Thursday, April 28, 2011

ரூ.3.2 லட்சம் விலையில் மினிவேன்:மஹிந்திரா அறிமுகம்


மும்பை: ரூ.3.2 லட்சம் விலையில், 8 பேர் பயணம் செய்யக்கூடிய மேக்ஸீமோ என்ற மினிவேனை மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 0.8 டன் இழுவை திறன் கொண்ட மேக்ஸீமோ மினிடிரக்கை மஹிந்திரா அறிமுகம் செய்தது. வியாபாரிகள் மத்தியில் மேக்ஸீமோ மினிடிரக்குக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மேக்ஸீமோ பேஸ் மாடலை கொண்ட மேக்ஸீமோ பயணிகள் வாகனத்தையும் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது.

டிரைவரை சேர்த்து 8 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த மினிடிரக்கில் மஹிந்திராவின் சி.ஆர்.டி.இ., தொழில்நுட்பம் கொண்ட காமன் ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு 18 கி.மீ., மைலேஜ் தரும் இந்த மினிவேன் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் செல்லும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாகி ராஜேஷ் ஜேஜுரிக்கார் கூறியதாவது:

"இந்த மினிவேன் பாரத் ஸ்டேஜ்-3 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு பொருத்தமான இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் போக்குவரத்தில் பெரிதும் பயன்படும். வாடகைக்கு இயக்குபவர்களுக்கு மேக்ஸீமோ பொருத்தமானதாக இருக்கும்.

நவீன தொழில்நுட்பம் கொண்ட பூஸ்டர் அசிஸ்ட் பிரேக்குகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும். மேலும், இதன் கேபின் அதிக இடவசதி கொண்டதாக இருப்பதால், பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம்

மேலும், இது அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் என்பதால், பள்ளிக்குழந்தைகளை ஏற்றி்ச் செல்வதற்கும், இதர போக்குவரத்து உபயோகத்திற்கும் மிகுந்த பயனுள்ளாதக இருக்கும்," என்றார்.

No comments:

Post a Comment