Thursday, May 17, 2012

ரெப்ரிஜிரேட்டர்களுக்கு ஆர்டர்.. குடிமகன்கள் "ஜில்'' பீருக்கு ஏங்க வேண்டியதில்லை!

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஜில் பீர் வழங்குவதற்காக வோல்டாஸ் நிறுவனத்திடம் ரெப்ரிஜிரேட்டர்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 798 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. சென்னையில் 500 கடைகள் இருக்கின்றன. கோடைகாலம் என்பதால் தற்போது பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும் ஜில் பீர் கிடைக்கலையே என்கிற ஆதங்கம் சரக்குப் பிரியர்களுக்கு இருக்கிறது.

இந்த ஏக்கத்தை போக்கும் வகையில் முதல் கட்டமாக 2500 கடைகளுக்கு ரெப்ரிஜேட்டரை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெண்டர்கள் விடப்பட்டன. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரெப்ரிஜிரேட்டர் நிறுவனங்கள் கலந்து கொண்டன. கடைசியாக வோல்டாஸ் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கபட்டுள்ளது/

முதல்கட்டமாக 2,500 ரெப்ரிஜிரேட்டர்களை டாஸ்மாக் கடைகளுக்கு வழங்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள 500 கடைகளுக்கும் மற்ற மாவட்டங்களில் அதிக மதுபானம் விற்பனையாகும் 2 ஆயிரம் கடைகளுக்கும் இந்த ரெப்ரிஜிரேட்டர்கள் வழங்கபப்டும்.

குடிமகன்களின் கூட்ட நெரிசலை முறைப்படுத்த கம்பி தடுப்புகளையும் கிரில் கதவுகளையும் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment