Tuesday, January 11, 2011

நடந்தால் உடம்பு கூடவே வருதா?

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்


1. குளிர்பானம் கூடவே கூடாது

2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்

3. பகல் தூக்கம் கூடாது

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்

5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்

6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது

7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்

8. வாழைப்பழம் உண்ணக் கூடாது

9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்

10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்

11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்

12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்

13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்

14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்

15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது

16. புளி சேர்க்கக் கூடாது

17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது

18. நிறைய நீர் அருந்த வேண்டும்

19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்

20. மது அருந்தக் கூடாது

21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது

22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது

23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்.

இது நம்மளோடது
24.
சாப்பாடு ருசியாக இருக்கேன்னு கொஞ்சமா வச்சிறாதீங்க கொஞ்சமா வச்சிறாதீங்கன்னு தட்டை நீட்டக்கூடாது.

25. அடுத்தாத்து சாப்பாடு நான்னாயிருக்குமேன்னு அவாவீட்டுக்குபோயிருக்கிறச்சே ஒரு வெட்டு வெட்டக்கூடாது..


இது பார்க்கமட்டும்தான்..அதாவது எனக்குமட்டும்]

என்ன எல்லாதையும் படிச்சாச்சா. அப்படியே ஃபாலோபண்ணுங்க.
என்னங்க எல்லாமே கூடாதுன்னுசொன்னா எதை சாப்பிடுவதுன்னெல்லாம் எடக்குமடக்கா கேட்கக்கூடாது. நடந்தா உடம்பு கூட வரவேண்டாமுன்னு நினைக்கிறவங்க இதை ஃபாலோபண்ணலாம்.

இது என் சொந்த கதையல்ல சுட்டகதை.
ஆசானிடமிருந்து மெயிலில் வந்தது அதை நாமமட்டும் வாசித்துவிட்டு வச்சிருந்தா எப்புடி அதான் உங்களாண்டையும் சொல்லிக்கலாமுன்னு ..

அன்புடன்
VENKATESH

No comments:

Post a Comment