சென்னை: உலகில் இதற்கு முன்பு சில முறை சுனாமி தாக்குதல் கள் நடந்துள்ளன. அதில் உலகை மிகவும் உலுக்கியது 2004ல் ஆசியநாடுகளைத் தாக்கி அழித்த சுனாமிதான் மிகவும் அதி பயங்கரமானது. அந்த சுனாமி தாக்குதலில் 2 லட்சம் பேருக்கும் மேல் உயிரிழந்தனர். அதன் பிறகு ஜப்பானை இன்று தாக்கிய சுனாமி மிகப் பெரியதாக கருதப்படுகிறது.
2004ம் ஆண்டு, டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகப் பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. அங்கு கிளம்பி இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. 2 லட்சம் பேருக்கும் மேல் இந்த சுனாமியில் உயிரிழந்தனர்.பல லட்சம் பேர் வீடுகள், உடமைகளை, உறவுகளை இழந்தனர்.
இநதோனேசியாவைத் தாக்கிய அந்த பூகம்பத்தின் அளவு 9.1 மற்றும் 9.3 ரிக்டராகும். உலகிலேயே மிகப் பெரிய அளவிலான 3வது பூகம்பமாக இது பதிவு செய்யப்பட்டது. பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலின்போது கடல் அலைகள் 20 மீட்டர் உயரத்திற்கு அதாவது 100 அடி உயரம் வரை எழுந்து கடலோரப் பகுதிகளை சீரழித்தது.
இந்தோனேசிய பூகம்பத்தைத் தொடர்ந்து பல பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் சுனாமி அலை தாக்குதல் பீதியை ஏற்படுத்தின. உலக அளவிலும் பல்வேறு பூகோள ரீதியிலான மாற்றத்ைத ஏற்படுத்த இந்த பூகம்பமும், சுனாமியும் காரணமாக அமைந்தன.
ஆசிய சுனாமிக்கு அடுத்து, தற்போது ஜப்பானை தாக்கியுள்ள சுனாமி அலைத் தாக்குதல் பெரும் சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் உயிரிழப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. பூகம்பம் ஏற்பட்ட உடனேயே மக்கள் அதி விரைவாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயரச் செய்ததன் மூலம் உயிரிழப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் கடந்த 1995ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பூகம்பம் இது என்று ஜப்பான் பூகம்பவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூகம்பத்திற்குப் பெயர் போனது ஜப்பான். தற்போது பூகம்பம் தாக்கியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களில் பலமுறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment