சென்னை IPL ல கப் வாங்கினா தான் தமிழனோட பெருமைய நிலை நாட்ட முடியுமா?
இந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் டீம் பைனல் மேட்ச்ல தோத்து போய்ட்டாங்கலாம்…
எவ்ளோ வருத்த பட்டு ட்விட்டர், facebook, எல்லா எடங்கள்ளையும் கமெண்ட்,
அப்டேட்… இதெல்லாம் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னால் ஒத்திகை பார்த்து
அரங்கேற்ற பட்ட நாடகம் தானே!!
இந்த தபாவும் சென்னை கப்ப தூக்கி இருந்திச்சி அப்படினா, அடுத்த வருஷம்
ஒரு பயலும் IPL பார்க்க மாட்டங்க! இதெல்லாம் அவங்களுக்கு தெரியாதா?
தமிழனா பெருமை பட வேண்டிய விஷயம் ஆயிரம் இருக்கு பாஸ்! அதெல்லாம்
ஒண்ணொண்ணா எண்ணி பார்க்கணும்… நாமெல்லாம் ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே
மிக பெரிய இன்ஜினியரிங் வேலை எல்லாம் பண்ணிருக்கோம் மக்கா!!!
அந்த கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை, சொறிகல்
என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய சிவப்பு படர்ந்த
கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும்
கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்
போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள்
எங்கிருந்து வந்தன?, எதில் இறக்கினர்? எப்படி இழுத்து வந்தனர்? எத்தனை
பேர்? எத்தனை நாள்? எவர் திட்டம்? என்ன கணக்கு?
யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரியதாய் விரிவடைகிறது. இது கோவிலா,
வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு
ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில்
அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத்
திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம
குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத்
திண்மையின் ஒருமித்த சின்னம்.
- நன்றி எழுத்தாளர் பாலகுமாரன்.
எந்த கோவில பத்தி பேசுரோம்ன்னு அப்படினா… தஞ்சாவூர் பெரிய கோவில் என்று அழைக்க படுகிற பிரகதீஸ்வரர் ஆலயம் தான்!
என்ன கெரகம்! இப்போ இருக்குற tamil மக்களுக்கு இதே எல்லாம் எப்படி
போற்றி பாதுகாத்து வைக்குரதுன்னு தெரியல, இது மாதிரி இன்னிக்கு தேதில ஒரு
பில்டிங் – ஒரே ஒரு பில்டிங் – இப்போ இருக்குற advanced இன்ஜினியரிங்
வச்சி கட்ட முடியுமா ??
நம்ம வாழ்ந்த காலத்துல இப்படி எதாவது ஒரு காலத்தால் அழிக்க முடியாத ஒரு நினைவு சின்னத்த விட்டுட்டு போக போறோமா ??
இதையெல்லாம் பத்தி யோசிங்க பாஸூ !!! அத விட்டுட்டு ஏதோ அசம்பாவிதம் நடந்த மாதரி பீல் பண்ணிக்கிட்டு!!!!
விளையாட்ட விளையாட்டா மட்டும் பார்க்குற பழக்கத நம்ம மக்கள் எப்போ தான் கத்துக போறாங்க அப்படின்னே தெரியலையே!!
No comments:
Post a Comment