Monday, March 28, 2011

Eiffel கோபுரம்

பிரான்ஸ் என்றதும் உங்கள் நினைவுக்கு முதலில் வருவது
Eiffel கோபுரம் தான் இது பிரஞ்சு புரட்சி நூற்றாண்டு நிறைவை
கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.,தொடங்கப்பட்டபோது
இது 20 வருடங்களின் பின்னர் இடித்துவிடுவது என
திர்மானிக்கப்பட்டே 1887 ம் ஆண்டு இதன் பணிகள்
gustave eiffel என்ற பிரஞ்சு பொறியியலாளர் தலைமையில்
தொடங்கப்பட்டது . பின்னர் அது கைவிடப்பட்டது.




இக் கோபுரம் 2 ஆண்டு காலத்தில் பணிகள்
பூர்த்தி செய்யப்பட்டு 1889 . மார்ச் 31 திறக்கப்பட்டது . அதே
ஆண்டு மே 06 அன்று பொது மக்களின் பார்வைக்காக திறந்து
விடப்பட்டது.கோபுரத்தின் மொத்த உயரம் 324m கோபுரம்
முழுவதும் உருக்கு இரும்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது .
இதன் எடை 7000 தொன்.இந்த இரும்பு சட்டங்களை
பொருத்துவதற்கு 2.5 மில்லியன்அணிகள் தறையப்பட்டுள்ளன.

இந்த கோபுரம் ஆனது 3 தளங்களை கொண்டதாக
அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உச்சி வரை செல்ல
அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுக்களின் எண்ணிக்கை 1652 .
இந்த கோபுரத்தை அமைப்பதற்கு அன்றைய நாளில் 1.5 மில்லியன்
அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

இப்படியான வியக்கத்தக்க பொறியியல் நுட்பம் கொண்ட
கோபுரத்தினை 300 தொழிலாளர்களை பயன்படுத்தி 2 ஆண்டுகள் 2
மாதகாலப்பகுதியில் பூர்த்தி செய்தனர்.
கட்டுமான பனியின் போது

Gustave eiffel

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 1706 ஆக உயர்வு


டெல்லி: இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நல்ல உயர்வைக் கண்டுள்ளது. 2006ல் 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் 1706 ஆக அதிகரித்துள்ளது.


புலிகள் குறித்த சென்சஸ் எடுக்கப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் எண்ணிக்கையை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமான முறையிலும், விரிவான முறையிலும் இந்தமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் கம்ப்யூட்டர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு மிகவும் துல்லியமான முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

2006ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்போது புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது தெரிய வந்தது. அதன் பின்னர் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் விளைவாக தற்போது புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Saturday, March 26, 2011

popular company names

popular company names


YAHOO :
ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய குலிவர்ஸ் டிராவல்ஸ் என்ற புத்தகத்தில் வரும் கதாபாத்திரம் இது . துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை தன் இணையத்திற்கு வைத்து விட்டார்கள், YAHOO - வை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.



SONY :
இலத்தீன் மொழியில் 'சோனஸ்' என்றால் ஒலி என்று பொருள். தீட்சண்யமான இளைஞனைக் குறிக்க அமெரிக்கர்கள் பயன்படுத்தும் சொல் "SONNY".





ADOBE :
அடோப் நிறுவனர் ஜான் வார்னாக் - கின் வீட்டுக்குப் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் அடோப்.






APPLE :

இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பி சாப்பிடும் பழம் ஆப்பிள் ! நிறுவனம் தொடங்கி 3 மாதம் ஆகியும் பெயர் வைக்காமல் இருந்தார். தன் சகாக்கள், கடைசி நாள் மாலைக்குள் வேறு பெயர்களை பரிந்துரைக்காவிட்டால் ஆப்பிள் என்று பெயர் சூட்டப் போவதாக சொன்னார். ஆப்பிள் கனிந்தது


MOTOROLA :
கார்களில் பொருத்தும் ரேடியோ உற்பத்தியில் தன் முதல் முயற்சியைத் தொடங்கிய பால் கெல்வின் தொடங்கிய நிறுவனம் மோட்டோரோலா. அதன் சாயலில் தன் நிறுவனத்தின் பெயரை அமைத்தார் பால்.


XEROX :
'ஜெர்' என்பது உலர்தலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை வேராகக் கொண்டது. நகலெடுக்கும் போது மை காய்ந்திருக்கும் என்பதை குறிக்க சென்டர் காரிஸன் இப்பெயரை வைத்தார். அதற்கு முன் நகலெடுத்தால் மை காய்வதற்குள் மண்டை காய்ந்துவிடும்.

Friday, March 25, 2011

Skype உபயோகிப்பவரா நீங்கள்? - இதையும் கொஞ்சம் பாருங்களேன்! (படங்கள்)

Skype நிறுவனம் தனது புதிய Office ஒன்றை, முற்றிலும் நவீனமயமான வடிவமைப்புடன் 54,000

சதுரஅடி பரப்பளவில் கலிபோர்னியாவின் Palo Alto வில் திறந்திருக்கிறது. உலகின் முதற்தர Office ஆக இது திகழ வேண்டுமென திட்டமிட்டு இராப்பகலாய் உழைத்து வடிவமைத்திருக்கிறார்களாம்.

இதன் வடிவமைப்பில் அசந்து போய், அங்கு பணி புரியும் சுமார் 250 பணியாளர்களும் இப்போது புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்களாம்.

இது தான் அந்த Office

இந்தியாவில் இரண்டாவது ஷோரூமை திறக்கிறது லம்போர்கினி

அதிக விலை கொண்ட சூப்பர் கார் களை தயாரிப்பதில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி இந்தியாவில் இரண்டாவது ஷோரூமை திறக்க உள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சந்தையில் இடம்பிடித்துள்ள லம்போர்கினி டெல்லியில் ஷோரூம் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 10 கார்களை விற்பனையும் செய்துள்ள லம்போர்கினி தனது தாய் நிறுவனமான ஆடியின் விற்பனை இந்தியாவில் சரசரவென உயர்வதை பார்த்து மலைத்துபோயுள்ளது.

இந்தியாவில் சொகுசு கார்களுக்கான சந்தை வலுவாக இருப்பதை உணர்ந்துகொண்டு, விரிவாக்க பணிகளை மேற்கொள்ள லம்போர்கினி முடிவு செய்துள்ளது. இதையடுத்து, டெல்லியையடுத்து மும்பையில் தனது இரண்டாவது ஷோரூமை அமைக்கிறது லம்போர்கினி.

லம்போர்கினியின் அதிகாரப்பூர்வ மும்பை டீலராக பாஃப்னா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இதுதவிர, நாட்டின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து ஷோரூம்களை திறக்க லம்போர்கினி கைவசம் திட்டம் இருப்பதாகவும் தெரிகிறது.

ஜெனிவா மோட்டார்ஷோவில் அசத்திய அவென்டடார் சூப்பர் கார் உள்பட பல்வேறு மாடல்களை இந்தியாவில் பிரபலபடுத்தி விற்பனை செய்ய லம்போர்கினி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் ஷோரூம் திறப்பதற்கு முன்னரே இரண்டு அவென்டடார் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டெல்லியில் 9 கார்கள் முன்பதிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசியன் பேங்கர்ஸ் சிறந்த வங்கியாக எச்டிஎப்சி தேர்வு

இந்தியாவின் சிறந்த சில்லறை வணிக வங்கியாக எச்டிஎப்சி வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.


தனியார் துறையில் மிகப் பெரிய வங்கியாகக் கருதப்படுகிறது எச்டிஎப்சி வங்கி. ஆசியன் பேங்கர்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந் வங்கிகளைக் கண்டறிந்து அறிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஆப்ரிக்க பகுதிகளின் சிறந்த வங்கிகளைத் தேர்வு செய்து அறிவித்தது ஆசியன் பேங்கர்ஸ்.

இதில் இந்தியாவின் சிறந்த சில்லறை வர்த்தக வங்கியாக எச்டிஎப்சி தேர்வு பெற்றுள்ளது. 29 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 150 நிதி அமைப்புகளை இதற்காக பரிசீலனை செய்தது ஆசியன் பேங்கர்ஸ் அமைப்பு.

Wednesday, March 23, 2011

இந்தியாவில் சேவையை துவங்கும் மெர்சிடிஸ் பென்சின் சொந்த பைனான்ஸ் நிறுவனம்


டெல்லி: மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி கடனை பற்றி கவலைப்பட தேவையில்லை. வரும் ஜூலை மாதத்தில் மெர்சிடிஸ் கார்களுக்கு கடன் வழங்கும் சேவையை துவங்க இருப்பதாக, அதன் சொந்த பைனான்ஸ் நிறுவனமான டெய்ம்லர் பைனான்சியல் சர்வீசஸ் (டி.எப்.எஸ்.,) தெரிவித்துள்ளது.


சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவின் சொகுசு கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது மெர்சிடிஸ்.

இந்நிலையில், கார் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு எளிய நடைமுறைகளில் கடன் கிடைக்கும் விதத்திலும், தனது சொந்த பைனான்ஸ் நிறுவனமான டி.எப்.எஸ்., மூலம் கடன் வழங்கும் சேவையை விரைவில் இந்தியாவில் துவங்குகிறது மெர்சிடிஸ் பென்ஸ்.

இதுகுறித்து டி.எப்.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:

"வரும் ஜூலை மாதம் முதல் மெர்சிடிஸ் கார்களுக்கு கடன் வழங்கும் சேவையை இந்தியாவில் துவங்க இருக்கிறோம். இதன் மூலம், மெர்சிடிஸ் வாடிக்கையாளர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட கடன் வசதியை உடனுக்குடன் பெற முடியும். டீலர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும்.

உலகம் முழுவதும் 40 நாடுகளில் மெர்சிடிஸ் கார்களுக்கு கடன் வசதியை அளித்து வருகிறோம். இந்தியாவில் சேவையை துவங்குவதன் மூலம், வாடிக்கையாளர்கள் எளிதான கடன் திட்டங்களை பெறுவதோடு இல்லாமல், மெர்சிடிஸ் கார் விற்பனையும் அதிகரிக்கும்," என்று கூறினார்.

Friday, March 18, 2011

234 சட்டசபைத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 4.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.


234 தொகுதிகளிலும் உள்ள ஆண், பெண் மற்றும் திருநங்கையர் வாக்காளர்கள் (1.1.2011 நிலவரப்படி) விவரம் வருமாறு:

தொகுதி ஆண்கள் பெண்கள் திருநங்கையர் மொத்தம்
கும்மிடிப்பூண்டி 105145 106492 9 211646
பொன்னேரி (தனி) 98000 96803 25 194828
திருத்தணி 115741 116486 7 232234
திருவள்ளூர் 102197 101299 10 203506
பூந்தமல்லி (தனி) 111197 109535 26 220758
ஆவடி 135661 130228 25 265914
மதுரவாயல் 132161 125342 25 257528
அம்பத்தூர் 128707 122269 26 251002
மாதவரம் 129034 125594 26 254654
திருவொற்றியூர் 105504 102660 30 208194
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 92155 92927 25 185107
பெரம்பூர் 110653 109993 8 220654
கொளத்தூர் 99186 98710 27 197923
வில்லிவாக்கம் 91269 91688 12 182969
திருவிக நகர் (தனி) 84624 85901 170528
எழும்பூர் (தனி) 79306 79306
ராயபுரம் 75413 75911 9
துறைமுகம் 75621 69531 31 145183
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி 89688 89815 7 179510
ஆயிரம் விளக்கு 95640 96526 40 192206
அண்ணா நகர் 108343 108082 15 216440
விருகம்பாக்கம் 103167 100271 20 203458
சைதாப்பேட்டை 105518 105337 25 210880
தியாகராய நகர 93403 92234 23 185660
மயிலாப்பூர் 101326 104739 13 206078
வேளச்சேரி 108725 108275 26 217026
சோழிங்கநல்லூர் 173834 166781 0 340615
ஆலந்தூர் 116214 114266 0 230480
ஆலந்தூர் 116214 114266 0 230480
ஸ்ரீபெரும்புதூர் (தனி) 101831 102970 0 204801
பல்லாவரம் 134385 131318 0 265703
தாம்பரம் 120689 117606 0 238295
செங்கல்பட்டு 121516 118980 0 240496
திருப்போரூர் 94657 91895 0 186552
செய்யூர் (தனி) 87317 84687 0 172004
மதுராந்தகம் (தனி) 89093 88657 0 177750
உத்திரமேரூர் 95372 96115 0 191487
காஞ்சிபுரம் 114166 116872 0 231038
அரக்கோணம் (தனி) 88756 88736 0 177492
சோளிங்கர் 105732 104436 0 210168
காட்பாடி 91344 93906 0 185250
ராணிப்பேட்டை 95745 96472 0 192217
ஆற்காடு 102459 104773 0 207232
வேலூர் 92396 93669 0 186065
அணைக்கட்டு 91712 92886 0 184598
கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) 86432 86369 0 172801
குடியாத்தம் (தனி) 104076 104106 0 208182
வாணியம்பாடி 93486 92611 0 186097
ஆம்பூர் 86932 87885 0 174817
ஜோலார்ப்பேட்டை 95097 94363 0 189460
திருப்பத்தூர் 90474 89241 0 179715
ஊத்தங்கரை (தனி) 93501 89910 0 183411
பர்கூர் 95826 92898 2 188726
கிருஷ்ணகிரி 96904 98071 11 194986
வேப்பனஹள்ளி 95094 89004 0 184098
ஓசூர் 116614 106615 1 223230
தளி 95460 87262 0 182722
பாலக்கோடு 91321 86562 1 177884
பென்னாகரம் 99127 93331 4 192462
தர்மபுரி 108071 103869 7 211947
பாப்பிரெட்டிப்பட்டி 104780 100498 5 205283
அரூர் (தனி) 95306 90196 4 185506
செங்கம் (தனி) 105782 103549 0 209331
திருவண்ணாமலை 102292 104920 0 207212
கீழ்ப்பென்னாத்தூர் 101515 101892 0 203407
கலசப்பாக்கம் 89598 88163 0 177761
போளூர் 97009 96184 0 193193
ஆரணி 104821 106580 0 211401
செய்யார் 104442 103820 0 208262
வந்தவாசி (தனி) 100025 97227 0 197252
செஞ்சி 106184 104238 7 210429
மயிலம் 92630 89680 4 182314
திண்டிவனம் (தனி) 92914 92513 5 185432
வானூர் (தனி) 97945 96142 6 194093
விழுப்புரம் 101997 102512 8 204517
விக்கிரவாண்டி 94019 90900 4 184923
திருக்கோவிலூர் 99594 94805 15 194414
உளுந்தூர்ப்பேட்டை 115235 110168 11 225414
ரிஷிவந்தியம் 105471 98983 15 204469
சங்கராபுரம் 104706 100910 10 205626
கள்ளக்குறிச்சி (தனி) 109553 105574 8 215135
கங்கவல்லி (தனி) 90212 90439 6 180657
ஆத்தூர் (தனி) 95549 97562 2 193113
ஏற்காடு (தனி) 103490 103042 3 206535
ஓமலூர் 116042 107365 14 223421
மேட்டூர் 107583 100470 19 208072
எடப்பாடி 110316 103330 4 213650
சங்கரி 109343 102707 14 212064
சேலம் (மேற்கு) 105640 102228 1 207869
சேலம் (வடக்கு) 104925 104874 6 209805
சேலம் (தெற்கு) 104796 104949 7 209752
வீரபாண்டி 101181 97416 7 198604
ராசிபுரம் (தனி) 95905 95626 0 191531
சேந்தமங்கலம் (தனி) 96944 97367 0 194311
நாமக்கல் 100364 102396 0 202760
பரமத்தி வேலூர் 90889 92918 0 183807
திருச்செங்கோடு 89550 89550 4 179032
குமாரபாளையம் 91399 90472 0 181871
ஈரோடு (கிழக்கு) 83961 84358 7 168326
ஈரோடு (மேற்கு) 94446 93426 19 187891
மொடக்குறிச்சி 92519 93517 1 186037
பெருந்துறை 88380 86676 6 175062
பவானி 98206 94955 4 193165
அந்தியூர் 87829 84158 0 171987
கோபிச்செட்டிப்பாளையம் 103338 102192 4 205534
பவானிசாகர் (தனி) 99675 96925 6 196606
தாராபுரம் (தனி) 101459 100597 0 202056
காங்கேயம் 96241 94768 1 191010
அவிநாசி (தனி) 96014 93330 0 189344
திருப்பூர் (வடக்கு) 108276 98380 3 206659
திருப்பூர் (தெற்கு) 83634 76250 2 159886
பல்லடம் 114853 108053 0 222906
உடுமலைப்பேட்டை 98233 97959 0 196192
மடத்துக்குளம் 87597 85857 0 173454
உதகமண்டலம் 83212 83749 0 166961
கூடலூர் (தனி) 77977 77380 0 155357
குன்னூர் 79307 81637 0 160944
மேட்டுப்பாளையம் 103499 102432 0 205931
சூலூர் 104383 101742 0 206125
கவுண்டம்பாளையம் 147113 142799 0 289912
கோயம்பத்தூர் (வடக்கு) 110556 106825 0 217381
கோயம்பத்தூர் (தெற்கு) 98937 97819 0 196756
தொண்டாமுத்தூர் 104944 103043 0 207987
சிங்காநல்லூர் 113217 110728 0 223945
கிணத்துக்கடவு 105964 105309 0 211273
பொள்ளாச்சி 86502 86891 0 173393
வால்பாறை (தனி) 79216 80939 0 160155
பழனி 104047 102842 0 206889
ஒட்டன்சத்திரம் 96776 96261 0 193037
ஆத்தூர் 108126 110124 0 218250
நிலக்கோட்டை (தனி) 88792 88323 0 177115
நத்தம் 102557 102077 0 204634
திண்டுக்கல் 93164 93990 2 187156
வேடசந்தூர் 105267 104941 0 210208
அரவக்குறிச்சி 82117 84409 0 166526
கரூர் 92869 97357 0 190226
கிருஷ்ணராயபுரம் (தனி) 86092 86424 0 172516
குளித்தலை 88720 89318 0 178038
மணப்பாறை 106562 106019 0 212581
ஸ்ரீரங்கம் 108582 108582 1 217632
திருச்சிராப்பள்ளி (மேற்கு) 98233 100713 4 198950
திருச்சிராப்பள்ளி (கிழக்கு) 96865 97832 11 194708
திருவெறும்பூர் 103412 101589 6 205007
லால்குடி 85300 87138 2 172440
மணச்சநல்லூர் 91713 92217 0 183930
முசிறி 90643 90640 0 181283
துறையூர் (தனி) 88316 89877 0 178193
பெரம்பலூர் (தனி) 110489 114709 7 225205
குன்னம் 103791 106412 7 210210
அரியலூர் 106831 108638 0 215469
ஜெயங்கொண்டம் 107173 106852 0 214025
திட்டக்குடி (தனி) 87542 86065 0 173607
விருத்தாச்சலம் 98630 94490 0 193120
நெய்வேலி 83277 78530 0 161807
பண்ருட்டி 95037 94331 0 189368
கடலூர் 88650 88716 0 177366
குறிஞ்சிப்பாடி 91543 86807 0 178350
புவனகிரி 104753 100511 0 205264
சிதம்பரம் 94192 92427 0 186619
காட்டுமன்னார்கோவில் (தனி) 93009 86624 0 179633
சீர்காழி (தனி) 96450 94513 0 190963
மயிலாடுதுறை 91938 89401 0 181339
பூம்புகார் 105334 102515 0 207849
நாகப்பட்டனம் 74150 75410 0 149560
கீழ்வேளூர் (தனி) 70284 69843 0 140127
வேதாரண்யம் 76698 77583 0 154281
திருத்துறைப்பூண்டி (தனி) 95813 95472 0 191285
மன்னார்குடி 100478 99708 0 200186
திருவாரூர் 101988 101741 4 203733
நன்னிலம் 110872 105192 0 216064
திருவிடைமருதூர் (தனி) 98744 94602 0 193346
கும்பகோணம் 97512 96794 0 194306
பாபநாசம் 97774 97504 0 195278
திருவையாறு 102097 101745 0 203842
தஞ்சாவூர் 95127 95127 0 193140
ஓரத்தநாடு 95016 94891 0 189907
பட்டுக்கோட்டை 87867 94324 0 182191
பேராவூரணி 84018 85402 0 169420
கந்தர்வக்கோட்டை (தனி) 76341 72284 0 148625
விராலிமலை 79613 78040 0 157653
புதுக்கோட்டை 85066 85203 0 170269
திருமயம் 81632 86790 0 168422
ஆலங்குடி 82532 82631 0 165163
அறந்தாங்கி 82669 84085 0 166754
காரைக்குடி 108212 110730 0 218942
திருப்பத்தூர் 105914 109223 0 215137
சிவகங்கை 102977 105207 0 208184
மானாமதுரை (தனி) 103266 103273 0 206539
மேலூர் 94953 96301 0 191254
மதுரை கிழக்கு 112594 112717 0 225311
மதுரை வடக்கு 93842 94860 0 188702
மதுரை தெற்கு 85516 85436 0 170952
மதுரை மத்தி 92881 93646 0 186527
மதுரை மேற்கு 103711 101633 0 205344
சோழவந்தான் (கிழக்கு) 86367 86019 0 172386
திருப்பரங்குன்றம் 104698 103199 0 207897
திருமங்கலம் 105680 108591 0 214271
உசிலம்பட்டி 106450 104882 0 211332
ஆண்டிப்பட்டி 101764 101787 0 203551
பெரியகுளம் (தனி) 97930 98586 1 196517
போடிநாயக்கனூர் 100278 100334 0 200612
கம்பம் 104185 106281 0 210466
ராஜபாளையம் 88885 89805 0 178690
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) 92460 93840 0 186300
சாத்தூர் 88127 90512 0 178639
சிவகாசி 86336 87515 0 173851
விருதுநகர் 82178 82911 0 165089
அருப்புக்கோட்டை 85947 89198 0 175145
திருச்சுழி 86473 88062 0 174535
பரமக்குடி -(தனி) 100701 101198 13 201912
திருவாடானை 105773 106085 7 211865
ராமநாதபுரம் 109151 109175 4 218330
முதுகுளத்தூர் 128077 126469 6 254552
விளாத்திகுளம் 86108 86369 0 172477
தூத்துக்குடி 104773 104355 0 209128
திருச்செந்தூர் 90740 95889 0 186629
ஸ்ரீவைகுண்டம் 83990 88823 0 172813
ஒட்டப்பிடாரம் (தனி) 82125 81218 0 163343
கோவில்பட்டி 88219 89127 0 177346
சங்கரன்கோவில் (தனி) 93895 93967 0 187862
வாசுதேவநல்லூர் (தனி) 91731 90646 0 182377
கடையநல்லூர் 105681 103765 0 209446
தென்காசி 106025 105878 0 211903
ஆலங்குளம் 98229 101368 0 199597
திருநெல்வேலி 98373 97958 0 196331
அம்பாசமுத்திரம் 94004 95558 0 189562
பாளையங்கோட்டை 94020 94552 0 188572
நாங்குநேரி 93210 93986 0 187196
ராதாபுரம் 95138 94421 0 189559
கன்னியாகுமரி 118510 115182 0 233692
நாகர்கோவில் 102814 101706 0 204520
குளச்சல் 114756 108960 0 223716
பத்மநாபபுரம் 103774 99610 0 203384
விளவங்கோடு 102522 101647 0 204169
கிள்ளியூர் 106798 102895 0 209693


மொத்த வாக்காளர்கள்:

ஆண்கள் - 2,30,86,295
பெண்கள் - 2,28,63,481
திருநங்கையர் - 844
மொத்தம் - 4,59,50,620

Thursday, March 17, 2011

பேங்க் ஆப் அமெரிக்கா இயக்குநராக முகேஷ் அம்பானி நியமனம்!

நியூயார்க்: பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர்களில் ஒருவராக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிக்கப்பட்டுள்ளார்.


அமெரிக்கர் அல்லாத ஒருவர் இந்தப் பதவியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறை.

"முகேஷ் அம்பானியை இந்தப் பதவியில் அமர்த்தியதன் மூலம் பேங்க் ஆப் அமெரிக்காவின் பங்குதாரர்கள் உலகளாவிய பலன்களைப் பெறுவார்கள். இடர்ப்பாடு மேலாண்மையில் தனி நிபுணத்துவமும், பல்வேறுபட்ட வர்த்தகப் பிரிவுகளைக் கையாளுவதில் அவருக்குள்ள அனுபவமும் வங்கிக்குப் பயன்படும்", என அந்த வங்கியின் தலைவர் சார்லஸ் ஓ ஹாலிடே கூறியுள்ளார்.

இதுகுறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், "பேங்க் ஆப் அமெரிக்காவின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளதை தனி கவுரவமாகக் கருதுகிறேன். உலகின் மிகப்பெரிய நிதி அமைப்பான இந்த வங்கியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் முறையில் செயல்படுவேன்," என்றார்.

ஏற்கெனவே, இந்தியப் பிரதமரின் தொழில் மற்றும் வர்த்தகக் கவுன்சில், உலக பொருளாதார பேரவை உள்ளிட்ட பல்வேறு அதிகாரமிக்க அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்து வருகிறார் முகேஷ் அம்பானி.

Wednesday, March 16, 2011

Latest from Nursery Schools:

A: APPLE

B: BLUETOOTH


C: CHAT

D: DOWNLOAD

E: E MAIL


F: FACEBOOK

G: GOOGLE

H: HEWLETT PACKARD

I: iPHONE

J: JAVA

K: KINGSTON

L: LAPTOP

M: Microsoft

N: NERO

O: ORKUT

P: PICASSA

Q: QUICK HEAL

R: RAM

S: SERVER

T: TWITTER

U: USB

V: VISTA

W: WiFi

X: Xp

Y: YOU TUBE

Z: ZORPIA

Thank God .... A is still Apple

பெண் சிசுகலைப்பு எதிரொலி-2030ல் இந்தியாவில் பெண்களுக்குப் பஞ்சம் வரும்

வாஷிங்டன்: ஆண் குழந்தை தான் வேண்டும் என்ற மனப்பாங்கால் இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் பெண்களை விட 20 சதவீதம் அதிக இளைஞர்கள் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.


முன்பெல்லாம் பெண் குழந்தைகளை விரும்புவோர்தான் அதிகம் இருந்தனர். ஆனால் காலப் போக்கில் பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டால் செலவு என்ற மோசமான எண்ணம் மக்களிடையே பரவ, பெண் குழந்தைகள் பிறந்தால் கொலை செய்யும் அளவுக்கு மக்கள் சென்றனர்.

ஆண் குழந்தையை மட்டுமே விரும்பி பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்துவிடுவதால் ஆண், பெண் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும் எனறு அந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், டெல்லி, குஜராத் ஆகிய வட மாநிலங்களில் ஆண், பெண் எண்ணிக்கை சமமாக இல்லை. ஆனால் கேரளாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை சமச்சீராக உள்ளது.

இது சீனா மற்றும் தென் கொரியாவுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

100 பெண்களுக்கு 105 ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நாடுகளில் ஆண், பெண் எண்ணிக்கை சமமாக இருக்கும். தற்போது தான் கருவிலேயே ஆணா, பெண்ணா என்று பார்த்து பெண்ணாக இருந்தால் கலைத்துவிடுகிறார்கள். இதனால் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை பெண் குழந்தைகளைவிட அதிகரித்து வருகிறது.

ஒரு தம்பதிக்கு முதல் அல்லது இரண்டாவது குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டால் உடனே அடுத்து ஆண் தான் வேண்டும் என்று நினைப்பார்கள். பெற்றவர்களின் இந்த செயலால் அனைத்து ஆண்களுக்கும் பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டும்.

இந்த பிரச்சனையைத் தீர்க்க இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் பெண் குழந்தையை கருவில் அழிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tuesday, March 15, 2011

பங்குச் சந்தையில் ஃபுகுஷிமா எஃபெக்ட்... 330 புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை: ஜப்பானிய அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்து வருவது, ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவிலும் இதன் பாதிப்பு இன்று பெருமளவு இருந்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் எடுத்த எடுப்பிலேயே 330 புள்ளிகள் சரிந்து, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

ஃபுகுஷிமாவின் மூன்றாவது அணு உலை நேற்று வெடித்ததுமே, அந்நாட்டின் பிரதமர் நோடோ கான், "ஜப்பானின் பூகம்பம் தாக்கிய பகுதிகளில் இருந்த அணு உலைகள் வெடித்துள்ளதால் கதிர்வீச்சு அளவு அபாயகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் நாடு மீண்டும் பொருளாதார மந்தத்துக்குச் செல்லும் ஆபத்து நேர்ந்துள்ளது," என்று அறிவித்தார்.

இதன் விளைவாக, ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பாதித்தது. ஜப்பான் பங்குச் சந்தையில் 12 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே, தைவான், ஷாங்காய், ஹாங்காங், பாங்காக் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸில் 330 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. நிப்டியில் 113 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

பிற்பகல் 12 மணிக்குப் பிறகு லேசான மீட்சி காணப்பட்டது. சென்செக்ஸ் 100 புள்ளிகள் முன்னேறியது. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெருமளவு வீழ்ச்சி கண்டன. சக்தித் துறை பங்குகளில் ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது.

அம்பாசடர் கார்களுக்கு பதில் மாருதி SX4 கார்:குஷியில் டெல்லி போலீசார் டெல்லி: அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அம்பாசடர் கார்களுக்கு பதில் டெல்லி போலீசாருக


டெல்லி: அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அம்பாசடர் கார்களுக்கு பதில் டெல்லி போலீசாருக்கு மாருதி SX4 செடான் ரக கார்கள் வழங்கப்பட்டு வருகிறது.


அதிகாரப்பூர்வ பயன்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளில் டெல்லி போலீசார் காலங்காலமாக அம்பாசடர் கார்களையே பயன்படுத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகரத்தில் பணியாற்றுவதால் பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் போலீசாருக்கு நவீன வசதிகள் கொண்ட கார் அவசியமாக இருந்தது.

நவீன வசதிகள் கொண்ட காரை வாங்குவதற்கு அனுமதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி போலீசார் கோரிக்கை வைத்தனர். நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த இந்த கோரிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது செவி சாய்த்துள்ளது. இதையடுத்து, டெல்லி போலீசாருக்கு புதிய கார்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பழைய அம்பாசடர் கார்களுக்கு விடைகொடுக்கும் விதத்தில் முதல்கட்டமாக 12 மாருதி SX4 கார்கள் வாங்கப்பட்டுள்ளது. ரேடியோ தொலைதொடர்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ள கார்கள் பாதுகாப்பு பணிகளில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

முதல் மாருதி SX4 காரை பெற்றுள்ள போலீஸ் அதிகாரி குப்தா கூறுகையில்," குறைவான பராமரிப்பு செலவு, வேகம், பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட அனைத்திலும் சிறப்பாக இருந்ததால் மாருதி SX4 காரை தேர்வு செய்தோம். எங்களது பணிகளுக்கு அனைத்து விதத்திலும் புதிய கார் உறுதுணையாக இருக்கும்,"என்று கூறினார்.

ஜப்பான்: 4வது அணு உலை வெடித்தது; பெருமளவு கதிர்வீச்சை உறுதி செய்த ஜப்பான்!

டோக்யோ: ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் நான்காவது உலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து, சில நிமிடங்களுக்கு முன் பெரும் சத்தத்துடன் அது வெடித்தது.


இதைத் தொடர்ந்து இந்த அணுசக்தி நிலையத்தின் ஊழியர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். ஃபுகுஷிமோவிலிருந்து 260 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த கதிர்வீச்சு பரவியுள்ளது. இது உயிருக்கு ஆபத்து விளைவித்தும் அளவுக்கு உள்ளதாக அரசுத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோவிலும் கதிர்வீச்சு பரவியுள்ளதாகவும், மக்கள் பூட்டிய வீடுகளுக்குள் இருக்குமாறும் ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட நாசத்தை விட அதிகமான துயரத்தைச் சந்தித்துள்ளது ஜப்பான். பூகம்பம், சுனாமி போன்ற இயற்கைப்பேரிடர்களின் தாக்குதலிலிருந்து மீளும் முன்பே, அந்நாட்டின் அணு உலைகள் மூலம் அடுத்த பேராபத்து நேர்ந்துள்ளது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் மூன்று அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. இந்த மூன்று அணுஉலைகளிலிருந்தும் வெளியேறும் ஹைட்ரஜன் ஜப்பானின் ஒரு பகுதியை முவுமையாக ஆக்கிரமித்துள்ளது. அணுஉலையின் துகள்கள் காற்றில் வேகமாகப் பரவி வருகின்றன.

முதலில் அணு உலையிலிருந்து 20 கிமீ தூரம் வரை குடியிருந்த மக்களை வெளியேறச் சொன்ன அரசு, இப்போது 40 கிமீ வரையுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றி வருகிறது.

இதுவரை 11 லட்சம் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புகலிடம் தேடிப் புறப்பட்டுள்ளனர்.

டோக்கியா வரை அணுக்கதிர் வீச்சு உணரப்பட்டுள்ளதாகவும், உடல் நலத்தைப் பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சின் அளவு அபாய கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அரசுத் தரப்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. அணுக்கதிர் வீச்சிலிருந்து தற்காலிகமாகக் காத்துக்கொள்ளும் வழிமுறைகளும் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

4வது அணு உலை...

இந்த நிலையில், ஃபுகுஷிமாவின் நான்காவது அணு உலையில் பெரும் தீ ஏற்பட்டது. இதை அணைக்க முடியாமல் தவித்தனர் ஊழியர்கள். இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் பெரும் சத்தத்துடன் இந்த அணு உலை வெடித்துச் சிதறியது.

இதனால் ஃபுகுஷிமோ நகரமே வெப்பத்தில் தகிக்க ஆரம்பித்துள்ளது.

வெடித்த நான்கு அணு உலைகளிலிருந்தும் கதிர்வீச்சின் அளவு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு பரவியுள்ளதாக ஜப்பான் அரசே அறிவித்துள்ளது.

மேலும், கதிர்வீச்சில் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முதலுதவி செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது.

உதவுங்கள்....

இந்த நெருக்கடியைச் சமாளிப்பது மிக சவாலாக உள்ளதாகவும், அமெரிக்கா தனது ராணுவத்தை அனுப்பி உதவ வேண்டும் என்றும் ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா அதிர்ச்சி...

ஃபுகுஷிமா டாய்ச்சியிலிருந்து பரவும் அணுக்கதிர் வீச்சு, மியாமி வரை உணரப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கதிர்வீச்சின் முதல் தாக்கம் மியாமியில் தரையிறங்கு முன் விமானத்தில் உணரப்பட்டதாகவும், இது 2 புள்ளிகள் வரை இருந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விஞ்ஞானிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறிய கார்களை அறிமுகப்படுத்த ஹூண்டாய் தீவிரம்


சென்னை: அடுத்தடுத்து சிறிய கார்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை ஹூண்டாய் மோட்டார்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.


இந்திய கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ், தனது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்திய கார் சந்தையின் விற்பனையில் முதலிடம் வகிக்கும் ஆல்ட்டோ கார் இடத்தை குறி வைத்து ஹூண்டாய் தற்போது காய் நகர்த்தி வருகிறது.

ஆல்ட்டோ மார்க்கெட்டை உடைக்கும் விதத்தில் ஹூண்டாய் HA என்ற 800சிசி திறன் கொண்ட காரை ஹூண்டாய் களமிறக்க உள்ளது. ரூ.2 லட்ச விலை கொண்ட இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

சான்ட்ரோவின் பேஸ் மாடலை அடிப்படையாக கொண்டு ஹூண்டாய் HA உருவாக்கப்பட்டுள்ளது. ஆல்ட்டோவுக்கு மட்டுமின்றி சான்ட்ரோவின் விற்பனையிலும் ஹூண்டாய் HA பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், ஹூண்டாய் HA மாடலை தொடர்ந்து ஹூண்டாய் BA என்ற புதிய காம்பேக்ட் காரையும் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹூண்டாயின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான ஐ10 காரின் பேஸ் மாடலை அடிப்படையாக கொண்டு ஹூண்டாய் BA உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐ10 டீசல் மாடலும், இந்த புதிய மாடலும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

குறைந்த பரப்பளவில் திருப்பும் வசதிகொண்ட ஸ்டீயரிங், அதிக செயல்திறன் கொண்ட எஞ்சின், விசாலமான முகப்பு கண்ணாடிகள் மற்றும் அதிக மைலேஜ் என நகர்ப்புறத்திற்கேற்ற அம்சங்களுடன் ஹூண்டாய் BA வரவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், வரும் 2013ம் ஆண்டில் ஹூண்டாய் BA மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாகவும் விஷயம் அறிந்த ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்தனர்.

Friday, March 11, 2011

ஜப்பானைத் தாக்கிய சுனாமி உலகைத் தாக்கிய 2வது பெரிய சுனாமி

சென்னை: உலகில் இதற்கு முன்பு சில முறை சுனாமி தாக்குதல் கள் நடந்துள்ளன. அதில் உலகை மிகவும் உலுக்கியது 2004ல் ஆசியநாடுகளைத் தாக்கி அழித்த சுனாமிதான் மிகவும் அதி பயங்கரமானது. அந்த சுனாமி தாக்குதலில் 2 லட்சம் பேருக்கும் மேல் உயிரிழந்தனர். அதன் பிறகு ஜப்பானை இன்று தாக்கிய சுனாமி மிகப் பெரியதாக கருதப்படுகிறது.


2004ம் ஆண்டு, டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகப் பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. அங்கு கிளம்பி இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. 2 லட்சம் பேருக்கும் மேல் இந்த சுனாமியில் உயிரிழந்தனர்.பல லட்சம் பேர் வீடுகள், உடமைகளை, உறவுகளை இழந்தனர்.

இநதோனேசியாவைத் தாக்கிய அந்த பூகம்பத்தின் அளவு 9.1 மற்றும் 9.3 ரிக்டராகும். உலகிலேயே மிகப் பெரிய அளவிலான 3வது பூகம்பமாக இது பதிவு செய்யப்பட்டது. பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலின்போது கடல் அலைகள் 20 மீட்டர் உயரத்திற்கு அதாவது 100 அடி உயரம் வரை எழுந்து கடலோரப் பகுதிகளை சீரழித்தது.

இந்தோனேசிய பூகம்பத்தைத் தொடர்ந்து பல பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் சுனாமி அலை தாக்குதல் பீதியை ஏற்படுத்தின. உலக அளவிலும் பல்வேறு பூகோள ரீதியிலான மாற்றத்ைத ஏற்படுத்த இந்த பூகம்பமும், சுனாமியும் காரணமாக அமைந்தன.

ஆசிய சுனாமிக்கு அடுத்து, தற்போது ஜப்பானை தாக்கியுள்ள சுனாமி அலைத் தாக்குதல் பெரும் சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் உயிரிழப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. பூகம்பம் ஏற்பட்ட உடனேயே மக்கள் அதி விரைவாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயரச் செய்ததன் மூலம் உயிரிழப்பு பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் கடந்த 1995ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பூகம்பம் இது என்று ஜப்பான் பூகம்பவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூகம்பத்திற்குப் பெயர் போனது ஜப்பான். தற்போது பூகம்பம் தாக்கியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களில் பலமுறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் வருவாய்... டாப் டென்னில் இந்தியாவுக்கு இடமில்லை!

தனிநபர் வருவாயில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் தனிநபர் ஆண்டு வருவாய் 2009-10 கணக்கீட்டின்படி ரூ 46492 ஆக உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் இன்று தெரிவிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் தனிநபர் ரூ 25 லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வரும் 2050ம் ஆண்டு இந்திய தனி நபர் வருமானம் ரூ 18 லட்சத்துக்கும் அதிகமாக உயரும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. ஆனால் அப்போதும் கூட முதல் 10 இடங்களுக்குள் இந்தியா வர வாய்ப்பில்லையாம்.

தனி நபர் வருவாயில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

அவற்றின் விவரம் (மதிப்பு டாலர்களில்):

1. சிங்கப்பூர் - $56,532
2.நார்வே -$51,226
3. அமெரிக்கா - $45,511
4. ஹாங்காங் - $45,301.
5. ஸ்விட்சர்லாந்து-$42,470
6. நெதர்லாந்து - $40,736
7. ஆஸ்திரேலியா - $40,525
8. ஆஸ்திரியா - $39,073
9.கனடா - $38,640
10. ஸ்வீடன் -$36,438

மதுரை மீனாட்சி கோயிலுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!


மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் உலகப் புகழ் பெற்றது.

சரித்திரத்துக்கும் அப்பால், புராதன காலத்தைச் சேர்ந்த இத்திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இறைவனே மன்னனாக அவதரித்து மதுரையில் ஆட்சி செலுத்தியதாக கோயில் வரலாறு கூறுகிறது.

பக்தர்கள் மட்டுமின்றி கோயிலின் கலை அழகைக் காண்பதற்காக வெளிமாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் தினமும் நூற்றுக்கணக்கில் வந்துசெல்கின்றனர்.

இதையடுத்து திருக்கோயில் நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் கோயில்வளாகம் தற்போது பசுமை நிறைந்ததாகவும், நவீன கற்கள் பதிக்கப்பட்டதாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வரும் நிலையில் அவர்களுக்கான சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து தந்துள்ளது. இதையடுத்து திருக்கோயில் வளாகத்தின் சுகாதாரம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

ஐ.எஸ்.ஓ. தரச்சான்றுக்கு கோயில் நிர்வாகம் விண்ணப்பித்திருப்பதை இந்து அமைப்புகள் எதிர்த்தன. இதையடுத்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று தேவையற்றது என்று தர ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவினரிடம் பக்தர்கள் சார்பில் மனுக்களும் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு திருக்கோயிலில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கான வசதிகள், திருக்கோயில் யானை உள்ளிட்டவற்றைப் பராமரிக்கும் இடங்கள், கோயில் சுகாதாரம், குடிநீர் வசதிகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் அடிப்படையில் தற்போது மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. இச்சான்று ஐ.எஸ்.ஓ. மூலம் திருக்கோயில் நிர்வாக அலுவலர் ஆர்.பத்மநாபனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

Wednesday, March 9, 2011

popular company names

YAHOO :
ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய குலிவர்ஸ் டிராவல்ஸ் என்ற புத்தகத்தில் வரும் கதாபாத்திரம் இது . துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை தன் இணையத்திற்கு வைத்து விட்டார்கள், YAHOO - வை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.



