Wednesday, May 9, 2012

பண்டைய தமிழரின் போர் முறை

தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும்.

* அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது.

* காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது.



* முழுஇரவு ஓய்விற்குப் பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது.

* இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்.

* எதிர் குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர்.

* அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர்.

இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக் களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது. இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க் கருவிகள், பல திட்டங்கள் உதவி புரிந்திருக்க வேண்டும். அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன.

தமிழர்கள் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர். மேலும் தமிழர்களின் எயில் போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது. எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர். தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க் கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும்,
அவை:

1. இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும்
வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள்.

2. எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும்.

இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளப் பெற்று விளக்கப்படுகிறது.

மன்னர்களும் அவர்களின் போர்க்கருவிகளும்
* "மன்னன் வழித்தே மலர்தலை உலகம்" என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர் தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர்.

* அவர்களின் பாதுகாப்பு கருதியே மன்னர்கள் போர்ப்படைகளை வைத்திருந்தனர்.

* நால் வகைப் படைகள் - மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன.

* இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊருக்கு அல்லது வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்.

* களிறு, தேர், நடைநவில் புரவி ஆகிய இணைய நாற்படை கொண்டிருத்தல் அரசரின் இலக்கணமாகிறது.

* கொடி, குடை, முரசு, தார் (மாலை), முடி(மணிமுடி), செங்கோல் முதலியன மன்னர்க்குரிய மற்ற அடையாளச் சின்னங்களாகும். இவற்றுள் குடை, முரசு ஆகியன போர்க் கருவிகளாகவும் கொள்ளத் தக்கனவாகும். எனவே நாற்படை உடைய அரசன் அப்படைகளைப் பெருக்கி, மக்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டிய கடப்பாடு உடையவனாக விளங்க வேண்டும் என்பது தொல்காப்பியர் காலத்திலேயே மன்னர்க்குரிய முறையாக இருந்தது என்பது தெரிய வருகிறது.

மன்னர் பின்னோர்
மன்னர் பின்னோராக விளங்கும் ஏனைய மக்கள் வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை ஆகியன கொண்டு போர் புரிந்தனர். தேர், குதிரை ஏறிப் போர் புரியும் வீரர்கள் வில், வேல் ஆகியன கொண்டு போர் புரிவர். இவ்வகையில் போர்க் கருவிகளில் முக்கிய இடம் வகிக்கும் வாள், வில், வேல் முதலியன குறித்த சிறப்புச் செய்திகள் பல தமிழிலக்கியங்கள் வாயிலாக கிடைக்கின்றன.

தமிழரின் முப்போர்க்கருவிகள்
*தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க் கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர். அவை வாள், வில், வேல் என்பனவாகும்.

*இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது.

*வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது.

*இம் முதன்மைக் கருவிகள் தவிர வேறு சில கருவிகளும் தமிழர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன. அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ஆகிய கருவிகளையும் தமிழர் பயன்படுத்தியதாக புறநானூற்றின் முன்னுரையில் உ,வே, சாமிநாதைய்யர் குறிப்பிடுகின்றார்.

*மேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோல் மற்றும் புலித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளை பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார்(தமிழகம், ப,176).

வாள்
வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியாகப் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளனர்.

வேல்
வேல் முருகக் கடவுளின் போர்க்கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன் படுத்தப்பட்டுள்ளன.

வில்வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன் படுத்தியுள்ளனர்.

படைக்கலக் கொட்டில்- தொழிற்கூடம்சங்ககாலத் தமிழர் போர்க் கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர். அவற்றைப் புதிதாக உருவாக்கிட, சீர் செய்ய உலைக் கூடங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர்.

படைவீடுபோரில் வெற்றி பெற்ற பின் வென்ற வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர். அந்தப் படைவீடு உறுதி ஒழிந்த, சிதைந்த போர்க் கருவிகள் கொண்டு கட்டப் பெற்றிருக்கும். உடைந்த போர்க் கருவிகளின் பகுதிகள் தூணாக மாற்றப் பெற்று, கயிற்றால் அவை இறுக பிணைக்கப் பெற்று குந்தம், கிடுகு முதலானவை தடுப்புச் சுவர்களாகவும் துணிகள் கூரைகாளகவும், அமைக்கப் பெற்றிருக்கும்.

சங்கம் மருவிய காலத்திலும் இம்மூவகைக் கருவிகள் பெருமளவில் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

"தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்" என்ற குறளில் காட்டப்பெறும் தொடர் வஞ்சகமாக பழிதீர்க்கும் பான்மை திருவள்ளுவர் காலத்தில் இருந்தமையை எடுத்துரைப்பதாகும். சங்க காலத்தில் நிலவிய போர்த் தூய்மை இக்காலம் முதல் திரியத் தொடங்கியது என்பதற்கு இக்குறள் சான்றாகிறது.

நன்றி :  HTTP:/WWW.SANTHAN.COM

No comments:

Post a Comment