Wednesday, January 25, 2012

2012 ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம்

2012 ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும்.

இதற்கு ஆதாரமாக ஏழு காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
1. மாயன் காலண்டர்:

... மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக வேண்டும். மாயன் காலண்டரில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாம். இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்கள் இவர்கள்தானாம். சூரியன் காலாவதியாகும் தேதியையும இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று கூறுகிறார்கள்.

2. சூரியப் புயல்கள்

சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர்.

3. அணு சிதைவு

ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் உலகின் பெரிய மூலக்கூறு உந்து எந்திரத்தைக் கண்டறிந்துள்ளனர். 27 கிலோ மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் வைத்து அணுக்களை ஒன்றிணைத்து வெடிக்க வைப்பது திட்டம். எதற்காக இது? உலகம் உருவான விதம், உலகை இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் தெரிந்து கொள்ள இந்த சோதனையாம். 2012-ல் இந்த சோதனை நடக்கிறதாம். அப்படி நடந்தால் இந்த பூமியே நொறுங்கிவிடுமாம்.

4. பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது…

விஞ்ஞானிகள் கூற்று ஒரு பக்கமிருந்தாலும், திரு விவிலிய நூலில் உலகம் (2012-ல் என்று குறிப்பிடப்படவில்லை) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும் சாத்தானுக்கும் கடைசி யுத்தம் (Armageddon) நடக்கும் போது இந்த அழிவு நடக்கும் என்கிறது பைபிள். யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை பெருவெள்ளம், ஆழிப் பேரலை, பூகம்பம், கடல்கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதித் தீர்ப்பு 2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து.

இதே கருத்தை சீனத்து நூல் ஒன்றும், சில இந்து புராண நூல்களும் கூட சொல்கின்றனவாம்.

5. சூப்பர் வல்கனோ

இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றில் வாயில் இருப்பதாகவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும் என்றும் அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 650000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த எரிமலை வெடிக்குமாம். அப்படிப் பார்த்தால் இந்த 2012-ல் அந்த எரிமலை வெடிக்கப் போகும் வருடமாம்!

6. கணிதவியல் அடிப்படையில்…

அமெரிக்காவின் பெர்க்கர்லி பல்கலைக் கழக அறிஞர்கள் சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்துவிட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.

7. புவியின் காந்தப் புலம்

வடக்கு, தெற்கு என பூமியில் காந்தப் புலம் இருப்பது தெரிந்திருக்கும். இந்த காந்தப் புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது. ஆனால் ஒவ்வொரு 750000 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியின் காந்தப் புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் தருணத்தில் புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட்டு மனிதன், விலங்கினம், தாவரங்கள் என அனைத்தையும் நொடியில் பொசுக்கிவிடுமாம்.

http://www.december2012endofworld.com/mayan-calendar-2012

http://www.greatdreams.com/2012.htm

No comments:

Post a Comment