SONY :
இலத்தீன் மொழியில் 'சோனஸ்' என்றால் ஒலி என்று பொருள். தீட்சண்யமான இளைஞனைக் குறிக்க அமெரிக்கர்கள் பயன்படுத்தும் சொல் "SONNY".





ADOBE :
அடோப் நிறுவனர் ஜான் வார்னாக் - கின் வீட்டுக்குப் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் அடோப்.






APPLE :

இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பி சாப்பிடும் பழம் ஆப்பிள் ! நிறுவனம் தொடங்கி 3 மாதம் ஆகியும் பெயர் வைக்காமல் இருந்தார். தன் சகாக்கள், கடைசி நாள் மாலைக்குள் வேறு பெயர்களை பரிந்துரைக்காவிட்டால் ஆப்பிள் என்று பெயர் சூட்டப் போவதாக சொன்னார். ஆப்பிள் கனிந்தது


MOTOROLA :
கார்களில் பொருத்தும் ரேடியோ உற்பத்தியில் தன் முதல் முயற்சியைத் தொடங்கிய பால் கெல்வின் தொடங்கிய நிறுவனம் மோட்டோரோலா. அதன் சாயலில் தன் நிறுவனத்தின் பெயரை அமைத்தார் பால்.


XEROX :
'ஜெர்' என்பது உலர்தலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை வேராகக் கொண்டது. நகலெடுக்கும் போது மை காய்ந்திருக்கும் என்பதை குறிக்க சென்டர் காரிஸன் இப்பெயரை வைத்தார். அதற்கு முன் நகலெடுத்தால் மை காய்வதற்குள் மண்டை காய்ந்துவிடும்.

Tuesday, March 8, 2011

இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்த யமஹா திட்டம்


டெல்லி: இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் மோட்டார்சைக்கி்ள் தயாரிப்பி்ல் புகழ்பெற்று விளங்குகிறது. இந்திய சந்தையிலும் யமஹா நீண்ட காலமாக முக்கிய இடத்தை வகித்து வருகிறது. காலமாற்றத்திற்கு தக்கவாறு இந்தியாவில் பல புதிய மாடல்களை யமஹா அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் பவர் ஸ்கூட்டர்களுக்கு அதிக மவுசு இருப்பதால், இந்தியாவுக்கென புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தப் போவதாக யமஹா ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பெறும் வகையில் எலக்ட்ரிக் பைக்குகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் கூறியதாவது:

"ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தையில் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்து வருகிறோம். இதைத்தொடர்ந்து, இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எலக்ட்ரிக் பைக் நல்ல தீர்வாக இருக்கும்.

மேலும், ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்கூட்டர் தயாரிப்பு பணிகள் ஜப்பான் தொழிற்சாலையில் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த ஸ்கூட்டர் இந்திய சாலை மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஒத்துப்போகும் வகையில் இருக்கும்.

புதிய மாடல்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம், அடுத்த நான்காண்டுகளில் இந்திய சந்தையில் 10 சதவீத இடத்தை பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு தக்கவாறு முதலீட்டை அதிரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.

ஹீரோ ஹோண்டா கரிஷ்மா ZMR-பல்சர் 220F சிறப்பம்சங்களின் ஒப்பீடு

இந்திய இளைஞர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் பறக்க நினைக்கும் இளைஞர்களின் கனவு தாகத்தை தணிக்கும் வகையில் முன்னணி நிறுவனங்கள் புதிய புதிய மாடல்களை களத்தில் இறக்கி வருகின்றன.

இதில்,இளைஞர்கள் வாங்க துடிக்கும் ஸ்போர்ட்ஸ் ரகத்தில் உள்ள ஹீரோ ஹோண்டா கரிஷ்மா ZMR மற்றும் பஜாஜ் 220F பைக்குகளை பற்றிய சிறு ஒப்பீடு:

தோற்றம்:

தோற்றத்தில் இரு பைக்குகளின் வடிவமைப்பும் கவரும் வகையில் இருந்தாலும், கரிஷ்மாவின் ஸ்கூப் மற்றும் எஞ்சின் கார்டு ஆகியவை பெட்ரோல் டேங்கையும், முகப்பு விளக்கையும் இணைக்கும் வகையில் பொருத்தமான அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பார்த்தவுடன் ஸ்போர்ட்ஸ் பைக் லுக்கை கரிஷ்மாவுக்கு கொடுக்கிறது. பல்சரின் டேங்கில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூப் சரியான அளவில் வடிவமைக்க்ப்பட்டு அழகு தந்தாலும் பார்த்தவுடன் ஸ்போர்ட்ஸ் லுக்கை தர மறுக்கிறது.

கரிஷ்மாவை ஓட்டும்போது ஸ்பீடோமீட்டர் மற்றும் இன்டிகேட்டர்கள் காரில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. பல்சரில் உள்ள ஸ்பீடோமீட்டர் மற்றும் இன்டிகேட்டர்கள் சாதாரண பைக்குகளில் இருப்பது போன்று தோன்றுவது குறையாக தெரிகிறது.

எஞசின்:

கரிஷ்மாவில் டிரைடு அன்ட் டெஸ்ட்டு 223சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 17.6 bhp @ 7,000 rpm திறனை வெளிப்படுத்துகிறது. மேலும், இதன் அதிகபட்சமாக 18.35 Nm @ 6,000 rpm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

பல்சரில் 220சிசி DTSi தொழில்நுட்பம் கொண்ட ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சம் 20.75 bhp @ 7000 rpm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதன் அதிகப்பட்சமாக 19.12 Nm @ 7,000 rpm டார்க் திறன் வெளிப்படுத்தும். ஹார்ஸ்பவர் திறனை அடிப்படையாக கொண்டு ஒப்பிடும்போது பல்சர் சபாஷ் பெறுகிறது.

செயல்திறன்:

ஆன்ரோடு செய்ல்திறனில் ஒன்றையொன்று விஞ்சுகிறது. இந்த ரகத்தை சேர்ந்த பைக்குகளின் துவக்க வேகத்தில் பல்சர் இந்தியாவின் நம்பர் ஒன் பைக் என பஜாஜ் சான்று தெரிவிக்கிறது. துவக்க வேகத்தில் பல்சர் விஞ்சினாலும், முன்னாள் செல்லும் வாகனங்களை ஓவ்ரடேக் செய்வதில் நான் சளைத்தவனில்லை என்று கரிஷ்மா காட்டுகிறது.

மைலேஜ்:

ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை தேர்வு செய்யும்போது, மைலேஜை அதிகம் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், கரிஷ்மா மைலேஜ் கொடுப்பதில் ஹீரோ ஹோண்டாவின் வாரிசு என்பதை நிருபி்க்கிறது.

குறைந்த விலையில் ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கான அனைத்து அம்சங்களுடன் கூடிய பைக் வேண்டுமென்றால் பல்சர் 200F மாடலை தேர்வு செய்யலாம். சொகுசு அம்சங்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் விரும்புபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கரிஷ்மாவை தேர்வு செய்யலாம்.

நம்ம ஊரு வண்டி டிவிஎஸ் XL சூப்பரின் மறுபக்கம்...!


டிவிஎஸ் நிறுவனத்துக்கு அடையாளச்சின்னமாக திகழ்ந்த டிவிஎஸ்50 மொபட்டின் மேம்படுத்த மாடலே டிவிஎஸ் XL சூப்பர். இந்திய மார்கெட்டில் கொடிகட்டி பறந்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு விதிகளால் மார்க்கெட்டிலிருந்து பிரியா விடை பெற்றது டிவிஎஸ் 50.

ஆனால், டிவிஎஸ் 50க்கு இருந்த வரவேற்பை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், புதிய அம்சங்கள் நிறைந்த XL சூப்பரை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. டிவிஎஸ் 50க்கு கிடைத்த அதே வரவேற்பு XL சூப்பருக்கும் கிடைத்தது.

வெயிலிலும், மழையிலும் சைக்கிளில் கால் கடுக்க மிதித்து தொழில் செய்த லட்சக்கண்ககான வியாபாரிகளின் காலுக்கு ஓய்வு கொடுத்து, அவர்களை தனது முதுகில் சொகுசாக அமர வைத்து வருவாய் ஈட்டி கொடுத்த பெருமை XL சூப்பருக்கே போய்ச்சேரும்.

நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் தோளோடு தோளாக நிற்கும் XL சூப்பர், அவர்கள் குடும்பத்தின் பிரிக்கமுடியாத உறுப்பினராக மாறிப்போய்விட்டது. ஸ்போர்ட்ஸ் பைக், சூப்பர் பைக் என இந்திய மார்க்கெட்டின் டிரென்டு தற்போது அடியோடு மாறிப்போய்விட்டது.

இருந்தாலும், பலருக்கு முதல் டூவீலர் என்ற ஞாபகத்தை ஏற்படுத்திய பெருமை இதற்கு மட்டுமே உண்டு. மேலும், இது பல்வகை பயன்பாட்டு வாகனமாக திகழ்வதால், இதன் மவுசு எத்தனை ஆண்டுகள் கழிநதாலும் குறையாது என்பதே நிதர்சனமான உண்மை.

டிவிஎஸ் XL சூப்பரின் மறுபக்கம்:

எஞ்சின்: 69.9சிசி 2 ஸ்ட்ரோக் எஞ்சின்

அதிகபட்ச திறன்: 2.61 Kw(3.5 Bhp) @ 5000 rpm

டார்க்: Nm 5.0 @ 3750 rpm

கியர்: ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம்

ஸ்டார்ட்டர்: கிக் ஸ்டார்ட்

வீல்பேஸ்: 1222மிமீ

டயர்களின் அளவு(முன்பக்கம் & பின்பக்கம்): 2.5 x 16

வண்டியின் எடை: 66 கிலோ

சஸ்பென்ஷன்

முன்பக்கம்: டெலிஸ்கோபிக் ஸ்பிரிங் ஃபோர்க்
பின்பக்கம்: மாற்றியமைக்கும் வசதிகொண்ட ஹைட்ராலிக் ஸ்பிரிங் ஆர்ம் ஷாக்ஸ்அப்சார்பர்

பிரேக்:

முன்பக்கம்: 80மிமீ டிரம் பிரேக்
பின்பக்கம்: 110மிமீ டிரம் பிரேக்

பெட்ரோல் டேங்க் : ஒரு லிட்டர் ரிசர்வ் வசதியுடன் 4 லிட்டர் கொள்ளளவு

சென்னையில் ஆன்ரோடு விலை:

டிவிஎஸ் XL சூப்பர்: ரூ.27,184 (தோராயமாக)

டிவிஎஸ் XL சூப்பர் ஹெவி ட்யூட்டி:28,709 (தோராயமாக)

The World's Billionaires

Rank Name Citizenship Age Net Worth ($bil) Residence
1 Carlos Slim Helu & family Mexico 70 53.5 Mexico
2 William Gates III United States 54 53.0 United States
3 Warren Buffett United States 79 47.0 United States
4 Mukesh Ambani India 52 29.0 India
5 Lakshmi Mittal India 59 28.7 United Kingdom
6 Lawrence Ellison United States 65 28.0 United States
7 Bernard Arnault France 61 27.5 France
8 Eike Batista Brazil 53 27.0 Brazil
9 Amancio Ortega Spain 74 25.0 Spain
10 Karl Albrecht Germany 90 23.5 Germany
11 Ingvar Kamprad & family Sweden 83 23.0 Switzerland
12 Christy Walton & family United States 55 22.5 United States
13 Stefan Persson Sweden 62 22.4 Sweden
14 Li Ka-shing Hong Kong 81 21.0 Hong Kong
15 Jim Walton United States 62 20.7 United States
16 Alice Walton United States 60 20.6 United States
17 Liliane Bettencourt France 87 20.0 France
18 S. Robson Walton United States 66 19.8 United States
19 Prince Alwaleed Bin Talal Alsaud Saudi Arabia 55 19.4 Saudi Arabia
20 David Thomson & family Canada 52 19.0 Canada
21 Michael Otto & family Germany 66 18.7 Germany
22 Lee Shau Kee Hong Kong 82 18.5 Hong Kong
23 Michael Bloomberg United States 68 18.0 United States
24 Sergey Brin United States 36 17.5 United States
24 Charles Koch United States 74 17.5 United States
51 Susanne Klatten Germany 47 11.1 Germany
52 Iris Fontbona & family Chile NA 11.0 Chile
52 Forrest Mars Jr United States 78 11.0 United States
52 Jacqueline Mars United States 70 11.0 United States
52 John Mars United States 73 11.0 United States
52 Ronald Perelman United States 67 11.0 United States
57 Oleg Deripaska Russia 42 10.7 Russia
58 Vagit Alekperov Russia 59 10.6 Russia
59 Leonardo Del Vecchio Italy 74 10.5 Italy
59 Carl Icahn United States 74 10.5 United States
61 Vladimir Potanin Russia 49 10.3 Russia
62 Philip Knight United States 72 10.2 United States
63 Ricardo Salinas Pliego & family Mexico 54 10.1 Mexico
64 Mohammed Al Amoudi Saudi Arabia 65 10.0 Saudi Arabia
64 Ernesto Bertarelli & family Switzerland 44 10.0 Switzerland
64 Anne Cox Chambers United States 90 10.0 United States
64 George Kaiser United States 67 10.0 United States
64 Hans Rausing Sweden 84 10.0 United Kingdom
64 Joseph Safra Brazil 71 10.0 Brazil
70 Alexei Mordashov Russia 44 9.9 Russia
71 Viktor Rashnikov Russia 61 9.8 Russia
72 German Larrea Mota Velasco & family Mexico 56 9.7 Mexico
73 Sheldon Adelson United States 76 9.3 United States
74 Silvio Berlusconi & family Italy 73 9.0 Italy
74 Dan Duncan United States 77 9.0 United States
74 Kushal Pal Singh India 78 9.0 India
77 Nasser Al-Kharafi & family Kuwait 66 8.7 Kuwait
77 Francois Pinault & family France 73 8.7 France
79 Dmitry Rybolovlev Russia 43 8.6 Russia
80 Iskander Makhmudov Russia 46 8.5 Russia
80 James Simons United States 71 8.5 United States
82 Alberto Bailleres & family Mexico 77 8.3 Mexico
83 German Khan Russia 48 8.2 Russia
84 Eliodoro, Bernardo & Patricia Matte Chile NA 8.1 Chile
85 Edward Johnson III United States 79 8.0 United States
86 Kumar Birla India 42 7.9 India
87 Sunil Mittal India 52 7.8 India
88 John Fredriksen Cyprus 65 7.7 United Kingdom
89 Serge Dassault & family France 84 7.6 France
89 Petr Kellner Czech Republic 45 7.6 Czech Republic
89 Ananda Krishnan Malaysia 71 7.6 Malaysia
89 Tadashi Yanai & family Japan 61 7.6 Japan
93 Mohamed Bin Issa Al Jaber Saudi Arabia 51 7.5 Saudi Arabia
93 Len Blavatnik United States 52 7.5 United Kingdom
93 David & Simon Reuben United Kingdom 67 7.5 United Kingdom
93 Nobutada Saji & family Japan 64 7.5 Japan
93 Alain & Gerard Wertheimer France NA 7.5 NA
93 Vladimir Yevtushenkov Russia 61 7.5 Russia
99 August von Finck Germany 80 7.3 Switzerland
100 Lee Kun-Hee South Korea 68 7.2 South Korea

Saturday, March 5, 2011

indian-overseas-bank-recruitment-2011

Indian Overseas Bank (IOB) is one of the oldest & leading public sector bank of India.With head office in Chennai, IOB has over 2000 branches across India & 6 abroad. Indian Overseas Bank has announced recruitment to fill 1100 clerk posts state-wise.



Post - Vacancies - Payscale:
Clerks – 1100 posts - Rs.7200-19300


Dates :Online applications registration – 4.3.2011 to 25.03.2011

Written Exam – 29.05.2011


Eligibility: Candidates interested in applying for IOB clerk recruitment 2011,

* Should be between 18 – 28yrs of age, as on 1.1.2011

* Must have secured 55% marks in 12th (HSC) OR 60% in Diploma in banking & finance OR 50% in degree (any discipline), as on 1.1.2011

* Fluency in english & ability to read/write/speak the language of state is essential.

* Working knowledge in computers is required or should posses within 6 months.



Selection: Indian Overseas Bank will conduct Written test & Interview, as part of clerk recruitment process.For each wrong answer in objective test, 0.25 as negative marks would be reduced.Based on the performance in the written test, candidates would be shortlisted for Interview.(no descriptive test)



Application fees of Rs.250(Gen/OBC) or Rs.50(SC/ST) should be paid at any Indian Overseas Bank branch before March 25, 2011.After payment is made with the provided challan, online application has to be filled & submitted with necessary details.The printout of this form can be saved for future reference.



