மும்பை: இ-டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததன் மூலம் மட்டும் ரயில்வே துறைக்கு ரூ.750 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ரயில்வே
நிலையங்களுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்வதை விட இணையதளத்தில்
இ-டிக்கெட் எடுக்கவே மக்கள் விரும்புகிறார்கள். அதில் நிறைய பேர்
இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்துவிட்டு பிறகு அதை கேன்சல் செய்கின்றனர்.
அவ்வாறு இ-டிக்கெட்டை கேன்சல் செய்வதற்கு ரயில்வே கட்டணம் வசூலிக்கிறது.
விற்கப்படும் 3 -டிக்கெட்டுகளில் 1 கேன்சல் செய்யப்படுகிறதாம். இதன் மூலம்
ரயில்வேக்கு நல்ல வருமானம் வருகிறது.
இ-டிக்கெட் கேன்சல் செய்வதால்
ரயில்வேக்கு எவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பதை தெரிவி்க்குமாறு மனோரஞ்சன்
ராய் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அவருக்கு
வந்த பதிலில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இ-டிக்கெட்
கேன்சல் செய்தது மூலம் ரயில்வேக்கு ரூ.750 கோடி வருவாய் கிடைத்துள்ளது
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு முதல் 2012ம்
ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இ-டிக்கெட் விற்பனை மூலம் ரூ.30,094 கோடி வருவாய்
தான் கிடைத்துள்ளது. ஆக இ-டிக்கெட் விற்பனையை விட கேன்சல் செய்தது மூலம்
தான் ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம்
முதல் டிசம்பர் மாதம் வரை கேன்சல் ஆன இ-டிக்கெட்டுகள் மூலம் ரூ.198 கோடி
கிடைத்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு தான் இ-டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு
முன்பு கன்பார்ம்ட் டிக்கெட்டை கேன்சல் செய்தால் முதல் வகுப்பு ஏசிக்கு
ரூ.70ம், டயர் 2 ஏசி, டயர் 3 ஏசி மற்றும் ஏசி சேர் காருக்கு ரூ.60ம்,
ஸ்லீப்பர் கிளாஸுக்கு ரூ.40ம், இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.20ம்
கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்
கன்பார்ம் ஆகவில்லை என்றால் அதற்குரிய பணத்தை திருப்பிக் கொடுக்கும்போது
அதில் இருந்து ரூ.20 கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆண்டு
--டிக்கெட் விற்பனை(லட்சங்களில்) --டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த
வருவாய்(கோடியில்)-----டிக்கெட் கேன்சல் செய்தது மூலம் கிடைத்த
வருவாய்(கோடியில்)
2005-06 ----25 ---------- 317 ------- 2.85
2006-07 ----68 ---------- 678 ------- 5.79
2007-08 ---- 189 ------- 1,700 ------ 15.61
2008-09 ---- 440 ------ 3883 -------- 99.42
2009-10 ---- 719 ------ 6011 -------- 190.63
2010-11 ---- 969 ------ 8007 -------- 235.37
2011-12 ----1,161 ----- 9498 -------- 198.80*
(* 2011ம் ஆண்டு டிசம்பர் வரை கேன்சலான டிக்கெட்டுகள் மூலம் கிடைத்த வருவாய்)
No comments:
Post a Comment