Thursday, March 17, 2011

பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!

நியூயார்க்: பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர்களில் ஒருவராக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிக்கப்பட்டுள்ளார்.


அமெரிக்கர் அல்லாத ஒருவர் இந்தப் பதவியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை.

"முகேஷ் அம்பானியை இந்தப் பதவியில் அமர்த்தியதன் மூலம் பேங்க் ஆப் அமெரிக்காவின் பங்குதாரர்கள் உலகளாவிய பலன்களைப் பெறுவார்கள். இடர்ப்பாடு மேலாண்மையில் தனி நிபுணத்துவமும், பல்வேறுபட்ட வர்த்தகப் பிரிவுகளைக் கையாளுவதில் அவருக்குள்ள அனுபவமும் வங்கிக்குப் பயன்படும்", என அந்த வங்கியின் தலைவர் சார்லஸ் ஓ ஹாலிடே கூறியுள்ளார்.

இதுகுறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், "பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளதை தனி கவுரவமாகக் கருதுகிறேன். உலகின் மிகப்பெரிய நிதி அமைப்பான இந்த வங்கியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் முறையில் செயல்படுவேன்," என்றார்.

ஏற்கெனவே, இந்தியப் பிரதமரின் தொழில் மற்றும் வர்த்தகக் கவுன்சில், உலக பொருளாதார பேரவை உள்ளிட்ட பல்வேறு அதிகாரமிக்க அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்து வருகிறார் முகேஷ் அம்பானி.

1 comment: