கூகுள் நிறுவனம் தனது, செயற்குழு தலைவர் எரிக் ஷ்மித்தின் (Eric Schmidt) பதவிக்கு, கூகுளின் நிறுவனர்களில் ஒருவரான லரி பேஜ் (Larry Page) ஐ இடமாற்றம் செய்யவுள்ளதாகவும் கூகுளில் புதிய தொழில்நுட்ப வசதி ஒன்றை அவர் மேம்படுத்த இருப்பதாகவும், அறிவித்துள்ளது.
24,000 தொழிலாளர்கள் தற்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன், கடந்த தசாப்த காலத்தின் அபரித வளர்ச்சியால் 148 பில்லியன் யூரோ பெறுமதியுடன் தற்போது திகழ்கிறது. இவ் அபரித வளர்ச்சிக்கு பெரும் துணைநின்ற எரிக் ஸ்மித்திற்கு ஓய்வு கொடுப்பதற்காக இப்பதவி மாற்றம் செய்யப்பட்டுள்தாக கூகுள் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி லரி பேஜ் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொள்கிறார்.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில், PhD டிகிரி முடித்த லாரி பேஜ், 1998ம் ஆண்டு செர்ஜே பிரின் என்பவருடன் இணைந்து, கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தார். லாரி,ஸெர்ஜே மற்றும் ஷ்மித் ஆகியோர் இணைந்து கூகுளை வளர்த்தெடுக்க கடும் முனைப்பு காட்டினர்.
தொடர்ந்து 12 வருடங்களுக்கு மேலாக இவ்வாறு இணைந்து பணியாற்றியதால், தற்போது ஒரு ஓய்வும், மாற்றமும் தேவைப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஷ்மித் தெரிவித்தார்.
எனினும் அவர், கூகுளின் நிறைவேற்று சேர்மேனாகவும், ஆலோசகராகவும் தொடர்ந்து பணியாற்றவுள்ளார்.
கூகுள் கடந்த வருடத்தில் சுமார் 18.4 பில்லியன் யூரோக்கள் வருவாயாக ஈட்டிக்கொண்டதுடன் இவற்றில் 96 % வீதமானவை விளம்பரங்களால் திரட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment