Monday, January 10, 2011

உலகத்தின் அதிவேக ரயில் சீனாவில் இயக்கம்



சீனாவில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன ரயில்கள் கடந்த வாரம் இயக்கி வைக்கப்பட்டது. ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிவேக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஜப்பான் ரயில் 243 கிலோ மீட்டர் வேகத்திலும், பிரான்ஸ் ரயில் 277 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டியையொட்டி சீனாவில் அதிவேக ரயில்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த ரயில்கள் 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உஹான் நகரிலிருந்து தெற்கு பகுதியில் உள்ள குவாங்சு நகர் வரை இந்த அதிவேக ரயில் சென்று வருகிறது. ஆயிரத்து 68 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த பகுதியை அதிநவீன ரயில் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன.

வர்த்தகம் அதிக அளவில் நடக்கும் தெற்கு பகுதியில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதால், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 42 தடங்களில் இந்த அதிநவீன ரயில் இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, இந்த அதிவேக ரயில், 400 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment