Friday, June 29, 2012

கம்பிரமான அல்கம்பிரா கோட்டை !!!!

கம்பிரமான அல்கம்பிரா கோட்டை !!!!

அல்கம்பிரா (Alhambra) என்பது தெற்கு எசுப்பெயினில் உள்ளா கிரெனடாவின் இசுலாமிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட மாளிகை, கோட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். 14ம் நூற்றாண்டில் இத்தொகுதி கட்டப்பட போது இவ்விடம் அல்-அன்டாலசு என அழைக்கப்பட்டது.

ஒரு காலத்தில் கிரெனடாவின் முசுலிம் ஆட்சியாளர்களின் இருப்பிடம் ஆக இருந்த இவ்விடம் இன்று எசுப்பெயினின், புகழ் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களைத் தன்னகத்தே கொண்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. இத்துடன் 16ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட கிறித்தவத் தாக்கத்தையும் ஒருங்கே காண முடியும். அல்கம்பிராவுக்குள் உள்ள ஐந்தாம் சார்ல்சின் அரண்மனை 1527-ம் ஆண்டில் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சினால் கட்டப்பட்டது.

அல்கம்பிரா அமைந்துள்ள சமவெளிப்பகுதி 740 மீட்டர் (2430 அடி) நீளமும், கூடிய அளவாக 205 மீட்டர் (674 அடி) அகலமும் கொண்டது. இது மேல்வடமேற்கிலிருந்து கீழ்தென்கிழக்கு வரை பரந்து சுமார் 142,000 சதுர மீட்டர்கள் பரப்பளவையும் கொண்டுள்ளது. இதன் மேற்கு எல்லையில், வலுவாக அரண் செய்யப்பட்ட அல்கசாபா (உள்நகரம்) அமைந்துள்ளது. சம வெளியின் எஞ்சிய பகுதியில் பல மாளிகைகள் உள்ளன. இப்பகுதியைச் சூழ 13 கோபுரங்களைக் கொண்டதும் அதிகம் வலுவற்றதுமான அரண் அமைந்துள்ளது. இக் கோபுரங்கள்
சில பாதுகாப்புக் காரணங்களுக்கானவை.
Photo: கம்பிரமான அல்கம்பிரா கோட்டை !!!!

முல்லைப் பூவின் மருத்துவ குணம் !!!!

முல்லைப் பூவின் மருத்துவ குணம் !!!!

முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.

முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.

ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.
Photo: முல்லைப் பூவின் மருத்துவ குணம் !!!!

பால் கலக்காத டீ பருகிப்பாருங்கள் உடல் எடை கணிசமாக குறையும் ! ஆய்வில்!!

லண்டன்: உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.

உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.

எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆய்வு இருக்கட்டும் நம் ஊர் பாட்டி வைத்தியம் ஒன்னு சொல்றேன் கேளுங்க , பால் கலக்காத டீயில் ஒரு ஸ்லைஸ் லெமன் துண்டை நறுக்கிபோட்டு குடியுங்க பிந்தம், பேதி, வய்ற்று வலி போன்ற வயிற்று கொலறேல்லாம் மறைந்திடும்.
Photo: பால் கலக்காத டீ பருகிப்பாருங்கள் உடல் எடை கணிசமாக குறையும் ! ஆய்வில்!!

Thursday, June 28, 2012

வேர்க்கடலை !

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை !

நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். !!

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், "சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது" என்றார்.

தஞ்சை "பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்" - இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து...

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.

வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.

இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், "சாப்பிட்டது போதும்" என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.

வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.

ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.

வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?

தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.

எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.

கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.

ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்
Photo: சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை !

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு !!!

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது

நன்றி
நண்பர்கள்
Photo: விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு !!!

துபாயில் சுனாமி வந்தால் மிதக்கும் வகையில் கட்டப்படும் ஹோட்டல் !

துபாயில் சுனாமி வந்தால் மிதக்கும் வகையில் கட்டப்படும் ஹோட்டல் ! இன்னும் ஆடம்பரத்தின் உச்சியில் துபாய் ...

சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக துபாயில் கடலுக்கு கீழே 30 அடி ஆழத்தில் பிரமாண்ட ‘டிஸ்க்’ ஓட்டலை துபாய் அரசு ரூ.660 கோடியில் அமைக்க உள்ளது. சுனாமி போன்ற ஆபத்துகள் வந்தால், கடலுக்கு கீழ் இருக்கும் ஓட்டல் டிஸ்க் போல சுழன்று, கடல் மட்டத்துக்கு மேல் வந்துவிடும். துபாய் அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ‘துபாய் வேர்ல்டு’. உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கலிபா’ கோபுரத்தை கட்டியது, பனை மரம் போன்ற ‘பாம் ஐலேண்ட்’ தீவை உருவாக்கியது, உலக மேப் போலவே கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி வருவது ஆகியவை இது செயல்படுத்திய பிரமாண்ட திட்டங்கள். கடலுக்கு அடியில் பிரமாண்ட ஓட்டல் அமைக்கவும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.

நிதி நெருக்கடி காரணமாக ஒத்திப்போடப்பட்ட இந்த சூப்பர் பிளானை துபாய் வேர்ல்டு நிறுவனம் மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறது. ‘வாட்டர் டிஸ்கஸ்’ என்பது ஓட்டலின் பெயர். மேலும் கீழுமாக இரு டிஸ்க்குகள் இருப்பது போல ஓட்டல் வடிவமைக்கப்படுகிறது. மேல் டிஸ்க், கடல் மட்டத்துக்கு மேல் சில அடி உயரத்தில் இருக்கும். கீழ் டிஸ்க், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 35 அடி ஆழத்தில் இருக்கும். ஓட்டலின் இரு டிஸ்க் பகுதிகளையும் இணைக்கும் மத்திய பகுதியில் மாடிப்படி இருக்கும். இரு டிஸ்க்குகளும் சுழலும் வகையில் அமைக்கப்படும்.

கடலுக்கு அடியில் இருக்கும் டிஸ்க் போன்ற பகுதியில் 21 அறைகள் அமைக்கப்படுகின்றன. அறையில் சுகமாக ஓய்வெடுத்தபடியே, பவளப் பாறைகளின் அழகையும் மீன்கள் நீந்தி செல்வதையும் ரசிக்கலாம். கடலுக்கு அடியில் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதால் மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பிரத்யேக விளக்குகள் அமைக்கப்படுகின்றன. விருப்பப்பட்டால் நீந்திவிட்டும் வரலாம். ‘அண்டர்ஸீ பார்’ வசதியும் உண்டு. சுனாமி வந்தாலும் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ஓட்டல் அமைக்கப்படும்.

சுனாமி வரும் சூழலில், கடலுக்கு அடியில் இருக்கும் டிஸ்க் ஓட்டல் சுழன்று கடலுக்கு மேல் பகுதியில் வந்துவிடும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி செய்யப்படும். கடலடி தரையில் டிரில்லிங் செய்து ராட்சத பில்லர்கள் அமைத்து மொத்த ஓட்டலும் நிறுவப்படும். போலந்து நாட்டின் ஜினியா நகரை சேர்ந்த ‘டீப் ஓஷன் டெக்னாலஜி’ என்ற நிறுவனம்தான் கட்டுமான டிசைனை உருவாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிக் இன்வெஸ்ட் கன்சல்ட் நிறுவனம் கடன் உதவி வழங்க, துபாய் வேர்ல்டின் துணை நிறுவனமான ட்ரைடாக்ஸ் வேர்ல்டு நிறுவனம் டிஸ்க் ஓட்டலை கட்டுகிறது. கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வகையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ‘வாட்டர் டிஸ்கஸ்’ ஓட்டல் கட்டப்படுகிறது. ரூ.300 கோடி செலவாகும் என்று முதலில் கூறப்பட்டது. ரூ.660 கோடி வரை ஆகலாம் என தெரிகிறது என்று துபாய் வேர்ல்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி
முத்து பேட்டை பி பி சி
Photo: துபாயில் சுனாமி வந்தால் மிதக்கும் வகையில் கட்டப்படும்  ஹோட்டல் ! இன்னும் ஆடம்பரத்தின் உச்சியில் துபாய் ...

Wednesday, June 27, 2012

இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் !!!

இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் !!!

மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன.

பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இவற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !!

சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். · வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள்.

இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. · இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். · மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.
Photo: இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் !!!

மேட்டூர் அணைக்கு ஸ்டான்லி நீர்த்தேக்கம்

மேட்டூர் அணைக்கு ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்றும் ஒரு பெயர் இருக்கிறது !!!

மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.

1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.

1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர். அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார்
கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.

(அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.

அணை குறித்த திட்ட ஆய்வு பணி 1905ல் துவங்கி 1910 வரை நடந்தது. இறுதியில் மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்து, 1924 மார்ச் 31ம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, டிச.11ம் தேதி அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, 1925 ஜூலை 20ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினியர் எல்லீஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமையர், முதன்மை தலைமை இன்ஜினியர் முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியை தொடங்கியது.

மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 1934ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டு கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. அணையைக் கட்டி முடிக்க அப்போது ஆன செலவு ரூ.4.80 கோடியாகும். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என வைத்தனர்.
Photo: மேட்டூர் அணைக்கு  ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்றும் ஒரு பெயர் இருக்கிறது !!!

பறவைகள் மற்றும் விலங்குகள் ஒன்றிணைந்ததாக உள்ளது கோடிக்கரை சரணாலயம் !!!

தமிழ்நாட்டில் உள்ள இந்த சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக உள்ளது. இதன் அருகே அமைந்துள்ள விமான நிலையமான திருச்சி விமான நிலையம் இங்கிருந்து 232 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோடிக்கரை ரயில் நிலையத்திலிருந்து மேற்கே அரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கே 17 சதுர கிலோ மீட்டர் பரப்பு தான் வன விலங்குகள் சரணாலயப் பகுதியாக ஒதுக்கப்பட்டிருந்தாலும் இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராஜாமடம் வரை சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலத்துக்கு நிற்கின்றது.

இந்த உப்பு ஏரிகளில் முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி மற்றும் மேல்மருதூர் பகுதியிலிருந்து மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன. ஆகவே இந்த உப்பேரியில் நிற்கும் தண்ணீர் கடல் நீர் அளவு உப்பாக இல்லை. இந்த ஏரி அதிக ஆழம் இல்லை. இந்த ஏரி நீரில் உள்ள மீன்கள் ஏராளம். இதோடு கடல் நீர் உயர் அலையின் போது நிலப்பகுதியில் ஏறி வரும். பிறகு வடியும். இப்படி வடியும் போது பள்ளப் பகுதியில் ஏறி வந்த நீர் கடலுக்குத் திரும்பிப் போகாது. பள்ளங்களில் அப்படியே தேங்கிவிடும். இப்படித் தேங்கும் நீரில் சிக்கிக் கொண்ட மீன்கள் கடலுக்குத் திரும்பிப் போக இயலாது தவித்து நிற்கும். இப்படித் தவித்து நிற்கும் மீன்கள் பறவைகளுக்கு நல்ல விருந்தாகும். ஆகவே தங்களுக்கு எளிதாக உணவு கிடைக்கும் இந்த இடத்தை நீர்ப்பறவைகள் மிகுதியாக விரும்பி இங்கே வந்து குவிகின்றன. மரங்களில் கூடுகள் அமைத்துக் கொண்டு வாழுகின்றன.

ராஜஹம்சம் (ஹம்சம் - அன்னம்) மரங்களில் கூடுகட்டி வாழக் கூடியது அல்ல. அது பகல் இரவு எந்த நேரமும் தண்ணீரில் இருக்கக் கூடியது. தண்ணீரிலேயே தூங்கவும் கூடியது. இதன் பிரதான ஆகாரம் மீன். இதற்கு தங்குவதற்கான நீர் வசதியும் மீனும் இங்கே கிடைப்பதால் அவையும் இங்கே தேடி வருகின்றன. குஜராத்தில் கட்ச் பகுதியிலிருந்து அக்டோபரில் ராஜஹம்சங்கள் இங்கு வரத் தொடங்குகின்றன. நான்கு மாதங்கள் இங்கு வசிக்கின்றன. பிறகு ஜனவரி பிப்ரவரியில் திரும்பிப் போய் விடுகின்றன. நெடுந்தூரம் பறந்து செல்லும் சக்தியை இழந்த நிலையில் உள்ள அன்னங்கள் மட்டும் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுகின்றன. வயோதிக நிலையில் இவை இருப்பதால் இங்கு அவை முட்டையிடுவதும் இல்லை, குஞ்சு பொரிப்பதும் இல்லை. வருடம் சுமார் 40 ஆயிரம் ராஜஹம்சங்கள் இங்கே வந்து போகின்றன.

நீர் வாத்துக்களும் இந்த இடத்தை விரும்பி வருகின்றன. வருடம் சுமார் இரண்டாயிரம் நீர் வாத்துக்கள் பருவ காலத்தில் இங்கு வந்து போகின்றன.

இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.
Photo: பறவைகள் மற்றும் விலங்குகள் ஒன்றிணைந்ததாக உள்ளது கோடிக்கரை சரணாலயம் !!!

Tuesday, June 26, 2012

முத்தான மூலிகைகள் பற்றி அறிவோமா?

முத்தான மூலிகைகள் பற்றி அறிவோமா?

மனிதர்களைப் பொறுத்தவரை உயிர் இயக்கத்தால்தான் அவர்களுடைய உடல்கள் இயங்குகின்றன. உலகத்திலுள்ள உயிர் இனங்களும் பொருட்களும் பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவானவையே. பஞ்சபூதச் சேர்க்கை இல்லாத பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது.

பஞ்ச பூதங்களில் நிலமும் ஆகாயமும் நிரந்தரமானவை. ஆனால் மற்ற 3 பூதங்களான நீர், நெருப்பு, காற்று ஆகிய மூன்றும் மாறக்கூடியவை. இவை குறையும்போதும் அதிகமாகும்போதும் தான் நோய்கள் ஏற்படுகின்றன.ஆகவே இந்த 3 பூதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளித்தால் மனித உயிரைக் காப்பாற்றி விடலாம்.
காற்றை வாதம் என்றும் நெருப்பைப் பித்தம் என்றும் நீரைக் கபம் என்றும் நம் முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.

வாதம்

வாதம் என்பதை வாயு அல்லது காற்று எனக் குறிப்பிட்டாலும் உண்மையில் அது காற்றின் சக்தியே. பூமியின் உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் எல்லாவகையான மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குவது காற்றின் சக்தியே.
வாயு தான் பித்தத்திற்கும் கபத்திற்கும் சக்தியைக் கொடுக்கிறது;உயிர் இயக்கத்திற்கு வாயு இன்றியமையாதது. இதுவே மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதை ஒழுங்குபடுத்துகிறது; அதுவே மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும் சீராக நடாத்துகிறது.

பித்தம்

மனித உடலில் பல்வேறு பொருட்கள் இரசாயன மாறுதல்களை அடைகின்றன. அதன் விளைவாகத் தோன்றும் அக்னி(நெருப்பு) தான் பித்தம் ஆகும்.
அது கல்லீரலிலும் மண்ணீரலிலும் தங்கி இரத்தத்திற்கு நிறத்தைக் கொடுக்கிறது ; இதயத்தில் தங்கி அறிவையும் நினைவாற்றலையும் வழங்குகிறது; வயிற்றுக்கு ஜீரண சக்தியை அளிக்கிறது; கண்களில் உள்ள கருவிழிகள் மூலம் பார்க்கும் சக்தியைக் கொடுக்கிறது ; உடலை மூடிக்கொண்டிருக்கும் தோலுக்கு மினுமினுப்பை அளிக்கிறது ;
பித்தத்தை நெருப்பு சக்தி, உஷ்ண சக்தி, சூரிய சக்தி ஆகியவற்றிற்கு ஒப்பிடலாம்.

மனித உடலில் பித்தம் இயல்பாக இருக்க வேண்டிய அளவு குறைந்தால் இரத்தத்தின் நிறம் மாறும் ; ஜீரண சக்தி குறையும் ; மனம், மூளை ஆகியவற்றின் சக்தி சீராக இருக்காது ; பார்வை மங்கும் ; ஒளி குன்றும். அதே வேளை பித்தத்தின் அளவு அதிகமானால் உடல் நிறம் வெளுத்துப் போகும் ; சோகை உண்டாகும்.

கபம்

மனித உடலில் எலும்பு மூட்டுகள் விறைத்துப் போகாமலும் வறட்சி அடையாமலும் சிக்கல் அடையாமலும் பாதுகாப்பது கபம் தான். அது வயிற்றுக்குச் செல்லும் உணவைக் கரைசல் ஆக்குகிறது ; இதயம் அதிகமாக சுடேறுவதையும் தேய்வதையும் தடுக்கிறது ; நாவிற்கு ஈரத்தையும் ருசியையும் கொடுக்கிறது ; மூளை தொடர்புடைய உணவுப் பொறிகளையும் அவற்றுடன் தொடர்புள்ள நரம்புகளையும் உராய்தல் ஏற்படாத வகையில் வழுவழுப்பாக வைத்திருக்கிறது ; மூட்டுகளை உறுதியாகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டிய இடங்களில் இருந்து எளிதாக இயக்கம் செய்கிறது.

மனித உடலை எடுத்துக் கொண்டால் மூளை, ஜீவசத்து ஆகியவற்றில் தங்கச் சத்தும் நரம்புகளில் வெள்ளிச் சத்தும் இரத்தத்தில் இரும்புச் சத்தும் உரோமம், தோல் என்பவற்றில் தாமிரச் சத்தும் உள்ளன.
நோயாளிகளுக்கு இத்தகைய உலோகச் சத்துக்கள் தேவைப்படும்போது அந்த உலோகங்களின் இயல்பான நச்சுத் தன்மையைப் போக்கி மனித உடல் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு துண்மைப்படுத்தி மருந்துகளாகத் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

இவ்வாறு தயாரிப்பதற்கு மூலிகைச் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு சத்து, சுவை, குணம், பூத அம்சம் ஆகியவை உள்ளன.

மனித உடலில் உள்ள உறுப்புகளுக்கு சக்தியை அளிப்பவையே மூலிகைகள். மூலிகைகள் அனைத்துமே தாவர இனத்தைச் சேர்ந்தவை. தாவரங்களின் வேர், பட்டை, தண்டு, இலை, தழை, மலர், காய், கனி, விதை, பட்டை, புறணி, கொட்டை, பருப்பு ஆகியவைக்கு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு.

இன்றைய அவசர உலகில் செயற்கை உணவுகளையும் மருந்துகளையும் பாவித்து ஆண்டவனால் எமக்கு அளிக்கப்பட்ட இயற்கை உறுப்புகளை கெடுத்துக் கொள்வதோடு செயற்கை உறுப்புகளையும் உடலில் சுமந்தே வாழ்கிறோம்.

அதனைத் தவிற்பதற்காக மூலிகைத் தாவரங்களைப் பற்றி அறிந்து அவற்றை எமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி பயன்பெறுங்கள். காத்திருங்கள் மூலிகை பற்றி அறிவதற்கு……

‘வல்லாரை’யின் மகத்துவம் அறிவோம்…

‘வல்லாரை’யின் மகத்துவம் அறிவோம்…

நோய் தீர்க்கும் நல்ல மருந்தாக விளங்கும் வல்லாரை மூலிகை பயன்களை இன்றும் காணலாம்.

வல்லாரைச் சாறு ஒரு பங்கு, சுத்தமான நல்லெண்ணெய் ஒரு பங்கு எடுத்து இரண்டையும் கலந்து பக்குவமாக காய்ச்சி நீர் சுண்டிய பின்னர் இற
க்கி விட வேண்டும். ஆறிய பின்னர் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை கூந்தல் தைலமாக தினமும் தலையில் தடவி வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

குழந்தைகளுக்கு ஞாபசக்தி, அறிவுக்கூர்மை, சிந்தனை திறன் வளர, வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 2 கிராம் அளவு தூளை காலை, மாலையில் அரை தம்ளர் பாலில் கலந்து உள்ளுக்குள் கொடுக்கலாம். வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு வல்லாரையை மருந்தாக உள்ளுக்குள் கொடுக்கக் கூடாது.

ஒரு பிடி இலைகளை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மில்லியாக வரும் வரை சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதை வேளைக்கு 50 மில்லி அளவில் தொழு நோயாளிக்கு தினமும் 2 வேளைகள் குடிக்க கொடுக்கலாம். வல்லாரை தாவரத்தில் இருக்கும் ‘ஆசியாட்டி கோசைடு’ எனப்படும் மருந்து பொருட்கள் தொழுநோயை குணப்படுத்த உதவுகிறது. இவை தோல், முடி, நகங்களின் வளர்ச்சியை தூண்டுவது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..!

வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..!

நோயின்றி வாழ அனைவரும் விரும்புவர். எப்படித்தான் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் எவ்வாறேனும் நோய் வந்துவிடுகின்றது. நோய் வந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோய் தீரும். ஆனால் நோயே வராமல் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? அதிலும் நோயுற்றால் மருந்தில்லாமல் மருத்துவம் செய்ய இயலுமா? அவ்வாறு மருத்துவம் செய்தால் நோய் நீங்குமா? இவ்வாறு பல்வேறு வினாக்கள் நம் உள்ளத்தில் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் விடையளித்து மருந்தில்லா மருத்துவத்தையும் தமிழ் சித்தர் திருவள்ளுவர் எடுத்தியம்புகிறார்.

உணவே நோய்

பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக உணவு அமைகின்றது. உணவின் வாயிலாகவே நோய்க்கிருமிகள் பரவி உடலில் நோயை ஏற்படுத்துகின்றன. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருத்தல் வேண்டும். உணவு தூய்மையானதாக இருப்பினும் அவ்வுணவை அவரவர் உடற் தேவைக்கேற்ப உண்ணல் வேண்டும். உணவைச் சுவைக்காக உண்ணுதல் கூடாது. பசிக்கின்றதே என கிடைக்கின்ற தூய்மையற்ற உணவையும் உண்ணுதல் கூடாது. உடல் நலத்திற்கேற்ற உணவை உண்ணல் வேண்டும்.சுவையுடன் இருக்கின்றது என்பதற்காக உணவை அளவிற்கு அதிகமாக உண்ணுவதும் நோயைத் தரும். மேலும் சிலர் உணவு கிடைக்கின்றதே என்பதற்காக முன்பு உண்ட உணவு செரிமானம் ஆகிய பிறகு உண்ணாது உண்பர். இதனால் முன்னர் உண்ட உணவு விஷமாக (Food poison) மாறி உயிருக்குக் கேடுவிளைவிக்கும். அதனால் முன்பு உண்ட உணவு முழுமையும் செரிமானம் ஆகிய பின்னர் உணவினை உண்ணுதல் வேண்டும். நோய் வருமுன் காப்பதற்கு இதுவே சிறந்த வழி. இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தின் முதற்படிநிலையை,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அற்றது போற்றி உணின்(942)

என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகின்றார்.

அளவாக உண்ணுதல்

எதற்கும் ஒரு அளவுண்டு என்று வழக்கத்தில் அனைவரும் கூறுவது இயல்பு. இது மற்றவற்றிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ நாம் உண்ணும் உணவிற்கு அளவு உண்டு. அவரவர் உடற்கூற்றிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப அறிந்து உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலில் நோய்ஏற்படும். உணவு அளவு குறைந்தால் சிலருக்கு குறைந்த அழுத்த நோய் ஏற்படும். இதனை '‘low pressure’ என்று கூறுவர். உணவு சரியாக உண்ணாமையால் வரக்கூடிய நோயே இக்குறைந்த ரத்த அழுத்த நோயாகும். உணவு சரியான நேரத்தில் உணாமலோ, குறைந்த அளவிலோ உண்டால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்து உடலில் படபடப்பு ஏற்பட்டு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கே ஊறுநேரக்கூடிய அளவிற்கு இது கொண்டு சென்று விடும். தேவைக்கு அதிகமாக உண்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனை ‘High pressure’ என்பர். சிலர் இறைச்சி உணவை அதிக அளவில் உண்டு தங்களின் உயிருக்கு இறுதியைத் தாங்களே தேடிக்கொள்வர்.

இறைச்சியில் உள்ள கொழுப்பு இரத்தத்தில் கலந்து அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்தக் குழாயில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படச் செய்கின்றது. தேவையான கொழுப்பு மட்டுமே உடல் எடுத்துக் கொள்கின்றது. மற்ற தேவையற்ற கொழுப்பு இரத்த்த்திலும், உடலில் ஆங்காங்கேயும் தங்கிவிடுகின்றது. அவ்வாறு தங்கிவிடும் கொழுப்பு இரத்தக் குழாயை அடைப்பதும் உண்டு. இதனால் இரத்தம் உடலில் அல்லது இதயத்திற்குப் போகின்ற தமனிகளில் உள்ள சிறிய வழியை அடைத்து இதயத் தாக்குதல் ஏற்படவும் வழி ஏற்படுகிறது. இதனை அறிந்தே வள்ளுவர் மருந்தில்லா
மருத்துவத்தின் இரண்டாவது படிநிலையாக,

மிகினும் குறையினும் நோய் செய்யும்(941)

என்று குறிப்பிட்டு அவரவர் உடற்திறத்திற்கு ஏற்ப உண்டால் மருந்து தேவையில்லை என்று குறிப்பிடுகின்றார்.

நீண்ட நாள் வாழ

உலகில் தோன்றிய மக்கள் நீண்டநாள் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்காக பல்வேறு வகையான மருந்துகளை உட்கொள்கின்றனர். காயகல்பம் உண்கின்றனர். சிலர் தங்கபஸ்பம், பல்வேறுவகையான பஸ்பங்களையும் உண்ணுகின்றனர். எவ்வகையிலேனும் தங்களது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள அவரவர்க்குத் தகுந்தவாறு முயல்கின்றனர். இம்முயற்சியிலேயே சிலர் தங்களது குறிக்கோளை அடையமுடியாமல் இறந்தும் விடுகின்றனர். பல்வேறு காலங்களில் பல நாட்டினரும் தமது வாழ்நாளை நீடித்துக் கொள்ள முயன்றிருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு வகையான மருந்துகளைத் தேடி அலைவது வீணானான செயலாகும். வாழ் நாளை நீடித்துக் கொள்வதற்கு மருந்துகளோ பஸ்பங்களோ, காயகல்பங்களோ தேவையில்லை. அவ்வாறெனில் எங்ஙனம் வாழ்நாளை நீட்டித்துக் கொண்டு நோயின்றி வாழலாம்? என்ற வினாவும் நம்முள் பலருக்கு எழுகின்றது.

நலமுடன் நீண்ட நாள் வாழ மருந்தே வேண்டாம்.அதற்கு அளவுடன் உண்ண வேண்டும். அதுமட்டுமல்லாது தாம் முன்னர் உண்ட உணவு முழுமையாக செரிமானம் ஆகிய பின்னர் உண்டாலே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து முன்னர் உண்ட உணவு முழுமையாக செரித்த பின்னர் அளவுடன் உணவு உண்டாலே நீண்ட நாள் வாழலாம்.
இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தை,

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாற(943)

என்ற திருக்குறள் நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம் அளவில்லாது செரிக்காது தொடர்ந்து உணவை உண்டு கொண்டு இருப்பதனால்தான் உடலில் நோய் ஏற்படுகின்றது. அளவறிந்தும் நாம் உண்பதில்லை. இதனால் தேவையற்ற கொழுப்பு நமது உடலில் சேர்ந்து விடுகின்றது. அதிகப்படியான சதை உடலில் போட்டுவிடுகின்றது. தகுந்த உடற்பயிற்சியும் இல்லாத நிலையில் நாம் உண்ட உணவே நமக்கு நோயை உண்டாக்கும் விஷமாக மாறிவிடுகின்றது. எனவே நீண்ட நாள் நோயின்றி வாழ வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கடைபிடித்து வாழ்தல் வேண்டும்.

உணவு உண்ணும்முறை நம்மில் பலருக்கு எவ்வாறு உண்ண வேண்டும் என்பதும் எவ்வளவு, எவ்வப்போது உண்ண வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இத்தகைய உணவு உண்ணுகின்ற முறையினை நாம் நன்கு அறிந்து கொண்டோமானால் நம்மை நோய் என்பது அணுகாது. நன்கு பசித்த பின்னர் தான் நாம் உணவினை உண்ண வேண்டும். அதுவே சரியான உணவு உண்ணும் முறையாகும். “பசித்துப் புசி“ என்ற பழமொழியும் உணவு உண்ணும் முறையை நன்கு எடுத்துரைக்கின்றது.இவ்வாறு உண்ணுவதே ஒரு மருந்தில்லா மருத்துவ முறையாகும். இத்தகைய மருத்துவ முறையை,

அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்கத் துவரப் பசித்து (944)

என எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்.

உண்ட உணவு செறித்து(ஜீரணமானது) அறிந்து அப்பழக்கத்தை முறையாகக் கடைபிடித்து மாறுபாடில்லாமல், நன்றாகப் பசித்த பின்னர் உணவினை உண்க அதுவே மருந்தில்லா மருத்துவம் என்று இக்குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை தெளிவுறுத்தியிருக்கிறார். உணவு வகைகளை, உண்ணும் நேரத்தை மாற்றுதல் பசித்தவுடன் உண்ண வேண்டும். ஆனால் பலர் பசி எடுத்தாலும் அந்த நேரத்திற்கு உண்பதில்லை. அப்போது தேநீரோ அல்லது காபியோ அருந்திவிட்டு காலம் தாழ்த்தி உண்கின்றனர். இன்னும் சிலர் காலை உணவை பதினோரு மணி, பகல் உணவை மூன்று மணி இரவு உணவை பன்னிரெண்டு மணி என சரியான நேரத்திற்கு என்று இல்லாமல் மனம் போன போக்கில் உண்பர். இது வலியச் சென்று நோயை
நாமே வரவழைத்துக் கொள்வது போன்றது. இவ்வாறு சரியான நேரத்திற்கு உண்ணாமல் இருப்பதும் நோயினை உடலில் உண்டாக்கும். இதனால் பலருக்கு தீராத வயிற்று வலி (ulcer) ஏற்படுகின்றது. பசி எடுத்தவுடன் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் குடல் புண்ணாகி விடுகின்றது. இவ்வாறு ஏற்படுகின்ற புண்ணால் சில சமயங்களில் குடலையே வெட்டி எடுக்கக்கூடிய சூழலும் ஏற்படுகின்றது.

அதனால் பசி ஏற்பட்ட சிறிது நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு நல்லது. சரி பசிஎடுத்து விட்டது கிடைக்கும் உணவினை உண்ணுவது நல்லதா? எனில் அவ்வாறு செய்யக் கூடாது. அவரவர் உடல்நிலைக்குத் தக்கவாறு ஏற்ற உணவை உண்ணுதல் நலம் பயக்கும். சிலருக்கு எண்ணெய் அதிகம் ஊற்றிச் செய்யப்பட்ட உணவோ, அல்லது அதிகமான காரம், உப்பு, புளிப்பு உள்ள உணவோ ஒத்துக் கொள்வது கிடையாது.

மேலும் சிலர் சைவ உணவைச் சாப்பிட்டுவிட்டு மாமிச உணவு கிடைக்கின்றது என்பதற்காக சைவத்திலிருந்து அசைவ உணவு முறைக்கு மாறுவர். இவ்வாறு உணவை மாற்றுவதும் நோய்க்கு இடங்கொடுக்கும் செயலாகும். அதனால் அவரவர் உடலுக்கு உகந்த உணவை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உண்டு வந்தால் நோயும் வராது. மருந்தும் வேண்டாம். இத்தகைய எளிய மருந்துவத்தை,

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (945)

என வள்ளுவர் நவில்கிறார்.

நமது தேசத் தந்தை மகாத்மாகாந்தி இங்கிலாந்து சென்று படித்தபோது தமது உணவு முறையை மாற்றிக் கொள்ளவே இல்லை. அங்கு அசைவ உணவே அதிகம் கிடைத்து. இருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எக்காரணத்தைக் கொண்டும் அவர் தமது உணவு உண்ணும் முறையை மாற்றிக் கொள்ளவில்லை. இதனை தமது சத்திய சோதனை நூலில் அவரே குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அதிகம் உண்ணுவது தமக்குப் பிடித்த உணவு இருந்தால் சிலர் அளவைவிட அதிகமாக உண்பர். இது மிகப்பெரிய உடல்நலக் கேட்டைத் தரும் செயலாகும். எப்போதும் உணவை மிதமாக உண்ணல் வேண்டும். அது உடல் நலத்தைப் பாதுகாக்கும் செயல் எனலாம். உண்ணும்போது சிறிது பசி இருக்கும் நிலையிலேயே நாம் உண்ணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு எப்போதும் துன்பத்தைத் தராது. அதிகம் உண்பவரை வழக்கில் ‘பெருந்தீனிக்காரன்‘ என்று குறிப்பிடுவர். இப்பெருந்தீனிக்காரனிடத்தில் எப்போதும் நோய் குடிகொண்டிருக்கும். இவ்வாறு உண்பவர்களுக்கு, இதயத்தாக்குதல், உடல் எடை கூடுதல், உடல் பருமனாதல், உடலில் கொழுப்பு அதிக அளவில் ஏற்படுதல், தொப்பை ஏற்படுதல் உள்ளிட்ட பல உடற் கோளாறுகள் ஏற்படும். மிதமாக உண்டால் உடலில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். அதிகம் உண்டால் நோய், துன்பம் நிலைத்திருக்கும்.நோய் வராமல் செய்யும் வழிமுறையாகவும் இதனைக் கொள்ளலாம். இத்தகைய அரிய மருத்துவ முறையை,

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய் (946)

என வள்ளுவப்பெருந்தகை மொழிவது நோக்கத்தக்கது.
இன்னும் பலருக்குச் சில ஐயங்கள் எழலாம். நல்ல பசி. பசித்த பின்னர் தானே உண்ண வேண்டும். அதை எப்படி உண்டால் என்ன? என்று கருதுவாருமுளர். அது தவறான ஒன்றாகும். நமக்குப் பிடித்தமான உணவை உண்டாலும் பசி அடங்கும் வரை மட்டுமே உண்ண வேண்டும். அதுவே மகிழ்வைத் தரும். பசியடங்கிய பின்னரும் எழாது உணவை உண்டு கொண்டு இருத்தல் கூடாது. அவ்வாறு அதிக அளவில் உண்பதே பெருந்தீனி தின்பது என்று கூறுவர். பசி அடங்கியவுடன் உண்பதை நிறுத்தி விடுதல் நல்லது.உணவின் ருசிக்காக அதிக அளவு உணவை உண்டால் அதிகமான நோய்கள் நமது உடலில் தங்கி உடலை வருத்தும். எனவே அதிகம் உணவை உண்ணுவதைத் தவிர்த்தல் வேண்டும். இத்தகைய
அரிய மருத்துவ அறிவுரையை,

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றயிப் படும்(947)

என வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. இவை மருந்தில்லா மருத்துவத்தின் நோய்த் தடுப்பு முறைகளாகும். மருத்துவம் பார்க்கும் முறை இவ்வாறெல்லாம் இருந்தும் நோய் வந்துவிட்டால் என்செய்வது. நோய் வந்தவுடன் மருத்துவரை நாடிச் சென்று பார்த்தல் வேண்டும். அம்மருத்துவர் அது எத்தகைய நோய், அது எதனால் வந்தது? அதனை எந்த வழியில் தீர்க்கலாம் என அறிந்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இன்று சில மருத்துவர்கள் எந்தவிதமான நோய் அந்நோய் வந்த்தற்கான காரணம் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ளாமலேயே ஏதோ ஒரு சிகிச்சையைத் தொடங்கிவிடுகின்றனர். அது முடிவில் நோயாளியின் உயிருக்குக் கேட்டை விளைவித்துவிடுகின்றது. இக்கேடுகளையெல்லாம் தவிர்க்கவே திருவள்ளுவப் பேராசான்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

என்ற மருத்துவம் பார்க்கும் முறையையும் எடுத்துக் கூறுகின்றார்.

நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தைக் கொடுப்பவர் என்ற நான்கும் மருத்துவமுறையில் முக்கியமானவையாகும். இவை ஒன்றைஒன்று சார்ந்திருக்கின்றது. இந்நான்கும் ஒன்றிணையும் போதுதான் நோயாளி நோயிலிருந்து முற்றிலும் குணமடைகின்றார். இத்தகைய மருத்துவ முறையினை, உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானெற்று அப்பால்நாற் கூற்றே மருந்து என வள்ளுவர் குறிப்பிடுகின்றார். நோயின் தன்மை, வந்த காரணம், அதனைப் போக்கும் பொருத்தமான மருத்துவமுறை இவற்றையெல்லாம் அறிந்து ஒரு மருத்துவர் செயல்பட வேண்டும். பணத்தின் பொருட்டு, அல்லது நோயாளிக்கு வந்திருப்பது இத்தகைய நோய் என்பது தெரியாமல் மருத்துவம் செய்தல் கூடாது என்ற மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ முறையினை வள்ளுவர் கூறியிருப்பது இன்றைய சமுதாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைகின்றது. மருந்து கொடுத்தல் நோய் பற்றி தெரிந்து கொண்டபின் அதற்குரிய மருந்தினை அளவுடன் கொடுத்தல் வேண்டும். அனைவருக்கும் நோயின் தன்மைக்கேற்பவும், நோயாளியின் வயது, நோயின் அறிகுறி ஏற்பட்ட காலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மருந்து கொடுப்பது நல்லது. இவற்றை மீறி மருந்தினை அளவிற்கு அதிகமாகக் கொடுத்தால் நோயாளிக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு நோயாளியின் உயிருக்கு ஊறு நேரும். இதனை மருத்துவர் நன்கறிதல் வேண்டும் என்பதை,

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல் (949)

என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவரின் கூற்று மிகச் சிறந்த மருந்தாளுரின் கூற்றைப் போலவும் அனுபவம் நிறைந்த மருத்துவரின் செயலை நினைவுறுத்துவதைப் போன்றும் அமைந்திருப்பது உன்னற்பாலது. மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் நோயாளியின் தன்மை, வயது, போன்றவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு மயக்க மருந்தை சரியான அளவில் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு கொடுக்காவிடில் நோயாளி நீள்துயிலில் ஆழ்ந்துவிட நேரிடும். இத்தகைய மருந்தளிக்கும் முறையை அனைத்துத் தரப்பு மருத்துவர்களும் நன்கு அறிந்திருப்பது மருத்துவத்துறையை மென்மேலும் சிறப்புடையதாக ஆக்கும். உடலை நலமுடன் வைத்திருக்க உதவும் வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கையாள்வது எளிதாகும். வள்ளுவர் வழி வாழ்க்கையை அமைத்து சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழ்வோம்.
Photo: வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..!

5 Cancer-Fighting Spices

5 Cancer-Fighting Spices
By Veronica Peterson, Editor, Healthy & Green Living
They’re pretty, delicious and drumroll please…they’re good for you! Yes, I’m talking about the secret our forefathers knew way back in the day. Spices have untapped health benefits and have recently been stealing the scene as powerful cancer preventatives and fighters. Below are five you might want to consider adding to your diet.

1. Garlic
No surprise here. The stinking rose is one of the most potent weapons in preventing cancer, particularly colon cancer. Containing the photochemical allicin, garlic stimulates the production of cancer-fighting enzymes. Daily garlic consumption can lower total cholesterol and triglyceride levels by 10 percent and has the added benefit of keeping vampires at bay.

2. Ginger
For centuries, grandma has been prescribing this knobby little root for an upset tummy but we now know that it holds anti-inflammatory properties, shows promise in treating cancer, osteoarthritis and, when used topically, rheumatoid arthritis. It can be used as an appetite stimulant, and a treatment for nausea, whether legit (flu) or not-so-legit (hangover).

3. Cinnamon
Besides being a yummy addition to coffee, cinnamon protects against Type 2 diabetes and heart disease. Derived from tree bark, this wonderful spice stimulates the bodies circulatory systems. Just half a teaspoon taken daily lowers blood glucose, cholesterol, and triglyceride levels. It also counteracts congestion, may be useful treating osteoarthritis and improves blood circulation.

4. Turmeric
Who can resist the gorgeous yellow color of this cancer-fighting spice? Lately turmeric has been the darling of the spice world as researchers have discovered that, not only does it fight cancer, but contains an entire spectrum of other health benefits, including inflammation-fighting compounds called curcuminoids. These compounds may help prevent Alzheimer’s, arthritis, and carpal tunnel syndrome. When used topically turmeric has been known to help heal skin infections.

5. Cayenne Pepper
Arriba! Cayenne pepper contains capsaicin, yet another cancer preventative. When used in mass it can cause heartburn but a little sprinkled onto everyday foods should be enough for you to see the benefits. Cayenne peppers are full of beta carotene, other antioxidants and immune boosters and helps to build healthy mucous membranes tissues – our first level of defense against bacteria and viruses.

Source: care2.com
EVERY HUMAN MUST SHARE THIS

Monday, June 25, 2012

நெல்லையப்பர் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றான, நெல்லையப்பர் கோவிலின், 508வது தேரோட்டம், ஜூலை 2ல் நடக்கிறது. அதன் முன்னோட்டமாக, ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றம், நேற்று காலை 8 மணியளவில் நடந்தது. இரவில், சுவாமி அம்பாள் சப்பரத்தில் திருவீதியுலா நடந்தது. கொடியேற்றம் முதல் தேரோட்டம் (ஜூலை 2) வரையிலும், தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள், வீதி உலாக்கள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள அரங்கில், தினமும் மாலையில் இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தேரோட்டத்தையொட்டி, பொருட்காட்சி திடலில், இந்த ஆண்டு அரசு பொருட்காட்சி, ஜூன் 29ல் துவங்குவதால், நெல்லை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆனித்திருநாளில் ஆனந்த நடராஜரின் தரிசனம்

ஆனித்திருநாளில் ஆனந்த நடராஜரின் தரிசனம்

"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்  குமின்சிரிப்பும்
பனித்தசடையும் பவளம் போல்மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் கானப்பெற்றால்
மனிததப் பிறவியும் வேண்டுவதேயிந்த மானிலத்தே"
நாவுக்கரசர் ஆடலரசன் எம்பிரான் நடராஜப்பெருமானின் ஆடலை வியந்து இவ்வாறு பாடியிருக்கிறார். பஞ்ச பூதங்களுக்கும் பரமனுக்கும் ஐந்தொழில்களுக்கும் ஒற்றுமை உண்டு. அவற்றை இயக்குபவர்களும் பரம சிவனிலிருந்து வந்தவர்களே. பஞ்சாட்சரம் என அழைக்கும் நமசிவாய என்பதின் தாத்பரியம் இதுதான். அதாவது அதன் பொருள் இதுதான்:

நகாரம் - பிருத்வி, மண், பிரம்மா
மகாரம் - அப்பு, நீர், விஸ்ணு,
சிகாரம் - தேயு, நெருப்பு, உருத்திரன் 
வகாரம் - வாயு, காற்று, மகேசன்
யகாரம் - ஆகாயம், விண், சதாசிவன்

இப்படி பஞ்சபூதங்களையும் தோற்றுவித்து ஐந்தொழில்களை இயக்க வைத்து உயிர்கள் அசைவடைய ஐந்து உருவாய் தோற்றுவித்து படைத்தல் பிரம்மா என்றும் காத்தல் விஸ்ணு என்றும் அழித்தல் உருத்திரன் என்றும் மறைத்தல் மகேசன் என்றும் அருளல் சதாசிவன் என்றும் உலகம் இயங்கச் செய்தவர் முழுமுதற் கடவுளான சிவபெருமான். அத்தகைய எம்பெருமான் பூவுலகில் வாழும் உயிர்களை நடமாடி இருந்து காத்திட நடராஜ வடிவம் எடுத்து ஆனந்த நடனம் ஆடினார்.
இச் சிவமானது இருநிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை எல்லாவாற்றையும் கடந்து நிற்பது ஒரு நிலை. எல்லாவற்றிலும் கலந்து நிற்பது மற்றொருநிலை. கடந்து நிற்பது நிர்க்குணம் அதேபோல் கலந்து நிற்பது சகுனம். உருவம் அருவம், அருவுருவம், ஐந்தொழில் இவை எதுவும், எல்லாவற்றையும் கடந்த சிவத்துக்கு இல்லை. சிவன் இயற்கையோடு இணைந்து நிற்கும் நிலையே எல்லாவற்றிலும் கலந்தநிலை. சிவம் அறிவுப்பொருளானவர். இயற்கை சடப்பொருளாகும். சிவம் இயற்கையுடன் இணைந்த நிலையில் இயக்கம்(அசைவு) உண்டாகிறது. சிவத்துக்கும் தனித்த இயற்கைக்கும் அசைவு கிடையாது. ஆகவே சிவம் தனித்தும் இயற்கையுடன் கலந்தும் நிற்கும். ஆனால் இயற்கை தனித்து நின்று இயங்காது. அது சிவத்துடன் கலந்தே இயங்கும் இயல்பு கொண்டது. சிவம் அசைவதால் அன்றோ அகிலமும் அசைவுறுகிறது பஞ்சபூதங்களும் அசைகிறது. இதனாலன்றோ இப்பூமியும் உயிர்களும் இயக்கம் பெறுகிறது.
சிவபிரான் பஞ்சபூத நாயகனாக விளங்குகிறார். அதாவது பஞ்சக்கிருத்தியங்களையும் அவரே செய்கிறார். திருக்காஞ்சியில் நிலமாகவும், திருவானைக்காவில் நீராகவும், திருவண்ணாமலையில் தீயாகவும், திருக்காளத்தியில் காற்றாகவும், திருத்தில்லையில் ஆகாசமாகவும் நின்று அருள் புரிகின்றார். அதேபோல் சூரியவிம்பத்தில் சூரியவடிவாகவும், சோமநாதத்தில் சந்திரவடிவமாகவும், எல்லா உயிர்களிடத்தும் பசுபதியாகவும் அமர்ந்து விளங்குகிறார்.

இப்படி விளங்கும் சிவபிரான் ஐந்தொழில்களையும் செய்ய ஏழுவகைத்தாண்டவங்களை ஆடினார். நடராஜ வடிவத்தை பார்த்தோமேயானால் அதில் மூன்று கண்களும், சாந்த குணமும், நான்கு தோள்களும், சிவப்பு நிறமும், புன்முறுவல் செய்யும் முகமும் கொண்டிருக்கும். அதோடு சடைமுடியிற் கங்கை, பிறை, கொக்கிறகு, ஊமத்தை, எருக்கு, சிறுமணி, மண்டையோடு, பாம்பு ஆகியனவும் காணப்படும்.
மேலும் இடது காதில் பத்திர குண்டலமும், வலது காதில் மகர குண்டலமும் விளங்கும். வலதுபாதம் அபஸ்மாரபுருஷன் எனப்படும் முயலகன் மீது ஊன்றிய நிலையிலும், இடதுபாதம் தூக்கிய நிலையிலும் (குஞ்சித பாதம்) அமைந்திருப்பதும் ஒரு தனி அழகு. நான்கு கைகளுடன் விளங்கும் நடராஜப்பெருமானுடைய பின்வலக்கையில் உடுக்கையும், பின் இடக்கையில் தீயும் உள்ளன. முன் வலக்கரம் அபயகரமாகவும், முன் இடக்கரம் வீசுகரமாகவும் அமைந்திருப்பதே நடராஜ பெருமானின் வடிவின் விளக்கம்.
ஐந்து வகைத்தொழிலைக் குறிப்பதாக எமது பாரதத்தில் நடன சபைகளில் ஏழுவகைத் தாண்டவங்களை சிவபிரான் திருநடனம் புரிந்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன. அதாவது காளி காதாண்டவம் - படைத்தலைக் குறித்து தாமிரசபை என்று திருநெல்வேலியிலும், கெளரி தாண்டவம் - காத்தலைக் குறித்து சிற்சபை என்று திருப்புத்தூரிலும், காத்தலைக் குறித்து மற்றொரு இடமாக சந்தியா தாண்டவம் நிலை நிறுத்துதலில் இராஜசபை என்று மதுரையிலும் ஆடல் புரிந்துள்ளான் சிவன்.
மேலும் சங்கார தாண்டவம் - அழித்தலைக் குறித்து பிரபஞ்சத்தில் நடுச்சாமத்தில் ஆடப்படுவதாகவும், திரிபுரதாண்டவம் - மறைத்தலைக் குறித்து சித்திர சபை என்று திருக்குற்றாலத்திலும், ஊர்த்துவதாண்டவம் - அருளலைக் குறித்து இரத்தினசபை என்று திருவாலங்காட்டிலும், ஆனந்தத்தாண்டவம் - பஞ்ச கிருத்தியங்களையும் குறித்து பொற்சபை என்று போற்றப்படும் தில்லைச்சிதம்பரத்திலும் ஆடல் புரிந்து உயிர்களைக் காக்கிறான்.

தில்லையம்பலவன் ஆடும் திருநடனம் கண்டு பூலோகமும், புவர்லோகமும், தனுர்லோகமும் அங்குள்ள அனைத்து உயிர்களும் அசைந்தாடி இயங்கிக்கொண்டு இருக்கின்றனர். "சிவதைன்யம்" அனைத்திலும் ஊடுருவிப்பாய்ந்திருப்பதே சிவதாண்டவம் என்பர். ஆடவல்ல எம்பிரான் கூத்து இல்லையேல் அனைத்தும் அசைவற்று நின்றுவிடும். நடராஜப் பெருமான் திருநடனம் செய்யும் இந்த ஆனி உத்தரத் திருநாளில் அவன் அருளாலே அவன் தாள் பணிவோம். நன்றி!
- 4தமிழ்மீடியாவிற்காக அருந்தா

அழகு மிளிரும் அந்தமான் !!!!

அழகு மிளிரும் அந்தமான் !!!!

வங்கக்கடல் தனது மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டிருக்கும் வனப்புமிக்க தீவுக்கூட்டம்தான் அந்தமான், நிகோபர். இவை இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. வங்கக்கடலில் வடக்கில் இருந்து தெற்காக சுமார் 700 கி.மீ நீளத்துக்கு விரிந்து கிடக்கும் இந்த தீவுக்கூட்டங்களில் மொத்தம் 36தீவுகளில்தான் மனிதர்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். பிற தீவுகள் அடர்ந்த காடுகளைக் கொண்டவை. இவற்றில் அரிய வகை விலங்குகளும், பறவைகளும், தாவர வகைகளும் நிறையவே உண்டு. அழகு மிளிரும் அந்தமான் நிகோபர் தீவுகளில் கண்டு களிக்க நிறைய இடங்கள் உள்ளன.

அந்தமான் வாட்டர் ஸ்போர்ட் காம்ப்ளக்ஸ்:

நீர்விளையாட்டுக்களில் ஆச்சரியப்படுத்தும் வகைகள் எத்தனை உண்டோ அத்தனையும் இங்கு உள்ளன. இவற்றில் சாதாரண நீர்சறுக்கு விளையாட்டு, சாகச நீர்சறுக்கு விளையாட்டுக்களும் உண்டு. இரண்டு வகைகளுக்கும் தனித்தனி நேரங்கள் வைத்து உள்ளனர்.

மீன் காட்சியகம்:

அந்தமான் வாட்டர் ஸ்போர்ட் காம்ப்ளக்ஸ் அருகில் மீன் காட்சியகம் அமைந்து உள்ளது. இந்திய பசிபிக் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் காணப்படும் மீன்வகைகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். கண்களுக்கு மட்டும் அல்ல அறிவுக்கும் விருந்தளிக்கிறது இந்த மீன்காட்சியகம்.

