இந்தியாவிலும் இணைய நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவருவதால் நம் மக்கள் இணைய நுட்பத்தினை பெரிய அளவில் பயன்படுத்திவர முனைகிறார்கள். ஆனால் எந்தஅளவிற்கு நுட்பம் வருகின்றதோ அந்த அளவிற்கு அதனால் ஏமாற்றுபவர்களும் பெருகிவருகிறார்கள். தொழில்நுட்பம் ஒரு புறம் சாதகம்தான் என்றாலும் மற்றொரு புறம் மிக மோசமான விளைவுகளை தரக்கூடியது.
தற்போது இணையவழியில் ஏமாற்றுவது மிக பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. அதில் முதன் முதலில் மாட்டுகிறவர்கள் வங்கிகளில் ஆன்லைன் பேங்கிங் சேவைகளை பயன்படுத்துகிறவர்கள்தான்.
சிறிய உதாரணம்
வங்கியில் இருந்து குறிப்பிட்ட நபருக்கு ஒரு மடல் செல்கிறது. அதில் உடனடியாக அவரின் ஆன்லைன் இன்டர்நெட் பேங்கிக் கணக்கின் பாஸ்வேர்டை கீழே உள்ள இணைப்பில் வழியாக மாற்றச்சொல்லி இருக்கிறது. அந்த மடல்.
உதாரணம்
நுட்பம் தெரியாதவர்கள் உடனடியாக கீழே கொடுத்திருக்கும் sbi secuirty.html என்ற இணைப்பை சொடுக்கி அதன் வழியாக உள்ளே நுழையும்போது அந்த வங்கிக்கான யூசர்நேம் ,பாஸ்வேர்டை கொடுப்பார்கள். இதுபோதுமே
இணையத்தின் ஆன்லைன் பேங்கிக் கணக்கினை பயன்படுத்த தேவை யூசர் நேம் , பாஸ்வேர்டு, இது மாதிரி இணையத்தளங்களின் மூலம் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோரின் கணக்குகள் திருடப்பட்டு அவர்களின் பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதுபோன்ற மடல்கள் உங்களுக்கு வந்தாலும் அல்லது நீங்களே வெளிஇடங்களில் ஆன்லைன் வங்கிக் கணக்கினை பயன்படுத்தினாலும் நீங்கள் கவனத்தில் கீழே கண்ட வழிமுறைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள.
நீங்கள் செல்லும் எந்த வங்கியின் இணையத்தளமாக இருந்தாலும் முதலில் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்
அந்த தளத்தினை நீங்கள் உங்க ப்ரவுசரில் துவக்கப்பட்டவுடன் முகவரிப்பட்டையில் (address bar) ல் உள்ள முகவரியின் முதலில்
https://onlinesbi.com,
https://infinity.icicibank.co.in,
https://www.onlinecub.net/jsp/start.html
இதுபோன்று நீங்கள் எந்தெந்த தளங்களுக்குள் நுழைக்கின்றீற்களோ அதற்கு முன் https:// இப்படி இருப்பது நலம். அது ஜிமெயில், ஹாட்மெயில், யாஹி என்று எதுவாகஇருந்தாலு ம் சரி.
என்று எல்லா தளங்களுமே https:// என்று ஆரம்பிக்கப்படவேண்டும்.
சாதாரணமாக எல்லா தளங்களும் http:// என்றே துவக்கப்படும். ஆனால் https:// என்பது http with security அதாவது பாதுகாப்பாக உள்ளே நுழையும்.
இதோ உங்களுக்காக சில வங்களின் இணையத்தளங்கள்.
.எனவே எந்த வங்கி உங்களுக்கு படம் 1ம் காட்டப்பட்டுள்ளபோல் மின்னஞ்சல் அனுப்பினாலும் இதுபோன்ற வழிமுறைகளை கவனமாக கையாண்டு உங்கள் பணத்தினை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.
பணம் எவ்வளவு இருந்தாலும் தேவையான நேரத்தில் தேவைப்பட்டால் மட்டுமே அதற்கு மதிப்பு.
Written by
செல்வ.முரளி
No comments:
Post a Comment