Wednesday, May 23, 2012

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 எழுத்து தேர்வு ஜூலை 28க்கு தள்ளிவைப்பு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 எழுத்து தேர்வு ஜூன் 9ம் தேதியில் இருந்து ஜூலை 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் மே 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட உள்ள துறை தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் வரும் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் குறித்த சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

தொகுதி 1 பணியில் அடங்கிய பதவிகளுக்கு 5.6.11 அன்று நடைபெற்ற முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் 18.5.12 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து 9.6.12 மற்றும் 10.6.12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த முதன்மை எழுத்து தேர்வுகள் 28.7.12 மற்றும் 29.7.12 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
மேலும் 28.7.12 அன்று நடைபெறுவதாக இருந்த நிலைய அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், தொழிற்கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த சார்நிலை பணி தேர்வுகள் 4.8.12 அன்று நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment