Tuesday, March 8, 2011

நம்ம ஊரு வண்டி டிவிஎஸ் XL சூப்பரின் மறுபக்கம்...!


டிவிஎஸ் நிறுவனத்துக்கு அடையாளச்சின்னமாக திகழ்ந்த டிவிஎஸ்50 மொபட்டின் மேம்படுத்த மாடலே டிவிஎஸ் XL சூப்பர். இந்திய மார்கெட்டில் கொடிகட்டி பறந்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு விதிகளால் மார்க்கெட்டிலிருந்து பிரியா விடை பெற்றது டிவிஎஸ் 50.

ஆனால், டிவிஎஸ் 50க்கு இருந்த வரவேற்பை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், புதிய அம்சங்கள் நிறைந்த XL சூப்பரை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. டிவிஎஸ் 50க்கு கிடைத்த அதே வரவேற்பு XL சூப்பருக்கும் கிடைத்தது.

வெயிலிலும், மழையிலும் சைக்கிளில் கால் கடுக்க மிதித்து தொழில் செய்த லட்சக்கண்ககான வியாபாரிகளின் காலுக்கு ஓய்வு கொடுத்து, அவர்களை தனது முதுகில் சொகுசாக அமர வைத்து வருவாய் ஈட்டி கொடுத்த பெருமை XL சூப்பருக்கே போய்ச்சேரும்.

நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் தோளோடு தோளாக நிற்கும் XL சூப்பர், அவர்கள் குடும்பத்தின் பிரிக்கமுடியாத உறுப்பினராக மாறிப்போய்விட்டது. ஸ்போர்ட்ஸ் பைக், சூப்பர் பைக் என இந்திய மார்க்கெட்டின் டிரென்டு தற்போது அடியோடு மாறிப்போய்விட்டது.

இருந்தாலும், பலருக்கு முதல் டூவீலர் என்ற ஞாபகத்தை ஏற்படுத்திய பெருமை இதற்கு மட்டுமே உண்டு. மேலும், இது பல்வகை பயன்பாட்டு வாகனமாக திகழ்வதால், இதன் மவுசு எத்தனை ஆண்டுகள் கழிநதாலும் குறையாது என்பதே நிதர்சனமான உண்மை.

டிவிஎஸ் XL சூப்பரின் மறுபக்கம்:

எஞ்சின்: 69.9சிசி 2 ஸ்ட்ரோக் எஞ்சின்

அதிகபட்ச திறன்: 2.61 Kw(3.5 Bhp) @ 5000 rpm

டார்க்: Nm 5.0 @ 3750 rpm

கியர்: ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம்

ஸ்டார்ட்டர்: கிக் ஸ்டார்ட்

வீல்பேஸ்: 1222மிமீ

டயர்களின் அளவு(முன்பக்கம் & பின்பக்கம்): 2.5 x 16

வண்டியின் எடை: 66 கிலோ

சஸ்பென்ஷன்

முன்பக்கம்: டெலிஸ்கோபிக் ஸ்பிரிங் ஃபோர்க்
பின்பக்கம்: மாற்றியமைக்கும் வசதிகொண்ட ஹைட்ராலிக் ஸ்பிரிங் ஆர்ம் ஷாக்ஸ்அப்சார்பர்

பிரேக்:

முன்பக்கம்: 80மிமீ டிரம் பிரேக்
பின்பக்கம்: 110மிமீ டிரம் பிரேக்

பெட்ரோல் டேங்க் : ஒரு லிட்டர் ரிசர்வ் வசதியுடன் 4 லிட்டர் கொள்ளளவு

சென்னையில் ஆன்ரோடு விலை:

டிவிஎஸ் XL சூப்பர்: ரூ.27,184 (தோராயமாக)

டிவிஎஸ் XL சூப்பர் ஹெவி ட்யூட்டி:28,709 (தோராயமாக)

No comments:

Post a Comment