''எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
இதுதான் என்னுடைய இலட்சியம்'' - என்ற கண்ணதாசன் பாடலை அ.தி.மு.க. அரசின் ஓராண்டு நிறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தாக கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி ஆட்சி அரியணையில் ஏறினார் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலலிதா. முதல்வராக பொறுப்பேற்றவுடன் உடனடியாக மின்வெட்டுக்கு முடிவு கட்டுவார் என்ற மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் நகரங்களில் ஒரு மணி நேரமும், கிராமப்புறங்களில் 3 மணி நேரமுமாக இருந்தது. மின்வெட்டு பிரச்சனையை பூதாகரமாக்கி ஆட்சியை பிடித்த ஜெயலலிதா, மின்வெட்டை குறைப்பதற்கு பதிலாக மின்வெட்டு நேரத்தை அதிகரித்தார். இதனால் மக்கள் மத்தியில் வெறுப்பை தேடிக்கொண்டார்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் மின்வெட்டு குறைந்தபாடில்லை. நகரங்களில் 2 மணி நேரமும், கிராமங்களில் 12 நேரமும் மின்வெட்டு இன்று வரை அமலில் இருக்கிறது. அதுவும் இரவு நேரங்களிலும் மின்வெட்டு தொடரத்தான் செய்கிறது. இதுதான் கடந்த ஓராண்டு காலத்தில் அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகள்தான்.
அவர்களாகவே கூறும் சாதனைகள் இதோ... பசியாறி மகிழ விலையில்லா அரிசியாம்- இந்த அரிசியால் பயன்பெறுவது கடத்தல்காரர்கள்தான். மக்கள் அல்ல, ஏனென்றால் இலவச அரிசி அரிசியாக இல்லை. அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது.
பெண்களுக்குத் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், மகளிர் மனம்குளிர விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, எளியோர் ஏற்றம் பெற விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், மாணவ - மாணவியர் கல்வியில் சிறக்க விலையில்லா மடிக்கணினி, சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள், தரமான மருத்துவ சேவைக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு.
இதுதான் அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனைகளாம். இன்று அனைத்து தமிழ், ஆங்கில பத்திரிகையை திறந்து பார்த்தால் அனைத்தும் அ.தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளம்பரங்களைதான் முதல் பக்கத்தில் பார்க்க முடிகிறது. இதுவும் அ.தி.மு.க. அரசின் ஒரு சாதனையாகவே எடுத்துக் கொள்ளலாம்.
ஓராண்டில் 6 முறை அமைச்சரவையை மாற்றியுள்ள முதல்வர் ஜெயலலிதா, 8 அமைச்சர்களை அதிரடியாக நீக்கியதையும் சாதனை பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆட்சியை பிடித்த எட்டே மாதங்களில் வரலாறு காணாத வகையில் மின்சார கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தினார் ஜெயலலிதா. இந்த விலை உயர்வை தாங்கிக் கொள்ள முடியாத மக்களுக்கு மேலும் ஒரு சுமையை தலையில் வைத்தார் ஜெயலலிதா. ஏழை - எளிய மக்கள் கடுமையாக பாதிக்கும் அளவுக்கு மின்சார கட்டணத்தையும் உயர்த்தி விட்டார்.
இப்படி ஓராண்டு காலத்தில் மக்களின் தலையில் கட்டண சுமையை ஏற்றிய முதல்வர் ஜெயலலிதா அரசு, தற்போது ஓராண்டு சாதனையை கொண்டாடி வருகிறார். பட்டிதொட்டியெல்லாம் விளம்பரப்படுத்தி வரும் அ.தி.மு.க.வினரின் செயலால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
13,500 மக்கள் நலப்பணியாளர்களை ஒரே நாளில் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்ததை முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையாக எடுத்துக் கொள்ளலாம்.
கூடங்குளம்
அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வந்த மக்களை 7 மாதங்களாக
தூண்டி விட்டு பின்னர் திடீரென மக்களின் போராட்டத்திற்கு
மதிப்பு கொடுக்காமல் புறந்தள்ளி ஜெயலலிதா, கூடங்குளம்
அணுமின் நிலையத்தை திறந்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை
சிறையில் அடைத்தார்.
இதுஒரு
புறம் இருக்க 26வது நாளாக போராடி வரும் என்.எல்.சி. ஒப்பந்த
தொழிலாளர்கள் பிரச்சனையில் மாநில அரசு கண்டு கொள்ளலாம்
இருக்கிறது. கேட்டால் இது மத்திய அரசு பிரச்சனை என்று முதல்வர்
ஜெயலலிதா ஒதுங்கிக் கொண்டார். இப்படி செய்ததுதான் முதல்வர்
ஜெயலலிதாவின் சாதனையாக எடுத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில்
பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம் என்று பத்திரிக்கை
விளம்பரத்தை பார்த்துதான் மக்கள் தெரிந்து கொள்ள
முடிகிறது. ஒரு திட்டத்தை தொடங்கி வைப்பதோடு சரி, அந்த திட்டத்திற்கு அன்றே மூடுவிழா. இப்படிதான் நடந்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க அரசின் நடவடிக்கைகள். 4 பக்கங்கள் கொண்ட தமிழக அரசின் சாதனை விளம்பரத்தை பார்த்து ஆளும் கட்சி, கூட்டணி கட்சியினர் சந்தோசப்படலாம். ஆனால் மக்கள் இன்னும் வேதனையில்தான் இருக்கிறார்.
No comments:
Post a Comment