உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்பிற்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இசையை ரசிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைவதுடன் சுத்தப்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இசை கேட்பதால், இதய பாதிப்பின்றி இருக்கவும், கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இசை கேட்கும் சிகிச்சை முறையை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்ததாகவும், இதனை பிரிட்டன் நிபுணர்கள் வரவேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இசையைக் கேட்டு ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுவதாகவும், இது இரத்தம் உறைவதைத் தடுப்பதுடன் கொழுப்பு சேர்வதையும் கரைப்பதாகத் தெரிய வந்துள்ளது.
மனித உடலில் இசையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிம்பொனி இசை மனநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment