Tuesday, January 25, 2011

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்...

குழந்தைகளுக்கு மருந்துகள் கொடுப்பதற்கு முன்னர் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ளவேண்டும். 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆஸ்பிரினையோ, ஆஸ்பிரின் கலந்த மருந்துகளையோ கொடுத்தல் கூடாது. "salicylate" அல்லது "acetylsalicylic acid என்ற பெயர்களில் ஆஸ்பிரின் கலக்கப்பட்டிருக்கலாம். மருந்தியல் வல்லுநரிடம் ஆஸ்பிரின் கலவாத மருந்துதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

baby_349இருமல் சளி இவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது மருந்துக்கடைகளில் சொல்லி வாங்கும் பழக்கம் காணப்படுகிறது. இது ஆபத்தானது. இதனால் தேவைக்கு அதிகமாக மருந்துகளை உட்கொள்ள நேரும். குழந்தை மயங்கிய நிலையில் இருத்தல், அல்லது உறக்கமிழந்து இருத்தல், வயிற்றுப்பொருமல், தோலில் தடிப்புகள் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இதனால் தோன்றலாம். இவ்வாறு மருந்துக்கடைகளில் மருந்துகளை சொல்லி வாங்குவதைவிட எளிய ஏற்றுக்கொள்ளப்பட்ட வீட்டு வைத்திய முறைகளை செய்வது நல்லது. சிலர் வாந்தியை நிறுத்துவதற்காக கடைகளில் மருந்துகளை சொல்லி வாங்குவர். இதுவும் தவறானது. தொடர்ந்து வாந்தியும் அதனால் நீரிழப்பும் குழந்தைக்கு இருக்குமானால் மருத்துவரை அணுகவேண்டும். பெரும்பாலான சமயங்களில் வாந்தியெடுத்தல் சிறிது நேரத்தில் நின்றுவிடும். அதற்கேற்ற இயற்கையான எதிர்ப்பாற்றலை நமது உடல் பெற்றிருக்கிறது.

காலாவதியான மருந்துகளை தூக்கி எறிந்துவிடவேண்டும். சிலர் காலாவதியான மருந்துகளை கழிவறையில் வீசி எறிவர். இது தவறு. இந்த மருந்துகளில் உள்ள வேதிப்பொருட்கள் நிலத்தடி நீரை நச்சாக்கும் அபாயம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காய்ச்சல் வலி இவற்றைக் குறைப்பதற்காக acetaminophen சேர்ந்த மருந்துகள் கொடுப்பதுண்டு. அளவிற்கு அதிகமாக இந்த மருந்தைக் கொடுப்பது கூடாது. acetaminophen அல்லது ibuprofen மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைகளை ஏற்று அதன்படியே கொடுக்கவேண்டும். சப்பியுண்ணும் மருந்துகளை தூளாக்கியோ, நசுக்கியோ வேறு சுவையான பொருளுடன் கலந்தோ கொடுக்கவேண்டும். முழு அளவிலான மருந்தும் குழந்தை சாப்பிட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளவெண்டும்.

மூலிகை மருந்துகள் என்றாலே பாதுகாப்பான மருந்துகள் என்று பொருள் கொள்ளவேண்டாம். அனைத்து மூலிகை மருந்துகளும் பாதுகாப்பானவை அல்ல. சில மூலிகை மருந்துகள் ஒவ்வாமை, கல்லீரல் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் இவற்றை ஏற்படுத்தக்கூடும். மாற்று மருத்துவ முறைகளை மேற்கொள்ளும்போது உரிய நிபுணர்களின் ஆலோசனை பெற்ற பிறகே செயல்படவேண்டும். ephedra அல்லதுய ephedrine போன்ற சீன மூலிகை மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

இன்னும் படிக்க:

http://www.babycenter.com/0_nine-medicines-you-shouldnt-give-your-toddler_11773.bc?scid=momstodd_20101228:3&pe=2UyEoR5&st=MjAxMDEyMjk=

தகவல்: மு.குருமூர்த்தி ( cauverynagarwest@gmail.com)

No comments:

Post a Comment