Tuesday, March 8, 2011

ஹீரோ ஹோண்டா கரிஷ்மா ZMR-பல்சர் 220F சிறப்பம்சங்களின் ஒப்பீடு

இந்திய இளைஞர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் பறக்க நினைக்கும் இளைஞர்களின் கனவு தாகத்தை தணிக்கும் வகையில் முன்னணி நிறுவனங்கள் புதிய புதிய மாடல்களை களத்தில் இறக்கி வருகின்றன.

இதில்,இளைஞர்கள் வாங்க துடிக்கும் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் உள்ள ஹீரோ ஹோண்டா கரிஷ்மா ZMR மற்றும் பஜாஜ் 220F பைக்குகளை பற்றிய சிறு ஒப்பீடு:

தோற்றம்:

தோற்றத்தில் இரு பைக்குகளின் வடிவமைப்பும் கவரும் வகையில் இருந்தாலும், கரிஷ்மாவின் ஸ்கூப் மற்றும் எஞ்சின் கார்டு ஆகியவை பெட்ரோல் டேங்கையும், முகப்பு விளக்கையும் இணைக்கும் வகையில் பொருத்தமான அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பார்த்தவுடன் ஸ்போர்ட்ஸ் பைக் லுக்கை கரிஷ்மாவுக்கு கொடுக்கிறது. பல்சரின் டேங்கில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூப் சரியான அளவில் வடிவமைக்க்ப்பட்டு அழகு தந்தாலும் பார்த்தவுடன் ஸ்போர்ட்ஸ் லுக்கை தர மறுக்கிறது.

கரிஷ்மாவை ஓட்டும்போது ஸ்பீடோமீட்டர் மற்றும் இன்டிகேட்டர்கள் காரில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. பல்சரில் உள்ள ஸ்பீடோமீட்டர் மற்றும் இன்டிகேட்டர்கள் சாதாரண பைக்குகளில் இருப்பது போன்று தோன்றுவது குறையாக தெரிகிறது.

எஞசின்:

கரிஷ்மாவில் டிரைடு அன்ட் டெஸ்ட்டு 223சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 17.6 bhp @ 7,000 rpm திறனை வெளிப்படுத்துகிறது. மேலும், இதன் அதிகபட்சமாக 18.35 Nm @ 6,000 rpm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

பல்சரில் 220சிசி DTSi தொழில்நுட்பம் கொண்ட ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சம் 20.75 bhp @ 7000 rpm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதன் அதிகப்பட்சமாக 19.12 Nm @ 7,000 rpm டார்க் திறன் வெளிப்படுத்தும். ஹார்ஸ்பவர் திறனை அடிப்படையாக கொண்டு ஒப்பிடும்போது பல்சர் சபாஷ் பெறுகிறது.

செயல்திறன்:

ஆன்ரோடு செய்ல்திறனில் ஒன்றையொன்று விஞ்சுகிறது. இந்த ரகத்தை சேர்ந்த பைக்குகளின் துவக்க வேகத்தில் பல்சர் இந்தியாவின் நம்பர் ஒன் பைக் என பஜாஜ் சான்று தெரிவிக்கிறது. துவக்க வேகத்தில் பல்சர் விஞ்சினாலும், முன்னாள் செல்லும் வாகனங்களை ஓவ்ரடேக் செய்வதில் நான் சளைத்தவனில்லை என்று கரிஷ்மா காட்டுகிறது.

மைலேஜ்:

ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை தேர்வு செய்யும்போது, மைலேஜை அதிகம் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், கரிஷ்மா மைலேஜ் கொடுப்பதில் ஹீரோ ஹோண்டாவின் வாரிசு என்பதை நிருபி்க்கிறது.

குறைந்த விலையில் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கான அனைத்து அம்சங்களுடன் கூடிய பைக் வேண்டுமென்றால் பல்சர் 200F மாடலை தேர்வு செய்யலாம். சொகுசு அம்சங்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் விரும்புபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கரிஷ்மாவை தேர்வு செய்யலாம்.

No comments:

Post a Comment