Friday, March 25, 2011

இந்தியாவில் இரண்டாவது ஷோரூமை திறக்கிறது லம்போர்கினி

அதிக விலை கொண்ட சூப்பர் கார் களை தயாரிப்பதில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி இந்தியாவில் இரண்டாவது ஷோரூமை திறக்க உள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சந்தையில் இடம்பிடித்துள்ள லம்போர்கினி டெல்லியில் ஷோரூம் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 10 கார்களை விற்பனையும் செய்துள்ள லம்போர்கினி தனது தாய் நிறுவனமான ஆடியின் விற்பனை இந்தியாவில் சரசரவென உயர்வதை பார்த்து மலைத்துபோயுள்ளது.

இந்தியாவில் சொகுசு கார்களுக்கான சந்தை வலுவாக இருப்பதை உணர்ந்துகொண்டு, விரிவாக்க பணிகளை மேற்கொள்ள லம்போர்கினி முடிவு செய்துள்ளது. இதையடுத்து, டெல்லியையடுத்து மும்பையில் தனது இரண்டாவது ஷோரூமை அமைக்கிறது லம்போர்கினி.

லம்போர்கினியின் அதிகாரப்பூர்வ மும்பை டீலராக பாஃப்னா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இதுதவிர, நாட்டின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து ஷோரூம்களை திறக்க லம்போர்கினி கைவசம் திட்டம் இருப்பதாகவும் தெரிகிறது.

ஜெனிவா மோட்டார்ஷோவில் அசத்திய அவென்டடார் சூப்பர் கார் உள்பட பல்வேறு மாடல்களை இந்தியாவில் பிரபலபடுத்தி விற்பனை செய்ய லம்போர்கினி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் ஷோரூம் திறப்பதற்கு முன்னரே இரண்டு அவென்டடார் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டெல்லியில் 9 கார்கள் முன்பதிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment