Tuesday, January 17, 2012

தமிழை காப்பது தமிழர்களது கடமை.

நம் தமிழ் மொழியில் மாற்று மொழிகளின் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. தவிர்க்க முடியாத ஒன்று தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீரைக் கலந்தாலும் பால் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 900 மில்லி தண்ணீரும் 100 மில்லி பாலுமானால் இதற்கு பெயர் என்ன? பாலா? இல்லை தண்ணீரா? பாலில் தண்ணீர் கலவையா? இல்லை தண்ணீரில் பால் கலவையா? இப்படிப் பல கேள்விகளும், பயமும் உருவாகிறது. தமிழ் மொழியில் பிறமொழிக் கலவை இருக்கலாம். ஆனால் மித மிஞ்சினால் தமிழ் மொழி மறைந்து விடுமே! நம் மொழி அழிவது சரியா?

தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல்கள்



1. ஆங்கிலம்:-

சினிமா, சோப்பு, பேப்பர், டிக்கெட், போலீஸ், பஸ், மோட்டார், பங்களா, பென்சில், லீவு, கோர்ட் போன்று கண்டதில் பாதி ஆங்கிலமே!



2. பிரெஞ்சு:-

கும்பினிய், லாந்தர் லைட், ஆஸ்பத்திரி, பீரோ, பொத்தான் மேலுமுள்ளன.



3. டச்சு

கக்கூஸ், தொப்பி, பப்ளிமாஸ் மேலுமுள்ளன.



4. போர்க்சுகீசியம்:-

கடுதாசி, பேனா, வாத்து, அலமாரி, மேசை சாவி, கோப்பை, பீப்பான், வராந்தா, கிராதி, கொரடா, ஏலம், சன்னல், மேஸ்திரி, மேலும் பலப்பல உள்ளன.



5. உருது:-

அக்கப்போர், அகங்ரகாரம், அண்டா, ஆசாமி, அசல், ராட்டினம், ராஜினாமா, அலாக்காக, அலாதி, இனாம், கச்சேரி, அஸ்திவாரம், உசார், கெடுபிடி, கத்தகை, சந்தா, சராசரி, கம்மி, கப்ஸா, கஞ்சா, சோப்பு, கிராப்பு, கிராக்கி, சரிகை, சாட்டை, சர்பத், சப்பாத்தி, பேஜார், கைமா, சலாம் போன்ற கண்டதில் பாதிக்கு மேல் உருது உள்ளது.



6. துருக்கி:-

துப்பாக்கி, தோட்டா, வான்கோழி, மேலுமுள்ளன.



7. பெர்சியன் (பாரசீகம்):-

டபேதார், திவான், ரஸ்தா, ஜாகீர், சர்தார், அவல்தார் போன்றவைகள்.



8. அரபிய மொழி:-

வசூல், இலாக்கா, பிஸ்மில்லா, சைத்தான், தபா, மகால், ரத்து, ஜப்தி, ஜாமின், தணிக்கை, மகசூல், ஜில்லா மேலுமுள்ளன.



9. மலாய் (மலேசியா):-

சவ்வரிசி, மலாய் (பாலாடை) கிடங்கு, கிட்டங்கி, மலாக்கா, மணிலாக்கொட்டை இன்னும் பல உள்ளன.



10. கிரேக்கம்:-

மத்திகை, கருங்கை, கன்னல், குருஸ் போன்றவைகளை.



11. ஹீப்ரூ (எபிரோயம்):-

ஏசு, யூதர், சாலமன், போன்றவைகள்



12. சீனம்:-

சாம்பான், பீங்கான், காங்கு போன்றவைகள்.



13. சிங்களம்:-

சீசா, போத்தல், பில்லி, அந்தோ, மருங்கை.



14. மலையாளம்:-

வெள்ளம், ஆச்சி, அவியல், சக்கை, சக்கவட, காலன், தளவாடம், சாயி, பிரதமர், வஞ்சிக்கொடி போன்றைகள் மேலுமுள்ளன.



15. கன்னடம்:-

அட்டிகை, சொத்து, சமாளித்தல், குட்டு, கொம்பு, குலுக்கல், பட்டாக்கத்தி, இதர,தாண்டல் போன்றவைகள் மேலுமுள்ளன.



16. தெலுங்கு:-

தெலுங்கிலிருந்து 325 சொற்கள் தமிழ்மொழியில் புகுந்துள்ளன. அக்கடா, பாம்பு, பெத்த, தீவிட்டி, ஜாடி, ஜதை, தண்டா, சளிப்பு, கடப்பாரை, கட்டடம், உருண்டை, சாம்பார், சாவடி, பேட்டை, வில்லங்கம், தெம்பு, அட்டவணை, குடுமி, காயம், ரம்பம், வாணலி, தடவை, சிமிழி, சிட்டிகை, கொலுச்சு போன்ற பலப்பல உள்ளன.



17. மராத்தி:-

சந்து, பொந்து, சலவை, தடவை, நீச்சல், கில்லாடி, அபாண்டம், சேமியா, கிச்சடி, கசாயம், பட்டாணி இப்படிப்பல மராத்தி மொழிச்சொற்கள் தமிழில் கலந்துள்ளன.



18. இந்தி:-

அரே, நயா பைசா, சாதி, சாயா, அந்தர், ரூப்பியா போன்ற பல உள்ளன.



இந்த 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறு உள்ளது? என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் சற்றுச் சிந்திக்க வேண்டும். பழங்காலம் முதற்கொண்டு இன்றைய காலம் வரை சகல சீரும், சிறப்பும் பெற்று, வெற்றிக் கொடி நட்டுவிட்ட வித்தனாய் வீறுநடை போடும்மொழி நம் தமிழ் மொழியே! ‘தொல்எழுத்தறிஞர் திரு பூலர் அவர்களின் கூற்றின் படி இந்திய மொழிகளிலே முன்னோடி மொழியாக்க் கருதப்படுவது நம் தமிழ் மொழி. குமரிமாந்தன் வரலாற்றை உலகிற்கே பறைசாற்றிய தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன? என்று சற்று நோக்குவோம். இன்று அதற்குள்ள சிக்கல்கள் என்ன என்று ஆய்வோம்.



தொல் பழங்காலத்தில் தாய்மொழியாகிய நம் தமிழ் மொழி ஊமையாய்த் திரிந்து, சைகையாய் மாறி, ஒலியாய் ஒலித்து, வரியாய் வடிவெடுத்து, பல இன்னல்களையும் இடையூறகளையும், பிற மொழித் தாக்குதல்களையும், சமாளித்து குணம் மாறாமல், நயம் குறையாமல், ஒளிமங்காது பேரொலி கொடுத்து, உயரிடம் தேடிய உத்தம மொழியே நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபிய மொழி மலாய் (மலேசியா) எபிரேயம் (ஹீப்ரு) பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது. இதிலிருந்து காப்பது ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழனினதும் கடமையாகும்

No comments:

Post a Comment