Wednesday, January 12, 2011
2010ல் 1 டாலர் சம்பளம் வாங்கிய ஆப்பிள் தலைவர் [^]
நியூயார்க்: ஆப்பிள் கம்பெனி நிறுவனர்களின் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 3 ஆண்டுகளாக வெறும் 1 டாலர் அதாவது ரூ. 45.36 ஐ மட்டுமே தனது சம்பளமாக பெற்று வந்துள்ளார்.
கடந்த 1997-ம் ஆண்டு ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது வெற்றி [^] நடை போடும் ஐபோன், ஐபேட், ஐபாட் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு பின் உள்ளவர் ஜாப்ஸ்.
உலகின் பிரபலமான நிறுவனங்களின் சிஇஓ- க்கள் பெரும் தொகையை சம்பளமாக வாங்கி கல்லாக் கட்டிக் கொண்டிருக்கையில் ஜாப்ஸ் வெறும் ரூ. 45.36 தான் சம்பளமாக பெறுகிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் அவர் இதே சம்பளத்தை தான் வாங்குகிறார்.
அவருக்கு 5.5 மில்லியன் மதிப்புள்ள அந்நிறுவனத்தின் பொது பங்குகள் உள்ளது. நாஸ்டாக் கணக்குப்படி கடந்த 7-ம் தேதி அன்று ஆப்பிளின் சந்தை விலை 308 பில்லியன் டாலராகும்.
அதேசமயம், ஜாப்ஸிற்கு அடுத்து அந்த இடத்திற்கு வருவார் என்று கருதப்படும் திமோதி குக் 59 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குகிறார். இதில் 5 மில்லியன் டாலர் போனஸ், 52.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் அடக்கம்.
English summary
World's popular Apple company's boss [^] Steve Jobs has taken home just 1 dollar as salary in 2010. He has been getting the same amount since 2008. In the mean while, Apple COO Timothy cook has got USD 59 million.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment