Monday, March 28, 2011

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 1706 ஆக உயர்வு


டெல்லி: இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நல்ல உயர்வைக் கண்டுள்ளது. 2006ல் 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் 1706 ஆக அதிகரித்துள்ளது.


புலிகள் குறித்த சென்சஸ் எடுக்கப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் எண்ணிக்கையை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமான முறையிலும், விரிவான முறையிலும் இந்தமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் கம்ப்யூட்டர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு மிகவும் துல்லியமான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

2006ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்போது புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது தெரிய வந்தது. அதன் பின்னர் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் விளைவாக தற்போது புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment