Wednesday, January 12, 2011

ஸ்பைஸ்ஜெட் தலைவரானார் கலாநிதி மாறன்


சென்னை: ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் தலைவரானார் தமிழகத்தின் பெரும் தொழிலதிபரான கலாநிதி மாறன்.

மீடியா உலகின் ஜாம்பவனாகத் திகழும் கலாநிதி மாறன், சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கினார்.

இப்போது அவரிடம் 38.66 சதவீத பங்குகள் அவர் வசம் உள்ளன. இதைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட்டின் இயக்குநர் [^] குழுவில் புரமோட்டர் டைரக்டராக அவர் இணைந்தார். தொடர்ந்து மாறனின் சார்பில் எஸ் ஸ்ரீதரன், நிகோலஸ் மார்டின் பால், ஜெ ரவீந்திரன், எம் கே ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு வழி விடும் பொருட்டு, ஏற்கெனவே இயக்குநர் குழுவில் இருந்த பிஎஸ் கன்சாக்ரா (இவரது குடும்பம்தான் ஸ்பைஸ்ஜெட்டை நிறுவியது), கிஷோர் குப்தா, முக்காராம் ஜான் மற்றும் விஜயகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

இப்போது ஸ்பைஸஜெட்டின் தலைவராக மாறன் பொறுப்பேற்றுள்ளார். இதனை மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முறைப்படி இன்று அறிவித்தது.

இயக்குநர் குழுவில், சார்பு இயக்குநராக கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறனும் இணைந்துள்ளார்.

நிறுவனத்தின் சிஇஓவாக நீல் மில்ஸ் என்பவரை நியமித்துள்ளார் கலாநிதி மாறன்.

இந்திய வரலாற்றில் தமிழக தொழிலதிபர் ஒருவர் நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸின் உரிமையாளர் மற்றும் தலைவராக இருப்பது இதுவே முதல்முறை.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கை [^] உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது.



ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மேலும் 20 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம், அந்த நிறுவனத்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார் சன் குழும தலைவர் கலாநிநி மாறன்.

இதன் மூலம் ஸ்பைஸ் ஜெட்டின் தலைமைப் பொறுப்பு உள்பட முக்கிய பதவிகளில் யார் அமர வேண்டும் என்பதை கலாநிதி மாறனே தீர்மானிப்பார். மேலும் இந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவர் அமர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கலாநிதி மாறன் கல் ஏர்வேஸ் பிரைவேட் லிட் என்ற பெயரில் விமான நிறுவனத்தை ஏர்கெனவே தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் சார்பில் ஸ்பைஸ்ஜெட்டின் 37 சதவீத பங்குகளை சில மாதங்களுக்கு முன்பு வாங்கினார் கலாநிதி மாறன்.

இப்போது மேலும் 20 சதவீத பங்குகளை அவர் வாங்கியுள்ளார்.

இதற்கான நடைமுறைப் பணிகளை தொடங்கியுள்ளது ஈனாம் செக்யூரிட்டீஸ்.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி ரூ 47.25 வீதம் 7.42 சதவீத பங்குகளை வெளி மார்க்கெட்டில் வாங்கினார் கலாநிதி. இந்த பரிவர்த்தனை பங்குச் சந்தையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் உள்ள பங்குகளையும் அவர் வெளிச்சந்தையில் வாங்குகிறார்.

ஸ்பைஸ்ஜெட்டில் கூடுதல் பங்குகளை கலாநிதிமாறன் வாங்கிய செய்தி வெளியானதும் அந்த நிறுவனத்தின் பங்கு விலை 0.75 சதவீதம் உயர்ந்தது. இத்தனைக்கும் இன்று பங்குச் சந்தையில் 135 புள்ளிகள் சரிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment