இருந்தன. 1987-இல் நடந்த போஃபர்ஸ் பீரங்கி கொள்முதல் ஊழலில் நேருவின் பேரனும் இந்தியாவின் பிரதமராக இருந்தவருமான ராஜீவ் காந்தியின் ஆட்சியையே வீழ்த்தக்கூடிய அளவுக்கு வலிலிமையுள்ளதாக இருந்தது. இந்த ஊழலிலின் அப்போதைய மதிப்பு 65 கோடி ரூபாய். ராஜீவ்காந்தி மரணத்திற்குப்பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, பிரதமரானவர் நரசிம்மராவ். இவர், ஆந்திர மாநிலத்தில் உயர் சமுதாயத்தில் பிறந்தவர். இவருடைய ஆட்சிக் காலத்தில், ஜே.எம்.எம் கட்சி எம்.பிக் களின் ஆதரவை காங்கிரஸ் அரசுக்குப் பெறுவதற்காக ஒண்ணேகால் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது. இந்த ஊழல் இந்திய அரசின் நிலைத்த தன்மைக்கே எதிரானதாக அமைந்தது. அதே நரசிம்மராவ் ஆட்சியில் நடந்த சர்க்கரை இறக்குமதி ஊழலிலின் மதிப்பு 650 கோடி ரூபாய். உர ஊழலிலின் மதிப்பு 133 கோடி ரூபாய். அவருடைய அமைச்சர வையில் இருந்த சுக்ராமின் தொலைத் தொடர்பு ஊழலிலின் மதிப்பு 1 கோடியே 60 லட்ச ரூபாய்.

பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் பங்குச்சந்தையில் 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது. பத்திரப் பதிவுக்கான போலிலி முத்திரைத்தாள் அச்சடிக்கப்பட்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தது. கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவவீரர்களின் உடலைச் சுமந்த சவப்பெட்டிகளை வாங்கு வதிலும் ஊழல் நடைபெற்றது. பா.ஐ.க.வைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சுரங்க அனுமதி மோசடிக் குற்றச் சாட்டுக்குள்ளாகி லோக் அயுக்தா எனப்படும் மக்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொட்டில் முதல் சுடுகாடு வரை ஊழல் என்பதே இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.

இப்படி ஊழல் செய்ததிலும் லஞ்சங்களை வாங்கியதிலும் குவிந்த பணத்தை அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் இடைத்தரகர்களும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்துள்ளார்கள். இதன் மொத்த தொகை, 71 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் எனத் தெரிய வந்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடனையும் அடைத்துவிடலாம். மிச்சமிருக்கும் தொகையில் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றலாம்.

சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவர வலியுறுத்தியும் ஊழலை ஒழிக்க வலிமையான சட்டம் வேண்டும் என்று பலவகைகளில் போராட்டங்கள் தற்போது தொடங்கியுள்ளன. இவற்றிற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இவை எங்கிருந்து வருகின்றன என்பதும் விசாரணைக்குரியதுதான். ஊழலுக்கு எதிராக முன்னாள் துணை பிரதமரும் பா.ஐ.க.வின் மூத்த தலைவருமான அத்வானி ரதயாத்திரை தொடங்கினார். இதுபற்றிய செய்திகளை வெளியிடுவதற்காக ஊடகங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது.

ஊழலிலில் மத்திய அரசு-மாநில அரசுகள்- உயர்அதிகாரிகள்- முன்னேறிய சமுதாயத்தி னர்- ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் என்ற பேதமில்லாமல் அதிகாரத்திற்கு வருகின்ற அனைவரும் ஈடுபட்டாலும், பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களே ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகின்றன. லாலுபிரசாத் யாதவ் மீதான தீவன ஊழல், மாயாவதி மீதான தாஜ் காரிடார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள், கலைஞர் கருணாநிதி மீதான சர்க்காரியா கமிஷன் விசாரணை ஆகியவை சில உதாரணங்களாகும்.

ஊழலிலில் யார் ஈடுபட்டாலும் அது நாட்டிற்கு கேடு. ஆட்சி-நிர்வாக அமைப்பில் முழுமையான மாற்றங்கள் ஏற்படும்வரை இதனை வேரோடு ஒழிப்பது கடினம். தகவல் பெறும் உரிமைச்சட்டம் போன்ற புதிய வழிமுறைகளாலும் ஊடகங்களின் வளர்ச்சி யாலும் இன்று பொதுமக்களின் பார்வைக்கு ஊழல் நடவடிக்கைகள் உடனுக்குடன் வந்துவிடுகின்றன. ஆனாலும், சமுதாயத்தின் புற்றுநோயான ஊழலை அகற்றுவதற்கு இன்னும் பல கட்டங்களை நாம் கடக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment