வேலைவாய்ப்பு
கப்பல் பராமரிப்பு தளத்தில் அப்ரன்டிஸ் : ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
கர்நாடகாவில் உள்ள இந்திய கப்பல் படை பராமரிப்பு தளத்தில் காலியாக உள்ள
பல்வேறு டிரேடுகளின் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிட்டர்-5, மோட்டார் வெஹிகிள் மெக்கானிக்- 5, எலக்ட்ரானிக் மெக்கானிக்-5,
எலக்ட்ரீஷியன்-5, மெஷினிஸ்ட்-3, வெல்டர்- 25, இன்ஸ்ட்ருமென்ட்
மெக்கானிக்-11, பிளம்பர்-2, கார்பென்டர்-2, ஷீட் மெட்டல் வொர்க்கர்-7.
ஊக்கத் தொகை முதல் வருடம் ரூ.1700ம், 2ம் வருடம் ரூ.1970ம் வழங்கப்படும்.
வயது: 8.10.1991 மற்றும் 8.10.1998 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருக்க
வேண்டும். தகுதி: 50 சதவீத மதிப்பெண் களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும்
65 சதவீத மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nsry.nic.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 18.
No comments:
Post a Comment