Friday, January 21, 2011

ப்ளுடூத் டெக்னாலஜி - ஓர் எளிய அறிமுகம்.



அருகருகே உள்ள இரண்டு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கிடையே வயர்கள், கேபிள்கள் ஏதும் இல்லாமல் தகவல்களை பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு வயர்லெஸ் டெக்னாலஜிதான் நம்முடைய நவீனயுகத்தின் இந்த ப்ளுடூத் டெக்னாலஜி. செய்திகள், புகைப்படங்கள், பாடல்கள், பைல்கள் போன்றவற்றை ப்ளுடூத் மூலம் பரிமாறிக்கொள்ள இயலுகிறது. அதிகபட்சமாக பத்து மீட்டர் ( முப்பத்திரண்டு அடி) தொலைவுக்குள் ப்ளுடூத் தொழில்நுட்பம் திறம்பட செயல்படுகிறது. பத்து மீட்டருக்கு மேல் ப்ளுடூத் உபயோகப்படாது. ப்ளுடூத் மூலம் இணைக்கப்படும் சாதனங்கள் என்பவை மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப், டிஜிட்டல் கேமராக்கள், பிரிண்டர்கள் போன்ற எதுவாகவும் இருக்கலாம். ப்ளுடூத் டெக்னாலஜி செயல்பட அச்சாதனத்தில் குறிப்பிட்ட மைக்ரோ சிப்புகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ப்ளுடூத் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது என்பது மிக எளிதான காரியமே.



குறைந்த சக்தி கொண்ட ரேடியோ அலைகளே ப்ளுடூத்தில் செய்திகளை கடத்த பயன்படுகின்றன. குறைந்த சக்தி கொண்ட அலைகள் என்பதால் இவற்றின் அலைநீளமும் குறைவுதான். அலைகள் என்றாலே - முன்னோக்கிய திசையில் வளைந்து வளைந்து செல்பவை ஆகும். அலைகளை பொதுவாக இரண்டு பெரிய தலைப்பில் வகைப்படுத்தலாம். ஒன்று, முன்னோக்கிய திசையில் சுருள் சுருளாக வளைந்து செல்பவை. இரண்டு, சிறிதுதூரம் கிடைமட்டமாக சென்று பின் கீழ்நோக்கி தாழ்வாக வளைந்து, பின் மீண்டும் மேல் எழும்பி மீண்டும் கிடைமட்டமாக செல்பவை. முன்னதை மாற்று மின்னூட்ட அலைகள் என்றும், பின்னதை நேர் மின்னூட்ட அலைகள் என்றும் இயற்பியலில் கூறுகிறார்கள். அலைநீளம் என்பது - அலைகள் தொடர்ச்சியாக செல்லும்போது - அதன் ஒரு உச்சிக்கும் மறு உச்சிக்கும் இடையே உள்ள தொலைவாகும் அல்லது ஒரு தாழ்வுக்கும் மறு தாழ்வுக்கும் உள்ள தொலைவாகும். அதிர்வெண் என்பது, ஒரு வினாடியில் ஒரு அலை எத்தனை சுழற்சிகளை உருவாக்குகிறது என்பதாகும். எந்தவித அலையானாலும் அலை அகலம் எனப்படும் பேண்ட்வித் தான் ஒரு அலை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான தகவல்களை சுமந்து செல்லமுடியும் என்பதை தீர்மானிக்கிறது.



ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் பயன்படும் ரேடியோ அலைகள் நுண்ணிய மைக்ரோ அலைகளாகும். குறித்த சக்தியும், குறைந்த அலைநீளமும் கொண்ட அலைகலாதளால் இவற்றால் குறுகிய தூரமே பிரயாணம் செய்யமுடியும். பத்து மீட்டர்தான் இவற்றின் அதிகபட்ச எல்லையாகும். நீண்ட தூர தகவல் கடத்தலுக்கு உயர் அழுத்த மின்காந்த அலைகளே பயன்படுகின்றன. தனது உயர் அழுத்தத்தினால் மின்காந்த அலைகள் வலுவிழக்காமல் நீண்ட தூரம் செய்திக் கொத்துக்களை சுமந்துசெல்கிறன.



ப்ளுடூத்தில் பயன்படும் ரேடியோ அலைகள் இரண்டு ஜிகா ஹெர்ட்ஸ் என்ற அதிர்வெண் கொண்டவை. ஒரு வினாடிக்கு ஒரு மெகா பைட்ஸ் என்ற அளவிலும் செய்திப் பொட்டலங்களை பரிமாற்றம் செய்கின்றன. ப்ளுடூத் இயக்கப்பட்ட கருவிகள் அவற்றின் எல்லைக்குள் இருக்கும்போது யாரும் இயக்காமலே ( சுவிட்ச் ஆண் செய்வதை தவிர ) ஒன்றையொன்று புரிந்து கொண்டு தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கை அமைத்து கொள்கின்றன. ஆங்கிலத்தில் இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் அல்லது பைக்கொநெட் என்கிறார்கள்.



அன்றாட வாழ்வில் ப்ளுடூத்தின் பயன்பாடுகள் நமக்கு மிகவும் உற்சாகமும், மகிழ்ச்சியும் ஊட்டுபவை. சான்றாக, மொபைல்போனில் ஒரு அழகான போட்டோ எடுத்தால் அதை பிரின்ட் எடுக்க மொபைலையும் பிரிண்டரையும் இணைக்க வேண்டியதில்லை. மொபைலுக்கும் பிரிண்டருக்கும் ப்ளுடூத் மூலம் இணைப்பு கொடுத்து விட்டால் போதும். மொபைலில் உள்ள ஒரு பாட்டை எந்தவித வயருமின்றி ஹெட்செட்டில் கேட்கலாம். வீட்டிலுள்ள குழந்தைகளை கேட்டு பார்த்தால் ......நெறைய ப்ளுடூத் பயன்களை அடுக்குவார்கள். மொபைலில் ஜி.பி.எஸ். ( குளோபல் பொசிசனிங் சிஸ்டம் ) சிஸ்டத்திலிருந்து தகவல்களை ப்ளுடூத் மூலம் பெறலாம் என ப்ளுடூத் டெக்னாலஜியின் சாத்தியப் பயன்பாட்டு எல்லைகள் அபாரமாக விரிகின்றன.

No comments:

Post a Comment