Wednesday, March 16, 2011

பெண் சிசுகலைப்பு எதிரொலி-2030ல் இந்தியாவில் பெண்களுக்குப் பஞ்சம் வரும்

வாஷிங்டன்: ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற மனப்பாங்கால் இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் பெண்களை விட 20 சதவீதம் அதிக இளைஞர்கள் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.


முன்பெல்லாம் பெண் குழந்தைகளை விரும்புவோர்தான் அதிகம் இருந்தனர். ஆனால் காலப் போக்கில் பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டால் செலவு என்ற மோசமான எண்ணம் மக்களிடையே பரவ, பெண் குழந்தைகள் பிறந்தால் கொலை செய்யும் அளவுக்கு மக்கள் சென்றனர்.

ஆண் குழந்தையை மட்டுமே விரும்பி பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்துவிடுவதால் ஆண், பெண் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும் எனறு அந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், டெல்லி, குஜராத் ஆகிய வட மாநிலங்களில் ஆண், பெண் எண்ணிக்கை சமமாக இல்லை. ஆனால் கேரளாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை சமச்சீராக உள்ளது.

இது சீனா மற்றும் தென் கொரியாவுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

100 பெண்களுக்கு 105 ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நாடுகளில் ஆண், பெண் எண்ணிக்கை சமமாக இருக்கும். தற்போது தான் கருவிலேயே ஆணா, பெண்ணா என்று பார்த்து பெண்ணாக இருந்தால் கலைத்துவிடுகிறார்கள். இதனால் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை பெண் குழந்தைகளைவிட அதிகரித்து வருகிறது.

ஒரு தம்பதிக்கு முதல் அல்லது இரண்டாவது குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டால் உடனே அடுத்து ஆண் தான் வேண்டும் என்று நினைப்பார்கள். பெற்றவர்களின் இந்த செயலால் அனைத்து ஆண்களுக்கும் பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டும்.

இந்த பிரச்சனையைத் தீர்க்க இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் பெண் குழந்தையை கருவில் அழிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment