Monday, June 25, 2012
நெல்லையப்பர் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா, நேற்று
கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றான,
நெல்லையப்பர் கோவிலின், 508வது தேரோட்டம், ஜூலை 2ல் நடக்கிறது. அதன்
முன்னோட்டமாக, ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றம், நேற்று காலை 8 மணியளவில்
நடந்தது. இரவில், சுவாமி அம்பாள் சப்பரத்தில் திருவீதியுலா நடந்தது.
கொடியேற்றம் முதல் தேரோட்டம் (ஜூலை 2) வரையிலும், தினமும் சுவாமி,
அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள், வீதி உலாக்கள் நடக்கின்றன.
கோவில் வளாகத்தில் உள்ள அரங்கில், தினமும் மாலையில் இசை நிகழ்ச்சிகள்,
ஆன்மிக சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தேரோட்டத்தையொட்டி, பொருட்காட்சி திடலில், இந்த ஆண்டு அரசு பொருட்காட்சி,
ஜூன் 29ல் துவங்குவதால், நெல்லை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment