கருப்பு பணம், சூதாட்டம், பாலியல்
வன்முறை, போதை விருந்து என அனைத்து சமூக விரோத செயல்களின் கூடாரமாக
மாறியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளால் ஒரே ஒரு நல்ல காரியம் நடக்க
இருக்கிறது. ஆம், ஐபிஎல் அணி தலைவர்கள் கையெழுத்திட்ட ஸ்பெஷல் எடிசன்
வென்ட்டோ காரை ஏலம் விடும்போது, கிடைக்கும் பணத்தை உலக இயற்கை பாதுகாப்பு
அமைப்பின் நிதியத்துக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக போக்ஸ்வேகன்
அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் ஐபிஎல்
அணித் தலைவர்கள் கையெழுத்திட்ட வென்ட்டோ காரை கடந்த ஆண்டு முதல்
போக்ஸ்வேகன் காட்சிக்கு வைத்து வருகிறது. கடந்த ஆண்டு போட்டிகள்
முடிந்ததும் அந்த கார் ஏலம் விடப்பட்டது.
பெங்களூரை சேர்ந்தவர்
அந்த காரை கணிசமாக தொகைக்கு ஏலத்தில் எடுத்தார். இதேபோன்று, இந்த ஆண்டும்
ஐபிஎல் அணித் தலைவர்கள் கையெழுத்திட்ட வென்ட்டோ ஸ்பெஷல் எடிசன் காரை
போக்ஸ்வேகன் ஏலம் விடவுள்ளது. ஆனால், இந்த ஆண்டு வென்ட்டோ கார் மூலம்
கிடைக்கப்போகும் ஏலத் தொகையை ஒரு நல்ல காரியத்துக்கு போய் சேர உள்ளது.
ஆம்,
வனப் பகுதிகள் மற்றும் அழிந்து வரும் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கும்
பணிகளில் ஈடுபட்டுள்ள உலக இயற்கை பாதுகாப்பு அமைப்பின் நிதியத்துக்கு இந்த
ஆண்டு ஏலத்தில் கிடைக்கும் தொகையை நன்கொடையாக வழங்க உள்ளதாக போக்ஸ்வேகன்
அறிவித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளால் விரக்தியடைந்த ஐபிஎல் ரசிகர்களுக்கு
இது கண்டிப்பாக ஒரு ஆறுதலான செய்தியாகவே இருக்கும்.
No comments:
Post a Comment