The complete advertisement of Indian Overseas Bank clerk recruitment 2011,payment receipt & application link can be seen at their website here

http://iob.in/careers.aspx

Wednesday, March 2, 2011

தொடங்கியது பிளஸ்டூ தேர்வு-பிட் அடித்தால் 5 ஆண்டு தடை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பிளஸ்டூ பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது. பத்து மணிக்கு தேர்வுகள் தொடங்கின. பத்தேகால் மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படித்துப் பார்க்க அவகாசம் தரப்பட்டது. பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும்.

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வை 7,80,631 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 3,87,102 பேர் ஆகும். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் அதிகம் ஆவர்.

பிளஸ்டூ தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில், 1890 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவையில் மொத்தம் 11,517 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்கள் போக தனித் தேர்வர்களின் எண்ணிக்கை 57,086 பேர் ஆவர்.

உடல் ஊனமுற்றோர், பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

தேர்வில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும்
வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்வில் ஒழுங்கீனமாக நடந்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து பிட் நோட்டீஸ்களும் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

அதில்,

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன் தேர்வுகளில் மாணவர்கள் தேர்வறைகளில் சோதனை செய்யப்படுவார்கள். தேர்வறையில் அனுமதிக்காத துண்டு சீட்டுகள், செல்போன் முதலியன வைத்திருந்தால் வினாத்தாள் அல்லது விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்க தடை, தேர்வெழுத தடை, மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து செய்தல், நிறுத்தம் செய்தல் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும்.

இதன் காரணமாக எதிர் காலமே பாதிக்கும். எனவே மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்!-மே 13ல் தான் 'ரிசல்ட்'!!

டெல்லி: தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

அதே போல புதுச்சேரி , கேரள மாநில சட்டசபைகளுக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. ஆனால், நக்ஸல் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அதே போல அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும்.

ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை:

இதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை வெகுவாக தள்ளிப் போயுள்ளது.

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.

4.59 கோடி வாக்காளர்கள்:

தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

மார்ச் 19ல் மனு தாக்கல் தொடக்கம்:

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும்.
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30.

ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும்.

தமிழகத்தில் 99.98 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம்.

இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பீகார் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் சோதனையிட அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார்.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் -புதுச்சேரி தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல்- மார்ச் 19
மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்- மார்ச் 26
மனுக்கள் பரிசீலனை- மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 30
வாக்குப் பதிவு- ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை- மே 13

Tuesday, March 1, 2011

பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட்-வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக அதிகரிப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதைப் போல, வருமான வரி விலக்கு உச்சவரம்பை (income tax exemption limit) ரூ. 2 லட்சமாக உயர்த்தவில்லை, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. மாறாக ரூ. 1.80 லட்சமாக மட்டுமே தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:

- 2010-11ல் திருப்திகரமான விவசாய உற்பத்தி
- ஊரக பொருளாதாரத்தில் புதிய பரிணாமம் எட்டப்பட்டுள்ளது
- 2010-11ல் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 8.6
- தொழில்துறை வளர்ச்சி 8.1. சதவீதம்
- சேவைத்துறை வளர்ச்சி 9.6 சதவீதம்
- 2012ல் பணவீக்கம் குறையும்
- 2011-12ல் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும்
- 2011ல் விவசாயத்துறை வளர்ச்சி 5.4 ஆக இருக்கும்
- அடுத்த நிதியாண்டில் பொது கடன் நிர்வாக சட்ட மசோதா அறிமுகம்
- 12 முதல் நேரடி வரிவிதிப்பு அறிமுகம்
- மண்ணெண்ணெய், உரங்களுக்கு நேரடி மானியம் அறிமுகம்
- மியூச்சவல் பன்ட்களில் முதலீடு செ��்ய என்ஆர்ஐக்களுக்கு அனுமதி
- பங்கு விலக்கல் திட்டம்-ரூ.40,000 கோடிக்கு இலக்கு

நெசவாளர்கள் கடன் சுமை தீர்க்க ரூ. 3000 கோடி:

- கைத்தறி நெசவாளர்கள் மேம்பாட்டுக்குப் புதிய திட்டம்

கைத்தறி நெசவாளர்களுக்காக நபார்டு வங்கிக்கு ரூ. 3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கண்காணிப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 3 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன் அடைவார்கள்.

- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதல் முதலீட்டு நிதி
- இந்தியாவின் மேற்குப் பகுதியில், பசுமைப் புரட்சியை ஏற்படுத்த ரூ. 400 கோடி
- சிறு கடன்கள் வழங்க ரூ. 100 கோடி
- விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 7860 கோடி நிதி ஒதுக்கீடு
- முன்னுரிமை வீட்டுக் கடனுக்கான உச்சவரம்பு ரூ. 25 லட்சமாக உயர்வு.
- ஊரகக் கடன்களை வழங்க நபார்டு வங்கிக்கு ரூ. 12,000 கோடி
- கடன்களை உரிய காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி மானியம்
- ஊரக வீட்டு வசதி நிதியின் அளவு ரூ. 3000 கோடியாக அதிகரிப்பு

மேலும் 15 உணவுப் பூங்காக்கள்:

- மேலும் 15 புதிய உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி
- 7 புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்
- ஜோத்பூரில் ஊனமுற்றோருக்கான தொழில் பூங்கா அமைக்கப்படும்

கருப்புப் பணத்தை மீட்க 5 அம்சத் திட்டம்:

- கருப்புப் பணத்தைத் தடுக்க 5 அம்சத் திட்டம்
- கருப்புப் பணம் குறித்த தகவல் பெற 13 நாடுகளுடன் ஒப்பந்தம்
- பாரத் நிர்மான் திட்டங்களுக்கு ரூ. 58,000 கோடி ஒதுக்கீடு
- அங்கன்வாடி ஊழியர்களின் மாத ஊதியம் ரூ. 3000 ஆக உயர்வு
- கல்வித் துறைக்கு 24 சதவீத கூடுதல் நிதி ஒதுக்கீடு
- 9,10வது படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி
- நதிகளைத் தூய்மைப்படுத்த சிறப்பு நிதியம்

80 வயதைக் கடந்தவர்களுக்கு ரூ. 500 நிதியுதவி:

- 80 வயதைக் கடந்த ஏழைகளுக்கு ரூ. 500 மாத நிதியுதவி
- வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போரு்ககான ஓய்வூதியத் தகுதி வயது 65 லிருந்து 60 ஆக குறைப்பு
- நக்சலைட் பாதித்த பகுதிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள்

வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சம்:

- தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.80 லட்சமாக அதிகரிப்பு
- மூத்த குடிமக்களுக்கான உச்சவரம்பு தகுதி வயது 58 ஆக குறைப்பு
- மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.50 ஆக உயர்வு
- 80 வயதைக் கடந்தவர்களுக்கு இனி தனி வருமான வரி விலக்கு
- 80 வயதைக் கடந்தவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சம்
- சேவை வரி 10 சதவீதமாக தொடரும்
- உள்ளூர், சர்வதேச பயணங்களுக்கான சேவை வரி அதிகரிப்பு

கம்ப்யூட்டர் விலை குறையலாம்:

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், பிரிண்டர் இங்கு போன்றவற்றுக்கான இறக்குமதி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள பிற முக்கிய அம்சங்கள்:

உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
புதிய ரூபாய் குறியீட்டுடன் நாணயங்கள் வெளியிடப்படும்
நீதித்துறை அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 1000 கோடி
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 8000 கோடி
வேளாண்துறையில் தனியார் முதலீடு அதிகரிப்பு
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ரூ. 21,000 கோடி ஒதுக்கீடு
கிராமப்புற தொலை தொடர்பு வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 10,000 கோடி
உணவுப் பாதுகாப்பு திட்ட மசோதா கொண்டு வரப்படும்
காயமடையும் பாதுகாப்புப் படையினருக்கான கருணை நிதி ரூ. 9 லட்சமாக உயர்வு

அதிக முறை பட்ஜெட் சமர்ப்பித்தவர்கள் பட்டியலில் பிரணாப்:
Read: In English
இன்று பிரணாப் சமர்ப்பித்த பட்ஜெட் அவர் சமர்ப்பித்த 6வது பட்ஜெட்டாகும். இந்திய வரலாற்றில் அதிக பட்ஜெட்களை சமர்ப்பித்தவர் என்ற பெயர் மொரார்ஜி தேசாயிடம் உள்ளது. இவர் 10 பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளார். 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 2வது இடத்தில் ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, ஒய்.பி.சவான் ஆகியோர் உள்ளார். தற்போது 3வது இடத்தை பிரணாப் முகர்ஜி பிடித்துள்ளார்.