பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதைப் போல, வருமான வரி விலக்கு உச்சவரம்பை (income tax exemption limit) ரூ. 2 லட்சமாக உயர்த்தவில்லை, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. மாறாக ரூ. 1.80 லட்சமாக மட்டுமே தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:
- 2010-11ல் திருப்திகரமான விவசாய உற்பத்தி
- ஊரக பொருளாதாரத்தில் புதிய பரிணாமம் எட்டப்பட்டுள்ளது
- 2010-11ல் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 8.6
- தொழில்துறை வளர்ச்சி 8.1. சதவீதம்
- சேவைத்துறை வளர்ச்சி 9.6 சதவீதம்
- 2012ல் பணவீக்கம் குறையும்
- 2011-12ல் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும்
- 2011ல் விவசாயத்துறை வளர்ச்சி 5.4 ஆக இருக்கும்
- அடுத்த நிதியாண்டில் பொது கடன் நிர்வாக சட்ட மசோதா அறிமுகம்
- 12 முதல் நேரடி வரிவிதிப்பு அறிமுகம்
- மண்ணெண்ணெய், உரங்களுக்கு நேரடி மானியம் அறிமுகம்
- மியூச்சவல் பன்ட்களில் முதலீடு செ��்ய என்ஆர்ஐக்களுக்கு அனுமதி
- பங்கு விலக்கல் திட்டம்-ரூ.40,000 கோடிக்கு இலக்கு
நெசவாளர்கள் கடன் சுமை தீர்க்க ரூ. 3000 கோடி:
- கைத்தறி நெசவாளர்கள் மேம்பாட்டுக்குப் புதிய திட்டம்
கைத்தறி நெசவாளர்களுக்காக நபார்டு வங்கிக்கு ரூ. 3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கண்காணிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 3 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன் அடைவார்கள்.
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதல் முதலீட்டு நிதி
- இந்தியாவின் மேற்குப் பகுதியில், பசுமைப் புரட்சியை ஏற்படுத்த ரூ. 400 கோடி
- சிறு கடன்கள் வழங்க ரூ. 100 கோடி
- விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 7860 கோடி நிதி ஒதுக்கீடு
- முன்னுரிமை வீட்டுக் கடனுக்கான உச்சவரம்பு ரூ. 25 லட்சமாக உயர்வு.
- ஊரகக் கடன்களை வழங்க நபார்டு வங்கிக்கு ரூ. 12,000 கோடி
- கடன்களை உரிய காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி மானியம்
- ஊரக வீட்டு வசதி நிதியின் அளவு ரூ. 3000 கோடியாக அதிகரிப்பு
மேலும் 15 உணவுப் பூங்காக்கள்:
- மேலும் 15 புதிய உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி
- 7 புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்
- ஜோத்பூரில் ஊனமுற்றோருக்கான தொழில் பூங்கா அமைக்கப்படும்
கருப்புப் பணத்தை மீட்க 5 அம்சத் திட்டம்:
- கருப்புப் பணத்தைத் தடுக்க 5 அம்சத் திட்டம்
- கருப்புப் பணம் குறித்த தகவல் பெற 13 நாடுகளுடன் ஒப்பந்தம்
- பாரத் நிர்மான் திட்டங்களுக்கு ரூ. 58,000 கோடி ஒதுக்கீடு
- அங்கன்வாடி ஊழியர்களின் மாத ஊதியம் ரூ. 3000 ஆக உயர்வு
- கல்வித் துறைக்கு 24 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கீடு
- 9,10வது படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி
- நதிகளைத் தூய்மைப்படுத்த சிறப்பு நிதியம்
80 வயதைக் கடந்தவர்களுக்கு ரூ. 500 நிதியுதவி:
- 80 வயதைக் கடந்த ஏழைகளுக்கு ரூ. 500 மாத நிதியுதவி
- வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போரு்ககான ஓய்வூதியத் தகுதி வயது 65 லிருந்து 60 ஆக குறைப்பு
- நக்சலைட் பாதித்த பகுதிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள்
வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சம்:
- தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக அதிகரிப்பு
- மூத்த குடிமக்களுக்கான உச்சவரம்பு தகுதி வயது 58 ஆக குறைப்பு
- மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.50 ஆக உயர்வு
- 80 வயதைக் கடந்தவர்களுக்கு இனி தனி வருமான வரி விலக்கு
- 80 வயதைக் கடந்தவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சம்
- சேவை வரி 10 சதவீதமாக தொடரும்
- உள்ளூர், சர்வதேச பயணங்களுக்கான சேவை வரி அதிகரிப்பு
கம்ப்யூட்டர் விலை குறையலாம்:
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், பிரிண்டர் இங்கு போன்றவற்றுக்கான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள பிற முக்கிய அம்சங்கள்:
உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
புதிய ரூபாய் குறியீட்டுடன் நாணயங்கள் வெளியிடப்படும்
நீதித்துறை அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 8000 கோடி
வேளாண்துறையில் தனியார் முதலீடு அதிகரிப்பு
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ரூ. 21,000 கோடி ஒதுக்கீடு
கிராமப்புற தொலை தொடர்பு வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி
உணவுப் பாதுகாப்பு திட்ட மசோதா கொண்டு வரப்படும்
காயமடையும் பாதுகாப்புப் படையினருக்கான கருணை நிதி ரூ. 9 லட்சமாக உயர்வு
அதிக முறை பட்ஜெட் சமர்ப்பித்தவர்கள் பட்டியலில் பிரணாப்:
Read: In English
இன்று பிரணாப் சமர்ப்பித்த பட்ஜெட் அவர் சமர்ப்பித்த 6வது பட்ஜெட்டாகும். இந்திய வரலாற்றில் அதிக பட்ஜெட்களை சமர்ப்பித்தவர் என்ற பெயர் மொரார்ஜி தேசாயிடம் உள்ளது. இவர் 10 பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளார். 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 2வது இடத்தில் ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, ஒய்.பி.சவான் ஆகியோர் உள்ளார். தற்போது 3வது இடத்தை பிரணாப் முகர்ஜி பிடித்துள்ளார்.
No comments:
Post a Comment