பறவைத்தீவு:

தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 25கி.மீ தொலைவில் பறவைத் தீவு உள்ளது. மாங்குரோவ் காடுகளும், மனதைக் கவரும் கடற்கரையும் இதன் சிறப்பம்சம். இங்கு ஒரு மலைக்குன்றின் மீது வனத்துறைக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கிருந்து பறவைத்தீவின் மொத்த அழகையும் காண முடியும்.

சயின்ஸ் சென்டர்:

போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள இந்த அறிவியல் மையத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் எப்படி உருவாயின என்பதைப் பற்றியும் அவற்றின் அறிவியல் பூர்வமான உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம். புகைப்படங்கள், மாதிரிகள் என நிறைய விஷயங்கள் இங்கு உள்ளன.

நிகோபர்:

1841 சதுர அடி பரப்பளவில் 28 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமே நிகோபர் என அழைக்கப்படுகிறது. செழிப்பாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்கள் இந்தத் தீவுகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. நீண்ட வால் கொண்ட குரங்குகள், அரிய வகை புறாக்களை இங்கு காணலாம். இதே போல 28 தீவுக்கூட்டங்களைக் கொண்ட கார்நிகோபர் தீவும் பல சிறப்புத்தன்மைகளைக் கொண்டது.

அந்தமான் சிறைச்சாலை:

இந்திய சுதந்திரபோராட்டத்துக்கும் அந்தமான் சிறைச்சாலைக்கும் நிறையவே தொடர்பு உண்டு. அப்போது ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள் இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டு விலங்குகளைப்போல சித்ரவதை செய்யப்பட்டனர். சுதந்திர போராட்ட வீரர்கள் ஏராளமானோர் இங்கு 20ஆண்டுளுக்கு மேலாக தங்களது வாழ்நாளை தனிமைச் சிறையில் கழித்து இருக்கிறார்கள்: போர்ட் பிளேயரில் பிரம்மாண்டமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கும் இந்த சிறைச்சாலை, நாம் சுதந்திரமாக இருப்பதற்காக நம் முன்னோர்கள் இங்கு அனுபவித்த கொடுமையை நினைவு படுத்தி வருகிறது.
இவை தவிர அந்தமான் மற்றும் நிகோபரில் பாரஸ்ட் மியூசியம், மகாத்மா காந்தி மெரைன் நேஷனல் பார்க், மவுண்ட் ஹாரியட், ரோஸ் ஐலண்ட், விப்பர் ஐலண்ட், கிரேட் நிகோபர் என பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. அந்தமான் நிகோபர் நிர்வாகம் சார்பில் டிசம்பர் முதல் ஜனவரி வரை நடத்தப்படும் தீவு சுற்றுலா விழா (ஐலண்ட் டூரிசம் பெஸ்டிவல்) இங்கு பிரபலம். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதில் பங்கேற்க வருகிறார்கள்.

சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து உள்ளது. மேலும் சென்னை, கொல்கத்தாவில் இருந்து விமானங்களும் இயக்கப்படுகின்றன.
Photo: அழகு மிளிரும் அந்தமான் !!!!

அதிசய விலங்கு கங்காரு

உலகத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான மெத்தேன் வாயுவை வெளியிடும் அதிசய விலங்கு கங்காரு !!!

உலகத்தில் பல விலங்குகள் உள்ளன . ஆனால் அதில் மிகவும் வினோதமாக ஒரு விலங்கு என்று பார்த்தால் கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகிறது. இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப் பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப் பையினுள்ளேயே இருக்கின்றது .கங்காருக்களில் 56 இனங்கள் இருக்கின்றதாம் .,பெரிய கங்காரு 90 கிலோ வரை எடையிருக்கும் வாலிலிருந்து மூக்கு வரை 10 அடி நீளமிருக்கும் .ஆபத்து காலத்தில் மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.இரண்டு மீட்டர் உயரமும், 6 மீட்டர் நீளமும் ஒரே மூச்சில் தாண்டவல்லது. பிறக்கும் போது கங்காரு குட்டியின் நீளம் ஓர் அங்குலமே இருக்கும் என்றால் பார்த்திதுக்கொள்ளுங்கள்

பிரித்தானிய நாடோடிகள் முதன் முதலாக அவுஸ்திரேலியாவை வந்தடைந்தபோது ஆங்காங்கே ஒரு விசித்திர மிருகம் பல அடி உயரத்திற்கு துள்ளித் திரிவதைக் கண்டார்கள்.அவர்கள் இப்படி ஒரு மிருகத்தை முன்னர் அறியாததால் அதன் பெயரைத் தெரிந்து கொள்ள முயன்றார்கள்.அங்குள்ள
ஆதிவாசிகளுடன்கேட்பதற்கு இவர்களுக்கு அவர்கள் பாஷை தெரியாததால் சைகையினால் அதன் பெயரென்னவென்று கேட்டார்கள். அவர்கள் அதற்கு ‘ Kan Ghu Ru’ என்று பதிலளித்தார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் ‘ kangaroo’ என்று இவர்கள் புரிந்து கொண்டார்கள். உண்மையில் அந்த ஆதி வாசிகள் ‘ நீங்கள் கேட்பது புரியவில்லை ‘ என்பதைத்தான் தங்கள் மொழியில் ‘ Kan Ghu Ru’ என்று சொன்னார்களாம் . அதுவே காலப்போக்கில் உலகம் முழுவதும் அந்த மிருகத்திற்கு . அதே பெயர் நிலைத்துவிட்டதாம் .

அண்மையில் ஒரு செய்தி படித்தேன். உலகத்தை அழிக்கக்கூடிய பல்வேறு சக்திகளில் ஒன்றான, ஆபத்தான மெத்தேன் வாயுவை கங்காருகள் வெளியிடுகிறது. வெளியாகும் அளவு குறைவு என்றாலும் ஆஸ்திரேலியாவில் நிறைய கங்காருகள் இருப்பதால் வாயுவின் வெளிப்பாடும் மொத்தமாகப் பார்த்தால் அதிகமாக இருக்கிறதாம்.

இப்போதைய நிலவரப்படி அங்குள்ள கங்காருகளின் எண்ணிக்கை சுமார் 34 மில்லியன். 2020ல் இது 240 மில்லியனாக மாறும் என ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். இந்த கங்காருகள் யாருக்கும் அடங்குவதில்லையாம். செடி, கொடிகளைப் பழாக்குதல், நீர் ஆதாரங்களை அழித்தல், சுற்றுச்சூழலை மாசுப்படுத்துதல் போன்ற எதிர்மறை செயல்களை செய்கின்றனவாம்.

கங்காரு ஆஸ்திரேலியா நாட்டுச் சின்னம் தான். அதற்காக சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாயுவை அவை வெளிப்படுத்துவது ஆரோக்கியமானதல்லவே! எனவே, சென்டிமென்டுக்கு இடம் தராதீர்கள். ஆரோக்கியதிற்கு முன்னுரிமை தாருங்கள்; கங்காருவைச் சாப்பிடுங்கள்! என்கின்றனர் ஆஸ்திரேலியர்கள் .இப்பொழுது யேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கங்காரு இறைச்சிக்கு வரவேற்பு பெற்றுள்ளதாம் .
Photo: உலகத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான மெத்தேன் வாயுவை வெளியிடும் அதிசய விலங்கு கங்காரு !!!