Friday, April 15, 2011

இலவசத் திட்டங்களை நிறைவேற்ற ரூ. 1,20,000 கோடி தேவை?

சென்னை: திமுக மற்றும் அதிமுக ஆகியவை மாறி மாறி அறிவித்துள்ள இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதாக இருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைபப்டும் எனத் தெரிகிறது.


முன்பெல்லாம் சாதனைகளைச் சொல்லி மட்டுமே வாக்கு கேட்பார்கள். இப்போது காலம் மாறிப் போய் விட்டது. மகாத்மா காந்தியே வந்து வாக்கு கேட்டாலும் கூட ஏதாவது சோப்பு, சீப்பை இலவசமாக தருவதாக சொன்னால்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற அவல நிலை.

வழக்கம் போல வருகிற சட்டசபைத் தேர்தலிலும் இலவச அறிவிப்புகள் பொங்கிப் பெருகி ஓடிக் கொண்டுள்ளன. திமுகவும், அதிமுகவும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான இலவசங்களை அறிவித்துள்ளன. பாஜகவும் அறிவித்துள்ளது. ஏன், ஒரு சுயேச்சை வேட்பாளர் கூட இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளார். அட, நம்ம மன்சூர் அலிகான் கூட இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திமுக, அதிமுக அறிவித்துள்ள இலவசங்களில் முக்கியமானவை மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவைதான். இது போக மிக முக்கியமானது இலவச லேப்டாப். மற்றும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் 20 கிலோ இலவச அரிசி தரப்படும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதேபோல குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடாக கட்ட தற்போது வழங்கப்படும் ரூ. 75,000 நிதிக்குப் பதில் ரூ. 1.80 லட்சம் தருவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இப்படி அறிவிக்கப்பட்டுள்ள இலவசங்களைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் இவற்றையெல்லாம் சொன்னபடி நிறைவேற்ற அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தெரிகிறது.

- ரேசன் கார்டு வைத்துள்ள 1 கோடியே 90 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி கொடுத்தால் ஆண்டுக்கு கூடுதலாக 360 கோடி ரூபாய் செலவாகும்.

- மிக்சி, கிரைண்டர், மின்விசிறி இலவசமாக கொடுக்க ரூ. 3742 கோடி தேவைப்படும்.

- மிக்சி அல்லது கிரைண்டர் மட்டும் வழங்க ரூ. 860 கோடி தேவைப்படும். இரண்டையும் சேர்த்துக் கொடுத்தால்

- மிக்சி அல்லது கிரைண்டர் வழங்க ரூ. 860 கோடி தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிக்சி, கிரைண்டர் இரண்டும் சேர்த்து கொடுக்கப்பட்டால் ரூ. 1720 கோடி தேவைப்படும்.

- மின்விசிறி வழங்க மட்டும் ரூ. 500 கோடி செலவாகும்.

- 3 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்துக்கு திமுக அரசு ரூ. 2250 கோடி செலவழிக்கிறது.

- அதிமுக சொன்னபடி ரூ. 1.8 லட்சமாக தருவதாக இருந்தால் கூடுதலாக ரூ. 705 கோடி செலவாகும்.

- தமிழகத்தில் பிளஸ்டூ படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 12 லட்சம். கல்லூரிகளில் படிப்போரின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம். அதாவது சுமாராக 20 லட்சம். இவர்களுக்கு இலவசமாக லேப்டாப் தருவதாக இருந்தால் உத்தேசமாக ரூ. 1000 கோடி செலவாகும்.

மொத்தத்தில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொட்டினால்தான் இலவசத் திட்டகங்களை சொன்னபடி கொடுக்க முடியும்.

No comments:

Post a Comment