கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல் ஆகும்.
கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.
உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை
நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.
ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு. கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை.
வெப்பமண்டல பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர் ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம்.
அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில் மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும்
அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி வெப்பநிலையிலும் இருக்கும்.
அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும் நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக அதிகம்.
நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும் பொருட்கள்
தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு
அடர்த்தி அதிகம்.
நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில் எளிதாய் மிதக்கலாம்.
கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே எட்டுவதில்லை.
மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.
இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல் போக்குவரத்து.
ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில் வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம்.
இந்தியாவின் 7600 கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன்
பிடிப்படகுகளும் 200,000 மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக்
கலங்களும் இயங்கி வருகின்றன.
ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில் ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன.
இதன் பொருளாதார மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி ஈட்டுகிறது.
வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள்
பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு
ஏற்றுமதியாகின்றன.
சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி இரால்தான். வாவல் (pomphrets), கலவாய்
(Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு
ஏற்றுமதியாகின்றன.
No comments:
Post a Comment